Wednesday, 11 July 2018

*சென்னையில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநாடு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/20.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பொதுச்செயலாளர் தோழர்.மயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி விபரங்கள்,*  


*🌟செப்டம்பர் மாதம் "இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மற்றும் அடுத்த கட்ட போராட்ட பிரகடன மாநாடு" சென்னையில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் தெரிவித்தார்.*


*🌟கடந்த 44 ஆண்டுகளாக போராடி பெற்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து 6 வது ஊதியக்குழுவில் பறிக்கப்பட்டது. 7 வது ஊதியக்குழுவிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டிலேயே தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் குறைந்த ஊதியத்தை பெற்றுவருகின்றார்கள்.*


*🌟கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. ஜாக்டோ ஜியோ அமைப்போடு இணைந்து போராடினோம். அந்த போராட்டத்தையும் அரசு உதாசீனப்படுத்தியது.* 


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வரும் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி சென்னையில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கக்கூடிய "இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மற்றும் அடுத்தகட்ட போராட்ட பிரகடன மாநாடு" நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை அறிவிக்க உள்ளோம். முன்னதாக மாவட்ட தலைநகரங்களில் ஆயத்த மாநாடுகள் நடைபெற உள்ளன.*


*தோழமையுடன்;*

*_தோழர்.ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: