🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/08/05082018.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் இனிய தோழர்கள் (நண்பர்கள்) தின வாழ்த்துக்களையும் வணக்கத்தினையும் தெரிவித்துக்கொள்கிறோம்._*
*🌟பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் பிறந்த மண்ணில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எனும் பேரியக்கத்தின் மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் தோழர் மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளைக் களைய "ஊதிய மீட்பு மாநாடு" நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்காக இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.*
*சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு மேனாள் பொதுச்செயலாளர்*
⚡ *_தோழர்.நடேசன்_ ஐயா அவர்களும்,*
⚡ *_தோழர்.பாலசந்தர்_ அவர்களும்,*
*மேனாள் மாநில பொருளாளர்,*
⚡ *_தோழர்.ஜீவாநந்தம்_ அவர்களும்,*
*சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்*
*_🌟மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்கள்,_*
*⚡தமிழ்நாட்டினை மாவட்டமாக பாவித்த தமிழக முதல்வர் ஆசிரியர்களை அவமரியாதையாக பேசிய தமிழ்நாடு மாவட்ட முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து 09.08.2018 அன்று ஜாக்டோ ஜியோ சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது, இப்போராட்டத்தில் நமது இயக்க தோழர்கள் அதிக அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி எழுச்சியுரை ஆற்றினார்.*
*⚡மற்ற சங்கங்கள் இயங்குவதற்கு நாம் இயங்க வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் போராட்டம் அறிவிப்பதற்கு நாம் ஒரு போராட்டம் செய்யவேண்டிருக்கிறது,*
*⚡நாம் செப்டம்பர் 26 ல் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாடு மற்றும் போராட்ட பிரகடண மாநாடு அறிவித்தோம்..அதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதது. இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு மாநாட்டில் தமிழகம் முழுவதிலிருந்தும் 20,000 ஆசிரியர்கள் திரண்டு நமது கோரிக்கையின் வலிமையை அரசுக்கு உணர்த்த வேண்டும்.*
*⚡கடந்த செப்டம்பர் 2017 ல் சில துரோகச்சங்கங்கள் வேலைநிறுத்தத்திலிருந்து விலகிய போது தோழர். நடேசன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தப்படி...*
*⚡"2017 செப்டம்பர் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாத துரோகச்சங்கங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்...அவர்கள் எப்போதும் கூட்டுச்சங்கப் போராட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள்... அவர்கள் அரசு விசுவாசம் மிக்கவர்கள். ஊழியர்கள் விசுவாசம் அற்றவர்கள்" எனப்பதிவிட்டார்கள்.*
*⚡அதுபோல TNPTF கூட்டுப்போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது...*
*⚡செப்டம்பர் 26 இடைநிலை ஆசிரியர் ஊதியமீட்பு மாநாட்டையும் ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தத்தையும் வெற்றிகரமாக்குவோம் என TNPTF பொதுச்செயலாளர்.தோழர். ச.மயில் அவர்கள் பேசினார்கள்.*
*_🌟STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் & ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளர் தோழர்.ச.மோசஸ் அவர்கள்_,*
*⚡திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் லஞ்ச லாவண்ய போக்கு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ சார்பாக மாவட்ட தலைநகரில் 16.08.2018 அன்று மாலை நேர ஆர்பாட்டம் நடத்தப்பட ஜாக்டோ ஜியோ சார்பாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொண்டு இப்போராட்டம் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் ஒரு பாடமாக அமையும் வண்ணம் இப் போராட்டம் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி எழுச்சியுரை ஆற்றினார்.*
*🌟இயக்க மாநில பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.*
*_🌟மேனாள் மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.நடேசன் அவர்கள் இயக்க சிறப்புகளை எடுத்துரைத்து எழுச்சியுரை ஆற்றினார்._*
*_🌟மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர்.கணேசன் அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்._*
*_🌟மாநில செயலாளர் தோழர்.விண்செண்ட் அவர்கள் கூட்டம் துவங்கிய உடன் குரங்கணி தீவிபத்து, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான தோழர்கள் உட்பட இன்னும் பல துயரசம்பங்களில் பலியான தோழர்களுக்கு மௌன அஞ்சலி தீர்மானம் இயற்றினார்._*
*🌟இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு மாநாட்டில் மாவட்டங்களிலிருந்து எத்தனை தோழர்கள் தங்கள் மாவட்டங்களிலிருந்து கலந்துகொள்வார்கள் என்பதைக் கூறி எவ்விதமான போராட்டங்களை மாநாட்டில் அறிவிக்கலாம் என்று தங்கள் மாவட்டம் சார்பாக கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கவேண்டி மாநிலத் தலைவர் தோழர்.மூ.மணிமேகலை கூறினார்.*
*🌟ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டங்களில் இரண்டு தோழர்களும், ஆயிரத்துக்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட மாவட்டங்களில் ஒரு தோழரும் கருத்துகள் மற்றும் ஆலோசனை வழங்குமாறும் இவ் ஆலோசனை உணவு இடைவேளைக்குப் பின் மாவட்டவாரியாக வழங்குமாறும் தோழர்.மணிமேகலை கூறினார்.*
*🌟_மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில்_ அவர்கள் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.*
*🌟மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாவட்டவாரியாக ஊதிய மீட்பு போராட்ட ஆலோசனை மற்றும் கருத்து பகிர்வு துவங்கியது.*
*🌟மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் ஈரோட்டில் நடைபெற்றுவரும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் செய்தியாளருக்கு அளித்த பேட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.*
*YouTube Link:👇👇👇*
https://youtu.be/bqgTfwzEIhU
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment