*🌟முதலமைச்சர் தனது பேச்சில் குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களை குறிவைத்து தாக்கியிருப்பது என்பது ஆசிரியர் பணியின் மேன்மையை களங்கப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.*
*🌟தமிழகம் முழுவதும் பணியாற்றும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் மாதம் ரூ.82 ஆயிரம் ஊதியம் பெறும் _தலைமையாசிரியர்களின் எண்ணிக்கையை ஆதாரத்துடன் வெளியிட முடியுமா?_*
*🌟 கடந்த ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்டதில் _ரூ.40000 ஊதிய உயர்வு பெற்ற ஒரு அரசு ஊழியர், ஆசிரியரையாவது _ஆதாரத்துடன் தமிழக முதல்வரால் கூற முடியுமா?*
*🌟புதியதாக நியமனம் பெறும் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மொத்த ஊதியமே வெறும் ரூ.23 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை மறைத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.48 ஆயிரம் வழங்கப்படுவதாக கடந்த 2018 மே மாதம் அறிக்கை வெளியிட்டு வேதனைப்படுத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சரின் அறிக்கையைத் தொடர்ந்து முதலமைச்சரே இவ்வாறு பேசி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி இருப்பது எவ்வாறு ஏற்புடையதாகும்?*
*🌟கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என்பது முதலமைச்சருக்கு தெரியுமா?*
*🌟இப்படிப்பட்ட நிலையில் உண்மைக்கு மாறான செய்தியை முதல்வரே கூறி, பொதுமக்களுக்கு தவறான தகவல்களைக் கூறியதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.*
*தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
No comments:
Post a Comment