Tuesday, 14 August 2018

*அகில இந்திய பெண் ஆசிரியர்கள் மாநாடு வரவேற்புக்குழுக் கூட்ட அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_14.html


*_இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (தமிழ் மாநிலக்குழு) கூட்ட அழைப்பிதழ்_*


*அன்பான தோழர்களே! வணக்கம்.*


*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மத்திய செயற்குழு முடிவின் படி அகில இந்திய பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் முதல் அகில இந்திய மாநாடு 08.09.2018 மற்றும் 09.09.2018 ஆகிய இரு நாட்கள் வரலாற்றுச்சிறப்புமிக்க கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது.* 


*🌟இம்மாநாடு வரவேற்புக்குழு கூட்டம் 22.08.2018புதன்கிழமை காலை 10.00 மணிக்கு நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*


*🌟இக்கூட்டத்தில் STFI ல் இணைந்துள்ள சங்கங்களின் மாநில நிர்வாகிகள், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி உறுப்பினர்கள், தோழமைச் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முன்னணி உறுப்பினர்கள், தொழிற்சங்க தோழர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் அனசு ஊழியர் சங்கங்களின் தோழர்கள், மாணவர் அமைப்புகள், மாதர் அமைப்புகள் உள்ளிட்ட சமூக அக்கறை கொண்ட அமைப்புகளின் தோழர்கள், குறிப்பாக பெண் ஆசிரியர் பெருமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு மாநாட்டின் வெற்றிக்கு உதவிடுமாறு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தோழமையுடன் வேண்டுகிறோம்.*


*தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில மைப்பாளர்,*

*இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு,*

*தமிழ்நாடு.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: