Saturday, 18 August 2018

*விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டிற்கான மாவட்ட ஆயத்த மாநாடு செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_41.html


*🌟26.09.2018 அன்று சென்னையில் நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களிடம் பறிக்கப்பட்ட ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டிற்காக18.08.2018 இன்று விழுப்புரத்தில் மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றுவருகிறது.*


*🌟மாவட்ட ஆயத்த மாநாட்டிற்கு விழுப்புரம் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் தோழர்.கு.குணசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.*


*🌟மாவட்டச் செயலாளர் _தோழர்.சண்முகசாமி_ அவர்கள் வரவேற்புரை அளித்தார்.*


*🌟சிறப்பு அழைப்பாளர்களாக,* 

 *⚡மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ அவர்களும்,*

*⚡மாநில செயலாளர் _தோழர்.சித்ரா_ அவர்களும்,* 

*⚡மாநில துணைத்தலைவர் _தோழர்.ரஹும்_ அவர்களும்,*

*⚡நாகை மாவட்ட செயலாளர் _தோழர்.காந்தி_ அவர்களும்,*

*⚡CITU மாநில பொதுச்செயலாளர் _தோழர்.மூர்த்தி_ அவர்களும்,*

*⚡முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க விழுப்புரம் மாவட்ட தலைவர் _தோழர். செந்தில் குமார்_ அவர்களும்,*

*ஆயத்த மாநாட்டில் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார்கள்.*


*🌟மாவட்ட பொருளாளர் ஆயத்த மாநாடு குறித்து சிறப்புரை ஆற்றினார்.*


*🌟அனைத்து வட்டார பொறுப்பாளர்களும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக 26.09.2018 அன்று சென்னையில் நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களின் பறிக்கப்பட்ட ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டில் போராட்ட வடிவமைப்பைப் பற்றியும் தங்களது ஒன்றியத்திலிருந்து எத்தைனை போராளிகளை மாநாட்டிற்கு அழைத்து வருவது பற்றியும் இயக்க உரை ஆற்றினார்கள்.*


*🌟விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலிருந்து பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க மறவர்கள் பலர் ஆயத்த மாநாட்டில் அரங்கம் நிறைய கலந்துகொண்டு விழுப்புரத்திற்கு பெருமை சேர்த்தார்கள்.*


*🌟விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஆயத்த மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ அவர்கள் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார்.*

*🌟ஊடகத்திற்கு அளித்த பேட்டி கீழே link ல் இணைக்கப்பட்டுள்ளது, link ஐ கிளிக் செய்து வீடியோவைக் காணலாம் தோழர்களே!.*

https://youtu.be/RV1RA7DgF6o


*🌟விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் _தோழர்.கணபதி_ நன்றியுரை ஆற்றினார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм














No comments: