Friday 31 August 2018

*அகில இந்திய பெண் ஆசிரியர்கள் மாநாடு துண்டுப்பிரசுரம் குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_46.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 11 நாள் : 31.08.2018*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*



*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளின் பொறுப்பாளர்களுக்கு மிகக்கடுமையான களப்பணிகள் அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றன. அத்தனை பணிகளையும் நம் இயக்கத்திற்கேயுரிய இலக்கணத்தோடும், தனித் தன்மையோடும் நாம் செயல்படுத்த வேண்டியுள்ளது.*



*⭐அவ்வகையில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் 08.09.2018 மற்றும் 09.09.2018 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள முதலாவது அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் மாநாடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது நமக்கு மிக மிக அருகில் இருக்கக்கூடிய கள நிகழ்வு என்பது அதுதான். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பெண் ஆசிரியர்கள் பிரதிநிதிகளாகக் கலந்துகொள்ளும் இம்மாநாட்டை வெற்றிகரமாக்குகின்ற களப்பணிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில்; நமது பேரியக்கத் தோழர்கள் உட்பட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இயக்கங்களின் தோழர்களும் கண்துஞ்சாது களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*


*⭐இம்மாநாட்டிற்குரிய துண்டுப்பிரசுரம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச்செயலாளர்களின் முகவரிகளுக்கு கே.பி.என் பார்சல் சர்வீஸ் மூலம் 30.08.2018 அன்று சென்னையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான பார்சல் சர்வீஸ் ரசீது எண் மற்றும் கைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டச்செயலாளர்கள் கே.பி.என் அலுவலகம் சென்று அந்த எண்ணை தெரிவித்து உடனடியாக பார்சலை எடுத்து தங்கள் மாவட்டத்தில் உள்ள STFI இணைப்புச்சங்கங்களின் மாவட்டச்செயலாளர்களுக்கு தாமதமின்றி அளித்திட தோழமையுடன் வேண்டுகிறேன்.*


*⭐காலம் மிகக்குறுகிய அளவில் இருப்பதால் நம் இயக்கத் தோழர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு 08.07.2018 சென்னை மாநிலச் செயற்குழுவில் எடுத்த முடிவின்படி 08.09.2018 மாநாட்டுப்பேரணியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பெண்ணாசிரியத் தோழர்களைப் பங்கேற்கச் செய்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*👍இம்மாநாட்டிற்குரிய துண்டுப்பிரசுரம், அழைப்பிதழ் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திற்குமான KPN பார்சல் சர்வீஸ் ரசீது எண் மற்றும் கைபேசி எண் பதிவிறக்கம் செய்ய அல்லது காண கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ கிளிக் செய்யவும் தோழர்களே...*

https://tnptfayan.blogspot.com/2018/08/blog-post_46.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм








No comments: