Tuesday, 9 October 2018

*கேரள பேரிடர் நிதியாக 10 லட்சம் ரூபாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழங்கியது - ஊடகச்செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/10.html


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் தவணையாக பத்து லட்சம் ரூபாய் நிதி கேரள முதல்வர் பிணராய் விஜயனிடம் வழங்கப்பட்டது.*


*⭐09.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் கேரள அரசின் தலைமைச்செயலகத்தில் கேரள முதல்வரைச் சந்தித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*

*⚡மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை,_*

*⚡மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில்,_*

*⚡மாநிலப்பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு,_*

*⚡துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்,_*

*⚡இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்,_*

*⚡முன்னாள் மாநிலத்தலைவர் _தோழர்.தி.கண்ணன்_*

*ஆகியோர் கேரள பேரிடர் நிதியாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பத்துலட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினர்.*



*⭐இந்நிகழ்வின்போது கேரளமாநிலப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய இணைப் பொதுச்செயலாளருமாகிய ஹரிகிருஷ்ணன் உடனிருந்தார்.*


*⭐இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ கூறுகையில் தமிழகம் முழுவதும் எங்கள் இயக்க உறுப்பினர்கள் அளித்த கேரள பேரிடர் நிதியை முதல் தவணையாக பத்து லட்சம் ரூபாய் கேரள முதல்வரிடம் அளித்துள்ளோம்.*


*⭐விரைவில் கூடுதலாக நிதியை அளிப்பதற்கும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்று கூறினார்.*


*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: