Thursday, 11 October 2018

*மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் - பொதுச்செயலாளர் செய்தி அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_11.html


*பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*


*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-_*



*⭐ஏழை மாணவர்களைப் பாதிக்கும் கட்டண உயர்வை ரத்து செய்தல், தமிழில் தேர்வெழுத அனுமதித்தல், மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டத்தொகையைக் குறைத்தல் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாய வழியில் இந்திய மாணவர் சங்கம் தலைமையில் திருநெல்வேலியில் போராட்டம் நடத்திய மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தமிழகக் காவல்துறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கிறது.*


*⭐சமீபகாலமாக ஜனநாயக வழியில் நடைபெறும் உரிமைப் போராட்டங்களை காவல்துறையை ஏவிவிட்டு அடக்குவதில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.*



*⭐ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரது போராட்டங்களையும் காவல்துறையின் அடக்குமுறையின் மூலம் தமிழக அரசு ஒடுக்க நினைப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.*


*⭐ஜனநாயக ரீதியில் நடைபெறும் போராட்டங்களை அனுமதிப்பதும், போராடுபவர்களை அழைத்துப்பேசுவதும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதும் தான் ஒரு நல்ல அரசின் செயலாக இருக்க முடியும்.*


*⭐அதைவிட்டு விட்டு மாணவர்கள் என்றும் பாராமல் காவல்துறையை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தி அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கில் தமிழக அரசு செயல்படுவது பொறுத்துக்கொள்ளக்கூடிய செயலாக இல்லை. இதைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.*


*⭐எனவே, தமிழக அரசு உடனடியாக மாணவர்கள் போராட்டத்தில் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*


*⭐போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். பலத்த காயமடைந்த மாணவர்களுக்கு உயர்மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்திட வேண்டும்.*


*⭐போராடிய மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*


*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: