ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாடு குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_12.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 17 நாள் : 11.10.2018*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*⭐நாளை (13.10.2018) சேலம் மாநகரில் ஜேக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்ட மாநில ஆயத்த மாநாடு.*
*⭐தமிழ்நாட்டின் ஆசிரியர், அரசு ஊழியர் இயக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைக்கவிருக்கும் ஆயத்த மாநாடு.*
*⭐தமிழகம் முழுவதும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் சேலம் மாநகர் நோக்கிப் புறப்படத் தயாராகிவிட்டனர்.*
*⭐தனிச்சங்க நடவடிக்கையாக இருந்தாலும் சரி, கூட்டுப் போராட்டமாக இருந்தாலும் சரி நம்முடைய தனித்துவத்தையும், தன்னிகரற்ற போர்க்குணத்தையும் வெளிப்படுத்துவதில் ஈடு இணையற்ற நம் பேரியக்கத் தோழர்கள் மாநிலம் முழுவதும் பந்தயக் குதிரையின் பாய்ச்சல் வேகத்தில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*
*⭐தனிச்சங்க நடவடிக்கையாக நம் பேரியக்கம் 26.09.2018-ல் நடத்திய பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்ட பிரகடன மாநில மாநாட்டில் வெள்ளம்போல் திரண்ட ஆசிரியர் கூட்டமும், 04.10.2018-ல் ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பு நடத்திய லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டமும் மகத்தான வெற்றி கண்டன.*
*⭐இப்போராட்டங்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் செவிப்பறைகளை மிகக்கடுமையாகத் தாக்கியிருக்கிறது. அதைவிட ஜேக்டோ ஜியோவிலிருந்து வெளியேறிய நம் சகோதரச் சங்கங்களின் தலைவர்களின் செவிப்பறைகளை மிகப்பலமாகவே தாக்கியிருக்கிறது.*
*⭐எனவேதான், சேதாரம் இல்லாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று ஆதாரம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.*
*⭐நாம் கோரிக்கைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் தங்களது இருப்பிடத்தை வெளிக்காட்டப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்*
*⭐போர்க்களத்தை நோக்கிய நேர்த்தியான, உறுதியான பயணத்தின்போது வேடிக்கை பார்ப்பவர்களின் வெற்றுக்கூச்சல்களுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கவேண்டிய அவசியமில்லை. கடந்தகால கள அனுபவங்கள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.*
*⭐02.08.1984 முதல் இன்று வரை எண்ணிலா களப்போராட்டங்களில் இணையற்ற உறுதியோடு இறுதிவரை நின்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெஞ்சுரமும், நேர்மைத்திறனும் கொண்ட களப்போராளிகளே! நாளை மறுநாள் சேலம் ஆயத்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான நம் பேரியக்க உறுப்பினர்களைப் பங்கேற்கச் செய்திடுங்கள்.*
*‘வீரர்களுக்குப் போராடுவதற்கு*
*ஆயிரம் காரணங்கள்; இருக்கும்*
*கோழைகளுக்கு போராடாமல் இருப்பதற்கு*
*ஆயிரம் காரணங்கள் இருக்கும்”*
*_- பிடல் காஸ்டிரோ_*
*⚡தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment