*சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தாரமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/10/blog-post_8.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் தோழர்களே! வணக்கம்._*
*☀️சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக வெள்ளிக்கிழமை 12.10.2018 அன்று தாரமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில் _காத்திருப்பு போராட்டம்_ நடைபெற உள்ளது.*
*☀️இடைநிலை ஆசிரியர் பதவியில் பெற்று வந்த தனி ஊதியம் ரூ.750 ஐ அடுத்த பதவி உயர்வான தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் செல்லும் போது தனி ஊதியம் ரூ.750 ஐ அடிப்படை ஊதியத்துடன் இணைத்து ஊதிய நிர்ணயம் செய்து 7 வது ஊதியக்குழுவில் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பலமுறை உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் தற்போது வட்டாரக் கல்வி அலுவலர்களான திரு.பா.முருகன் மற்றும் திரு.வ.தி.சந்திரமோகன் அவர்களிடம் கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.*
*☀️எனவே, காலதாமதம் செய்து ஆசிரியர்களின் பணப்பலனை பாதிப்படையச்செய்துள்ள வட்டாரக் கல்வி அலுவலரான திரு.பா.முருகன் மற்றும் திரு.வ.தி.சந்திரமோகன் அவர்களை கண்டித்தும், உடனடியாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்து அடிப்படை ஊதியத்துடன் தனி ஊதியம் ரூ.750 ஐ இணைத்து ஊதிய நிர்ணய உத்தரவு அன்றைய தினமே வழங்கக்கோரியும் நடைபெற உள்ள காத்திருப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்டோர் மற்றும் பேரியக்கத்தின் முன்னோடிகள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.*
*⚡தோழமையுடன்;*
*_தோழர்.த.சிவக்குமார்_ வட்டாரத் தலைவர்,*
*_தோழர்.ஐ.சரவணன்_ வட்டாரச் செயலாளர்,*
*_தோழர்.சி.சந்தோஷ்குமார்_ வட்டார பொருளாளர்.*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தாரமங்கலம் வட்டாரம், சேலம் மாவட்டம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment