Saturday, 20 October 2018

*20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் அரசாணை நகல் எரிப்புப் போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அறிவிக்கை!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/10/20.html




*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*



*⭐தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைப் பறித்த அரசாணைகளின் நகல்களை எரிக்கும் போராட்டத்தை நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.*


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக்கூட்டம் 20.10.2018  அன்று வேளாங்கண்ணியில் நடைபெற்றது.*


*⚡கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ தலைமை வகித்தார்.*


*⚡நாகப்பட்டிணம் மாவட்டச்செயலாளர் _தோழர்.மு.காந்தி_ வரவேற்புரையாற்றினார்.*


*⚡பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ செயலறிக்கை சமர்ப்பித்தார்.*


*⚡மாநிலப்பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்.*


*⚡ஜேக்டோ  ஜியோ போராட்ட நடவடிக்கைகள் குறித்து  ஜேக்டோ ஜியோ நிதிகாப்பாளர் _தோழர்.ச.மோசஸ்_ விளக்கிப் பேசினார்.*


*⚡கூட்ட முடிவில் மாநிலப்பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,* 


*⭐தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 01.06.1988 முதல் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைப் பெற்றுவந்தனர். தமிழக அரசின் 7வது ஊதியக்குழுவின் அரசாணை எண் :  234 நாள் : 1.06.2009 மற்றும் தமிழக அரசின் 8வது ஊதியக்குழுவின் அரசாணை எண் : 303 நாள் : 11.10.2017 ஆகியவை மூலம் அவை பறிக்கப்பட்டது.*


*⭐மேலும், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மூன்று வகையான ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. இது சமவேலைக்குச் சமஊதியம் என்ற சமூகநீதிக்கு எதிரானதாகும்.*


*⭐மேலும், தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள்  பிற மாநில இடைநிலை ஆசிரியர்களோடு ஒப்பிடும்போது மிகக்குறைவான ஊதியம் பெற்று வருகிறார்கள்.  தமிழகத்தில் ஊதியத்தில் கடைநிலை ஊழியர்கள் நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர்.*


*⭐இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடந்த 9 ஆண்டுகாலமாக போராடி வருகிறது.*


*⭐இருப்பினும் பிரச்சனைக்கு இன்றுவரை தீர்வு கிடைக்காததால் வரும் 26.11.2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழக அரசின் ஊதியக்குழு அரசாணைகள் 234, 303 ஆகியவற்றின் நகல்களை எரிக்கின்ற போராட்டத்தை நடத்த மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.*


*⭐இப்போராட்டத்தில் தமிழகம்முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கவும் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.*


*⚡கூட்டமுடிவில் துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ நன்றி கூறினார்.*


*⚡கூட்டத்தில் மாநில துணை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாநிலம் முழுவதுமிருந்து கலந்து கொண்டனர்.*


*⭐தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: