*சிறைக்களம் செல்லத்துடிக்கும் TNPTF செயல் வீரர்களே*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/tnptf_13.html
*_தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்._*
*⭐தமிழ்நாட்டில் சமூக நலன் காப்பதில் முன் ஏராக நின்று களப்பணியாற்றுவதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்றும் சளைத்ததல்ல. அதே வேளையில் ஆசிரியர் நலன், மாணவர் நலன் காப்பதிலும் தவறியதில்லை. நமது இயக்கத்தின் உயிர் மூச்சாக, அச்சாணியாக செயலாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஊதியக்குழுவிலும் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதியைக் களைய இன்று வரை களத்தில் நிற்கும் ஒரே அமைப்பு நாம்தான். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அசையாத அரசை அசைய வைக்கும் போராட்டமான _அரசாணை எரிப்புப் போராட்டத்தை நவம்பர் 26ல் நாம் நடத்த முடிவாற்றியுள்ளோம்._*
*⭐சேதாரமில்லாமல் ஆதாயம் தேடும் சில நயவஞ்சகர்கள், போராட்டம் என்ன என்பதே அறியாத சில போலிகள், _கல்வி அலுவலகங்களில் இடைத்தரகர்களாக பணியாற்றி அதிகார வர்க்கத்தினருக்கு வாலாட்டும் சில அரசாங்க விசுவாசிகள்_ நமது போராட்டத்தை விளம்பர யுக்தி என்று வசை பாடுகிறார்கள். உதித்தது முதல் இன்று வரை எண்ணற்ற போராட்டங்களை எவ்வித சமரசத்திற்குமிடமில்லாமல் நடத்தி வெற்றி கண்டவர்கள் நாம். _நமது இயக்க உறுப்பினர்களின் உறுதி மிக்க போர்க்குணமும், நேர்மையான பணிக்கலாச்சாரமும்_ சில நயவஞ்சகர்களை நெஞ்செரிய செய்துள்ளது. நம்மை விமர்சிப்பவர்களைப்பற்றி கவலை கொள்ளாமல் களப்பணி ஆற்றுவதில் கவனம் செலுத்துவோம். துரோகிகளின் நயவஞ்சக கொடுஞ்செயல்கள் தான் நமது வளர்ச்சிக்கு உரமிட்டது. அவர்களது _விமர்சனம்தான் நம்மை விருட்சமாக்கியது_. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற விருட்சம் தனது வேர்களை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரங்களிலும் படர விட்டுள்ளது. உறுப்பினர்களின் தியாகங்களால் சாய்க்க முடியாத அசுர பலத்தோடு ஆசிரியர்கள் மத்தியில் நிற்கிறது. _நேர்மை தவறும் அதிகார வர்க்கம் நம்மை கண்டு அஞ்சுகிறது._*
*⭐எவ்விடத்திலும் சமரசமில்லாமல் இயக்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தமிழக கல்வித்துறையின் நித்திரையை கலங்கடித்துள்ளது. போராட்டம் நமக்கு புதிதல்ல. போர்க்களமும் நமக்கு தூரமில்லை. தூங்கியவர்களையெல்லாம் துயில் எழச்செய்யும் பேராட்டமாக இது அமைந்துள்ளது. பாசாங்கு வேலையெல்லாம் இனி பலிக்காது என்பதை உணர்த்துவோம். சிறை நிரப்பும் இனிய நாளை எதிர்கொள்வோம்.*
*⭐ _கொள்கையில் மாறு பட்டாலும் நமது போராட்ட உணர்வை வாழ்த்தும் பல சகோதர சங்கங்களுக்கு இடையில்_ ஒற்றுமையை சீர் குலைப்பதில் கைதேர்ந்த சில பச்சோந்திகள் பல வண்ணங்களில் பம்மாத்து காட்டுகின்றன.*
*⭐விமர்சனங்களில்தான் நாம் இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளோம். _சிவகங்கை மாவட்டத்தில் 2000க்கும் அதிகமான உறுப்பினர்களையும், மாநில அளவில் 50 ஆயிரத்திற்கு_*மேற்பட்ட கள போராளிகளையும் கொண்ட நமது இயக்கத்தில் 60 சதவீதம் பேர் 40 வயதிற்கும் கீழ் உள்ள இளைஞர்கள் என்பதில் பெருமை கொள்வோம்.*
*⭐ _ஆசிரியர் இயக்க வரலாற்றிலேயே ஒரு பெண் தலைமையை ஏற்ற இயக்கம் நாம் மட்டுமே என்பதில் இருந்து பெண்களுக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் தெரிந்திருக்கும்._*
*⭐ _இடைநிலை ஆசிரியர்களுக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்திய நாம் இன்று அரசாங்கத்தின் ஆணையையே எரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். காவல் துறையின் கழுகு பார்வையை புறம் தள்ளி சென்னை இயக்குனர் அலுவலக முற்றுகையை_*எப்படி செய்து காட்டினோமோ அதை விட பல ராஜதந்திர நுணுக்கங்களுடன் நவம்பர் 26 போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். பொது கோரிக்கைகளுக்கு ஒன்று பட்ட ஜாக்டோ ஜியோவுடன் இணைந்து களம் காண கால தாமதம் ஆகும் நிலையில் ஒற்றை கோரிக்கைக்கு முழு மூச்சுடன் களம் காண உள்ளோம். எப்படி போராட்டத்தை நடத்துவது, ஆசிரியர் சந்திப்பை எப்படி மேற்கொள்வது உள்ளிட்ட போராட்ட கள தந்திரங்களை ஆலோசிப்பதற்காக,*
*⭐இன்று (13.11.2018) மாலை 5.30 மணிக்கு சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் மாவட்ட போராட்ட ஆயத்த கூட்டத்தை நடத்த உள்ளோம். இக்கூட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் இருந்தும் திரளாக பங்கேற்க வேண்டுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம். வருகிற 26.11.2018 அன்று காலை 10.30 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெறும் அரசாணை எரிப்புப் போராட்டத்திலும் எழுச்சியுடன் பங்கேற்க வேண்டுகிறோம்.*
*_“களப்போராட்டங்களில் பத்துமுறை தோற்றுவிட்டோம் என்று துவண்டுவிடாதே! பத்துமுறை தோற்றாலும் பதினோறாவது முறையும் போராட எழுந்து நிற்கிறோம் என்று எழுச்சிகொள்!”_*
*- மாமேதை லெனின்.*
*போராட்ட உணர்வுடன்...*
*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச் செயலாளர்*
*TNPTF*
*சிவகங்கை மாவட்டம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment