*பள்ளிகள் இணைப்பு & இடைநிலை ஆசிரியர் பணியிறக்கத்தைக் கண்டித்து சன.18-ல் JACTTO-GEO மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டம் - TNPTF தோழர்கள் முழுமையாகத் தீரமுடன் பங்கேற்கவும் : TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/18-jactto-geo-tnptf-tnptf.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 2*
*நாள் : 09.01.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்.*
*⭐7.1.2019 அன்று மதுரையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் தமிழக அரசு தொடக்கக் கல்வியினை அழிக்கும் முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, தமிழகத்தில் தொடக்கக் கல்வியினைப் பாதுகாக்கும் வகையில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*
*⭐ _"தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவரும் 3500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பது என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது._*
*⭐ _தமிழக அரசின் இந்த முடிவினால், 3500 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடங்களும், சத்துணவு மையங்களில் பணியாற்றிவரும் 3500 அமைப்பாளர்கள், 3500 சமையலர்கள் மற்றும் 3500 உதவியாளர்கள் பணியிடங்களும் முற்றிலுமாக ஒழிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது._*
*⭐ _தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் வகிக்கும் பதவியிலிருந்து பதவி இறக்கம் செய்யப்பட்டு, பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதிய பாதுகாப்பு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த முடிவானது தொடக்கக் கல்வியை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது._*
*⭐ _மேனாள் தமிழக முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் தொடக்கக்கல்வித் துறையைத் தனியாகப் பிரித்து, தனி அலுவலர்களை நியமித்து அதிகாரப் பகிர்விற்கு வழிவகுத்தார்._*
*⭐ _ஆனால், தற்போதைய பள்ளிக்கல்வித் துறை நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கையானது நிர்வாகச் சீர்கேடுகளுக்கும் அதிகாரக் குவியலுக்கும் மட்டுமே வழிவகுக்கும். இந்த முடிவானது, ஆசிரியர்களையும் சத்துணவுப் பணியாளர்களையும் பாதிப்பதோடு மட்டுமல்லாது, கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய மற்றும் மிகவும் பிற்பட்ட சமூகத்தாரின் கல்வி உரிமையினைப் பறிக்கும் நடவடிக்கையாக அமையும்._*
*⭐ _இந்தியாவிலேயே 69% கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டினை கடைபிடித்துவரும் தமிழக அரசின் கொள்கைக்கு முற்றிலுமாக முரணாக அமைந்துவிடும் என்பதால், 3500 தொடக்கப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினை கைவிடுமாறு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்._*
*⭐ _தமிழக அரசு LKG & UKG வகுப்புகளை தொடங்க முன்வந்தமைக்கு ஜாக்டோ ஜியோ நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவரும் அங்கன்வாடிப் பள்ளிகளில் LKG & UKG வகுப்புகளை ஆரம்பித்து அதில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாவும் தெரிய வருகிறது._*
*⭐ _ஏற்கனவே, பல பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். சில பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் என கணக்கிட்டு, அப்பணியிடங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அவர்களின் பணிமூப்பினை கருத்தில் கொள்ளாமல், இடமாற்றம் செய்வது என்பது ஏற்புடைய நடவடிக்கையாகாது._*
*⭐ _LKG & UKG வகுப்புகளுக்கு உளவியல் (Psychology) ரீதியாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களை மட்டுமே பணியமர்த்தினால் மட்டுமே மாணாக்கர்களுக்கு முறையாகப் பயிற்றுவிக்க முடியும். எனவே, LKG & UKG வகுப்புகளுக்கு உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்தும் முடிவினைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக மாண்டிசோரி பயிற்சி பெற்ற நர்சரி ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கேட்டுக் கொள்கிறோம்."_*
*⭐மேற்படி தீர்மானத்தைத் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பொருட்டு இன்று ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு நிர்வாகிகள் சென்னையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், தலைமைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை & தொடக்கக் கல்வித்துறை இயக்குநர்களிடம் தீர்மானக் கடிதம் அளித்தனர்.*
*⭐மேற்படி, சந்திப்பில் ஜாக்டோ-ஜியோவின் நிதிக்காப்பாளர் தோழர்.மோசஸ் உடனிருந்தார். இச்சந்திப்பிற்குப் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் _பள்ளிகள் இணைப்பு மற்றும் இடைநிலை ஆசிரியர்களை LKG - UKG வகுப்புகளுக்குப் பணியிட மாற்றம் செய்தல் உள்ளிட்ட இவ்விரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி 18.01.2019 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்_ நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.*
*⭐தொடக்கக் கல்வித்துறையையும் இடைநிலை ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பினையும் வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நடைபெற உள்ள மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தோழர்கள் அனைவரும் நமக்கே உரிய போர்க்குணத்தோடே முழுமையாகப் பங்கெடுக்க வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் சார்பாக அறைகூவல் விடுக்கிறோம்.*
*🤝தோழமையுடன்,*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment