*சிவகங்கை மாவட்ட ஜாக்டோ ஜியோ வட்டார அளவிலான ஆர்பாட்டத்திற்கு அவசர அழைப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_29.html
*⭐வெள்ளிக்கிழமை (11.01.2019) இன்று வட்டார ஆர்ப்பாட்டம் ஜாக்டோ ஜியோ சிவகங்கை மாவட்டம் அவசர அறிவிப்பு*
⚡1. *தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பது*
⚡2. *இடைநிலை ஆசிரியர்களை மாற்று பணி என்ற பெயரில் அங்கன்வாடிக்கு தர நிலை இறக்கம் செய்வது*
⭐மேற்கண்ட இரண்டு முடிவுகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதல் கட்டமாக
*⭐சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பும் நாளை (11.1.2019 வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணிக்கு தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம்* நடத்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை கூட்டத்தில் முடிவாற்றப்பட்டுள்ளது.
⭐கல்வித்துறையை நசுக்கும் நடவடிக்கைகளை *வீரம் செறிந்த சிவகங்கை மாவட்ட மண்ணிலிருந்து தொடங்குவோம்.*
⭐வருகிற ஜனவரி 18 அன்று நடக்க உள்ள மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டத்திற்கு முன்னோட்டமாக வட்டார ஆர்ப்பாட்டம் அமையட்டும்.
⭐நாளை வட்டார அலுவலகங்கள் முன் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை *வட்டார ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்* ஒருங்கிணைந்து செயல்படுத்திட வேண்டுகிறோம்.
⭐வட்டார ஆர்ப்பாட்டங்களில் தங்கள் வட்டாரங்களில் உள்ள *மாநில, மாவட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை* கண்டன உரையாற்ற அனுமதிக்க வேண்டுகிறோம்.
⭐நாளைய தொடக்கம் வெற்றியின் முதல் படியாக அமையட்டும்.
*_ஒற்றுமையுடன் எதிர்ப்போம்_*
*_உரிமையை மீட்டெடுப்போம்_*
🤝தோழமையுடன்;
*மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*
*ஜாக்டோ ஜியோ*
சிவகங்கை மாவட்டம்
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment