*அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணிமாறுதல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_11.html
*_மாநிலஅமைப்பின் செய்தி அறிக்கை எண் : 1 நாள் : 11.01.2019_*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்*
*⚡மாநிலத்தலைவர் _மூ.மணிமேகலை,_*
*⚡பொதுச்செயலாளர் _ச.மயில்,_*
*⚡மாநிலப்பொருளாளர் _க.ஜோதிபாபு_ ஆகியோர்,*
*வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:*
*⭐தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுடன் இணைந்த 2381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்படும் LKG, UKG வகுப்புகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தமிழக அரசின் அறிவிப்பு தமிழக கல்வித்துறை விதிகளுக்குப் புறம்பான நடவடிக்கையாகும்.*
*⭐தமிழ்நாடு சார்நிலைப் பணி விதிகள் மற்றும் கல்வித்துறை விதிகளில் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் குறிப்பிட்ட கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதை முற்றிலும் புறந்தள்ளி உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்படுவார்கள் என்பது எவ்விதத்திலும் ஏற்க முடியாத விதிகளுக்கு புறம்பான செயலாகும்.*
*⭐பள்ளிக்கல்வித்துறையின் இத்தகு தொடர் நடவடிக்கைகள் தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியையும், அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் குறிப்பாக இடைநிலை ஆசிரியர்கள் மிகப்பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.*
*⭐அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசுப்பள்ளிகளில் முன்பருவ வகுப்புகள் தொடங்குவது வரவேற்க்கத்தக்கது. ஆனால் அவ்வகுப்புகளுக்கு பயிற்சியளிக்க முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள்தான் நியமிக்கப்படவேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டால் பல்லாயிரக்கணக்கான பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு வேலை கிடைக்கும். உளவியல் ரீதியாக LKG, UKG வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவும் அதுவே சரியானதாக இருக்கும். அப்போதுதான் அரசாங்கத்தின் இத்திட்டம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறும்.*
*⭐உபரி ஆசிரியர் கணக்கீடு என்பது தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை சீரழிக்கும் மோசமான கணக்கீடாகும். கேரள மாநிலத்தில் மாணவர்கள் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழகத்தில் 1 முதல் 5 வரை மாணவர்கள் எண்ணிக்கையை மொத்தமாகக் கணக்கிட்டு 60 மாணவர்கள் வரை 2 ஆசிரியர்கள் என்று நிர்ணயிக்கப்படுகிறது. 60க்கும் குறைவான மாணவர்களே இருந்தாலும் அங்கே 5 வகுப்புகள் உள்ளன 23 பாடங்களை கற்பிக்கவேண்டிய நிலை உள்ளது என்பதைப் பற்றி அரசு சிந்திக்கவில்லை. எனவே உபரி ஆசிரியர்கள் என்று கூறப்படும் ஆசிரியர்களை உபரி என்று கருதாமல் ஓரளவு மாணவர்கள் எண்ணிக்கை உள்ள பள்ளிகளுக்கு அளிப்பது என்பதே கல்வித்தரத்தை உயர்த்த உதவும் என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை உணர்ந்து செயல்பட வேண்டும்.*
*⭐ஏற்கனவே கடந்த இரண்டு ஊதியக்குழுக்களில் ஊதியத்தில் கடைநிலை ஊழியர்களாக்கப்பட்டுவிட்ட இடைநிலை ஆசிரியர்கள் தற்போது அங்கன்வாடி ஊழியர்களாக மாற்றப்பட்டுள்ளது என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலாகும். வேறு எந்தத் துறையிலும் வேறு எந்த நிலையிலும் நடக்காத ஒரு செயல் பள்ளிக்கல்வித்துறையில் நடந்து கொண்டிருப்பது என்பது எவ்விதத்திலும் ஏற்க இயலாத செயலாகவே உள்ளது.*
*⭐பள்ளிகள் இணைப்பு, உபரி இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடிகளில் நியமனம் ஆகியவற்றின் மூலம் தொடக்ககல்வித்துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அடிப்படைக்கல்வியாம் ஆரம்பக்கல்வி சிறந்து விளங்கினால்தான் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சியும் உயர்ந்து நிற்கும்.*
*⭐சமீபகாலமாக தமிழகப் பள்ளிக்கல்வித்துறையில் நாள்தோறும் வெளிவரும் புதிய புதிய அறிவிப்புகள் ஆசிரியர்களை குற்றவாளிகளைப்போலவும், தவறு செய்பவர்களையும் போலவும் சித்தரிப்பதாக உள்ளது. வேறு எந்தத்துறையிலும் இல்லாத கெடுபிடிகளும், நெருக்கடிகளும் பள்ளிக்கல்வித்துறையில் காட்டப்படுவதும், திடீர் திடீரென வெளியிடப்படும் நடைமுறை சாத்தியமற்ற அறிவிப்புகளும் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது என்பதே உண்மையாகும்.*
*⭐எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை உடனடியாக அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம், உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளுடன் ஆரம்பப்பள்ளிகள் இணைப்பு ஆகிய தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை பின்நோக்கி இழுக்கக்கூடிய, ஆசிரியர்களின் நெஞ்சங்களில் துயரத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment