*அரசாணை எரிப்பு போராட்டத்தில் பஙங்கேற்ற ஆசிரியர்கள் மீது போடப்பட்ட FIR ஐ தள்ளுபடி செய்தல் மற்றும் LKG, UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்வதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை குறித்து TNPTF பொதுச்செயலாளரின் முக்கியத் தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/fir-lkg-ukg-tnptf.html
*⭐அரசாணை எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற நம் இயக்கத் தோழர்கள்மீது காவல்துறை பதிவு செய்த வழக்கை (FIR) ரத்துசெய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நாம் தொடுத்த வழக்கில், இன்று நீதிமன்றம் திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்ப்பட்ட வழக்கிற்கு தடையாணை பிறப்பித்துள்ளது. இதே போன்று மற்ற மாவட்ட வழக்குகளுக்கும் தடையாணை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.*
*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அங்கன்வாடி LKG,UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று (23.01.2019) நடைபெற்ற வழக்கு விசாரணையில், இதே வழக்கு தொடர்பாக மதுரை உயர்நீதி மன்ற கிளை நேற்று (22.01.2019) கோரிய விவரங்களை, இவ்வழக்கிலும் தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததோடு நாளை மறுநாளைக்கு (25.01.2019) விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது*
*🤝தோழமையுடன்*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment