*மாணவர் நலன் கருதி JACTTO-GEO வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் - நாளை தங்களது பள்ளியிலேயே பணியேற்கவும் : TNPTF பொதுச்செயலாளர்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/jactto-geo-tnptf.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 13*
*நாள் : 30.01.2019*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்கள்!*
*⭐பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 22.01.2019 முதல் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தது.*
*⭐நமது பேரியக்கத்தின் தோழர்கள் இந்த ஒன்பது நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் இடையில் சிறிதும் மனம் சோராது நமது அமைப்பிற்கே உரிய தன்னிகரற்ற போர்க்குணத்துடன் மிகவும் சிறப்பான களப் பணியை இறுதிவரை ஆற்றி வந்துள்ளமை கண்டு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையத்தின் சார்பாக புரட்சிகரமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*
*⭐இந்த ஒன்பது நாட்கள் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் சிறைப் படுத்தப் பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் தற்போது பிணையில் வெளி வந்துள்ளனர். எஞ்சிய தோழர்களையும் பிணையில் வெளிக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கிளைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.*
*⭐மேலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு (17B) குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.*
*⭐இந்நிலையில் இன்று (30.01.2019) சென்னையில் கூடிய ஜாக்டோ ஜியோ வின் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில்,*
*⭐"போராட்ட காலத்தில் போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், தற்பொழுது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி அளிக்கவேண்டும், நாளை முதல் பணியில் சேர உள்ளோர் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது, 21-ம் தேதி பணி நிலையிலேயே தொடர் பணி ஏற்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன்*
*⭐எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாது நிலுவையில் தான் உள்ளது என்ற போதிலும் தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி,*
*⭐ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று (30.01.2019) மாலையுடன் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என்றும்*
*⭐முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மீண்டும் ஜாக்டோ ஜியோ போராட்டக் களத்தில் இறங்கும்" என்றும் முடிவாற்றப்பட்டுள்ளது.*
*⭐எனவே, ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு முடிவுக்கு இணங்க இன்றுடன் வேலை நிறுத்தத்தை முடித்துக் கொண்டு நாளை முதல் (31.01.2019) பணிக்குச் செல்லும் நமது தோழர்கள் தாங்கள் 21ஆம் தேதி வரை பணியாற்றி வந்த அதே பள்ளியில் மீண்டும் பணியேற்கக் கேட்டுக்கொள்கிறோம்.*
*⭐அவ்வாறு நமது தோழர்கள் பணிக்குத் திரும்பும் சூழலில் மாவட்ட / வட்டாரக் கல்வி அதிகாரிகள் பணி ஏற்க விடாது தடுக்கும் சூழல் ஏற்படுமாயின், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் எழுத்துப்பூர்வமான ஆணைகளை வழங்கும்படி வட்டார - நகர / மாவட்டக் கிளைகள் வலியுறுத்த வேண்டும்.*
*⭐இது சார்ந்த தகவல்களை உடன் மாநில மையத்தில் தெரிவிக்கவும். அதுகுறித்த _சட்ட பூர்வ நடவடிக்கைகளையும் இயக்க ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு நமது உறுப்பினர்களின் பணிப்பாதுகாப்பிற்கு உறுதியளிக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தயாராக உள்ளது_ என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.*
*சென்னை.*
*30.01.2019*
*🤝தோழமையுடன்,*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment