*ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(e) ன் படி பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை மீளப் பணியமர்த்துவது குறித்து மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*
*🌟ஜாக்டோ ஜியோ அமைப்பின் கீழ் 22.01.2019 முதல் சில அங்கீகரிக்கப்பட்ட / அங்கீகரிக்கப்படாத அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.*
*🌟தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வுக்கள் தொடங்கப்படவுள்ளதாலும், 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையிலும் மாணவர் நலன் கருதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களை மீளப் பணியமர்த்துவது குறித்து மறு ஆய்வு செய்து எடுக்கப்படவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*
No comments:
Post a Comment