Sunday 21 April 2019

*விழுப்புரம் மாவட்டம் +2 தேர்ச்சியில் மீண்டும் கடைசி இடம்... சமூக, பொருளாதார பிரச்னைதான் காரணம், ஆசிரியர்கள் மீது தவறில்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/04/2_21.html


📖🖋

*🌟விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் கடைசி இடம் பிடித்ததற்கு சமூக, பொருளாதார பிரச்சினை தான் காரணம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார், தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டம் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு முடிவுகளில் கடைசி இரண்டு இடங்களை பிடித்து வருகிறது. _இந்த கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தி முதல் பத்து இடங்களுக்குள் விழுப்புரம் மாவட்டம் வரும் என்ற முயற்சியில் களமிறங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமியும் சபதம் ஏற்றுக் கொண்டிருந்தார்._*



📖🖋

*🌟இதனிடையே நேற்று வந்த தேர்வு முடிவில், வழக்கம்போல் கடைசி' இடத்தை பிடித்துள்ளது. வேலூருக்கு அடுத்தபடியாக 31வது மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உள்ளது.*




*_தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி அவர்களிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:_*


📖🖋

*🌟நாங்கள் எதிர்பார்த்த தேர்ச்சி இல்லாதது வருத்தமளிக்கிறது, கல்வியாண்டு துவக்க நாள் முதலே பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது. இதற்காக ஆசிரியர்களுக்கு ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டும், பள்ளிகளிலும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. அதன்பலன் கடந்த ஆண்டைவிட 2:50 சதவீதம் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது.*


📖🖋

*🌟தமிழகத்திலேயே அதிக அரசு பள்ளிகள் உள்ள மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. 25,794 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 20,930 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 81.15 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட இது கூடுதலாகும், இருப்பினும் தேர்ச்சி சதவீதம் குறைவிற்கு ஆசிரியர்களை குறை சொல்ல முடியாது.*



📖🖋

*_🌟ஜாக்டோ , ஜியோ போராட்டத்தாலும் தேர்ச்சி சதவீதம் பாதிப்பு கிடையாது._ இம்மாவட்டத்திலுள்ள சமூக, பொருளாதார பிரச்னைதான். பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்துவதே சவாலாக உள்ளது. இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நான் அரும்பாடு பட்டுள்ளேன். உறவினர்கள் நிகழ்ச்சி, துக்கத்திற்க்கு கூட செல்லவில்லை 50 வயதிற்கும் மேல் உறவினர்கள் தான் தாங்கி நிற்பார்கள் அதனையும் பொருட்படுத்தாமல் தேர்ச்சி சதவீதம் உயர்த்த என்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்தேன்.*



📖🖋

*🌟திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலரை வேறு மாவட்டத்திற்கு சென்றுவிடுங்கள், தேர்ச்சி விழுக்காட்டை உயர்ந்த பணியாற்ற வேண்டும். இல்லையென்றால் நானே டிரான்ஸ்பர் வாங்கிக்கொடுக்கிறேன் என்று எச்சரித்தேன்.*



📖🖋

*🌟மேலும் 6 கல்வி மாவட்டங்களில் அதிக தேர்ச்சி விழுக்காட்டை கொடுப்பவர்களுக்கு சொந்த பணம் ரூ.10 ஆயிரம் கொடுப்பதாக அறிவித்தேன், அதனை திண்டிவனம் கல்வி அலுவலருக்கு வழங்க உள்ளேன்.*



📖🖋

*🌟பெரம்பலூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிஇஓ வாக இருந்த போது அங்கு மேற்கொண்ட நடவடிக்கையால் தான் தற்போது 3 வது இடத்தை அந்த மாவட்டம் பிடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலும் அந்த பணிகளை சிறப்பாக செய்தேன். இனிவரும் காலங்களிலும் செய்வேன். இதன் பலன் வரும் காலங்களில் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: