Wednesday, 10 April 2019

*பள்ளிக் கல்வி-அரசு ஊழியர் மருத்துவக்காப்பீட்டுத்திட்டம்- தமிழகம் முழுவதும் ஆசிரியர் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முழுமையாக புதிய மருத்துவக் காப்பீடு (NHIS) மூலம் இலவச மருத்துவக் காப்பீடு வழங்காமல் இழுத்தடிப்பு செய்யும் யுனைடெட் இந்தியா நிறுவத்தின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி _மாண்புமிகு தமிழக முதல்வர்_ அவர்களுக்கும், _மதிப்புமிகு நிதித்துறை செயலாளர்_ அவர்களுக்கும் _மதிப்புமிகு ஆணையாளர்_ (கருவூலம் மற்றும் கணக்குத்துறை) அவர்களுக்கும் கோரிக்கை கடிதம் அனுப்ப்பட்டது.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/04/nhis.html


*_பார்வை : 1. அரசாணை எண். 202 நிதித்துறை நாள்:30.06.2016_*



🏥💉🚑

*🌟தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு வழங்குவதற்காக மாதந்தோறும் ரூ.180/- அவர்களது வருமானத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகின்றது.*



🏥💉🚑

*_பார்வையில் கண்ட அரசாணை எண். 202 நிதித்துறை நாள்:30.06.2016-ன்படி_*



🏥💉🚑

*🌟அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். இதில் வரும் இடர்பாடுகளை அல்லது நோயாளிகளின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு என அரசாணையில் மாநில அளவில் திரு.மு.இராமகிருஷ்ணன் மற்றும் திரு.ஷாகித் பிரான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்துடன் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்.*



🏥💉🚑

*🌟அரசு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மனம், உடல் மற்றும் மருத்துவச் செலவு என பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர் என்பதால் மேற்கண்ட இன்னல்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் மருத்துவச் செலவினை இல்லாமல் செய்வதற்காக தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தனை அறிமுகம் செய்து அத்திட்டத்தின் மூலம் ‘கட்டணமில்லா சிகிச்சை” (CASHLESS SCHEME) என்று கூறி சில அறுவைச்சிகிச்சைகளுக்கு ரூ.7½  இலட்சம் எனவும் சில அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.4 இலட்சம் என்றும் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இவையனைத்தும் கட்டணமில்லா சிகிச்சையின் கீழ் (CASHLESS SCHEME) கொண்டு வரப்பட்டுள்ளது.*



🏥💉 🚑

*🌟ஆனால் இத்திட்டத்தினை செயல்படுத்தும் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா நிறுவனமும், MDINDIA நிறுவனமும் ‘கட்டணமில்லா சிகிச்சை” (CASHLESS SCHEME) யை எந்தவொரு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கும் வழங்கவில்லை.*



🏥💉🚑

*🌟ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை முடிந்து வெளிவரும் போது அதிகப்படியான பணத்தை கட்டிவிட்டுத் தான் வெளியேறுகின்றனர். _இது சார்ந்து இயக்கங்களுக்கு வரும் புகார் மீது இயக்க சார்பில் அரசாணையில் மாநில அளவில் _திரு.மு.இராமகிருஷ்ணன்_ மற்றும் _திரு.ஷாகித் பிரான் ஆகியோரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் ஒன்று தொலைபேசியை எடுக்க மாட்டார்கள் அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள்._ இதற்கு மிகப் பெரிய போராட்டத்தை இயக்கப் பொறுப்பாளர்கள் நடத்தித் தான் இப்பணத்தை பெற்றுக் கொடுக்க முடிகின்றது. இச் செயல் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.*



🏥💉🚑

*🌟தமிழக அரசு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்திய ‘கட்டணமில்லா சிகிச்சை” (CASHLESS SCHEME) முழுமையாக ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு எட்டப்படவில்லை.*



*_இத்திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் மட்டும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட தொகை நிலவரம்:_*


*⚡NAME :* SOUNDARIYA,

*அடையாள அட்டை எண் :* TLR/01/EJ407/ NHIS16/ 1215742

*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* APPOLLO CHILDREN HOSPITAL, CHENNAI


*மருத்துவ செலவு :* ரூ.1,46,441/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.98981/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.47460/-



*⚡NAME :* KRISHNAVENI


*அடையாள அட்டை எண் :* TLR/01/EJ408/  NHIS16/ 55486

*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* V.S. Hospital, Chennai

*மருத்துவ செலவு :* ரூ.13081/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.12584/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.497/-


*⚡NAME :* GOPIRAJA


*அடையாள அட்டை எண் :* THN/01/EJ405/ NHIS16/1486300

*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Preethi Hospital, Madurai

*NHIS நிறுவனத்தால் வழங்கப்பட்ட தொகை :* ரூ.69,100/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.62,90/-


*⚡NAME :* BABY of DEVI BALA

*அடையாள அட்டை எண் :* MDI5-TNEHS- 0001072217


*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* MMM Hospital Chennai

*மருத்துவ செலவு :* ரூ.2,45,327/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.2,15,000/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.30327/-


*⚡NAME :* SAYARA BE SHAIK

*அடையாள அட்டை எண் :* TVM/01/SB5C2/ NHIS16/1032645


*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Adayar Cancer Institute, Chennai


*மருத்துவ செலவு :* ரூ.15,659/-


*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.13071/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.2588/-


*⚡NAME :* KARTHICK

*அடையாள அட்டை எண் :* VNR/01/SB308/ NHIS16/1042151

*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Appollo Hospital Chennai

*மருத்துவ செலவு :* ரூ.84,150/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.67864/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.16286/-



*⚡NAME :* SANTHI


*அடையாள அட்டை எண் :* SVG/01/SB517/ NHIS16/1088273

*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* V.S. Hospital, Chennai

*மருத்துவ செலவு :* ரூ.2,00,000/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.56251/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.143749/-



*⚡NAME :* THUFAIL AHMED


*அடையாள அட்டை எண் :* VEL/01/SB305/ NHIS16/1501514

*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* V.S. Hospital, Chennai

*மருத்துவ செலவு :* ரூ.21,800/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.16736/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.5064/-


*⚡NAME :* BACKIA LAKSHMI

*அடையாள அட்டை எண் :* VNR/01/SB416/ NHIS16/1048372

*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Velammal Hospital Madurai

*மருத்துவ செலவு :* ரூ.52,000/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.41,000/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.11,000/-


*⚡NAME :* YOGANANDAN

*அடையாள அட்டை எண் :* PSO/01/PB/304/ NHIS16/3654504

*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Parvathi Hospital Chennai

*மருத்துவ செலவு :* ரூ.1,61,000/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.58,250/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.1,02,750/- 



*⚡NAME :* NITHYA

*அடையாள அட்டை எண் :* VPM/01/SB417/ NHIS16/3591045  

*சிகிச்சை பெற்ற மருத்துவமணையின் பெயர் :* Ramachandra Hospital, Chennai

*மருத்துவ செலவு :* ரூ.25,000/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.3,000/-

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.22,000/-


*⚡TOTAL :*

*மருத்துவ செலவு :* ரூ.10,96,458/-

*NHIS நிறுவனத்தால்வழங்கப்பட்ட தொகை :* ரூ.651837/- (59%)

*நோயாளிகளால் கட்டப்பட்ட தொகை :* ரூ.444621/- (41%)


🏥💉🚑

*🌟ஆகவே தாங்கள் உடனடியாகத் தலையிட்டு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்காக அறிமுகப்படுத்திய ‘கட்டணமில்லா சிகிச்சையை" (CASHLESS SCHEME) முழுமையாக உறுதிப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.*



🏥💉🚑

🤝தோழமையுடன்;



*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






No comments: