Tuesday 7 May 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட தீர்மானங்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/05/blog-post_7.html


*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*


🛡⚔

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 06.05.2019  (திங்கட்கிழமை) மதுரை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*



*_கூட்ட முடிவுகள்:_*


*🛡தீர்மானம் : 1⚔*


*⚡ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரம் முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.த.ரமேஷ், தூத்துக்குடி மாவட்டம் , கருங்குளம் வட்டாரம் முன்னாள் வட்டாரப் பொருளாளர் திரு.பாஸ்கரன், முன்னாள் மாநிலச்செயலாளர் திரு.மாரியப்பன் மற்றும் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியானவர்கள் ஆகியோரின் மறைவிற்கு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*



*🛡தீர்மானம் : 2⚔*


*⚡2019 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு வரவு - செலவு அறிக்கை மாநிலப் பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்பு செய்யப்பட்டது.*



*🛡தீர்மானம் : 3⚔*


*⚡14.05.2019 மற்றும் 15.05.2019 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெறும் இயக்கப்பயிற்சி முகாமில் மாநிலப் பொதுக்குழுவில் இடம்பெறும் பொறுப்பாளர்கள் மற்றும் வட்டாரச் செயலாளர்கள் பங்கேற்பது எனவும், வட்டாரச் செயலாளர்கள் பங்கேற்க இயலாத நிலையில் வட்டாரத்தலைவர் பங்கேற்பது எனவும், வட்டாரத்தலைவர் பங்கேற்க இயலாத நிலையில் வட்டாரப்பொருளாளர் பங்கேற்பது எனவும், அதே நேரம் வட்டாரக்கிளையின் சார்பில் ஒருவர் மட்டுமே பங்கேற்பது எனவும், பங்கேற்பவர்கள் உணவு, தங்குமிடம் மற்றும் இதர செலவுகளுக்காக தலா ரூ.1000-(ரூபாய் ஆயிரம் மட்டும்) கட்டணமாகச் செலுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.*



*🛡தீர்மானம் : 4⚔*


*⚡23.08.2010-க்குப் பின்பு ஆசிரியர்களாக நியமனம் பெற்று ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களின் ஊதியத்தை அவர்களது  குடும்பத்தின் வாழ்வாதாரம் கருதி நிறுத்தக்கூடாது.  8 ஆண்டுகாலம் ஆசிரியர்களாகப் பணியாற்றிய பின்பு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி அவர்களைப் பணிநீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும்.  மேலும் இவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு தமிழக அரசு போதுமான அளவில் தகுதித்தேர்வை நடத்தாததும் ஒரு காரணமாகும். எனவே, மேற்படி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்களித்து அவர்களது எதிர்கால வாழ்வைத் பாதுகாத்திட மனிதாபிமான அடிப்படையில் முன்வரவேண்டும் என மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 5⚔*


*⚡ஜனநாயக ரீதியில் கோரிக்கைகளுக்காகப் போராடிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்துப் பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும், போராட்டக்காலங்களில் அவர்கள் மீது போடப்பட்டுள்ள முற்றிலும் உண்மைக்கு மாறான பொய் வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் எனவும் தமிழக அரசை மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 6⚔*


*⚡தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அப்பள்ளிகளுடன்  இணைந்த முன்பருவ வகுப்புகளை 2019-2020ஆம் கல்வியாண்டிலேயே துவக்கிடவும், அவ்வாறு துவக்கப்படும் வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் முன்பருவ ஆசிரியர் பயிற்சி முடித்து பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசை மாநிலச்செயற்குழு வலியுறுத்திக்கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 7⚔*


*⚡மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கி 2 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழக அரசு இதுவரை அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்திட மாநிலச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 8⚔*


*⚡ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெற்றுவந்த நிலையில் இவ்வாண்டு நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக இதுவரை நடைபெறவில்லை. தற்போது நாடாளுமன்றத்தேர்தல் முடிந்து விட்ட நிலையில் தேர்தல் நடத்தைவிதிகள் 23.05.2019 வரை உள்ளதால் அதன் பின்பு காலதாமதமின்றி ஒளிவுமறைவற்ற காலந்தாய்வை தமிழகம் முழுவதும் நடத்திட தமிழக அரசை மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 9⚔*


*⚡தொடக்கக்கல்வித்துறையில் பள்ளி மாணவர்கள் தொடர்பான விவரங்களை EMIS-ல் பதிவேற்றம் செய்து, அதிலிருந்து மாற்றுச்சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என கல்வித்துறை திடீரென அறிவித்துள்ளது.  அவ்வாறு பதிவிறக்கம் செய்யும்போது அதில் எழும் தவறுகள் மற்றும் இடர்பாடுகளைக் கருத்தில் கொண்டு அவசரகோலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இம்முடிவை இவ்வாண்டு கல்வித்துறை மறுபரிசீலனை செய்வதோடு அதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்திட தமிழக அரசை மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 10⚔*


*⚡தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை, சிறப்புநிலை அனுமதிப்பதில் சமீபகாலமாக மிகப்பெரிய தேக்கநிலை நிலவுகிறது.  பெரும்பாலான மாவட்டக்கல்வி அலுவலர்கள் தேர்வுநிலை, சிறப்புநிலை அனுமதிக்க சான்றிதழ்களின் உண்மைத் தன்மை கோரி காலதாமதம் செய்து வருகின்றனர்.  10 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதாகக் கூறி காலதாமதம் செய்யும் இப்போக்கு எவ்விதத்திலும் நியாயமானதல்ல. எனவே, தமிழகக் கல்வித்துறை மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு இது தொடர்பான தெளிவுரை வழங்கி தேர்வுநிலை/சிறப்புநிலை தாமதமின்றி வழங்கிட மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 11⚔*


*⚡தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உயர்கல்வி பயின்றதற்கான பின்னேற்பு அனுமதி கல்வித்துறையால் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதனால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் நியாயமான பதவி உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு ஆகிய பயன்கள் பறிக்கப்பட்டுள்ளது.  எனவே, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை இனிமேலும் காலதாமதம் செய்யாமல் ஆசிரியர்களின் உயர்கல்விக்கான பின்னேற்பு அனுமதிகளை வழங்கிட மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*



*🛡தீர்மானம்: 12⚔*


*⚡தீர்மானம் எண் : 4 முதல் தீர்மானம் எண் : 11 வரை உள்ள தீர்மானங்களில் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் 07.06.2019 அன்று தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதென இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






No comments: