Tuesday, 11 June 2019

*புதிய கல்விக்கொள்கை குறித்து தீர்மானங்கள்:*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_11.html


🛡🕸

*🌟மத்திய அரசு வெளியிட்டிருக்கும்  புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கல்வியாளர்கள் 09.06.2019 அன்று விழுப்புரத்தில் கூடி அந்த அறிக்கையின் பல்வேறு அம்சங்கள் பற்றி  விவாதிக்கப்பட்டது.  அதில் இருக்கின்ற பல்வேறு குறைபாடுகள்,  மாற்றம் செய்ய வேண்டிய இடங்கள் ஆகியவற்றைக் குறித்து கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.*


🛡🕸

*🌟விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேராசிரியை வே.வசந்திதேவி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, ஆயிஷா நடராசன் , பேராசிரியர் கல்யாணி, கல்பாக்கம் விஞ்ஞானி ஶ்ரீதர், மும்பையிலிருந்து கல்வியாளர் இமையா, உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட  முக்கியமான கல்வியாளர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன :*


🛡🕸

*_முதல் தீர்மானம்:_*



*இந்த வரைவு அறிக்கை மீது பொது மக்களுடைய கருத்துக்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்ற கால வரையறை நீக்கப்படவேண்டும். கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.*

🛡🕸

*_இரண்டாவது தீர்மானம்:_*



*இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் இந்த வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் மத்திய அரசு வழங்க வேண்டும்.*

🛡🕸

*_மூன்றாவது தீர்மானம்:_*



*⚡தமிழக அரசு இந்த அறிக்கை மீது தனது நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிப்பதற்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் கூட்டி அவர்களுடைய கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் தனது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.*

🛡🕸

*_நான்காவது தீர்மானம்:_*



*⚡உயர்கல்வி நிறுவனங்களில் முன்பு இருந்த இட ஒதுக்கீடு முறையை மாற்றி புதிதாக ஒரு இட ஒதுக்கீட்டு முறையை பாஜக அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அதன்மூலம் பிற்படுத்தப்பட்ட , எஸ்சி, எஸ்டி வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒருவர்கூட கல்லூரிகளில் வேலைக்குப் போகமுடியாது என்ற நிலையை ஏற்படுத்தியது.  அதற்கு எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால் அவசர சட்டம் ஒன்றை இயற்றி பழைய முறையே தொடரும் என்று அறிவித்தது . மார்ச் மாதத்தில் இயற்றப்பட்ட அந்த அவசர சட்டம் ஆகஸ்ட் மாதம் காலாவதியாகிறது. எனவே பழைய இடஒதுக்கீட்டு முறையைப் பாதுகாப்பதற்கு உடனடியாக இப்போது துவங்கவிருக்கும்  பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு மசோதாவைக் கொண்டு வந்து அதை சட்டமாக்க வேண்டும்.*

🛡🕸

*🌟இந்த கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானங்களைப்போல திமுக உள்ளிட்ட  அரசியல் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு  அழுத்தம் தரவேண்டும். தமது பாராளுமன்ற உறுப்பினர்களை இவற்றை வலியுறுத்தி குரல் எழுப்புமாறு பணிக்கவேண்டும் என்றும் கூட்டத்தில் வேண்டுகோள் விடப்பட்டது. இன்றைய நிகழ்வின் அடுத்த கட்டமாக ஜூலை இரண்டாவது வாரத்தில் ஒரு நாள் கருத்தரங்கை நடத்துவது அதில் சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: