Thursday, 4 July 2019

*DEE PROCEEDINGS-தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஊராட்சி / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்புநிதிக் கணக்குகள் - மாநில கணக்காயர் அலுவலகத்தால் கணக்கு பராமரிக்கப்படுவது - 685 ஆசிரியர்கள் சார்ந்த கணக்கு முடித்து விபரங்கள் ஒப்படைக்க ஆய்வுக் கூட்டம் நடத்த கருத்துருக்கள் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்துதல் சார்பு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கடிதம்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/dee-proceedings-685.html


*🌟சென்னை மாநில கணக்காயர், இயக்குநர், உள்ளாட்சி தணிக்கை இயக்ககம் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர்களால் 02.07.2010 அன்று ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.*



*🌟அதில் 685 ஆசிரியர் வைப்புநிதி கணக்குகள் தணிக்கை செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை சரி செய்யும் பொருட்டு சென்னை மாநில கணக்காயர் தணிக்கை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி தணிக்கையாளர்களின் இனை அமர்வு கூட்டம் ஒரு வார காலத்திற்குள் நடத்தப்பட உள்ளதால், தங்கள் ஒன்றியத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் ஒரு அலுவலகத்திலிருந்து வேறு அலுவலகத்திற்கு மாறுதலில் சென்ற ஆசிரியர்கள் ஆகியோர்களின் சேமநல நிதி கணக்கு தணிக்கை செய்ய ஏதுவாக, முழு அளவில் கோப்புகள் மற்றும் பதிவேடுகள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்குஅறிவிக்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.*



*🌟இனை அமர்வு கூட்டத்தில் சேமநல நிதி கணக்கு தணிக்கை செய்ய ஏதுவாக பதிவேடுகள் எதுவும் தயார் நிலையில் வைக்காமல் இருப்பது கண்டறியப்படின், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது, எனவே, தணிக்கை செய்ய இதுவே இறுதி வாய்ப்பு கருதி, ஒரு ஒன்றியத்திலிருந்து வேறு ஒன்றியத்திற்கு அல்லது மாவட்டத்திற்கு சென்ற ஆசிரியர்கள் சேமநல நிதி கணக்கு தணிக்கை செய்ய பதிவேடுகள் மற்றும் கோப்புகள் தயார் நிலையில் பார்வை அலுவலர்கள் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: