*_“விதைத்தவன் உறங்கினாலும்விதைகள் உறங்குவதில்லை”_ *தேசிய கல்விக் கொள்கை-2019 வரைவு அறிக்கையைத் திரும்பப் பெறக்கோரி கையெழுத்து இயக்கம் மற்றும் நம் இயக்கத்தின் எழுச்சிமிகு இயக்க நாள் வாழ்த்துக்கள்! - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/08/2019.html
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 21 நாள் : 02.08.2019*
*பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*
*_நம் பேரியக்கத் தோழர்கள் அனைவருக்கும் எழுச்சிமிகு இயக்க நாள் வாழ்த்துக்கள்!_*
*🌟இன்று (02.08.2019) தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் மிகமிக முக்கியமான நாள். தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் தீரமும், தியாகமும் தோய்ந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உதித்த நாள் இன்று. எதேச்சதிகார, சந்தர்ப்பவாத தலைமையை எதிர்த்து முகிலைக் கிழித்துக் கொண்டு வெளிக்கிளம்புகின்ற முழுமதிபோல் நம் பேரியக்கம் உதித்த நாள்.*
*_“விதைத்தவன் உறங்கினாலும்விதைகள் உறங்குவதில்லை”_**என்ற வரிகளுக்கேற்ப நம் இயக்கத்தை வடிவமைத்து வழிநடத்திய நம் முன்னோர்கள் தற்போது இயக்கப் பணியில் இல்லை என்றாலும், அவர்கள் விதைத்த விதை வீண் போகவில்லை.*
*🌟தமிழகம் முழுவதும் ஆலமரம்போல் பரந்து விரிந்திருக்கிறதுநம் பேரியக்கம்,*
*_“இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் பதந்தரு இரண்டும் மாறி பழிமிகுந்து இழிவுற்றாலும் சுதந்திர தேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே”_*
*என்று _மகாகவி_ பாடினான்.*
*🌟அப்பாடல் வரிகளுக்கேற்ப எத்தனை இடர்கள் வந்தாலும், இழப்புகள் வந்தாலும், துயர்கள் வந்தாலும், துன்பங்கள் வந்தாலும் அத்தனையையும் ஏற்றுக்கொண்டு இயக்கப் பதாகையை உயர்த்திப்பிடிக்கின்ற நெஞ்சுரமும், நேர்மைத்திறமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான ஆசிரியத் தோழர்களை கொண்ட இயக்கம்தான் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
*🌟அப்படிப்பட்ட மாபெரும் இயக்கத்தின் “இயக்க நாள்” நிகழ்வை இன்று (02.08.2019) பேரெழச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் கொண்டாடி மகிழ்ந்திட மாநில மையம் மாவட்ட, வட்டார, நகரக் கிளை அமைப்புகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*🌟தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை முற்றிலும் தேசத்தின் இறையாண்மைக்கு எதிரானது. எனவே, அது திரும்பப்பெறப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு நம் பேரியக்கத்தின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இரண்டுபக்க கடிதத்தில் தேவைக்கேற்றவாறு பிரதிகள் எடுத்து வட்டார, நகரக்கிளைகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையொப்பம் பெற்று nep.edu@nic.inஎன்ற மத்திய அரசின் மின்னஞ்சல் முகவரிக்கு 15.08.2019-க்குள் அனுப்பி நம் எதிர்ப்பை பதிவு செய்திட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
*🌟தேசிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்க படிவம் Word file வடிவில் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது, link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளவும் தோழர்களே..*
No comments:
Post a Comment