Tuesday, 13 August 2019

*அரசு பள்ளிகள் மூடும் முடிவை கைவிடக் கோரி செப். 23 ல் வாகன பிரசாரம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் பேட்டி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/23.html


*🌟அரசு பள்ளிகள் மூடும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மக்கள் மத்தியில் வாகன பிரசாரம் வரும் செப். 23ம் தேதி முதல் மேற்கொள்ளப் பட இருப்பதாக மாநில பொதுச் செயலாளர் மயில் தெரிவித்தார்.*




*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் மேலகரத்தில் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ தலைமையில் நடந்தது.*




*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில துணைச் செயலாளர் _தோழர்.கணேசன்_ முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட செயலாளர் _தோழர்.பால்ராஜ்_ வரவேற்றார்.*




*_கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில் நிருபர்களிடம் கூறியதாவது:_*


*🌟தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை மூடும் நிலை இருந்து வருகிறது. 46 அரசு பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றப்படுவது என்பது மூடுவதற்கான மறைமுக வார்த்தையாகும். இதுமட்டுமின்றி, 1850 பள்ளிகளை மூடுவதற்கு அரசு தயாராகி வருவதாகவும் தெரிகிறது.*




*🌟இதனால் கிராமப்புறங்களில் மாணவர்களின் கல்வி நிலை, குறிப்பாக இலவச கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று தேசிய கல்விக் கொள்கை அறிக்கையும் திருப்ப பெற வேண்டும்.*




*🌟அரசு பள்ளிகள் மூடும் முடிவை கைவிட கோரியும், மூடிய அரசு பள்ளிகளை திறந்திடவும், தேசிய கல்விக் கொள்கை அறிக்கையை திரும்பப் பெறவும் வலியுறுத்தி பொதுமக்கள் கிராமம் தோறும் சந்திக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் 6 மண்டலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் 23ம் தேதி முதல் மக்கள் மத்தியில் வாகன பிரசாரம் மேற்கொள்வது என மாநில கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.*




*🌟மாநில பொதுச் செயலாளர் மயில், மாநில பொருளாளர் ஜோதிபாபு மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில் நிறுத்தி வைக்க பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வை நடத்திடவும், ஒரு பணியிடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி, உடனடியாக கலந்தாய்வு நடத்திடும், உபரி பணியிடம் மாறுதல் வழங்கும் போது, ஒன்றியத்தின் மூத்த ஆசிரியர்களை பணியிடம் மாறுதல் வழங்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*




🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: