Friday, 23 August 2019

*உபரி ஆசிரியர்களுக்கு இட மாறுதல் கலந்தாய்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/blog-post_23.html


*🌟பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் உபரியாக பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை வேறு இடங்களுக்கு மாறுதல் வழங்கும் கவுன்சலிங் 28ம் தேதி நடக்கிறது.*


*🌟இதையடுத்து 19 ஆயிரம் ஆசிரியர்கள் மாற்றப்பட உள்ளனர்.*


*🌟தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 52 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் 13 ஆயிரம் இயங்குகின்றன. மொத்தமுள்ள பள்ளிகளில் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.*


*🌟இந்நிலையில், சில குறிப்பிட்ட மாவட்டங்கள் மற்றும் பள்ளிகளில், பாடவாரியாக பணியில் இருக்க வேண்டிய ஆசிரியர்களுக்கு பதிலாக கூடுதலாக பாட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சில பள்ளிகளில் பாட ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.*


*🌟இதை கருத்தில்கொண்டு கடந்த ஆண்டு முதல் மாவட்ட வாரியாகவும், பாட வாரியாகவும் பணியில் உள்ள ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டு இருந்தார்.*


*🌟இதன்படி எடுக்கப்பட்ட பட்டியலின்படி குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் 13 ஆயிரம் முதல் 19 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றுவதாக தெரியவந்துள்ளது.*


*🌟இதையடுத்து, விதிப்படி ஒவ்வொரு பாடத்துக்கும் இருக்க வேண்டிய ஆசிரியர்கள் போக உபரியாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையில் பள்ளிக் கல்வித்துறை இறங்கியுள்ளது. துறை ரீதியாக உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்க முடிவு செய்யதுள்ளது.*


*_இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:_*


*🌟பள்ளிக் கல்வி இயக்ககத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிலவரப்படி அரசு, நகராட்சி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களில் உபரி ஆசிரியர்களின் விவரங்கள் ஒருங்கிணைந்த கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.*


*🌟அந்த பட்டியலின் அடிப்படையில், வரும் 28ம் தேதி காலை 9.30 மணி முதல் அந்தந்த மாவட்டத்துக்குள் மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவர்கள் மூலம் இணைய தளம் வழியாக கவுன்சலிங் நடத்தப்படும். இவ்வாறு இயக்குநர் கண்ணப்பன் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: