Monday, 16 September 2019

*5 , 8 -ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு! - போராட்டத்தை அறிவித்த பள்ளி ஆசிரியை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/5-8_16.html

**
*🛡5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்தத் திட்டம், இந்த ஆண்டு முதல் அமலானாலும், மூன்று ஆண்டுகளுக்கு தேர்ச்சியைத் தடைசெய்ய வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு, கல்வியாளர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக ஊடகத்திலும் இத்தேர்வு முறையை எதிர்த்தும் ஆதரித்தும் கருத்துகள் பகிரப்பட்டன.*

**
*🛡இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "இந்தத் தேர்வுக்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்" என்றார். ஆனால், சமூக ஊடகத்தில் இயங்கும் ஆசிரியர்களில் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ஜவ்வாது மலை, ஜமுனாமரத்தூர் உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், 5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்கு அறிவித்திருக்கும் பொதுத் தேர்வை கைவிடக் கோரி, நாளை முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகப் பதிந்திருந்தார்.*

**
*🛡அவரிடம் பேசினோம். "இங்கு படிப்பவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை குழந்தைகள். கல்வியின் அவசியம்குறித்து அதிகக் கவனம் இல்லாத பெற்றோர்களே அதிகம். அவர்களுடன் பேசி பள்ளிக்குக் குழந்தைகளை வரவைப்பதே சவாலானது.*

**
*🛡பல பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும்போது பிள்ளைகளையும் அழைத்துச்செல்வது வழக்கம். அப்படி இடைநிற்றலாகும் பிள்ளைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவருகிறோம். இடைநிற்றலான ஒரு மாணவனின் வயதைவைத்து நான்காம் வகுப்பில் சேரும்போது, ஒரே ஆண்டில் அந்த மாணவனால் எப்படி பொதுத்தேர்வை எழுத முடியும். தொடர்ந்து எழுதி தேர்ச்சி பெறாவிட்டால், மீண்டும் குழந்தைத் தொழிலாளியாகவே மாறிவிடுவான். இதையெல்லாம் அரசு கவனத்தில்கொள்ள வேண்டும் என்பதால், 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எனும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். அதற்காக நாளை எங்கள் பள்ளியில், இக்கருத்துக்கு உடன்படும் ஆசிரியர்கள் மட்டும் கறுப்பு பேட்ச் அணிந்து உண்ணாவிரதம் இருக்கப்போகிறோம்.*

**
*🛡இதனால் ஆசிரியர் பணி எதுவும் பாதிக்காது. நாங்கள் பசியோடு இருந்து பாடம் நடத்துவோம். மற்ற ஆசிரியர்கள், நாளை முதல் நான் தொடர் உண்ணாவிரதமாகவும் இருக்க முடிவெடுத்துள்ளேன். 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள், தங்களால் இயன்ற போராட்ட முறையில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளனர். அதேபோல பள்ளி மேலாண்மைக் குழுவும் எங்களோடு விரைவில் இணைவதாகச் சொல்லியுள்ளனர். ஃபேஸ்புக் மூலமாக என் செய்திகளைப் பார்த்து, மற்ற ஆசிரியர்களும் ஈடுபட்டால் மகிழ்ச்சி" என்கிறார் மகாலட்சுமி.*

http://dhunt.in/74KLo?s=a&ss=wsp

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: