Tuesday, 24 September 2019

*கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம்- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை*


⚔⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧⚔
 🛡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭🛡
 
https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_24.html

*சுற்றறிக்கை எண்:27 நாள்:24.9.2019*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*

**
*🛡நம் இயக்க வரலாற்றில் இடம்பெறப்போகும் _'கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கம்"_ தமிழ்நாட்டின் ஆறு முனைகளிலிருந்து நாம் திட்டமிட்டபடி நாளை 25.09.2019 தொடங்கி 29.09.2019 வரை பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் நடைபெற்று 29.09.2019 அன்று மாலை கரூர் நகரில் பிரச்சாரப் பொதுக்கூட்ட நிகழ்வோடு நிறைவு பெறுகிறது.*

**
*🛡மாநிலம் முழுவதும் நம் இயக்கத் தோழர்கள் பந்தயக்குதிரையின் பாய்ச்சல் வேகத்தோடு களப்பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். தங்களின் முதல் பருவ விடுமுறை நாட்களைத் துறந்து இயக்கம் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு சிந்தையில் வேறு சிந்தனையின்றி எத்தனை இடர்வரினும் எடுத்த முடிவை செயல்படுத்தும் முனைப்போடு களப்பணிகளில் கண்துஞ்சாது கடமையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*

**
*🛡மாநிலத்தின் மையப்பகுதியான கரூரில் 29.09.2019 அன்று நாம் நடத்துகின்ற நிறைவுப் பிரச்சாரப் பயண பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கரூர் மாவட்டக்கிளையின் தோழர்கள், _'இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து  அதனை அவன்கண் விடல்"_  என்ற வள்ளுவனின் வரிகளுக்கு வடிவமாகப் பம்பரம்போல் சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.*

**
*🛡பிரச்சாரப் பயண வாகனத்தில் செல்லும்போது அந்தந்த மாவட்டச்செயலாளர்கள் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்த அனைத்து ஆவணங்களின் நகல்களையும் கைவசம் வைத்திருக்குமாறு மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. நாம் நடத்துகின்ற பிரச்சாரப் பயணத்தால் யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாதவண்ணம் பயண நிகழ்வுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது கண்ணியமாகவும், கவனமாகவும் உரையாற்ற வேண்டும்.*

**
*🛡தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொதுப் பிரச்சனையில் ஒரு ஆசிரியர் இயக்கத்தின் ஈடுபாட்டை நடுநிலையாளர்கள், பொதுமக்கள் பாராட்டும் வகையில் நம் பிரச்சார நிகழ்வுகள் அமைந்திட வேண்டும் என மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

**
*🛡மேலும், கரூரில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஒவ்வொரு வட்டார, நகரக் கிளைகளிலிருந்தும் வாகன ஏற்பாடுகள் செய்து ஆசிரியப் பெருமக்களை அழைத்து வருவதில் கண்ணும் கருத்துமாக்ச் செயல்பட வேண்டும். கரூர் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்வியாளர்களான பேராசிரியர் தோழர். அருணன், தோழர். பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரும், STFI ல் அங்கம் வகிக்கும் நம் தோழமைச்சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றுகின்றனர். மேலும், பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பு சரியாக பிற்பகல் 3 மணிக்கு தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக புகழ் பெற்ற _'புதுகை பூபாளம்"_ குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே, பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் ஆசிரியப் பெருமக்கள் மிகச்சரியாக 29.09.2019 பிற்பகல் 3 மணிக்கு பொதுக்கூட்ட இடத்திற்கு வருகை தந்திட வேண்டும் என்பதில் மாவட்ட, வட்டார, நகர கிளைப் பொறுப்பாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*

**
*🛡பிரச்சாரச் செய்யும் இடங்களில், அப்பகுதிகளில் உள்ள ஆசிரியர்களை நூற்றுக்கணக்கில் அணிதிரட்டி பிரச்சார நிகழ்வுகளை அமைத்துக் கொள்ளவேண்டும். மேலும், 29.09.2019 அன்று கரூரில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் சங்கமிக்க வேண்டும். கரூர் பொதுக்கூட்டம் இயக்க வரலாற்றில் இடம் பிடிக்கின்ற கூட்டமாக அமைந்திட வேண்டும். கரூரை ஒட்டியுள்ள பிற மாவட்டத் தோழர்கள் கரூர் பொதுக்கூட்டத்திற்கு 100% நம் இயக்க உறுப்பினர்களை அழைத்து வருவதில் முனைப்புடன் களப்பணிகளை ஆற்ற வேண்டும் என மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*

🤝தோழமையுடன்;

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: