Thursday, 14 November 2019

*தொடக்கக்கல்வி - பொதுமாறுதல் கலந்தாய்வு - 2019 - 20 ஆம் கல்வியாண்டு - அங்கன்வாடிகளில் பணி மாறுதல் செய்யப்பட்ட உபரி ஆசிரியர்களை ஒன்றியத்தில் ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநருக்கு கோரிக்கை கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/2019-20_14.html


*✍தமிழகம் முழுவதும் அரசு/ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகங்களில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர்களாக கடந்த 2019 ஜனவரி மாதத்தில் அந்தந்த ஒன்றியங்களில் உபரியாக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு சில அங்கன்வாடிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட ஈராசிரியர் பள்ளிகளில் பணியாற்றிய இடைநிலை ஆசிரியர்களும், இன்னும் ஒரு சில அங்கன்வாடிகளில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அப்போதைய நிலையில் ஒன்றியத்தில் பணியில் இளைய இடைநிலை ஆசிரியர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். சில ஒன்றியங்களில் பள்ளியில் உபரி என்ற அடிப்படையில் 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்த பணியில் மூத்த இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர்.*

*✍தற்போது தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 18.11.2019 முதல் 21.11.2019 முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாங்கள் வெளியிட்டுள்ள ந.க.எண் : 04920/டி1/2019 நாள் : 12.11.2019 செயல்முறை ஆணையில் _'இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் பணிமாறுதல் முடிந்த பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்திற்கு பணி நிரவல் மூலம் பிற ஒன்றியத்திற்கு மாறுதலில் சென்றுள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வாய்ப்புக் கொடுத்து தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் வழங்கலாம்"_ என தெரிவித்துள்ளீர்கள். இது வரவேற்கத்தக்கது.*

*✍அங்கன்வாடிகளில் நியமிக்கப்பட்ட பல இடைநிலை ஆசிரியர்களும் பணிநிரவல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் தான். மேலும், அங்கன்வாடிகளில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் பலர் தற்போதைய நிலையில் ஒன்றியத்தில் பணியில் மூத்தவர்கள். எனவே, அவர்கள் சொந்த ஒன்றியத்தில் காலிப்பணியிடம் உருவாகும் போது முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கும் பணிமாறுதல் வழங்குவது தான் நியாயமானதாக இருக்கும் என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.*

*✍எனவே, இது தொடர்பாக தாங்கள் பரிசீலித்து விரைந்து உரிய ஆணை வழங்கி உதவுமாறு மாநில அமைப்பின் சார்பில் கனிவுடன் வேண்டுகிறோம்.*

🤝தோழமையுடன்;

*_ச.மயில்_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: