Wednesday, 20 November 2019

*வாய்மொழி உத்தரவுகளைப் பின்பற்றி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_20.html


*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 20/2019* 
*நாள்: 20.11.2019*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.ச. மயில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:_*

**
*🛡தமிழகம் முழுவதும் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 18.11.2019 ல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கலந்தாய்வில் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் ஆசிரியர் நலன், கல்வி நலன், மாணவர் நலன்களுக்கு எதிரான நிலைபாடுகளை தொடக்கக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.*

**
*🛡18.11.2019 முற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) நடைபெற்ற பின்பு ஒன்றிய அளவில் ஏற்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு, ஒன்றிய அளவில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்திருந்த தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.*

**
*🛡எனவே, மேற்படி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஒன்றிய முன்னுரிமையின்படி தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்திட தொடக்கக்கல்விதுறை உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*

**
*🛡19.11.2019 அன்று நடைபெற்ற ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்குப் பின்பு ஏற்பட்ட ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் ஐந்து மாணவர்களுக்குக் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் காலியாக இருந்த தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.*

**
*🛡ஐந்து மாணவர்களுக்குக் குறைவான எண்ணிக்கை கொண்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடத்தை நிரப்பக் கூடாது என்று எவ்விதமான எழுத்து மூலமான உத்தரவையும் தொடக்கக் கல்வித்துறை பிறப்பிக்காத நிலையில், உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு என்று கூறி தமிழகம் முழுவதும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.*

**
*🛡இதனால் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை எதிர்நோக்கி காத்திருந்த இடைநிலை ஆசிரியர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.*

**
*🛡ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் தொடக்கக்கல்வித்துறையில் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றபோது, வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட 1500க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றப்பட்டன.*

**
*🛡தற்போது வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் ஐந்து மாணவர்களுக்கு குறைவான பள்ளிகள் தலைமை ஆசிரியர் இல்லாத பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் அப்பள்ளிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.*

**
*🛡ஏற்கனவே மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அப்பள்ளிகள், மேலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும். எனவே அப்பள்ளிகளின் நலன் கருதி இக்கலந்தாய்விலேயே தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தொடக்கக் கல்வித்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*

**
*🛡தொடக்கக் கல்வித்துறையில் வாய்மொழி உத்தரவு என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிருப்தியும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது. நேற்று (19.11.2019) நடைபெற்ற கலந்தாய்வில் ஐந்து மாணவர்களுக்குக் குறைவான பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர் பணியிடம் திடீரென மறுக்கப்பட்டதை எதிர்த்து திருநெல்வேலி, கரூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.*

**
*🛡ஜனநாயக ரீதியில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திய சங்க நிர்வாகிகளை திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ~நடவடிக்கை எடுப்பேன்| என்று மிகக் கடுமையாக மிரட்டுயுள்ளார். அதேபோன்று விழுப்புரத்தில் போராட்டம் நடத்திய மாவட்ட நிர்வாகிகளை திருக்கோவிலூர் மாவட்டக்கல்வி அலுவலரும், ரிஷிவந்தியம் வட்டாரக்கல்வி அலுவலரும் 'போராட்டச்செய்தி ஊடகங்களில் வெளியானால் கடும் நடவடிக்கை எடுப்பேன்" என மிரட்டுயுள்ளனர்.*

**
*🛡சங்க நிர்வாகிகள் என்ற முறையில் நியாயத்திற்காகப் போராடியவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய அலுவலர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கிறது. போராடிய நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அதை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மாநில அமைப்பு நேரடியாக களத்தில் இறங்கி மாநில அளவில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்.*

**
*🛡எனவே, சங்கத்தின் திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுத்த கல்வித்துறை அலுவலர்கள் மீது பள்ளிக்கல்வித்துறை உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: