Thursday, 26 December 2019

*தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களே உங்களுக்கான வாக்குப் பதிவு மையம் எது? எங்கே உள்ளது?*

*தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களே உங்களுக்கான வாக்குப் பதிவு மையம் எது? எங்கே உள்ளது?*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎯ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (27.12.19) நடைபெற உள்ளது.*

*🎯முதல் கட்ட வாக்குப்பதிவுப் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள் தங்களுக்கான வாக்குப்பதிவு மையம் எது என்பதை இன்று (26.12.2019) முற்பகல் 10:00 மணிக்குப் பின்னர் இணைய வழியிலேயே அறிந்து கொள்ளலாம்.*

*🎯கீழே உள்ள இணைய முகவரியைத் தொட்டால் தங்களது Browser-ல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இணையப்பக்கம் தோன்றும்.*

*🎯அத்திரையில் தங்களுக்கான ஆறு இலக்க Polling Personal ID-யைத் தட்டச்சு செய்தால் தங்களைப் பணியமர்த்தியுள்ள வாக்குப்பதிவு மையம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.*

https://tnsec.tn.nic.in/eroll/project_main/pp_random_report/polling_station_search_using_polling_personnel_id.php

*🎯மக்களாட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களும் தங்களது பணியைத் திறம்பட மேற்கொள்ள வாழ்த்துகள்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Wednesday, 25 December 2019

*TNPTF - 11.01.2020 மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம், பங்கேற்கும் மாநில நிர்வாகிகள் பட்டியல், மாதிரி துண்டுப்பிரசுரம் மற்றும் 08.01.2020 அகில இந்திய வேலைநிறுத்தம் போராட்டம் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*TNPTF - 11.01.2020 மாவட்ட அளவிலான தர்ணா போராட்டம், பங்கேற்கும் மாநில நிர்வாகிகள் பட்டியல், மாதிரி துண்டுப்பிரசுரம் மற்றும் 08.01.2020 அகில இந்திய வேலைநிறுத்தம் போராட்டம் - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 35/2019 நாள்: 25.12.2019*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*☀️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் தோழர். மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நேற்று (24.12.2019) மாலை சென்னையில் நமது பேரியக்கத்தின் மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.*

*☀️அக்கூட்டத்தில் 17.11.2019 இராமேஸ்வரம் மாநிலப் பொதுக்குழு முடிவின்படி 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 04.01.2020 அன்று நடத்த வேண்டிய மாவட்ட அளவிலான 'தர்ணா போராட்டம்" தொடர்பாக விவாதிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தொடர் பணிகளின் காரணமாகவும், இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் மறுதிறப்பு 03.01.2020 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தர்ணா போராட்டத்தை சிறப்பாக நடத்துவதற்குரிய களப்பணிகளை மேற் கொள்வதற்குரிய கால அவகாசம் இல்லாத சூழ்நிலையாலும் மேற்கண்ட தர்ணா போராட்டத்தை 11.01.2020 சனிக்கிழமை முற்பகலிலோ அல்லது பிற்பகலிலோ அந்தந்த மாவட்ட வசதிக்கு ஏற்றவாறு நடத்திட தீர்மானிக்கப்பட்டது.*

*☀️எனவே, மாநில மைய முடிவின்படி 11.01.2020 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பேரெழுச்சியோடு தர்ணா போராட்டத்தை நடத்திட உரிய ஏற்பாடுகளைச் செய்திட மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளின் நிர்வாகிகளை மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. தர்ணா போராட்டத்திற்கான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வால்போஸ்டர்களை போதுமான அளவில் வெளியிட்டு மாவட்டம் முழுவதும் விநியோகித்து கோரிக்கைகள் அனைத்து ஆசிரியர்களிடமும் சென்றடைவதற்குரிய விரிவான ஏற்பாடுகளை மாவட்டக்கிளைகள் தவறாது மேற்கொள்ள வேண்டும். மாவட்ட வாரியாக தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, அதில் கண்டவாறு துண்டுப்பிரசுரங்களில் மாநில நிர்வாகிகளின் பெயர்களை 'சிறப்புரை" என்ற நிலையில் பயன்படுத்திக் கொள்ளவும் மாநில மையம் கேட்டுக்கொள்கிறது.*

*☀️மேலும், 08.01.2020 அன்று அகில இந்திய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறவுள்ள ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதென இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (ளுவுகுஐ) முடிவெடுத்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதன் அடிப்படையில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் தேச நலனுக்கான அப்போராட்டத்தில் பங்கேற்பதென 17.11.2019 இராமேஸ்வரம் மாநிலப் பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.*

*☀️தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாத்தல், தேசிய கல்விக் கொள்கை - 2019 ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்சனைகளை முன் வைத்து நடைபெறும் 08.01.2020 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் நம் பேரியக்கத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்பது நம் வரலாற்றுக் கடமையாகும். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து 2003ம் ஆண்டிலிருந்து இதுவரை நடைபெற்றுள்ள 16 அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்றுள்ள ஒரே ஆசிரியர் இயக்கம் என்ற பெருமைக்குரிய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. அந்த மாபெரும் இயக்கத்தின் போர்க்குணமிக்க உறுப்பினர்கள் அனைவரும் 08.01.2020 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு நம் கோரிக்கைகளை வலிமையாக எடுத்துரைக்க மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது. 08.01.2020 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்திற்குரிய மாதிரி துண்டுப்பிரசுரம் விரைவில் வெளியிடப்படும் என்பதையும் மாநில மையம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.*

*Word File வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைபடும் தோழர்கள் கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.*

*🗣️📜6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலந்தழுவிய அளவில் மாவட்ட அளவிலான மாபெரும் தர்ணா போராட்ட கோரிக்கைகள் அடங்கிய மாதிரி துண்டுப்பிரசுரம்*
👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/open?id=0B8st1_AFGpFkRXFQcTV3S1IxVTRwSEFSVDZFRXJ4TUFVNUVJ


*🗣️📜11.01.2020 தர்ணா போராட்டத்தில் மாவட்ட வாரியாக பங்கேற்கும் மாநில நிர்வாகிகளின் பட்டியல்*
👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/open?id=0B8st1_AFGpFkVFpIWEZ4MndIRHhjY29MQXBOdXA5U3lrWFMw


_🤝தோழமையுடன்;_


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






*சிவகங்கை - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாகன வசதி*

*சிவகங்கை - வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாகன வசதி*

*TNPTF கோரிக்கையை ஏற்று மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*சிவகங்கை மாவட்டத்தில் முதல்முறையாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.*

*🙏மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு சிவகங்கை TNPTF சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.*

_🤝தோழமையுடன்;_

*_முத்துப்பாண்டியன்,_*
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*சிவகங்கை மாவட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday, 24 December 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை இன்று (24.12.2019) சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனரகத்தில் சந்தித்த நிகழ்வு - பொதுச்செயலாளர் அறிக்கை*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை இன்று (24.12.2019)  சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனரகத்தில் சந்தித்த நிகழ்வு - பொதுச்செயலாளர் அறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மைய நிர்வாகிகள் மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள், மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ அவர்கள், மாநில பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ அவர்கள், மாநில துணை பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ அவர்களும் இன்று தொடக்கக்கல்வி இயக்குநர் _திரு.பழனிச்சாமி_ அவர்களை இன்று (24.12.2019)  சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனரகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.*

*🤝மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் நமது இயக்க நிர்வாகிகளை இன்முகத்தோடு வரவேற்றார்.*

*🛡இயக்குநர் உடனான சந்திப்பின் பொழுது சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது...*

*💥பொதுமாறுதல் கலந்தாய்வு முடிவுற்ற நிலையில் காலியாக உள்ள ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தினை 01.01.2019 முன்னுரிமைப் பட்டியலின் (Seniority Panel) அடிப்படையில் நிரப்ப வேண்டும்.*

*💥LKG, UKG -ல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் பழையபடி இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.*

*🎙நமது கோரிக்கைகளை இயக்குநர் அவர்கள் பொறுமையாக கேட்டப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றினால் தான் ஆரம்பப்பள்ளிகளின் தரத்தை முன்னேற்றமடையச் செய்ய முடியும் எனவே அனைத்து ஆசிரியர்களும் ஒத்துழைப்பு அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்காமல் அலைக்கழிப்பு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கலெக்டரிடம் மனு*

*தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்காமல் அலைக்கழிப்பு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கலெக்டரிடம்  மனு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.*

**
*🛡இப்புகாரினை அடுத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்ட தேர்தல் நட்தும் அலுவலரான (கலெக்டர்) திரு.ஜெ.ஜெயகாந்தன் அவர்களுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.*

_🤝தோழமையுடன்;_

*_முத்துபாண்டியன்,_*
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*சிவகங்கை மாவட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*தபால் வாக்குகளில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஆட்சியருக்கு மனு*

*தபால் வாக்குகளில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட ஆட்சியருக்கு மனு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡ஆசிரியர்களுக்கான தபால் வாக்குகளில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.ஜெயகாந்தன் அவர்களுக்கு மனு அனுப்பியுள்ளனர்.*

_🤝தோழமையுடன்;_

*_முத்துபாண்டியன்,_*
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*சிவகங்கை மாவட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்*

*போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*💥திருப்பத்தூரில் போலி சான்றிதழ் கொடுத்து பட்டதாரி ஆசிரியரியையாக பணியாற்றி வந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.*

*💥பட்டதாரி ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களை ஆய்வு செய்த போது முருகம்மாள் வழங்கிய சான்றிதழ் போலியானது என தெரியவந்தது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday, 23 December 2019

*தேர்வு பணியால் தேர்தல் பணி 'கட்' - 1243 ஆசிரியர்களுக்கு அரசு 'நோட்டீஸ்'*

*தேர்வு பணியால் தேர்தல் பணி 'கட்' - 1243 ஆசிரியர்களுக்கு அரசு 'நோட்டீஸ்'*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🙇‍♂திறனறித்தேர்வு (NMMS Exam) காரணமாக தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லாத 1243 ஆசிரியர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*வேண்டாம்.... எங்களை விட்டுடுங்க - தேர்தல் பார்வையாளர்கள் கடிதம்*

*வேண்டாம்.... எங்களை விட்டுடுங்க - தேர்தல் பார்வையாளர்கள் கடிதம்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday, 21 December 2019

*தேசம் காக்கும் வேலைநிறுத்தம் - அனைத்து துறை ஊழியர்களும் முழுமையாக பங்கேற்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்.*

*தேசம் காக்கும் வேலைநிறுத்தம் - அனைத்து துறை ஊழியர்களும் முழுமையாக பங்கேற்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள்.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், தமிழக அதிமுக அரசும் அமுல்படுத்தும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து தேச நலன் காக்கும் மகத்தான ஜனவரி 8 பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் அனைத்து துறை அரசு ஊழியர்களும் வெற்றிகரமாக்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*உள்ளாட்சி தேர்தலில் 'நோட்டா' கிடையாது.*

*உள்ளாட்சி தேர்தலில் 'நோட்டா' கிடையாது.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎯உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமையை வாக்காளர்களுக்கு வாய்ப்பில்லை என உயர்நீதிமன்ற கிளையில் மாநில தெர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 15 December 2019

*🗞 _TNPTF ஆசிரியர் முழக்கம்_ இயக்க இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் புகைப்படத் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/12/tnptf_15.html


*🗞தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொள்கைகளை, குறிக்கோள்களை, இலட்சியங்களைத் தாங்கி, இயக்கத்தின் போர்வாளாய் மாதமிருமுறை வந்துகொண்டிருந்த "ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி" என்னும் இயக்க இதழை மாநில பொதுக்குழு முடிவின்படி மாதமொருமுறை இதழாய், புத்தக வடிவில் கூடுதல் பக்கங்களுடன் _"TNPTF ஆசிரியர் முழக்கம்"_ என்ற பெயரில் வெளியிடும் நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க மதுரை மாநகரில், காக்கா தோப்பு தெருவில் அமைந்துள்ள மூட்டா அரங்கில் (15.12.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது.*

*🗞இதழ் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*

*🗞மாநில துணை பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ அவர்களும், STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர். ச.மோசஸ்_ அவர்களும் முன்னிலை வகித்து எழுச்சி உரை ஆற்றினார்கள்.*

*🗞மாநில பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்_ அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.*

*🗞தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் _எழுத்தாளர்.திரு.ச.தமிழ்ச்செல்வன்_ அவர்கள் _"TNPTF ஆசிரியர் முழக்கம்"_ இதழை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தினார்.*

*🗞தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில பொதுச்செயலாளர்களும், இயக்க இதழின் முன்னாள் இதழாசிரியர்கள்*

*_தோழர்.செ.நடேசன்,_ அவர்களும்,*

*_தோழர். ந.பர்வதராஜன்,_ அவர்களும்,*

*_தோழர்.செ.போத்திலிங்கம்,_ அவர்களும்,*

*_தோழர்.செ.பாலசந்தர்,_ அவர்களும்,*
*புதிதாக வெளியிட்ட இதழைப் பெற்றுக்கொண்டார்கள்.*

*🗞மாநில பொருளாளர் _தோழர். க.ஜோதிபாபு_ அவர்கள் நன்றியுரை கூறினார்.*

*📰படியுங்கள்*
*_இயக்கத்தின் போர்வாள்_*
*"TNPTF ஆசிரியர் முழக்கம்"*

_ஆண்டுச் சந்தா ரூ.200/-_
_ஆயுள் சந்தா ரூ.2000/-_

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм