*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசுக்கு கோரிக்கை மனு-கொரோனா நோய்த் தொற்றுக்கு அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தக் கோரியும், கொரோனா சிகிச்சையில் முறைகேடுகள் செய்யும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.*
*_தஆஆகூ/மா அ/கடித எண்: 35/2020, நாள்: 07.08.2020_*
*_பெறுநர்_*
⚡1. மாண்புமிகு, தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
⚡2. மாண்புமிகு, நிதியமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
⚡3. மதிப்புமிகு, தலைமைச் செயலாளர்,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
⚡4. மதிப்புமிகு. முதன்மைச்செயலாளர்,
நிதித்துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
⚡5. மதிப்புமிகு. ஆணையாளர்,
கருவூலம் மற்றும் கணக்குத்துறை,
3-வது மாடி, கால்நடை மருத்துவமனை வளாகம்,
அண்ணாசாலை, நந்தனம்,
சென்னை-600 635.
*மாண்புமிகு ஐயா,*
*_பொருள் :_*
*🛡️கல்வி - பள்ளிக்கல்வி - அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - கொரானா சிகிச்சைக்கு அரசாணை எண் : 279 நிதித்துறை நாள்: 24.06.2020ன் படி கட்டணமில்லா சிகிச்சை கோருதல் - சார்பு.*
*_பார்வை :_*
*🛡️1. அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020*
*🛡️2. அரசாணை எண்: 280 நிதித்துறை நாள்: 24.06.2020.*
*🛡️தமிழக அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு பல்வேறு நோய்களுக்கானஅறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.4 இலட்சம் எனவும், பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.7 1/2 இலட்சமும் வழங்கி வருகின்றது.*
*⚔️*
*🛡️தற்போது கொரானா எனும் கொடும் தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்இவ்வேளையில் ஆசிரியர் அரசு ஊழியர்களை இத்தொற்றிலிருந்து பாதுகாக்கும் நல்லெண்ணத்துடன் தமிழக முதலமைச்சர் இச்சிகிச்சைக்கு ஆகும் செலவுத் தொகையை மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளஏதுவாக பார்வை 2-ல் கண்ட அரசாணை எண்: 280 நிதித்துறை நாள் 24.06.2020-ன்படி 01.03.2020 முதல் 26.04.2020 முடிய இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கான செலவுத்தெகையை மீள பெற்றுக்கொள்ளவும்,*
*⚔️*
*🛡️பார்வை 1-ல் அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020 - ன் படி 01.07.2020 முதல் இந்த மருத்துவக்காப்பீட்டுத்திட்டம் ஓராண்டுக்கு தொடர்வதாகவும், இத்திட்டத்தின் கீழ் கொரானா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறுவைச் சிகிச்சைகளுக்குரூ.4 இலட்சம் எனவும், பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு 7 1/2இலட்சம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.*
*⚔️*
*🛡️இந்நிலையில் 01.07.2020 க்கு பிறகு கொரானா தொற்றால் பாதிக்கப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பார்வை 2-ல் கண்ட அரசாணை எண்: 280 நிதித்துறை நாள்: 24.06.2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள படி மட்டுமே கட்டணம் (Package) வழங்கப்படும் மாநிலத் திட்ட ஒருங்கிணைப்பாளர் திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றார்.*
*⚔️*
*🛡️01.07.2020-க்கு பின் ரூ.7% பார்வை 1-ல் கண்ட அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020 - ன் படி மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஓராண்டிற்கு தொடர்கின்ற நிலையில் அரசாணையில் குறிப்பிட்டபடி கொரானா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கானஅறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.4 இலட்சம் எனவும், பிரத்யேக அறுவைச் சிகிச்சைகளுக்கு ரூ.7 1/2 இலட்சம் வழங்குவது என்பது மீறப்படுகிறது,*
*⚔️*
*🛡️ஆகவே இவ்விசயத்தில் தமிழக அரசு உடன் தலையிட்டு 12 இலட்சம் ஆசிரியர் அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பார்வை 1-ல் கண்ட அரசாணை எண்: 279 நிதித்துறை நாள்: 24.06.2020-ன் படி காப்பீட்டு நிறுவனம், கொரானா சிகிச்சைக்கு கட்டணமில்லா சிகிச்சை வழங்குமா? என்பது பற்றி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களை வேண்டுகிறோம்.*
சென்னை
07.08.2020
_இப்படிக்கு,_
*_ச. மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*