*🛡️TNPTF-ன் 37-ஆம் இயக்க நாள் : திங்களன்று அலுவலகங்கள் முன்பு இயக்கப் பதாகையை உயர்த்திட மாநில மையத்தின் வாழ்த்துச் செய்தி*
*⚔️*
*🛡இன்று (02.08.2020) பெருமைக்குரிய நம் பேரியக்கம் தோன்றிய நாள். உதித்த போதே போராட்டத்தில் குதித்த மகத்தான நம் பேரியக்கத்தின் 37வது இயக்க தினம் இன்று.*
*⚔️*
*🛡கடந்த 36 ஆண்டுகால இயக்கத்தின் எழுச்சிமிகு பயணத்தில் எத்தனையோ தியாகம் தோய்ந்த வரலாற்றுச் சாதனைகள்; சோதனைகளைச் சாதனையாக்கிய சரித்திர நிகழ்வுகள்; தொய்வின்றித் தொடரும் பயணத்தில் தன்னிகரற்ற இயக்கத் தோழர்களின் தளர்வறியா களப்பணிகள்.*
*⚔️*
*🛡எத்தகைய இடர்வரினும் சுடர் முகம் கொண்டு சுட்டெரிக்கும் நெஞ்சுறுதியும், நேர்மைத் திறனும் கொண்ட பாசறையாய் நம் பேரியக்கம்.*
*⚔️*
*🛡கல்வி நலனுக்கோர் களங்கமென்றால் களத்தில் இறங்கிப் போராடும் இயக்கம்! ஆசிரியர் நலனுக்கோர் ஆபத்தென்றால் அலை கடலென ஆர்ப்பரிக்கும் இயக்கம்! மாணவர் நலனுக்கோர் மாசென்றால் மறத்தோடும், அறத்தோடும் போராடும் இயக்கம்! சமூக நலனுக்கோர் சங்கடமென்றால் சமரசமின்றிப் போராடும் இயக்கம்!*
*⚔️*
*🛡சாதி என்னும் சதிக்கும், மதமென்னும் பதத்திற்கு இரையாகாத எழுச்சிமிகு இயக்கம். பங்கமில்லாச் சங்கமென பார் போற்றும் நம் பேரியக்கம்.*
*⚔️*
*🛡இணையற்ற நம் இயக்கம் இன்று (02.08. 2020) 37 ஆம் ஆண்டில் இமாலய எழுச்சியோடு எழுந்து நிற்கிறது.*
*⚔️*
*🛡அனைத்து இயக்கத் தோழமைகளுக்கும் எழுச்சிமிகு இயக்க நாள் வாழ்த்துக்கள்.*
*⚔️*
*🛡இன்று (02.08.2020 - ஞாயிறு) முழு ஊரடங்கு என்பதால் 28.07.2020 மாநிலச் செயற்குழு முடிவின்படி நாளை (03.08.2020) அலுவலகங்கள் முன்பு இயக்கப் பதாகையை உயர்த்துவோம். உறுதியுடன் முன்னேறுவோம்.*
_🤝வாழ்த்துக்களுடன்_
*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment