Saturday, 30 January 2021

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - புதிய வட்டாரக் கிளை துவக்க விழா - மாநில மையம் வாழ்த்துச் செய்தி*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - புதிய வட்டாரக் கிளை துவக்க விழா - மாநில மையம் வாழ்த்துச் செய்தி*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம், தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(30.01.2021)புனித தோமையார் மலை வட்டாரக் கிளை தொடக்க விழா மற்றும் கிளை நிர்வாகிகள் தேர்வு ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.*

*🚩நம் பேரியக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் பெ.அலோசியஸ் துரைராஜ் உள்ளிட்ட மாவட்டக் கிளை நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.*

*🚩சென்னை மாநகரை ஒட்டி அமைந்துள்ள புனித தோமையார் மலை வட்டாரக் கிளை மாநிலத்தின் முன்னணிக் கிளைகளில் ஒன்றாய் உயர்ந்தோங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.*

*🚩புதிய கிளை தொடங்கிட அயராது உழைத்திட்ட தோழர்.சுரேஷ்குமார் அவர்களுக்கும், மாநில, மாவட்டக்கிளை நிர்வாகிகளுக்கும் மாநில மையம் பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.*

*🚩புதிய கிளையின் புதிய நிர்வாகிகள் இயக்கப் பணியில் இலக்கணமாய்த் திகழ்ந்திட மாநில மையம் வாழ்த்துகிறது.*

🤝வாழ்த்துக்களுடன்

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Thursday, 28 January 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- 28.01.2021 மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை-கூட்ட முடிவுகள்- செய்தியறிக்கை*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- 28.01.2021 மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை-கூட்ட முடிவுகள்- செய்தியறிக்கை*

*🛡️மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 01/2021  நாள்: 28.01.2021*

*🛡️15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!*

*⚔️*                                          
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் 28.01.2021 அன்று மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*

*⚔️*
*🛡️கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்.*

*⚔️*
*🛡️மதுரை மாவட்டச் செயலாளர் க.ஒச்சுக்காளை வரவேற்புரை ஆற்றினார்.*

*⚔️*
*🛡️மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.*
                                      
*⚔️*
*🛡️கூட்டத்தில் இயக்கத்தின் கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கல்விச்சூழல், இயக்கத்தின் 13-வது அமைப்புத் தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரை ஆற்றினார்.*

                                             *⚡கூட்டத்தில் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,*

*⚡இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும்,*

*⚡2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகக் கைவிட வேண்டும்,*

*⚡தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும்,*

*⚡மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்,*

*⚡ஆசிரியர் நியமன வயது வரம்பைத் தமிழக அரசு 40 ஆகக் குறைத்து ஆணையிட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும்,*

*⚡"கற்போம் எழுதுவோம்" திட்டத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்,*

*⚡2020-21 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தி பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணைகளை உடனடியாக வழங்கிட வேண்டும்,*

*⚡பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு ரத்து ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.*

*🛡️உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் 20.02.2021 அன்று சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் "தொடர் முழக்க போராட்டம்" நடத்திட முடிவு செய்யப்பட்டது.*                                           

*⚔️*                                           
*🛡️மாநில துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில துணை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*                                                                        

_🤝இப்படிக்கு;_                                                          

 *_ச.மயில்_*                                                _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*      

Saturday, 23 January 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்ட அழைப்பிதழ்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்ட அழைப்பிதழ்*

_நாள்:_
*⚡28.01.2021 வியாழன் காலை 10 மணி*

_இடம்:_
*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகம், மதுரை*

_தலைமை:_
*⚡திருமதி. மூ.மணிமேகலை, மாநிலத்தலைவர்*

_கூட்டப்பொருள்_

*⚡1) அஞ்சலி*

*⚡2) வேலை அறிக்கை*

*⚡3) வரவு - செலவு*

*⚡4) கொரோனா பெருந்தொற்று - தமிழகத்தின் இன்றைய கல்விச்சூழல்,*

*⚡5) 10.12.2020 சர்வதேச மனித உரிமைகள் தினம் - இணையவழிக் கருத்தரங்கம் - ஆய்வு,*

*⚡6) 17.12.2020 வட்டாரத் தலைநகர் ஆர்ப்பாட்டம் - ஆய்வு.*

*⚡7) 09.01.2021 மாவட்டத் தலைநகர் தர்ணா போராட்டம் - ஆய்வு*

*⚡8) அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோ-ஜியோ போராட்டங்கள் - நிலுவையில் உள்ள 17(ஆ) மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் - ஆய்வு,*

*⚡9) இயக்கத்தின் 13வது அமைப்புத் தேர்தல்கள் - வட்டார, நகர, மாநகரக் கிளைத் தேர்தல்கள் - ஆய்வு - இறுதிப்படுத்துதல்,*

*⚡10) மாவட்டத் தணிக்கை மற்றும் தேர்தல் - இறுதிப்படுத்துதல்,*

*⚡11) 15 அம்சக் கோரிக்கைகள் - சென்னையில் மாநில அளவிலான போராட்டம் திட்டமிடல்.*

*⚡12) ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக)*

*⚡13) பொதுச்செயலாளர் கொணர்வன*

*🛡️அனைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.*

_குறிப்பு:_

*🛡️28.01.2021 காலை 9 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும்.*

🤝தோழமையுடன்,

*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

*🛡️TNPTF இயக்கத்தின் 13வது அமைப்புத் தேர்தல்கள் நடத்த கால அட்டவணை நிர்ணயம் - பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியீடு*

*🛡️TNPTF இயக்கத்தின் 13வது அமைப்புத் தேர்தல்கள் நடத்த கால அட்டவணை நிர்ணயம் - பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியீடு*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் -  பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:22.01.2021*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத் தோழர்களே!_ வணக்கம்.*

*⚔️*
*🛡️29.11.2020 அன்று தேனியில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு முடிவின்படி இயக்கத்தின் 13வது அமைப்புத் தேர்தல்கள் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடத்தப்பட வேண்டும்.*

*⚡வட்டார,நகர, மாநகரக்கிளைத் தேர்தல்கள்- டிசம்பர் 2020 மற்றும் ஜனவரி 2021*

*⚡மாவட்டக் கிளைத்தேர்தல்கள்- பிப்ரவரி-2021*

*⚡மாநிலத் தேர்தல்- மார்ச் 2021*

*⚔️*
*🛡️மேற்கண்ட கால அட்டவணைப்படி தேர்தல்களை நடத்துவதில் மாவட்ட, வட்டார,நகர, மாநகரக்கிளைகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். மாநிலம் முழுவதும் பல மாவட்டக் கிளைகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார,நகர,மாநகரக் கிளைத் தேர்தல்களை நடத்துவதில் வேகமாகச் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இருப்பினும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார,நகர, மாநகரக் கிளைகளின் தேர்தலையும் ஜனவரி 2021க்குள் திட்டமிட்டபடி முடித்திட அம்மாவட்டக் கிளைகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.*

*⚔️*
*🛡️அதே நேரத்தில் ஒருசில மாவட்டக் கிளைகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டார,நகரக் கிளைகளின் தேர்தல்களை இதுவரை தொடங்காமலேயே இருப்பது வருத்தத்தைத் தருவதாக உள்ளது. அந்நிலையில் உள்ள மாவட்டக் கிளைகள் உடனடியாகத் தேர்தல் நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.*

*⚔️*
*🛡️எந்தச் சூழலிலும் மாநிலப் பொதுக்குழு தீர்மானித்த அட்டவணைப்படி  குறித்த காலத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதை மாநில மையம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.*

*⚔️*
*🛡️எக்காரணம் கொண்டும் மாவட்டக் கிளைத் தேர்தல்கள் பிப்ரவரி 2021க்குள் முடிக்கப்பட வேண்டும். அவ்வாறு தேர்தலை முடிக்கும் மாவட்டக் கிளைகள்தான் மார்ச் 2021 இல் நடைபெறும் மாநிலத் தேர்தலில் பங்கேற்க முடியும்.*

*⚔️*
*🛡️இது தொடர்பாக 28.01. 2021 அன்று மதுரையில் நடைபெறும் மாநிலச் செயற்குழுவில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.*

*⚔️*
*🛡️வட்டார,நகர,மாநகரக் கிளைத் தேர்தல்களில் கடைப்பிடிக்க வேண்டிய  சில முக்கிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இத்துடன் இரண்டு பக்கங்களில் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சரியாகக் கடைப்பிடித்து கிளைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்திட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*

🤝தோழமையுடன்;

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Thursday, 14 January 2021

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையத்தின் தமிழர் திருநாள் வாழ்த்துகள்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையத்தின் தமிழர் திருநாள் வாழ்த்துகள்*

*🌞உலகெங்கும் வாழும் உன்னதத் தமிழர்களின் உற்சாகத் திருநாள்*

*🧉உலகிற்கே உணவளிக்கும் உழவர்களின் ஒப்பற்ற பெருநாள்*

*🐂உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் உன்னதத் திருநாள்*

*🙋‍♂️சாதி மத பேதமற்ற சமத்துவத் திருநாள்*

*🚩இந்நன்னாளில் நம் பேரியக்கத் தோழர்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கிட,இன்பம் தங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் இனிதே வாழ்த்துகிறது*

*🤝பொங்கல் நல் வாழ்த்துக்களுடன்*

*_ச.மயில்_*
*பொதுச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Saturday, 9 January 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்றுவரும் (09.01.2021) "தர்ணா போராட்டம்" செய்தி துளிகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்றுவரும் (09.01.2021) "தர்ணா போராட்டம்" செய்தி துளிகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றுவரும்  தர்ணா போராட்டத்தில்  மாநில பொருளாளர் தோழர்.க.ஜோதிபாபு அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி*
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/KidhYzf3S80

*🛡️தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர்.கு.குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*

*🛡️மாவட்ட செயலாளர் தோழர்.இரா.சண்முகசாமி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.*

*🛡️மாவட்ட துணைத்தலைவர்கள் தோழர்.பா.ஷேக் ஜாகீர் உசேன்,*
*தோழர்.அ.வில்லியம்,*
*தோழர்.க.அமுதவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.*

*🛡️மாநில பொருளாளர் தோழர்.க.ஜோதிபாபு அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.*

*🛡️TNGEA மாவட்ட செயலாளர் தோழர்.K.மகாலிங்கம்,*
*LIC கோட்ட இணை செயலாளர் தோழர்.K.வேலாயுதம்,*
*ஊரக வளர்ச்சித் துறை மாவட்டத் தலைவர் தோழர்.K.கொளஞ்சிவேல்,*
*TNHHSSA தலைவர் தோழர்.J.சர்ச்சில் கார்ல் மார்க்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.*

*🛡️மாவட்ட துணைச் செயலாளர்கள் தோழர்.K.கலாநிதி,*
*தோழர்.கு.சுதா,*
*தோழர்.ப.கணபதி ஆகியோர் கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார்கள்.*

*🛡️ வட்டார செயலாளர்கள் சங்கராபுரம் வட்டார தோழர்.கு.தங்கராசு,*
*ரிஷிவந்தியம் வட்டார தோழர்.ஞான.மதலைமுத்து,*
*சின்னசேலம்  வட்டார தோழர்.க.இளங்கோவன்,*
*ஒலக்கூர் வட்டார தோழர்.மா.வடிவேல்,*
*வல்லம் வட்டார தோழர்.க.அன்பரசு,*
*கள்ளக்குறிச்சி வட்டார தோழர்.மா.செந்தில்குமார்,*
*விக்கிரவாண்டி வட்டார தோழர்.ஜி.மகிமைதாஸ்,*
*வானூர் வட்டார தோழர்.சீனு.பத்மநாபன்,*
*ஆதி.தி.நலம் கிளை தோழர்.இரா.அமுதன், ஆகியோர் கோரிக்கை உரை நிகழ்த்தினார்கள்.*

*🛡️மாவட்ட பொருளாளர் தோழர்.சு.தண்டபாணி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.*


Friday, 8 January 2021

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நாளை (09.01.2021) நடைபெறும் "தர்ணா போராட்டத்தில்" நமது இயக்க தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டி பொதுச்செயலாளர் அறிக்கை*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நாளை (09.01.2021) நடைபெறும் "தர்ணா போராட்டத்தில்" நமது இயக்க தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டி பொதுச்செயலாளர் அறிக்கை*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
*பொதுச் செயலாளரின் கடிதம்,நாள்:08.01.2021*

_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ *வணக்கம்.*

*⚔️*
*🛡️"அக்கினி குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்- வெந்து தணிந்தது காடு" என்ற மகாகவியின் பாடல் வரிகளுக்கு வடிவமாக TNPTF என்ற அக்கினிக்குஞ்சு நாளை பற்றவைக்கும் போராட்ட நெருப்பு "தர்ணா போராட்டம்" என்கிற வடிவில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை (09.01.2021) நடைபெற உள்ளது.*

*⚔️*
*🛡️15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாளை மாவட்டத் தலைநகரங்களில் நடத்தவுள்ள தர்ணா போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு வட்டார,நகர,மாநகர, மாவட்ட,மாநிலப் பொறுப்பாளர்களும் கண் துஞ்சாது களப்பணி ஆற்ற வேண்டியது இயக்க கடமையாகும்.*

*⚔️*
*🛡️சமீபகாலமாக வட்டார அளவில் அல்லது மாவட்ட அளவில் நமது இயக்கம் சார்பில் நடைபெறும் போராட்டங்களை ஒரு குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் ஆசிரியர்களைக் கொண்டு நடத்தினால் போதும் என்ற எண்ணம் ஒரு சில பொறுப்பாளர்களி டத்தில் உள்ளதை ஒரு சில இடங்களில் காணமுடிகிறது. அப்படிப்பட்ட எண்ணம் போராட்டக் கனலைக் குறைத்து விடும் என்பதை சம்பந்தப்பட்ட தோழர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.*

*⚔️*
*🛡️போராட்டக் களத்திற்கு எண்ணிக்கை வரம்பு என்பது தேவையில்லை. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீரத்துடன் தனியே  நெஞ்சுறுதியோடு அநீதிக்கு எதிராகப் போராடுகிறது என்கிற செய்தி தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் சென்றடைய வேண்டும். அதற்கேற்ப களப்பணிகள் அமைய வேண்டும்.எவ்வளவு ஆசிரியர்களை அணி திரட்ட முடியுமோ அவ்வளவு ஆசிரியர்களைத் திரட்ட வேண்டும்.*

*நாம் முன்வைத்துள்ள 15 அம்ச கோரிக்கைகள் என்பது வெற்றுக் கோரிக்கைகள் அல்ல.*

_அனைத்துக் கோரிக்கைகளும் பறிக்கப்பட்ட நம் உரிமைகளை உள்ளடக்கியவை._

_பல ஆண்டுகாலம் போராடிப் பெற்ற உரிமைகளைத் தாங்கி நிற்பவை._

_ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மீதான தமிழக அரசின் கொடூரத் தாக்குதலின் கோரமுகத்தை வெளிக்காட்டுபவை_

_15 அம்சக் கோரிக்கைகளும் ஏதாவது ஒருவகையில் தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களோடும் நெருக்கமான தொடர்புடையவை_

_ஆசிரியர் நலன் மட்டுமல்லாது மாணவர் நலன்,கல்வி நலன்,சமூக நலன் தாங்கி நிற்பவை._

_நம் எதிர்கால வாழ்வாதாரத்தை உயர்த்திப் பிடிப்பவை_

*⚔️*
*🛡️எனவே,யாருக்காகவோ நடக்கும் போராட்டம் என்று உணர்வுள்ள எந்த ஆசிரியராலும் ஒதுங்கி நிற்க முடியாது.இனி பறிப்பதற்கு எதுவும் இல்லை என்று எண்ணும் அளவிற்கு தமிழக அரசு உரிமைப் பறிப்பை ஒவ்வொன்றாய் நடத்திக்கொண்டிருக்கிறது.இனியும் வேடிக்கை பார்த்தால் விபரீதமாகிவிடும்.*

*⚔️*
*🛡️2021ல் உரிமைப் பறிப்பிற்கெதிரான முதல் போராட்டத்தை நம் பேரியக்கம் முன்னெடுத்தி ருக்கிறது.நம் போராட்டக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நிலையில் ஒருசில ஆசிரியர் அமைப்புகளும்,அரசு ஊழியர் அமைப்புகளும் போர்க்குரலை வெளியிட்டுள்ளன.*

*⚔️*
*🛡️ஜாக்டோ-ஜியோ பேரமைப்புக் கூட நேற்று (07.01.2021) சென்னையில் கூடி போராட்டத் திட்டங்களை விவாதித்துள்ளது.21.01.2021 அன்று திருச்சியில் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இவைகளெல்லாம் நம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாம்.*

*⚔️*
*🛡️சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையிலும் கூட தமிழக அரசு நம் கோரிக்கைகள் மீது அலட்சியம் காட்டுவதும், ஒழுங்கு நடவடிக்கைகளைக்கூட திரும்பப்பெற மறுப்பதும் தமிழ்நாட்டு ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அதிருப்தியைக் கொடுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் ஜனநாயக ரீதியிலான நம் தர்ணாப் போராட்டத்தை எவ்வாறாயினும் தடுத்திடவும்,தகர்த்தி டவும் கல்வித் துறையும், காவல் துறையும் செய்யும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கின்றன. எத்தகைய போராட்டத்தையும் இடர்களைத் தாண்டி, தடைகளை உடைத்து வெற்றிகரமாக நடத்தும் செயல்திறன்மிக்க நம் பேரியக்கத் தோழர்கள் இப்போராட்டத்தையும் இணையற்ற எழுச்சியோடு நடத்திக் காட்டுவார்கள்.*

*⚔️*
*🛡️நாளை நடைபெறும் மாவட்டத் தலைநகர் தர்ணாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலநூறு ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்ற செய்தி தமிழக அரசின் செவிப்பறைகளை எட்டவேண்டும்.இந்த "ஆட்சியில் போராடி பயனில்லை"என்று எந்த ஆட்சியிலும் போராடாமல் உரிமைகளைக் காவு கொடுத்துவிட்டு வீர வசனம் பேசும் சங்கத்தலைமைகள் இனியேனும் களத்திற்கு வரவேண்டும்.எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அநீதிக்கு எதிராகப் போராடுகிற புடம் போட்ட தங்கம் நம் சங்கம் என்பதை நிரூபிக்கிற போராட்டம் தான் நாளைய தர்ணாப் போராட்டம்.*

*⚔️*
*🛡️ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மீதான 17(ஆ)நடவடிக்கைகள் என்பதும்,குற்றவியல் நடவடிக்கைகள் என்பதும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்.அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.அதற்காக எத்தகைய தியாகத்தையும் புரிந்திட மாவட்டத் தலைநகரங்களில் நாளை தீரத்துடன் சங்கமிப்போம்!*
*_உரிமைக் குரலை ஓங்கி ஒலித்திடுவோம்!_*

*🤝புரட்சிகர போராட்ட வாழ்த்துக்களுடன்*

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Sunday, 3 January 2021

*🗳️தேர்தல் பணி பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு*

*🗳️தேர்தல் பணி பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு*

*(பத்திரிக்கைச் செய்தி*)

*🗳️சட்டப்பேரவைத் தோ்தலில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பட்டியலில் 50 வயதுக்கு மேற்பட்டோரை சோ்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.*

*🗳️தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.*

*🗳️இதற்கிடையே வாக்குசாவடி கண்காணிப்பு உட்பட தோ்தல் பணிகளில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்தான் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவா்*

*🗳️இதைக் கருத்தில் கொண்டு தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.*

*🗳️இதையடுத்து பள்ளித் தலைமையாசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*🗳️இதுதவிர ஏற்கனவே பட்டியல் சமா்ப்பித்தவா்கள் அதில் விடுபட்ட அல்லது சோ்க்கப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை திருத்தம் செய்து அனுப்ப வேண்டும். கரோனா தொற்று பரவலால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்களை பட்டியலில் சோ்க்கக்கூடாது.*

*🗳️அதேபோன்று ஆசிரியா்களின் புகைப்படம், வாக்காளா் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்கள் இன்றி தோ்தல் பணியில் இருந்து ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது. அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியா்கள் உரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.*

*🗳️அதை தலைமையாசிரியா்கள் உறுதிசெய்து பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் துரிதமாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது*

Saturday, 2 January 2021

🔴TNPTF- கொளத்தூர் வட்டார க்கிளையின் தேர்தல் முடிவுகள்*

*🔴TNPTF- கொளத்தூர் வட்டார க்கிளையின் தேர்தல் முடிவுகள்*

*🔴சேலம் மாவட்டம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொளத்தூர் வட்டாரக்கிளையின் தேர்தல் 27.12.20 இன்றுநங்கவள்ளி ஊ.ஒ.ந.பள்ளியில் நடைபெற்றது.*

*🔰பின்வரும்  தோழர்கள் புதிய பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்*

*🔰வட்டாரத் தலைவர் :*

*தோழர். P.கண்ணன்*

*🔰துணைத் தலைவர்கள் :*

*தோழர்கள்: 1.K.செந்தில்குமார் 2.R.சங்கர்.3.V.வள்ளி*

*🔰வட்டாரச் செயலாளர் :*

*1.தோழர். M.செல்வராஜ்*

*🔰துணைச் செயலாளர்கள் :*

*தோழர்கள்: 1.G.சீனிவாசன்  2.B.பாலமுருகன். 3.S.உமாமகேஸ்வரி*

*🔰வட்டாரப் பொருளாளர் :*

*தோழர். V.மகாலட்சுமி*

*🔰செயற்குழு உறுப்பினர்கள் :*

*தோழர்கள் 1.K.ஆனைக்கவுண்டன்.2.S.பெருமாள்  3.M.குருமூர்த்தி 4.G.தேவராஜன்.5.S.செந்தில்ராஜ்  6.M.ஜெயபிரசாத்.7.M.ராஜா*

*🔰மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் :*

*தோழர். M.மாதப்பன்*

🔴TNPTF- மேச்சேரி வட்டார க் கிளையின் தேர்தல் முடிவுகள்

*🔴TNPTF- மேச்சேரி வட்டார க் கிளையின் தேர்தல் முடிவுகள்*

*💥சேலம் மாவட்டம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேச்சேரி வட்டாரக் கிளையின் தேர்தல் 27.12.20 இன்று, நங்கவள்ளி, ஊ.ஒ.ந. பள்ளியில் நடைபெற்றது.*

*🔰புதிய பொறுப்பாளர் களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திருவாளர்கள்;*

*🔰வட்டாரத் தலைவர் :*

*M.சிவசங்கரன்*

*🔰துணைத் தலைவர்கள் :*
                 
*C.ஜெயராமன் R.பிரபு. M.கனிமொழி.*   
                                              *🔰வட்டாரச் செயலாளர் :*

*A.அண்ணாதுரை*

*🔰துணைச் செயலாளர்கள் :*

*N.சக்ரவர்த்தி  N.தேவராஜன் R.கலா*

*🔰வட்டாரப் பொருளாளர் :*

*M.கவிதா*

*🔰மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் :*

*G.தமிழ்செல்வன்*

*🔰செயற்குழு உறுப்பினர்கள் :*
  *K.விவேகானந்தன் N.கலையரசன் K.கோபாலன் S.தனசேகர் A.அம்பிகா S.சிவகாமி A.ரவிச்சந்திரன் K.செங்குட்டுவன்*

🔴TNPTF- நங்கவள்ளி வட்டாரக் கிளையின் தேர்தல் முடிவுகள்

*🔴TNPTF- நங்கவள்ளி வட்டாரக் கிளையின் தேர்தல் முடிவுகள்*

*💥சேலம் மாவட்டம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நங்கவள்ளி வட்டாரக் கிளையின் தேர்தல் 27.12.20 இன்று, நங்கவள்ளி, ஊ.ஒ.ந. பள்ளியில் நடைபெற்றது.*

*🔰புதிய பொறுப்பாளர் களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள திருவாளர்கள்;*

*🔰வட்டாரத் தலைவர் :*

*G.சுமதி*

*🔰துணைத் தலைவர்கள் :*
                   *I.உதயசங்கர் V.சம்பத்குமார். A.புவனேஸ்வரி.*   
                                              *🔰வட்டாரச் செயலாளர் :*

*M.கண்ணன்*

*🔰துணைச் செயலாளர்கள் :*

*A.பாஸ்கர் P.சுப்ரமணி A.சாரதா*

*🔰வட்டாரப் பொருளாளர் :*

*T.செந்தில்குமார்*

*🔰மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் :*

*R.சிவக்குமார்*

*🔰செயற்குழு உறுப்பினர்கள் : A.வெற்றிவேல் K.பிரதீப்குமார் T.சதீஸ்குமார் M.விவேகானந்தன், S.சிவகாமி P.ஜானகிராமன் K.கிருஷ்ணகுமார், M.ஆனந்த் I.மாரியப்பன்

*

Friday, 1 January 2021

*🎊தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையத்தின் சார்பாக 2021 புத்தாண்டு வாழ்த்துகள்*

*🎊தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையத்தின் சார்பாக 2021 புத்தாண்டு வாழ்த்துகள்*

*🚩தனித்துவம் வாய்ந்த இயக்கம்*

*🚩தன்னிகரற்ற போர்க்குணம் கொண்ட இயக்கம்*

*🚩எழுச்சிமிகு இயக்க வரலாறு கொண்ட இயக்கம்*

*🚩இணையற்ற களப் போராட்டங்களைக் கொண்ட இயக்கம்*

*🚩உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்ட இயக்கம்*

*🚩உன்னத லட்சியங்களைக் கொண்ட இயக்கம்*

*🚩உருக்குப் போன்ற உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம்*

*🚩உறுதிமிக்க தலைவர்களைக் கொண்ட இயக்கம்*

*🚩சமரசமற்ற கொள்கைகளைக் கொண்ட இயக்கம்*

*🚩சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளைக் கொண்ட இயக்கம்*

*🚩சாதி,மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட இயக்கம்*

*🚩தனிநபர் துதிபாடாத தரமான இயக்கம்*

*🚩போராட்டக் களங்களில் முன்களப் போராளிகளைக் கொண்ட இயக்கம்*

*🚩பணியில் உள்ள ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பாளர்களாய்க் கொண்ட ஜனநாயக இயக்கம்*

*🚩தொழிற்சங்க இலக்கணமும், தொலைநோக்குச் சிந்தனையும் கொண்ட இயக்கம்*

*🚩சமூக அக்கறையோடு  இடையறாது பயணிக்கும் இயக்கம்*

*🚩இத்தகு பேரியக்கமாம் TNPTFன் நாடி நரம்புகளாய்,ரத்த நாளங்களாய்த் திகழ்ந்து கொண்டிருக்கும் இயக்க உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்*

*🚩2021ல் நம் இயக்கத்தின் கள நிகழ்வுகளை முன்னிலும் முனைப்புடன் முன்னெடுக்க உறுதி ஏற்போம்*

*🤝வாழ்த்துக்களுடன்*

*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*