Friday 7 May 2021

*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஓர் சிறப்பு பார்வை*

*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி - ஓர் சிறப்பு பார்வை*

*_✍️அயன் சரவணன்_*

*⚡திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி 2.5.1977-ல் பிறந்தவர். இவரது இயற்பெயர் நல்லமுத்து பொய்யாமொழி.*

*⚡மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்களின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் மறைந்த முன்னாள் அமைச்சர் திரு.அன்பில் தர்மலிங்கம். திரு.அன்பில் தர்மலிங்கத்தின் மகன் திரு.அன்பில் பொய்யாமொழி. இவர் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். திரு.அன்பில் பொய்யாமொழியின் மகனே திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி.*

*⚡அன்பில் பொய்யாமொழி இளம்வயதிலேயே இறந்துவிட அவரது மகன் மகேஷ் ஸ்டாலின் குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாகவே மாறிப்போனார். ஸ்டாலின் வீட்டிலேயே வளர்ந்ததில், உதயநிதி ஸ்டாலினுக்கும் நெருக்கமான நண்பரானார். இவர்களின் நட்பு மூன்று தலைமுறைகளாகத் தொடர்கிறது.*

*⚡2001-ம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் M.C.A., முடித்த மகேஷ் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இருந்தார்.*

*⚡கட்சிப் பொறுப்பைப் பொறுத்தவரை, திமுக-வின் மாநில இளைஞரணி துணை அமைப்பாளராகவும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராகவும் உயர்த்தப்பட்டார்.*

*⚡கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் முதன்முறையாகத் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கி சட்டமன்ற உறுப்பினரனார்.*

*⚡மீண்டும் இரண்டாம் முறையாக 2021 சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தற்போதைய திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.*

*⚡சமூக வலைதளங்களைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் மிகச்சில அமைச்சர்களில் 44 வயதான திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் ஒருவர்.*

*⚡பா.ச்ச.க-வின் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப அது சட்டமாகும் முன்பே அதற்கான கட்டமைப்புகளை கடந்த அஇஅதிமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் செய்து கொடுத்துள்ளனர்.*

*⚡சமூகச் செயற்பாட்டாளர்களும், கல்வியாளர்களும் தொடர்ந்து எதிர்த்து வரும் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப சீரழிக்கப்பட்டுள்ள பள்ளிக்  கல்வித்துறையை மீட்டு, தமிழ்நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பிற்கு ஏற்ப அடுத்த கட்டத்திற்கு நேராக பள்ளிக்கல்வியை எடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அளிக்கப்பட்டுள்ளது.*

*⚡சுருங்கக்கூறின் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறைக்கான கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.*

No comments: