*🔥 T N P T F 🔥*
*🛡 அயன்🛡*
*📌Income Tax E-File (ITR) செய்ய மதுரை TNPTF சார்பில் இலவசப் பயிற்சி!*
*📌IT return இணைய வழியில் File செய்வதை பெரும்பான்மை ஆசிரியர்கள் புரியாத புதிராகவே கருதி வருகின்றனர். ஒருசில வட்டாரங்களில் ஆசிரிய இயக்கங்களே செய்து தருகின்றன. சில இடங்களில் இதற்கும் வசூல் வேட்டை நடத்தும் அலுவலகங்களும் உண்டு.*
*📌இவ்வாண்டு முதல் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள E-file முறை புரிந்தோருக்கே சுமையாகுமளவு உள்ள நிலையில், அதுகுறித்த பயிற்சி இன்று (28.08.2021) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் நடத்தப்பட்டது.*
*📌வருமான வரி கணக்கு 2021-22-ஆம் ஆண்டிற்கான இ-ஃபைலிங் செய்வதற்கான பயிற்சி முகாம் மாவட்ட துணை தலைவர் தோழர்.ஆதி நாராயணன் அவர்கள் தலைமையில் மதுரை TNPTF மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*
*📌வருமான வரித்துறையிலிருந்து வருமான வரித்துறை அலுவலர் தோழர்.பிரேம்குமார் அவர்கள் கலந்துகொண்டு வருமான வரி பிடித்தம் தொடர்பான சந்தேகங்களை விளக்கிப் பேசினார்.*
*📌அதன்பின்னர் ஒவ்வொரு ஆசிரியரும் ஆன்லைனில் தங்களுடைய வருமானவரி கணக்கினை இ-ஃபைலிங் முறையில் எவ்வாறு செய்வது என்பதை பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் மூலம் மேலூர் கல்வி மாவட்டச் செயலாளர் தோழர்.ஜேம்ஸ் ராஜா மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர்.ஜெயராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக விளக்கி கூறினார்கள்.*
*📌நிகழ்ச்சியின் இறுதியில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர்.சக்திவேல் நன்றியுரை கூறினார். மேற்கண்ட பயிற்சியினை மதுரை மாவட்டச் செயலாளர் தோழர்.சீனிவாசன் ஒருங்கிணைத்தார்.*
🙏நன்றி🙏
*TNPTF விழுதுகள்*