Saturday, 5 October 2019

*நடுநிலைப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை குறித்து திருநெல்வேலி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் _தோழர். பால்ராஜ்_ அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_80.html

*⚔*
*🛡தமிழகம் முழுவதும் அனைத்து _அரசு  மற்றும் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு_ இம்மாதம் 03 ஆம் தேதிமுதல் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது.*

*⚔*
*🛡இதுகுறித்து _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்_ திருநெல்வேலி மாவட்ட செயலாளர் செ.பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது...*

*⚔*
*🛡தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் _பயோ மெட்ரிக் வருகைப் பதிவை தழிழக அரசு கொண்டு வந்திருப்பதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது._*

*⚔*
*🛡அதே சமயம் இதை _நடைமுறைப் படுத்துவதில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன._ அவற்றை முற்றிலுமாக களைய தமிழ அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.*

*⚔*
*🛡அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல _அனைத்து அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் மடிக்கணினி வழங்கிட வேண்டும்._*

*⚔*
*🛡இணையதள வசதி அரசால் வழங்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் தங்களுடைய கைப்பேசியில் உள்ள இணைய தள வசதியையே பயன்படுத்த வேண்டியுள்ளது.*

*⚔*
*🛡எனவே அனைத்து பள்ளிகளுக்கும் அரசு அதிவேக இணையதள வசதி செய்து கொடுக்க வேண்டும்.*

*⚔*
*🛡பள்ளிகளில் தொடு உணர் (பயோ மெட்ரிக்) கருவியை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களே பொருத்த வேண்டும் என்கிறார்கள்.கணினிதகவல் தொழில்நுட்ப விவரங்கள் முழுமையாக தெரியாததால்  பல்வேறு தலைமை ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.*

*⚔*
*🛡எனவே நன்கு பயிற்சி பெற்ற கணிப்பொறி பொறியாளர்களைக் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் அரசே இணைப்பு கொடுக்க வேண்டும்.*

*⚔*
*🛡ஜியோ, வோடபோன், ஏர்டெல் போன்ற குறிப்பிட்ட சர்விஸ் புரைவைடரில் மட்டுமே வேலை செய்கிறது. _குறிப்பாக கிராமப்புறங்களில் அதிவேக இன்டர்நெட் வசதி தருவதில்லை._ எனவே இணைய தளத்தில் சர்வர்  இணைப்பு கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது.*

*⚔*
*🛡இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வருகை புரிந்த பின்பும் நெட்வொர்க் பிரச்சனையால் வருகை பதிவை குறித்த நேரத்தில்  செய்ய இயலவில்லை.*

*⚔*
*🛡மேலும் 9 மணிக்குள் வந்தால் _பச்சை சோன்_ குறியீடும், 9.01 முதல் 9.15 வரையில் _மஞ்சள் சோன்_ குறியீடும், 9.16 முதல் 9.30 வரை _ரெட் சோன்_ குறியீடும், 5 மஞ்சள் குறியீடு வந்தால் 1 சிவப்பு குறியீடாக கணக்கிடப்படும் எனவும் 3 சிவப்பு குறியீடு வந்தால் ஒரு நாள் தற்செயல் விடுப்பில் கழித்தம் செய்யப்படும் எனவும் _ஒரு மாதத்தில் 6 சிவப்பு நிற குறியீடு பெற்றால் குற்ற குறிப்பாணை  (மெமோ)_ வழங்கப்படும் எனவும் _ஆசிரியர்களை சமூக விரோத குற்றவாளிகளைப் போன்று சித்தரித்து_ நாளிதழில்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் உலா வருவது உண்மையிலே ஆசிரியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.*

*⚔*
*🛡பேருந்து வசதியே இல்லாத கடைக்கோடி கிராமங்களுக்கு ஆசிரியர்கள் குறித்த நேரத்திற்கு முன்பாக வந்தாலும் _மின்சாரம் இல்லையென்றாலும்,மடிக்கணினியில் சார்ஜ் இல்லையென்றாலும்_ வருகையை பதிவு செய்ய மிகுந்த சிரமப்பட  வேண்டியுள்ளது.*

*⚔*
*🛡மேலும் திடீரென காய்ச்சல் , தலைவலி, வயிற்று போக்கு, இருசக்கர வாகனம் பழுது போன்ற நேரங்களில் _அரைநாள் விடுப்பு எடுக்க அனுமதி உள்ளதா? இல்லையா?_ என்பது குறித்து எவ்விதமான தெளிவுரையும் இல்லை.*

*⚔*
*🛡தமிழக அரசு _அடுத்த மாதம் முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்  ஆரம்பப் பள்ளிகளுக்கும்_ பயோ  மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறைப் படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.*

*⚔*
*🛡எனவே அதற்குள்ளாக _இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை களைந்து_ அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளுக்கும் _விலையில்லா மடிக்கணினி வழங்குவதோடு_ கடைக்கோடி கிராமங்களிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள பள்ளிகளிலும் _அதி வேக இணையதள வசதியை_ அரசு ஏற்படுத்துவதோடு திடீரென ஏற்படும் இயற்கை சூழ்நிலையியல் காரணங்களுக்கு உரிய அனுமதி வழங்கும் விதத்தில் உரிய மாற்றம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை எங்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.*

🤝தோழமையுடன் ....

*_செ.பால்ராஜ்_*
*மாவட்ட செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*திருநெல்வேலி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*'இஸ்ரோ' செல்லும் அரசு பள்ளி மாணவி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி, 'இஸ்ரோ' விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடச் செல்கிறார்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_56.html

*🛰கரூர் மாவட்டம், க.பரமத்தி அரங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஒன்பதாம் வகுப்பு மாணவி சபீதா, 15. இவர், 2018 - 19ம் ஆண்டுக்கான, 'இன்ஸ்பயர் மானக்' கண்காட்சியில், 'நதிகளை எளிமையாக எவ்வாறு இணைப்பது' என்ற தலைப்பில், செயல்முறை விளக்கம் வைத்திருந்தார்.*

*🛰இதற்காக அவர், கேரளா மாநிலம், திருவனந்தபுரம், தும்பாவில் உள்ள, இஸ்ரோ விண்வெளி மையத்துக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டார்.*

*🛰வரும், 7ம் தேதி, திருவனந்தபுரம் சென்று, 10ம் தேதி வரை, இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தை பார்வையிடுகிறார்.*

*🛰நேற்று கரூரில் நடந்த வழியனுப்பு விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன், சபீதாவுக்கு சால்வை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*அக்டோபர்-5: அனைத்துலக ஆசிரியர் தினம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/5.html

*👨‍🏫ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-5 ஆம் தேதி அனைத்துலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.*

*👨‍🏫யுனெஸ்கோஅமைப்பால் 1994-ஆம் கொண்டு வரப்பட்ட முன்னெடுப்பைத் தொடர்ந்து  அக்டோபர்-5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி ஆசிரியர் தினத்தை உலகில் பெரும்பாலான நாடுகள் கொண்டாடுகின்றன.*

*👨‍🏫ஆசிரியர் தினம் சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், சில நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. ஆசிரியர்களின் மேன்மையை வருங்கால சந்ததியினரும் உணரும் விதமாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.*

*👨‍🏫இந்தியா செப்டம்பர் 5-ம் தேதியை இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுகிறது.*

*👨‍🏫ஆசிரியர் தினம் என்பது பயிற்றுவிக்கும் ஆசான்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். அவர்களை நன்றியுடன் நினைவு கூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்துவதுமே ஆசிரியர் தினம் கொண்டாட்டங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தொழில்நுட்ப பயன்பாட்டில் முன்னோடியாக விளங்கும் பள்ளிக்கல்வித் துறை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_5.html

*🎙ECZITE (Empowering Citizens Through Information Technology) An E-governance annual event organized by Information Technology Department, Govt of TamilNadu and  FICCI supported by CDAC, NIC, NASSCOM, and this event happened today on Leela palace, Chennai*

*🎙The main theme of this event is to promote emerging technologies and e-governance. State ministers, IAS, IPS officers, State Officials, MDs, CEOs, CFOs, Technologists, Industraliast, IT solution providers, Bankers, MNC Companies, Technical Experts, Entrepreneurs and NGO's had participated in this program.*

*🎙At this event, Our School Education department showcased the IT initiatives which we had implemented so far...*

*⚡EMIS*
*⚡Online Renewal & Recognition*
*⚡RTE Online Admission*
*⚡GIS Mapping*
*⚡Online Teachers Transfer*
*⚡Students Tracking*
*⚡Free Laptop*
*⚡Online Time Table*
*⚡Online Transfer Certificate*
*⚡Virtual Classroom*
*⚡TNSCERT Youtube Channel*
*⚡Hi-Tech Lab*
*⚡Kalvi Channel*
*⚡TN Diksha*
*⚡ETB Text Books*
*⚡Digital Assessment*
*⚡TNTP (Tamilnadu Teachers Platform)*
*⚡Observation App*
*⚡Attendance App*
*⚡Smart card etc.*

*🎙Everyone appreciated our School Education Department work which we had done so far and motivated us to continue doing the best with the help of emerging technologies.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





















Thursday, 3 October 2019

*சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 1,43,650 கணக்கில் வராத லஞ்ச பணம் பறிமுதல் தொடர்ந்து 2அரை மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றுவருகிறது.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/143650-2.html

*🚔சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை*

*🚔சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விழுப்புரம்  மற்றும் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை அலுவலகத்தில் இருந்த கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் பொதுமக்கள் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்திற்கு உள்ளேயே வைத்து விசாரணை நடந்து வருகிறது தற்போது யாரும் வெளியே செல்ல முடியாத அளவிற்கு அலுவலகம் பூட்டப்பட்டு உள்ளன முதற்கட்ட தகவல் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் சென்றதாகவும் அதுகுறித்து விசாரணையில் நடந்து வருவதாக தகவல்*

*_சற்றுமுன் கிடைத்த கூடுதல் தகவல்_*

*🚔லஞ்ச ஒழிப்பு போலீஸ் சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளே வந்ததை கண்டு அதிகாரிகள் கையிலிருந்த பணத்தை அலுவலக ஜன்னல் வழியாக பின்புறம் தூக்கி வீசியுள்ளனர் இதனை நேரில் பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகம் பின்புறம் பகுதியில் செடி புதர்களில் 4 போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர் அப்போது 500 ரூபாய் கட்டு ஒன்று போலீசார் கைப்பற்றி உள்ளனர் மேலும் பணம் வீசப்பட்டு உள்ளதா என்பதனை தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*தமிழகத்தில் பஞ்சாயத்து (2019) தேர்தல் விரைவில் வர உள்ளது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் செய்ய வேண்டியது என்ன?, தயாராக வைத்திருக்க வேண்டியது என்ன?*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/10/2019.html

*🎙தமிழகத்தில் (2019) பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது, அதற்கான பணிகள்  நடைபெற்று வருகிறது.*

*🎙பஞ்சாயத்து தேர்தல் பணிக்கான  (Local Body Election - 2019) நிரப்பப்பட்ட மாதிரி படிவம்.*
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
https://tnptfayan.blogspot.com/2019/10/2019.html

*_ஒவ்வொருவரும் அவரவர் சட்டமன்ற தொகுதி எண், பாகம் எண் மற்றும் வரிசை எண் அறிந்துகொள்ள_*
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿

*🎙இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களது தகவல்களை சரிபார்க்க பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளது. அதில் உங்களது (வாக்காளர்) விபரங்களை மொபைல் ஆப் மூலமாகவும் சரிபார்க்கலாம்.*

*_அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..._*

*🎙Google Play Store-ல்  சென்று Voter Help Line என்ற மொபைல் செயலியினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் இடதுபுறம் கீழ்பகுதியில் "EVP" என்ற வட்டம் இருக்கும் அதன் உள் சென்று உங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்யவும். அதில் உங்களது (வாக்காளர்) விபரம் வரும். மேலும், உங்களது அலைபேசி எண்ணை உள்ளீடு செய்து அவற்றில் உள்ள விபரங்கள் திருத்தம் செய்யப்பட வேண்டுமெனில் (✏) என்ற இடத்தினை தேர்வு செய்து திருத்தம் செய்யலாம். பின்னர் உறுதி செய்து விட்டு தங்களது குடும்பத்தினர் (Family Tree போன்று) விபரங்களையும் ஒருங்கே பதிவுகளை சரிபார்க்கலாம்.*

*🎙இறுதியாக உங்களது வாக்குச்சாவடி பற்றிய விபரம் பூர்த்தி செய்து சம்ர்ப்பிக்கவும். முடிவுற்றவுடன் கடைசியாக கீழே உங்களது பதிவு செய்தமைக்காக (Download Certificate) தேர்தல் ஆணையத்தால் சான்று வழங்கப்படும்.*

*🎙இந்த எளிய முறையினை பயன்படுத்தி அனைவரும் பயனடைய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.*

*********************

*🎙தேர்தல் பணியில் இருந்து யார் யாரெல்லாம் விலக்கு பெறலாம்*
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿

*📢📢📢📢தேர்தல் படிவம் கொடுக்கவிருக்கும் ஆசிரியர் பெருமக்களே!*📢📢📢📢

*_உங்களின் கவனத்திற்கு...._*

*⚡01.உடல் ஊனமுற்றோர்*.
*⚡02.கண்பார்வை அற்றோர்*.
*⚡03.கண் பார்வை குறைபாடு உடையோர்*.
*⚡04.தொழு நோயாளிகள்*.
*⚡05.காது கேளாதோர்*.
*⚡06.கை,கால் ஊனமுற்றோர்*.
*⚡07.மன வளர்ச்சி குன்றியோர்*.
*⚡08.மன நோயாளிகள்*.
*⚡09.இருதய அறுவை சிகிச்சை செய்தோர்*.
*⚡10.கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்டோர்*.
*⚡11.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தோர்*.
*⚡12.எட்டு மாதங்கள் நிறைவுற்ற கர்ப்பிணி பெண்கள்*.

🎙உள்ளிட்டோர் தேர்தல் படிவங்களை *பூர்த்தி செய்து கொடுக்காதீர்கள்.*

*🎙விண்ணப்ப படிவங்களை கொடுத்துவிட்டு பின்பு தேர்தல் பணி வேண்டாம் என கேன்சல் பண்ண பல முறை அங்கும் இங்கும் அலைய வேண்டியதுவரும்.*

*_எனவே படிவம் கேட்கும் போதே மேற்காண் குறைபாடு உடையோர் படிவத்தை வழங்காமல் தவிர்த்து விடுவது நல்லது._*

*********************

*தேர்தல் படிவத்தில் பூர்த்தி செய்ய Pay Band மற்றும் Pay Level தெரிந்து கொள்ள இதோ Pay Matrix அட்டவணை*.
👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿👇🏿
https://tnptfayan.blogspot.com/2019/10/2019.html

*ஆசிரியர் நலனில் என்றும் அக்கறையாய்...*


🤝தோழமையுடன்....

*_செ.பால்ராஜ்_*
*மாவட்ட செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* 
*திருநெல்வேலி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм








*கள்ளக்குறிச்சி லயன்ஸ் சங்கம் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_3.html

*⚡திரு. அ.ரஹீம் TNPTF- மாநில துணை தலைவர்.*

*_மற்றும்_*

*⚡திரு.C. சதீஷ் பாபு TNPTF- வட்டார செயற்குழு உறுப்பினர்.*

*🏆💐அவர்களுக்கு கள்ளக்குறிச்சி  லயன்ஸ் கிளப்சார்பாக சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கி கௌரவித்தார்கள்.*

இடம்: கள்ளக்குறிச்சி
நாள்: 02.10.2019

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





Wednesday, 2 October 2019

*நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post.html

*⚔*
*🛡திருச்செங்கோட்டில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.*

*⚔*
*🛡திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று கோரிக்கைகளை வலியறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.*

*⚔*
*🛡ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் _தோழர்.கலைச்செல்வன்_ தலைமை வகித்தார்.*

*🛡வட்டாரத் தலைவர் _தோழர்.கோபிநாத்_ வரவேற்றார்.*

*🛡தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் _தோழர்.அர்ஜுனன்_ வாழ்த்து பேசினார்.*

*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் _தோழர்.மாதேஷ்_ கண்டன உரையாற்றினார்.*

*⚔*
*🛡இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வைரம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த பிரகாசம், பில்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்படும் எல்.கே.ஜி, யு.கே.ஜி., வகுப்புகளுக்கு ஆசிரியராக நியமித்தது மற்றும் தலைமை ஆசிரியர் விடுப்பில் உள்ள நிலையில், வைரம் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, செருக்கலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியரை நியமித்த, பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலர்ருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தங்களின் கோரிக்கை மனு மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கினர்.*

*🛡கொல்லிமலை வட்டாரம் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*உயர் நீதிமன்றத்தை அதிரவைத்த 2ஆம் வகுப்பு சிறுமி.. கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவு..*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/2.html

*🎓திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சிதிலமடைந்த அரசு தொடக்கப்பள்ளியை சீரமைக்க வலியுறுத்தி 2ஆம் வகுப்பு மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*

*🎓பொன்னேரி சிவன் கோவில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பொன்னேரியை சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பாஸ்கரன் என்பவரது 6 வயது மகள் அதிகை முத்தரசி இந்தப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.*

*🎓இந்நிலையில் 2ஆம் வகுப்பு மாணவி அதிகை முத்தரசி தமது பள்ளியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார்.*

*🎓அதில் தமது பள்ளி சிதிலமடைந்து இருப்பதாகவும், தரை பெயர்ந்து உள்ளதாகவும், பள்ளியின் பின்பகுதியில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தவுதாகவும், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக இருப்பதால் தங்களது பள்ளியை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.*

*🎓இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வரை மனுஅளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், உடனே தமது பள்ளியை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.*

*🎓இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்றும், கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.*

*🎓அரசுப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தனது பள்ளியை சீரமைத்து தருமாறு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм