Sunday, 31 May 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் கூட்டம் அழைப்பிதழ் (காணொளி வழி)*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் கூட்டம் அழைப்பிதழ் (காணொளி வழி)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🌟மாநில நிர்வாகிகள் கூட்டம் (காணொளி வழி) நாள்: 01.06.2020 திங்கள் முற்பகல் சரியாக 11 மணி*

*🌟நிகழ்வு: காணொளி வழி*

*🌟தலைமை: _திருமதி. மு.மணிமேகலை, மாநிலத்தலைவர்_*

_கூட்டப்பொருள்:_

*⚡1) கொரோனா - ஊரடங்கு - மாநிலம் முழுவதும் இயக்கத்தின் உதவிப்பணிகள் - ஆய்வு.*

*⚡2) DA உயர்வு மற்றும் E.L ஊதிய ரத்து, GPF,CPS வட்டி விகிதம் குறைப்பு, ஓய்வு வயது உயர்வு ஆகிய அரசாணைகளை ரத்து செய்யக்கோரிகோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் - ஆய்வு.*

*⚡3) இயக்கத்தின் அமைப்பு விதித் திருத்தக்குழு - பணிகள் - ஆய்வு.*

*⚡4) அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோஜியோ போராட்டங்கள் - நிலுவையில் உள்ள 17(ஆ) நடவடிக்கைகள் - ஆய்வு.*

*⚡5) இயக்கத்தின் அமைப்புத் தேர்தல்கள்.*

*⚡6) கொரோனா ஊரடங்கு - பள்ளிக்கல்வி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தமிழக அரசு நிபுணர் குழு அமைப்பு - ஆய்வு,*

*⚡7) எதிர்கால இயக்கச் செயல்பாடுகள்.*

*⚡8) ஆசிரியர் பிரச்சனைகள்.*

*⚡9) பொதுச் செயலாளர் கொணர்வென*

*🌟கூட்டம் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே (சரியாக 10.45 மணி) தங்கள் இல்லத்தில் காணொளிக் கூட்டத்தில் கலந்து கொள்ள தயார் நிலையில் இருந்திட அன்புடன் வேண்டுகிறேன்.*

சென்னை
31.05.2020

_🤝தோழமையுடன்,_

*_ச. மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை கடிதம்*

*பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை கடிதம்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*✉️*
*🛡️பள்ளிக்கல்வி – கோவிட் 19 நோய்த்தொற்றால் பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் - பாதிப்புக்களைச் சீர் செய்யத்தக்க ஆலோசனைகள் அளித்திட நிபுணர் குழு அமைப்பு - நிபுணர் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை இணைத்திட வேண்டுதல் சார்பு.*

*✉️*
*🛡️கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் அனைத்துவகைப் பள்ளிகளும் 16.03.2020 முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் வழக்கமான பள்ளி வேலை நாட்களில் 30 நாட்களுக்கு மேல் பள்ளிகள் இயங்காத நிலை ஏற்பட்டது. மேலும், 2020 - 2021 ஆம் கல்வியாண்டிலும் குறித்த காலத்தில் பள்ளிகளைத் திறக்க இயலாத சூழல் தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது.*

*✉️*
*🛡️இந்நிலையில் 2019 - 20 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதாலும், 2020 - 21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதாலும் பள்ளிக்கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், வேலைநாட்கள் குறைப்பால் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான வழிவகைகள், அதற்காகப் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கூறுகளைப் பற்றி ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பார்வை 1 ல் கண்ட அரசாணையின் மூலம் தங்கள் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அக்குழுவில் அலுவல் ரீதியாக கல்வித்துறையில் இயக்குநர்கள் மட்டத்திலான உயர் அலுவலர்களும், UNICEF, TNeGA சென்னை ஐ.ஐ.டி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.*

*✉️*
*🛡️இந்நிலையில் பார்வை 2 ல் கண்ட அரசாணையில் நிபுணர் குழுவில் CBSE பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட மேலும் நான்கு பேரைத் தங்கள் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு சேர்த்துள்ளது.*

*✉️*
*🛡️கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.*

*✉️*
*🛡️ஆனால், குக்கிராமங்களிலெல்லாம் செயல்பாட்டுக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான். அங்கு பயிலும் மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் எதுவுமில்லாதவர்கள். கல்வியறிவு அதிகம் பெறாத பெற்றோர்களின் குழந்தைகள். தற்போதைய கல்விச் சூழலை எதிர் கொள்வதற்குரிய வாய்ப்பு வசதி இல்லாதவர்கள்.*

*✉️*
*🛡️எனவே, கோவிட்-19 ஆல் தமிழகத்தின் கல்வி மற்றும் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைத் தீர்க்கும் ஆலோசனைகள் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும். எனவே, அதற்கேற்றவாறு தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இன்றைய கல்விச் சூழலை, களச்சூழலை, இடர்பாடுகளை நன்கு உணர்ந்த தகுதி வாய்ந்த, சிறந்த ஆசிரியர்களையும் நிபுணர் குழுவில் இணைப்பது அவசியமாகும்.*

*✉️*
*🛡️மேலும், தமிழகத்தில் இன்றைய கல்விச்சூழலை, கல்வியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பொருத்தமான சிலரையும் நிபுணர் குழுவில் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைப்பது நிபுணர் குழுவின் பணிகளுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாகவும், நிபுணர் குழுவின் ஆலோசனைகள் முழுமை பெறுவதற்கும் உதவியாக அமையும். எனவே, எங்களது அமைப்பின் வேண்டுகோளை தாங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து நிறைவேற்றிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் வேண்டுகிறோம்.*
                                             
_🤝இப்படிக்கு,_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday, 30 May 2020

*கொரோனாவால் தொடர்ந்து பள்ளிகள் மூடல் / கற்றல் - கற்பித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கிட / தமிழக அரசு நிபுணர் குழு அமைப்பு / குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் இணைக்க வேண்டும் / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*கொரோனாவால் தொடர்ந்து பள்ளிகள் மூடல் / கற்றல் - கற்பித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கிட / தமிழக அரசு நிபுணர் குழு அமைப்பு / குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் இணைக்க வேண்டும் / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 08/2020  நாள்: 30.05.2020*

*🛡️கொரோனாவால் தொடர்ந்து பள்ளிகள் மூடல் கற்றல் - கற்பித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கிட தமிழக அரசு நிபுணர் குழு அமைப்பு குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் இணைக்க வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் மாநில அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*⚔️*
*🛡️கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் 16.03.2020 முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் வழக்கமான பள்ளி வேலை நாட்களில் 30 நாட்களுக்கு மேல் பள்ளிகள் இயங்காத நிலை ஏற்பட்டது. இதனால் 1 முதல் 12 வகுப்புக்கள் வரை பயிலும் மாணவர்களின் கல்விச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மேலும் 1 முதல் 9 வகுப்புக்கள் வரை நடத்த வேண்டிய மூன்றாம் பருவத்தேர்வையும் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டு துவங்கவுள்ள நிலையிலும், கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் குறித்த காலத்தில் பள்ளிகளைத் திறக்க இயலாத சூழல் தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் 2019 - 20 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதாலும், 2020 - 21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாலும் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலையில் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கற்றல் கற்பித்தல் செயல்முறைகளில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான வழிவகைகள், அதற்காகப் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கூறுகளைப் பற்றி ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை 12.05.2020 ல் வெளியிட்ட அரசாணையின் மூலம் தமிழக அரசு அமைத்தது.*

*⚔️*
*🛡️இக்குழுவில் அலுவல் ரீதியாக கல்வித்துறையில் இயக்குநர்கள் மட்டத்திலான அலுவலர்களும், UNICEF, TNeGA சென்னை ஐ.ஐ.டி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.*

*⚔️*
*🛡️இந்நிலையில் 29.05.2020 ல் வெளியிட்டுள்ள அரசாணையில் நிபுணர் குழுவில் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட நான்குபேரைக் கூடுதலாக தமிழக அரசு சேர்த்துள்ளது.*

*⚔️*
*🛡️கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளது.*

*⚔️*
*🛡️ஆனால், குக்கிராமங்களிலெல்லாம் செயல்பாட்டுக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான். அங்கு பயிலும் மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவுமில்லாதவர்கள். கல்வியறிவு அதிகம் பெறாத பெற்றோர்களின் குழந்தைகள். தற்போதைய கல்விச் சூழலை எதிர் கொள்வதற்குரிய வாய்ப்பு வசதி இல்லாதவர்கள்.*

*⚔️*
*🛡️எனவே, கோவிட்-19 ஆல் தமிழகத்தின் கல்வி மற்றும் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைத் தீர்க்கும் ஆலோசனைகள் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி சார்ந்த, கற்றல் கற்பித்தல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும். எனவே, அதற்கேற்றவாறு தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இன்றைய கல்விச் சூழலை, களச்சூழலை நன்கு உணர்ந்த தகுதி வாய்ந்த, சிறந்த ஆசிரியர்களையும் நிபுணர் குழுவில் இணைப்பது அவசியமாகும்.*

*⚔️*
*🛡️மேலும், தமிழகத்தில் இன்றைய கல்விச்சூழலை, கல்வியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பொருத்தமான சிலரையும் நிபுணர் குழுவில் இணைக்க வேண்டும். அதுவே நிபுணர் குழுவின் ஆலோசனைகள் உண்மையான பலனைத் தருவதாகவும், தமிழகத்தின் இன்றைய பள்ளிக்கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்குரிய செயல் திட்டங்களைத் தருவதாகவும், எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அமையும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
         

 _இப்படிக்கு,_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*நீதிமன்றத் தீர்ப்பின்படி, அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திட மாவட்டக் கிளைகள் விரைந்து செயலாற்றிட வேண்டும் - TNPTF பொதுச் செயலாளர் சுற்றிக்கை*

*நீதிமன்றத் தீர்ப்பின்படி, அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திட மாவட்டக் கிளைகள் விரைந்து செயலாற்றிட வேண்டும் - TNPTF பொதுச் செயலாளர் சுற்றிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

_பொதுச் செயலாளரின் சுற்றிக்கை எண்: 05/2020_

_நாள்: 30.05.2020_

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*⚔️*
*🛡 கொரோனா ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கல்விக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு விடையளிக்கும் சூழல் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கினாலும், நடைமுறையில் முழுமையான பணிகள் அங்கு நடைபெறுவதில் பெரும் பின்னடைவு உள்ளது.*

*⚔️*
*🛡 அதற்குக் கல்வித்துறை அலுவலகங்களும் விதிவிலக்கு அல்ல. தமிழ்நாடு முழுவதும் கல்வித்துறை அலுவலங்களில் ஆசிரியர்களின் பணப்பலன் சார்ந்த, பணி சார்ந்த உத்தரவுகள் பெறுவதில் தேக்கநிலை உள்ளது. தொடர்புடைய அலுவலர்கள் இவற்றைச் சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.*

*⚔️*
*🛡 தமிழ்நாடு முழுவதும் போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17(ஆ) நடவடிக்கைகளும், குற்றவியல் நடவடிக்கைகளும் இன்றளவும் நிலுவையிலேயே இருப்பது தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஆறாத ரணமாகவே இருந்து கொண்டிருக்கிறது.*

*⚔️*
*🛡 இது தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பும் பல்வேறு தனிச்சங்கங்களும் தங்கள் தங்கள் வழியில் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தும் தமிழக அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவேயில்லை.*

*⚔️*
*🛡 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனிச்சங்க நடவடிக்கையாக நடத்திய அரசாணை எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 1539 ஆசிரியர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திடக்கோரி 26.04.2020 அன்று பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்திட 22.02.2020 அன்று மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.*

*⚔️*
*🛡 யாரும் எதிர்பாராத விதமாக, உலக வரலாற்றிலே இல்லாத அளவிற்கு கொரோனா கொடுந்தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கால் திட்டமிட்டபடி நாம் போராட்டத்தை நடத்த இயலவில்லை.*

*⚔️*
*🛡 அரசாணை எரிப்புப் போராட்டத்தைப் பொறுத்த அளவில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் பேரிலேயே 21 மாவட்டங்களில் கல்வித்துறை 17(ஆ) நடவடிக்கை மேற்கொண்டது. அவ்வாறு காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது.*

*⚔️*
*🛡 எனவே, நீதிமன்ற உத்தரவை மதித்து 21 மாவட்டங்களின் கல்வித்துறை அலுவலர்களும் சட்டப்படி 17(ஆ) நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உத்தரவு என்றால் அதை மின்னல் வேகத்தில் அமல்படுத்தும் கல்வித்துறை அலுவலர்கள், 17(ஆ) கொடுக்கும்போது காட்டிய வேகத்தை 17(ஆ) வை ரத்து செய்வதில் காட்டவில்லை.*

*⚔️*
*🛡 ஒரே ஒரு ஆறுதலாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, பவானிசாகர் ஆகிய அனைத்துக் கல்வி மாவட்டங்களிலும் அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகள் முற்றிலுமாக நீதிமன்ற உத்தரவின்படி எவ்வித விசாரணையுமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.*

*⚔️*
*🛡 ஒரு சில மாவட்டங்களில் 17(ஆ) வை ரத்து செய்வதற்கான நடைமுறைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில மாவட்டங்களில் அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.*

*⚔️*
*🛡 இதன் காரணமாக பணி ஓய்வு பெற்றுள்ள சிலரது ஓய்வூதியக் கருத்துக்கள் கூட உரிய அலுவலகத்திற்கு அனுப்பாத நிலையும் ஒரு சில இடங்களில் உள்ளது. காலம் நம் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது. களமிறங்கிப் போராடும் கள நிகழ்வை முன்னெடுக்க இயலாத சூழலை நமது பலவீனமாக அதிகாரிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது.*

*⚔️*
*🛡 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3690/E1/2020 நாள்: 06.03.2020-ல் பணி ஓய்வு பெறுபவர்கள் மீதான நிலுவையில் உள்ள 17(ஆ) நடவடிக்கைகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களை ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡 உயர்நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல், தொடக்கக்கல்வி இயக்குநரின் உத்தரவையும் மதிக்காமல் தன்னிச்சையாக, பழிவாங்கும் நோக்கோடு அல்லது அலுவலகத்தில் உள்ள சில 'மேதாவிகளின்" தவறான வழிகாட்டுதலில் செயல்படும் சில அலுவலர்களின் செயல்பாட்டினால் தான் 17(ஆ) நடவடிக்கைகள் பல மாவட்டங்களில் இன்று வரை நிலுவையில் உள்ளது.*

*⚔️*
*🛡 எனவே, 17(ஆ) நிலுவையில் உள்ள மாவட்டக்கிளைகளின் தோழர்கள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, போதுமான ஆவணங்களை கல்வித்துறை அலுவலர்களுக்கு வழங்கி நிலுவையில் உள்ள அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திட விரைந்து செயலாற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*

சென்னை.
30.05.2020.

_🤝தோழமையுடன்_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Friday, 29 May 2020

*சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா*

*சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*😷சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா- இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி.*

*😷இயக்குனர் உஷாராணி உடனடியாக அலுவலகத்தை மாற்றினார்.*

*😷தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.*

*😷பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Wednesday, 27 May 2020

*🎥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் (காணொளி வாயிலாக) - செய்தி துளிகள்*

*🎥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் (காணொளி வாயிலாக) - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎥*
*🛡️தோழர் செ.கணேசன் மாவட்டத்தலைவர் தலைமையில் தோழர் ந.பெரியசாமி மாவட்டச்செயலாளர் வரவேற்புரையுடன் தோழர் அ.ரஹீம் மாநித்துணைத்தலைவர் மற்றும் தோழர் தோ.ஜான் கிறிஸ்துராஜ் மாநி துணைத்த லைவர் ஆகியோரின் வாழ்த்துரைகளுடன் மாவட்ட வட்டா பொறுப்பாளர்களின் ஆலோசனைகளுடனும் மாவட்டப்பபொருளாளர் நன்றியுரையுடன் மாவட்டப்பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது. அனைவருக்கும் நன்றி.*

_27.05.2020 இன்று நடைபெற்ற சேலம்மாவட்ட பொதுக்குழு தீர்மானங்கள்:_

*🛡️1.இன்று காணொளி காட்சி வாயிலாக இணைந்த 20 பொதுக்குழு உறுப்பினர்கள்  மாநில துணைத்தலைவர்கள் தோழர் ஜான்கிறிஸ்துராஜ்,தோழர் அ.ரஹீம்,அலைபேசி வழி இணைந்த மேனாள் பொதுச்செயலாளர் தோழர் செ.நடேசன் ஆகியோருக்கு நன்றிதெரிவிக்கப்படுகிறது.*  

*🛡️2.கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரப்பணிகளில் ஈடுபட்ட கொளத்தூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கிளை,தாரமங்கலம் ஆகிய வட்டாரக்கினைகளுக்கு பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகிறது.*

*🛡️3.அமைப்பு விதிகள் திருத்தம் தொடர்பான அறுவர்க்குழுவிற்கு சில பரிந்துரைகளை அனுப்புவது.*

*🛡️4.முதலமைச்சர்,தலைமைச்செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பிய வட்டாரக்ளைகளுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.*

*🛡️5.தேர்வுநிலை சிறப்பு நிலை பெற்றுத்தர தொடர்முயற்சி மேற்கொள்வது என முடிவாற்றப்பட்டது.*

*🛡️6) 2018-2019&  2019 +2020 உறுப்பினர் பட்டியல் 3நகல்கள் மாவட்ட செயலாளர் முகவரிக்கு 15.06.2020க்குள் தபாலில் அனுப்பக்கேட்டுக்கொள்ளப்பட்டது.*

*🛡️7 ) 2019-2020 ஆம் நிதியினை மாவட்டப்பொருளாளர் வங்கிக் கணக்கில்15.06.2020க்குள் செலுத்தக்கேட்டுக்கொள்ளப்பட்டது.*

*🛡️8.30.06.2020க்குள் வட்டாரக்கிளைகள் தணிக்கையை முடித்து வட்டார தேர்தல் நடத்த மாவட்ட அமைப்பிடம் தேதியை இறுதி செய்தல்.*

*🛡️9. 31.07.2020க்குள் மாவட்ட தணிக்கை முடித்தல்.*

*🛡️10). ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நவத்துறைக்கென்று ஒரு பொறுப்பாளரை (மாநில ச்செயலாளர் நிலையில்) நியமிக்க மாநில அமைப்பிடம் வலியுறுத்தல்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday, 26 May 2020

*🎥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்ட (காணொளி வாயிலாக) அழைப்பிதழ்*

*🎥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்ட (காணொளி வாயிலாக) அழைப்பிதழ்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎥*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை (27.05.2020) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் காணொளி வாயிலாக (ZOOM APP) நடைபெற உள்ளது.*

*🎥*
*🛡️மாவட்ட பொதுக்குழு கூட்டமானது மாவட்ட தலைவர் தோழர்.செ.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

*🎥*
*🛡️மாவட்ட செயலாளர் தோழர்.ந.பெரியசாமி அவர்கள் தொகுப்புரை ஆற்ற உள்ளார்.*

*🎥*
*🛡️மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில துணை பொறுப்பாளர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.*

*🎥*
_கூட்டப்பொருள்:_

*🛡️08.03.2020 ஈரோடு மேற்கு மண்டல ஆய்வுக்கூட்டம் - மீளாய்வு*

*🛡️19.03.2020 டெல்லி பேரணி ரத்து - தகவல்கள்*

*🛡️கொரோனா COVID-19 - நோய்தடுப்பு - நிவாரணப் பணிகள் ஆய்வு*

*🛡️DA 18 மாதங்கள் முடக்கம் - TPF, GPF, CPS வட்டி குறைப்பு - SLS நிறுத்தம் - ஓய்வு வயது 59 - முதல்வர் கோரிக்கை மணு - ஆய்வு*

*🛡️அரசாணை எரிப்பு 17(B) - ஜாக்டோ ஜியோ 17(E)/ 17(B) - தொடர்நடவடிக்கைகள்.*

*🛡️இயக்க அமைப்புவிதி திருத்தக்குழு - 31.05.2010 க்குள் கருத்து தெரிவித்தல்.*

*🛡️ஆதிதிராவிடர் நலக்கிளை - மாநில தனிப்பொறுப்பாளர் நியமனம் - கோரிக்கை*

*🛡️2019-20 உறுப்பினர் பட்டியல் - 2020 டைரி நிதி*

*🛡️வட்டார தேர்தல் - மாவட்ட தேர்தல்*

*🛡️மாவட்ட வரவு செலவு*

*🎥*
*🛡️இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர்.ர.ரமேஷ் அவர்கள் நன்றியுரை ஆற்ற உள்ளார்.*


*🎥* சேலம் மாவட்ட மைய ஆலோசனைக் கூட்டம் 26.05.2020 இன்று பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெற்றது.*


⏳www.тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 24 May 2020

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் (காணொளி காட்சி மூலம்) - செய்தி துளிகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் (காணொளி காட்சி மூலம்) - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎥*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று (24-05-2020) மாலை 3.30 மணி முதல் 6.15 மணி வரை நடைபெற்றது.*

*🎥*
*🛡️மாவட்ட தலைவர் தோழர் இரா.அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  மாநிலத் துணைத்தலைவர்  தோழர் அ.ரஹீம் மாவட்ட செயலாளர் தோழர் ஜோ.கிறிஸ்டோபர் ஆகியோர் மாநில செயற்குழு கூட்ட நிகழ்வுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.*

*🎥*
*🛡️கடலூர் மாவட்டத்தில் நிலவக்கூடிய ஆசிரியர் பிரச்சனைகள்,  பணி ஓய்வு நீட்டிப்பு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பு சரண் செய்தல் ரத்து, பிற்கால சேமிப்பு நிதிக்கான வட்டி குறைப்பு  போன்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய கோருதல், அமைப்பு விதிகள் திருத்தம் பற்றிய கருத்துக்களை தெரிவித்தல், கொரோணா நிவாரணம் வழங்கியது பற்றி விரிவாக விவாதித்து தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் தோழர் ப.சீனிவாசன் வரவு-செலவு வாசித்ததை ஏற்பு அளிக்கப்பட்டது.*

*🎥*
*🛡️இந்நிகழ்வில்  வட்டார செயலாளர்கள், மாவட்ட துணை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.* 

*🎥*
*🛡️காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday, 21 May 2020

*🛡️*சாதனைப் பயணத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-கொரோணா பேரிடர் உதவிப்பணிகளில் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கல் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*🛡️*சாதனைப் பயணத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-கொரோணா பேரிடர் உதவிப்பணிகளில் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கல் - பொதுச்செயலாளர் அறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_பொதுச்செயலாளரின் அறிக்கை எண்: 04/2020 நாள்: 21.05.2020_*

*⚔️*
*🛡️இயக்க வரலாற்றில் இடம்பிடித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  கொரோனா பேரிடர்கால உதவிப்பணிகள்.*

*⚔️*
*🛡️தமிழ்நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப்பணிகள்.*
 
*_''உதித்தபோதே போராட்டத்தில் குதித்த இயக்கம்"_*
  *_''போராடுவதற்கென்றே பிறந்த இயக்கம்"_*
 
*_''பேருக்கு இயங்கும் இயக்கமல்ல; போருக்கு இயங்கும் இயக்கம்"_*
  *_''அநீதிக்கெதிராக ஆர்த்தெழும் இயக்கம்"_*

*_''எதிர்த்து நிற்பது எமனாக இருந்தாலும் நெஞ்சுறுதியோடு  இறுதிவரை போராடும் இயக்கம்"_*
 
*_''இயக்கச் செயல்பாடுகளில் ஈடு இணையற்ற இயக்கம்"_*
  *_''கூட்டுப்போராட்டங்களில் நம்பகத்தன்மை வாய்ந்த இயக்கம்"_*
 
*_''தனிச்சங்கப் போராட்டங்களில் தன்னிகரற்ற இயக்கம்"_*
 
*_''சாதி என்னும் சதிக்கு இரையாகாத இயக்கம்"_*

*_''எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், சமரசமின்றிப் போராடும் இயக்கம்"_*

  *_''எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும், சொல்வாக்கிலும் இயங்காத இயக்கம்"_*

*🛡️இவ்வாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்குப் பெருமை சேர்க்கும் புகழாரங்கள் ஏராளம் உண்டு. இவைகளெல்லாம் வெற்று வார்த்தைகள் அல்ல; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடந்தகால செயல்பாடுகளுக்குக் கட்டியங்கூறும் வைர வரிகள்.*

*⚔️*
*🛡️இப்படி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைப் பற்றி நடுநிலையாளர்களும், மாற்றுச்சங்க நண்பர்களும் புகழ்ந்தாலும், அத்தனை பெருமைகளுக்கும் முத்தாய்ப்பாக கொரோனா பேரிடர் உதவிப்பணிகளில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற இயக்கச் செயல்பாடுகள் தனி முத்திரை பதித்துவிட்டன.*

_''போராடுவதற்கென்றே பிறந்த இயக்கம்"_ என்னும் வார்த்தைகள், கொரோனா பேரிடர்கால உதவிப்பணிகளுக்குப் பின்பு _''உதவி செய்வதற்கென்றே உருவான இயக்கம்"_ என்னும் பெருமையை இயக்கத்திற்குப் பெற்றுத்தந்து விட்டது.*

*⚔️*
*🛡️ _''கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு மற்றும் உதவிப்பணிகளில் மாநிலம் முழுவதும் ஈடுபடுங்கள்"_ என்று மாநில அமைப்பு அறைகூவல் விடுத்தவுடன், அதைச் சிரமேற்கொண்டு கண்துஞ்சாது, இமைப்பொழுதும் சோராது, இரவு பகலாக களத்திலே இறங்கிப் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான இயக்கத் தோழர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.*

*⚔️*
*🛡️கடந்த 45 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் 34 வருவாய் மாவட்டங்களில், 300க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில், ஆயிரக்கணக்கான இடங்களில், லட்சக்கணக்கான மக்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உதவிக்கரங்கள் நீண்டுள்ளன.*

*⚔️*
*🛡️20.05.2020 வரை தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்கள் இயக்கத்தின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இயக்க உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் தாங்கள் பணியாற்றும் ஊர்களில் வறிய மக்களுக்கு தனித்தனியே வழங்கியுள்ள உதவிப்பணிகள் ஏராளம். இன்னும் இயக்க கிளை அமைப்புக்களின் உதவிப்பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.*

*⚔️*
*🛡️ _''இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு பேரிடர் கால மீட்புப்பணியில் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் அளவிற்கு உதவிப்பணிகளில் ஈடுபட்ட முதல் ஆசிரியர் இயக்கம் என்ற பெருமையை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெற்றுள்ளது"_ என்பதை மாநில அமைப்பு பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறது. எவரிடமும் பாராட்டுப் பத்திரம் பெறுவதற்காக இச்செய்தி பதிவு செய்யப்படவில்லை. இச்செயல் மற்றவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கட்டும் என்பதற்காகவே பதிவு செய்யப்படுகிறது.*

*⚔️*
*🛡️தமிழ்நாட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரோனா பேரிடர் உதவிப்பணிகளைத் துவக்கிய பின்புதான் அதன்பால் ஈர்க்கப்பட்டு ஒரு சில ஆசிரியர் அமைப்புக்களும், பல்வேறு ஊழியர் அமைப்புக்களும் உதவிப்பணிகளில் ஈடுபட்டன. மற்ற அமைப்புக்கள் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்கே தூண்டுகோலாக இருந்த இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

*⚔️*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தாரக மந்திரமான _''ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமுதாய நலன்"_ என்பதில் சமுதாய நலனை உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலமிது. இக்கால கட்டத்தில் அச்செயலை இயக்கம் மிகச்சிறப்பாய்ச் செய்துள்ளது.*    

*⚔️*
*🛡️இயக்க வரலாற்றில் _''வீரஞ்செறிந்த இயக்கம்"_ என்று அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி _''ஈரஞ்செறிந்த இயக்கம்"_ என்றும் தற்போது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.*

_''இயக்கக் கடமைகளை இடையறாது தொடர்வோம்!"_

_"இயக்கச் செயல்பாடுகளுக்கு இலக்கணமாய்த் திகழ்வோம்"_
                                                  _🤝தோழமையுடன்,_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм