Sunday, 2 December 2018

*CPS-ஐ நீக்கினால் ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்க JACTTO-GEO அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/cps-12000-jactto-geo.html


*⭐CPS நீக்கம் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான _ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4 முதல் தொடர் வேலை நிறுத்தத்தில்_ ஈடுபட அறிவித்துள்ளது.*


*⭐டெல்டா மாவட்டங்களை நிலைகுலையச் செய்துள்ள கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறும் சூழலில் ஜாக்டோ-ஜியோவின் நடவடிக்கை பொது வெளியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.*


*⭐இது குறித்து விளக்கமளித்துள்ள _ஜாக்டோ-ஜியோவின் நிதிக்காப்பாளரான திரு.ச.மோசஸ்,_ "பல ஆண்டுகாள தொடர் போராட்டங்களைத் தொடர்ந்தே இத்தகைய நிலைக்குள் ஜாக்டோ-ஜியோ தள்ளப்பட்டுள்ளது.*


*⭐நேற்றைய ஜாக்டோ-ஜியோவின்  ஊடகச் சந்திப்பிலேயே  _ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் கஜா புயல் நிவாரணப் பணிகள் துளியளவும் பாதிக்காது._ மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் _பிற மாவட்ட ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்_ என்ற உறுதி அளிக்கப்பட்டுள்ளது.*


*⭐ஆனால் _சில ஊடகங்கள் இதனை மறைத்து வெறும் வேலைநிறுத்தச் செய்தியை மட்டுமே ஒளிபரப்பி வருகின்றன._*


*⭐ஜாக்டோ-ஜியோவைப் பொறுத்தவரை புயல் _பாதிப்பிற்குள்ளான மாவட்ட மக்களின் உணர்வுகளையும் எமது உறுப்பினர்களின் உரிமையையும் ஒருங்கே மதித்தே வேலைநிறுத்தப் போராட்ட வடிவத்தைத் திட்டமிட்டுள்ளோம்._*


*⭐மேலும், நிவாரணப் பணிகளோடே நின்று விடாது _நிதி உதவி வழங்குவதிலும் ஜாக்டோ-ஜியோவின் உறுப்பு சங்கங்கள் தனித்தனியாகவும் பல இலட்சக்கணக்கான ரூபாய்_ மதிப்பிலான பங்களிப்புகளைச் செய்துள்ளதோடு ஜாக்டோ-ஜியோ சார்பாக _ஒரு நாள் ஊதியத்தையும் வழங்க_ அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.*


*⭐புயல் நிவாரணப் பணிக்காக ரூ.15,000/- கோடியை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.*


*⭐தற்போதும் எமது போராட்டக் கோரிக்கைகளில் முதன்மையான தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை இரத்து செய்துவிட்டு _பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எமது பிடித்தத்தில் நாளது தேதி வரை அரசு செலுத்தியுள்ள 10% தொகையான ரூ.12,000/- கோடியை கஜா புயல் நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள_ ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.*


*⭐மேலும், CPS திட்டத்தினை இரத்து செய்வதன் வழியாக அரசிற்கு _இந்த டிசம்பர் 1-ம் தேதி முதலே மாதம் தோறும் ரூ.250 கோடி நிதிச் செலவினம் குறையும்."_ என்று தெரிவித்துள்ளார்.*


*⭐இணைப்பு : தோழர்.ச.மோசஸ் அவர்களின் பேட்டி* https://youtu.be/ygmkLQF7SkM


*📩தகவல் பகிர்வு;*

*_TNPTF விழுதுகள்_*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Saturday, 1 December 2018

*தமிழக அரசின் 17(B) (பழிவாங்கும்) நடவடிக்கைக்கெல்லாம் அஞ்சுகின்ற இயக்கமல்ல, உரிய முறையில் எதிர்கொள்ளும் இயக்கம் மேலும் 04.12.2018 முதல் நடைபெற உள்ள ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் உறுதியுடன் பங்கேற்க வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/17b-04122018.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 24  நாள் : 01.12.2018*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.11.2018 அன்று நடத்திய பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டம் தமிழக ஊடகங்களில் இன்று வரை பேசப்படும் பொருளாக இருந்து வருகிறது. இதிலிருந்தே போராட்டத்தின் வலிமையும், முக்கியத்துவமும் வெளிப்பட்டுள்ளது.*


*⭐ “ ஆணை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 5000 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்?” என்ற செய்தி இன்றைய (01.12.2018) ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு செய்தியை ஊடகங்களுக்கு வழங்கியது யார்? என்று தெரியவில்லை. ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு வேலை நிறுத்தத்தை உறுதி செய்துள்ள நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியாக தமிழக அரசு இதைச் செய்துகொண்டிருக்கிறது. தமிழக அரசின் இத்தகு மிரட்டல் நடவடிக்கை என்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்பது கடந்த கால வரலாறு.*


*⭐அரசாணை  எரிப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்ட 26.11.2018 அன்று தற்செயல் விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் எடுத்து போராட்டக்களத்திற்கு வந்தவர்கள் நம்முடைய கணக்கீட்டின்படி 14500 போராட்டம் நடந்த அன்று பல மாவட்டங்களில் கைது நடவடிக்கை எடுக்காத காவல்துறையும், கண்டு கொள்ளாத கல்வித்துறையும் தற்போது சுறுசுறுப்பாக இயங்குவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.*


*⭐கடந்த 9 ஆண்டுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்திய நாம் அரசாணை எரிப்புப் போராட்டம் என்று அறிவித்து மாதக்கணக்கில் காத்திருந்தபோதும் அதைக் கண்டு கொள்ளாத தமிழக அரசு, எதிர்காலத்தில் தமிழகத்தில் ஜனநாயக ரீதியான எந்த ஒரு போராட்டமும் நடத்தக்கூடாது என்ற நோக்கத்தோடு இத்தகு நிலையை எடுத்து வருகிறது.*


*⭐ ‘அரசாணை எரிப்பு’ என்பது ஒரு போராட்ட வடிவம். ஏற்கனவே, பலமுறை தமிழகத்தில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஒரு போதும் அஞ்சுகிற இயக்கமல்ல. இது போன்ற பல்வேறு அடக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்த இயக்கம்.*


*⭐பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்காகவும், தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்திற்காகவும் போராடிய ஆசிரியர்கள் மீது இதுபோன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பது தமிழக அரசுக்கு நற்பெயரைப் பெற்றுத் தராது. எனவே, பழிவாங்கும் நடவடிக்கைகளை உறுதியுடன் உரிய முறையில் எதிர்கொள்வோம்.* 


*⭐04.12.2018 முதல் நடைபெறவுள்ள ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் உறுதியுடன் பங்கேற்போம்.*


*🤝தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*அரசாணை எரிப்புப் போராட்டம் - 17(B) வழங்கப்பட்டு வருவது குறித்து TNPTF மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/17b-tnptf.html


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நவம்பர் 26 அன்று நடைபெற்ற அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் தோழர்களுக்கு 17(B) வழங்கப்பட்டு வருகிறது*


*⭐இதுகுறித்து நமது இயக்க மாநில பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார்.*


*⭐பேட்டி  இன்று இரவு ஏழு மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது ஆணை எரிப்பு  போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 17 (B) தொடர்பாக பேட்டி எனவே  அனைத்து தோழர்களும் கண்டுகளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி _அவசர செய்தி_ அரசாணை எரிப்பு அச்சம் வேண்டாம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_1.html


*_அன்பார்ந்த இயக்க பொறுப்பாளர்களே!,_*


*⭐மற்றும் அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட வீர மறவர்களே!,*


*⭐ _நவம்பர் - 26 அன்று தற்செயல் விடுப்பு எடுத்து ஆதரவு தந்த அனைத்து ஆசிரியர் பெருமக்களே!_*


*⭐உங்கள் அனைவருக்கும் _மாவட்ட மையத்தின் புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்களும் வணக்கங்களும்*.


*⭐கடந்த இரு நாட்களாக ஆசிரியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தைவிட _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அரசாணை எரிப்பு  போராட்டத்தைப் பற்றியும்_ அதில் கலந்து கொண்டு அரசாணையை எரித்த _ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மற்றும் இன்னும் வழங்கப்பட இருக்கின்ற 17 B குறித்த விவாதங்களுமே_ மேலொங்கி நிற்கின்றது.*


*⭐இன்று காலை நமது _பேரமைப்பின் பெருமைக்குரிய பொதுச்செயலாளர் தோழர்.ச.மயில் அவர்கள்_ நெல்லை மாவட்ட பத்திரிக்கை செய்தியை பார்த்து  நமது மாவட்ட செயலாளரிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.*


*⭐ _நேற்றே பல மாவட்டங்களில் 17B கொடுக்கப்பட்டு இருப்பதாகவும்_ காவல்துறை கைது செய்த மாவட்டங்களில் அவர்களிடம் பெயர் பட்டியலை வாங்கியதாகவும்*


*⭐ _கைது நடவடிக்கை இல்லாத நெல்லை, குமரி,சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில்_ மட்டும் கலந்து கொண்டோர் பட்டியலை வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் பெறுவதற்கான வேலை நடைபெற்று வருவதாகவும் கூறினார்கள்.*


*⭐மேலும் _தமிழகம் முழுவதும் காவல்துறை கணக்கின்படி 6000 க்கும் மேற்பட்டோர் இவ்வரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக உளவுத்துறை_ தகவல் தெரிவித்து உள்ளது.*


*⭐17 B நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்க 12 நாட்கள் கால அவகாசம் உண்டு*.


*⭐மாநில மையம் மிகச்சிறந்த வழக்கறிஞர்களோடு சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து மாநிலம் முழுமைக்குமான ஒரு பொதுவான விளக்கத்தை அளிக்கும்*.


*⭐அதுவரை எந்த உறுப்பினர்களும் தனியாக விளக்கம் அளிக்க வேண்டாம் எனவும் இன்னும் விளக்கம் கோராத மாவட்டங்களில் அதற்கான கடிதத்தை நாம் யாரும் அவர்கள் அழைத்தால் கூட நேரடியாக சென்று வாங்க வேண்டாம் எனவும் அவர்கள் பதிவு அஞ்சலிலோ அல்லது நேரில் வந்தோ நமக்கு வழங்கட்டும்*.


*⭐நமது கையில் தபால் கிடைத்த நாளிலிருந்து 12 தினங்களை தயாரிப்பு காலமாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறினார்கள்.*


*⭐மேலும் வரும் _டிசம்பர் - 4 முதல் நடைபெறப்போகும் ஜாக்டோ ஜியோ போராட்ட களத்தில் எப்போதும் போல்_ நமக்கே உரிய போர்குணத்தோடு சிறப்பாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் தகவல் தெரிவித்தார்கள்.*


*⭐எனவே வட்டார, நகரக்கிளை பொறுப்பாளர்களே!*


*⭐நீங்கள் உங்கள் வட்டாரத்தில் உள்ள ஆசிரியர்களை _இன்னும் அதிக உற்சாகமாய் இயக்க நடவடிக்கைகளில் கலந்து கொள்ள ஆர்வமூட்டுங்கள்._*


*⭐ _தமிழகத்தின் எந்த ஒரு மூளையிலும் எந்த ஒரு உறுப்பினருக்கும் பாதிப்பு என்றால் அதைப்பார்த்துக் கொண்டு TNPTF சும்மா இருக்காது_ என்பதற்கான கடந்த கால வரலாறுகளை புரிய வையுங்கள்.*


*_நெஞ்சினை பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம்_*.


*⭐நம்மால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைந்ததாக நாளைய வரலாறு பேசட்டும்.*


*🤝தோழமையுடன்.....*

*_செ.பால்ராஜ்,_*

*மாவட்ட செயலாளர்*

*நெல்லை - TNPTF*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*ஜாக்டோ ஜியோ மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்பாட்டம் - நாளிதழ் செய்திகள் மற்றும் புகைப்படத் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post.html


*⭐30.11.2018 வெள்ளிக்கிழமை ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பாக,*

*⚡புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,*


*⚡இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும்,*


*⚡7வது ஊதிய குழு அறிவிப்பின் படி 21 மாத நிலுவையினை கொடுக்க வேண்டும் உள்ளிட கோரிக்கைகளை வலியுறுத்தி,*

*தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுவில் உள்ள 20 நிர்வாகிகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.*


*⭐அதன்படி நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு தலைமைச்செயலக கூட்ட அரங்கில் பேச்சுவார்த்தை துவங்கியது.*


*⭐மாலை 4.30 மணிவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எற்படவில்லை,*


*⭐உடன்பாடு எட்டபடாத காரணத்தினால் ஏற்கனவே அறிவித்தபடி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்பாட்டம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது.*


*⭐அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று (01.12.2018) சனிக்கிழமை மீண்டும் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் அக்கூட்டத்தில் வரும் 04.12.2018 முதல் அரசு அலுவலகங்கள் மற்றும் பணிகள் முடங்கும் வகையில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.*


*⚡நேற்று (30.11.2018) நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாவட்ட தலைநகரங்களில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற பெருந்திரள் ஆர்பாட்ட நாளிதழ் செய்திகள் மற்றும் புகைப்படத் தொகுப்பினைக் காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே.*

https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм















Friday, 30 November 2018

*JACTTO-GEO : அரசு அழைப்பின் பேரிலான வழக்கமான பேச்சுவார்த்தை முடிந்தது. நாளை உயர்மட்டக்குழு கூடுகிறது. தமிழக அரசு உடனான பேச்சுவார்த்தை முழு விபரம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/jactto-geo.html


*⭐தமிழக முதலமைச்சரின் அழைப்பை ஏற்று தமிழக அமைச்சர்களுடனான ஜாக்டோ-ஜியோவின் பேச்சுவார்த்தை இன்று (30.11.2018) சென்னையில் நடைபெற்றது.*


*⭐அரசுடனான பேச்சுவார்த்தைக்கு முன்பு முற்பகலில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் எந்தெந்த கோரிக்கைகளை யார் விளக்கிப் பேசுவது என முடிவு செய்யப்பட்டிருந்தது.*


*⭐அதன்படி, இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கிணையான ஊதியக் கோரிக்கை குறித்து ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளரும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான _தோழர்.ச.மோசஸ்_ உரிய ஆவணங்களுடன் கோரிக்கையை விளக்கிப் பேசினார்.*


*⭐தோழர்.ச.மோசஸ் அவர்களின் விளக்கவுரையை அடுத்து அவரிடமிருந்த கோரிக்கை தொடர்பான ஆவணங்களை நிதித்துறை செயலாளர் திரு.சண்முகம் இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக் கொண்டார்.*




*_ஜாக்டோ ஜியோ - அரசு நடத்திய பேச்சுவார்த்தை : முழு விவரம்_*


*⭐சென்னையில் தமிழக அரசுடன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பினர், பேச்சுவார்த்தை நடத்திய அரசு தரப்பு தங்களது கோரிக்கை குறித்து எவ்வித உறுதிமொழியும் தரவில்லை. நீங்கள் கூறிய விவரங்களை முதல்வரிடம் சொல்கிறோம் என்று மட்டுமே கூறினர். முதல்வரிடத்திலே கூறிவிட்டு அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களிடம் தெரிவிக்கிறேன் என்று கூட கூறவில்லை. முதல்வர் எங்களை அழைத்துப்பேச வேண்டும் என்பதற்கும் ஒப்புதல் தரவில்லை. ஆகவே நாளைக்குள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கோ, அல்லது அரசு தரப்பிலிருந்து ஏதேனும் தகவல் தெரிவிக்கப்படாவிட்டால் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நாளையே கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். அரசு தரப்பு எதுவுமே சொல்லவில்லையெனில் திட்டமிட்டபடி டிசம்பர் 4 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம் என்ற கட்டத்திற்கு தான் இவ்விவகாரம் செல்லும் என எச்சரித்தனர்.*


*⭐அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலை ஊழியர்களுக்கான ஓய்வூதியம், சம்பளம் தொடர்பான பிரச்னைகள் மீது கடந்த 7 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனித்தனியாக போராடி வந்த இவர்கள், ஒரே அமைப்பின் கீழ், ஜாக்டோ-ஜியோ என்ற ஒருங்கிணைப்பை உருவாக்கி போராடி வருகின்றனர்.  கடந்த ஆண்டு இந்த அமைப்பின் போராட்டம் தீவிரம் அடைந்தது. குறிப்பாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பணிகள் ஸ்தம்பித்தது.*


*⭐இதையடுத்து சிலர் நீதிமன்றம் சென்றனர். வழக்கு விசாரணையின் போது, ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரையை குறிப்பிட்ட காலத்தில் வெளியிடுவதாக அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.ஆனாலும், தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு அறிக்கையை அளிக்காமல் இழுத்தது. இந்நிலையில் டிசம்பர் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடக்கும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்தனர். இதை முடக்க அரசு தரப்பில் பல முயற்சிகள் செய்து வருகிறது.*


*⭐போராட்டம் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்துவது சாத்தியமா? என்று விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மேலும், தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், என்ஜிஓ, அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அழைத்து பேசினார். பேச்சுவார்த்தை முடிவில் இந்த 4 சங்கங்களும், டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தனர்.*


*⭐ஆனால், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வருகிற 4ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தனர். இதைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோவுடனும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்தது. இவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு நேற்று அழைப்பு விடுத்தது.  அரசின் அழைப்பை ஏற்று, இன்று மதியம் 2 மணி அளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. சுமார் 4.40 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அரசு சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.*


*⭐இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததுள்ளது. அரசு தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிவித்த ஜாக்டோ-ஜியோ, ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நாளை கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும் என்று தெரிவித்துள்ளது. தங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால், 4ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.*


*⭐நாளைய கூட்டத்தைத் தொடர்ந்து டிசம்பர் 4 முதல் நடைபெறவுள்ள தமிழக அரசு நிர்வாகமே முழுமையாக ஸ்தம்பிக்கும் படியான ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தம் முழுவீச்சில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆணை எரிப்புப் போராட்டமும், பழிவாங்கும் நடவடிக்கைகளும் - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_30.html


*பொதுச்செயலாளரின் அறிக்கை நாள் : 30.11.2018*


*பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*



*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 26.11.2018 அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் நடத்திய பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மீட்பதற்கான அரசாணை எரிப்புப் போராட்டம் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதிக்கு எதிராக கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பல களப் போராட்டங்களை தமிழ்நாடு ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் அப்போராட்டங்களையும், நம் கோரிக்கைகளையும் கண்டு கொள்ளாத தமிழக அரசும், கல்வித்துறையும் 26.11.2018-ல் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கையாகும்.*


*⭐போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள கல்வித்துறை பாய்ச்சல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது. எப்போதும் ஆமை வேகத்தில் செயல்படும் சில கல்வித்துறை அலுவலர்கள் கூட இப்பணியில் முயல் வேகத்தில் ஈடுபடுவதை  நாம் பார்க்க முடிகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுடைய முன் விரோதங்களைத் தீர்த்துக் கொள்ளும் பணியிலும் சில கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன.*


*⭐அரசாணை எரிப்புப் போராட்டத்திற்குச் செல்லும்போதே _“சிறையிலடைக்கப்படுவோம்; தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்படுவோம்”_ என்பதையெல்லாம் எதிர்பார்த்தே களத்திற்குச் சென்றவர்கள் நாம். தற்போது கல்வித்துறை எடுக்கும் நடவடிக்கை என்பது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்கான உரிமைப்போரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பல்லாயிரக்கணக்கான களப்போராளிகள் தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதி 17(ஆ) வைச் சந்தித்தார்கள்” என்ற வரலாற்றையும் பதிவு செய்யப்போகிறது.*


*⭐ _“போராட்டம் என்பது உரிமைகளைப் பெறுவதற்கானஆயுதம் மட்டுமல்ல; பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கான ஆயுதமும் தான்”_ என்பதைத் தொடர்புடையவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது.  எனவே, எதை எவ்வாறு  எப்போது எதிர்கொள்ள வேண்டுமோ அதை அவ்வாறு அப்போது எதிர்கொள்வோம்.*


*🤝தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*CPS-ஐ ரத்து செய்தால் அரசுக்கு 13,000 கோடி உடனடி வருவாயாகவும் மாதம் 200 கோடி செலவினக் குறைப்பும் ஏற்படும் - திண்டுக்கல் எங்கெல்ஸ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/cps-13000-200.html


*⭐தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் சுமார் 5,10,000 அரசு ஊழியர் ஆசிரியர் உள்ளிட்ட CPS சந்தா தாரர்கள் உள்ளனர்.*


*⭐ இவர்களிடமிருந்து நாளது தேதி வரை சுமார் ரூ.13,000,00,00,000/- CPS சந்தாத் தொகையாக அரசு பிடித்தம் செய்துள்ளது.*


*⭐இதற்கு ஈடான அரசின் பங்களிப்பாக, சுமார் ரூ.13,000,00,00,000/-யை இதுவரை அரசும் செலுத்தி வந்துள்ளது.*


*⭐தற்போதைய சூழலில் இவ்வாறு ஈடு செய்ய வேண்டிய அரசின் பங்களிப்பானது, சுமார் ரூ.150/- கோடியிலிருந்து ரூ.200/- கோடி மாதாந்திர தொடர் செலவினமாக அரசின் சார்பில் செலவிடப்பட்டு வருகிறது.*


*⭐அரசு ஊழியருக்கு ஓய்வூதியமோ, குடும்ப ஓய்வூதியமோ ஒரு பைசா கூட வழங்க இயலாத இந்த _CPS திட்டத்தால் அரசு ஊழியர்களின் ஊதியமும் அரசின் நிதியும் ஒருங்கே சுரண்டப்பட்டு வருகிறது._*


*⭐தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்தினால் _அரசின் பங்களிப்பான ரூ.13,000 கோடி  உடனடி வருவாயாக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்படும்._*


*⭐மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பான _ரூ.13,000 கோடி மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர வைப்பு நிதியாக அரசிற்குக் கிடைக்கும்._*


*⭐இதுமட்டுமின்றி தற்போது மாதந்தோறும் அரசு பங்களிப்பாக அளித்து வரும் சுமார் ரூ.200/- கோடியை அரசு செலுத்த வேண்டிய தேவை இல்லை என்பதால் _அரசின் மாதாந்திர நிதிச் செலவினத்தில் மாதந்தோறும் ரூ.200/- கோடி குறையும்._*


*⭐எனவே, CPS திட்டத்தை இரத்து செய்துவிட்டு _பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் வாயிலாக அரசிற்கு பெருத்த & தொடர் மாதாந்திர நிதி இழப்பு சரிசெய்யப்படுவதோடு சுமார் 5 இலட்சம் ஆசிரிய அரசு ஊழியர் குடும்பங்களும் பயனடையும்_*


*⭐தமிழக மூத்த அமைச்சர்கள் மற்றும் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இடையேயான இன்றைய (30.11.2018) பேச்சுவார்த்தையில் இது குறித்து  வலியுறுத்தப்படும் என பிரடெரிக் எங்கெல்ஸ் நம்பிக்கை தெரிவித்தார்.*


*தகவல் பகிர்வு;*

*_TNPTF விழுதுகள்_*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Tuesday, 27 November 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_27.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 22 நாள் : 27.11.2018*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற மகத்தான நம் பேரியக்கம் நேற்று நடத்திய பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டம் தமிழகம் முழுவதும் பேரெழுச்சியோடு நடைபெற்றுள்ளது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சூழல் கருதி நாம் களம் காணவில்லை.*


*⭐ _“மாங்குயில் கூவிடும் பூஞ்சோலைஇ எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை”_*

*என்ற பாடல் வரிகளுக்கேற்ப தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் போர்க்கோலம் பூண்டு  நம் இயக்கத் தோழர்கள் நடத்திய அரசாணை எரிப்புப் போராட்டம் தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் புதிய அத்தியாயத்தைப் படைத்துவிட்டது. போராட்டக்களத்திற்கு வருகை தந்த அனைவருமே சிறைச்சாலைக்குச் செல்லும் ஏற்பாடுகளோடு வந்தது என்பதும், காவல்துறையின் கடும் அச்சுறுத்தல்களையும் மீறி களத்திற்கு வந்தது என்பதும், வருடத்தின் இறுதிநாட்கள் என்ற நிலையில் தற்செயல் விடுப்பு இல்லாத நிலையில் ஈட்டிய விடுப்பெடுத்து போராட்டக்களத்திற்கு வந்தது என்பதும், வேலைநாளில் துணிச்சலாகப் போராட்டக்களத்திற்கு வந்தது என்பதும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வலிமையையும், இயக்க உறுப்பினர்களின் போர்க்குணத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.*



*⭐பாதி மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யவே இல்லை. மீதி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே பத்தாயிரத்தை தொட்டது என்பதும்,* 

*_“கைது செய்யப்படுவோம்இ சிறைச்சாலைக்கு அனுப்பப்படுவோம்”_*

*என்று தெரிந்தும் 20000-க்கும் மேற்பட்ட நம் இயக்கத் தோழர்கள் போராட்டக்களத்திற்கு வந்ததும் மிகவும் பாராட்டத்தக்க நிகழ்வுகள். புறநானூற்று வீரமங்கைகளாகப் போராட்டக்களத்திற்கு வருகை தந்தவர்களில் பெரும் பகுதியினர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.*



*⭐இக்களப்போரில் தங்களையும் இணைத்துக்கொண்டு பல மாவட்டங்களில் போராட்டத்தில் பங்கேற்ற நம் சகோதர அமைப்புகளான தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்(TIAS), (JSR)  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA)ஆகியவற்றின் பெருமைக்குரிய தோழர்களுக்கு மாநில மையம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.*


*⭐அதேவேளையில் நம் போராட்டத்தின் எழுச்சிகண்டு பொறுக்க முடியாத சில சங்கத்தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உரிமைப் போராட்டங்களை கொச்சைப்படுத்துபவர்களைப் பற்றி நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. போராட்டங்களைக் கைவிடுவதற்கு காரணம் தேடுபவர்களுக்கு இன்றைய சூழல் வாய்ப்பாக அமைந்துள்ளது.*


*_“உரிமை பறிக்கப்படுகிற போதும், தன்மானம் பாதிக்கப்படுகிறபோதும் இழவு வீட்டில் கூட  போராடலாம். ஆனால் இழவு வீட்டில் பிடுங்கித்தான் திண்ணக்கூடாது”_*  *என்பதை நாம் சிலருக்குஉணர்த்த வேண்டிய அவசியம் ஏற்பப்பட்டுவிட்டது. சாக்குப்போக்குச் சொல்லித் தானும் போராடாமல், போராடுபவர்களையும் கொச்சைப்படுத்தும் இவர்களை தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினம் புரிந்துகொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை.*



*⭐நேற்றைய (26.11.2018) போராட்டக்களத்தில் தீரத்துடன் பங்கேற்ற நம் இயக்கத் தோழர்களே! அடுத்து நாம் ஈரத்தோடு கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்கு உதவிடும் பணியை முழு மூச்சில் செய்யவேண்டியுள்ளது. ஏற்கனவேஇ பல மாவட்டங்களிலிருந்து வட்டாரக்கிளைகளே நேரடியாக அங்குள்ள நம் இயக்கத் தோழர்கள் மூலமாக பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர்.*


*⭐மாநில மையம் விடுத்த வேண்டுகோளின்படி மாவட்டக்கிளைகள் இதுவரை உதவிநிதியை மாநில மையத்தில் ஒப்படைக்காமல் இருந்தால் உடனடியாக ஒப்படைத்து உதவிட மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм