Thursday, 21 March 2019

*Primary CRC நடைபெறும் நாட்கள் மற்றும் CRC Module* *(22.03.2019 & 23.03.2019)*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/primary-crc-crc-module-22032019-23032019.html


*🌟குறுவள மைய பயிற்சி 22.03.2019 மற்றும் 23.03.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.*


*⚡22.03.2019 வெள்ளிக்கிழமை அன்று தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் (இடைநிலை தலைமை ஆசிரியர் உட்பட) 50% ஆசிரியர்களும்,*


*⚡23.03.2019 சனிக்கிழமை அன்று 50% ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்.*


*_CRC MODULE_*


*PEDAGOGY & DICTIONARY USAGE ....*


*⚡1. SALM GENERAL*

https://drive.google.com/file/d/1yWfKQ0Zuk5wCuJPCCqwHjfV4NHj6l7__/view?usp=drivesdk



*⚡2. SALM ENGLISH*

https://drive.google.com/file/d/1jXxqFZBKlXxoackGTnVOnPEfGzWu92Dy/view?usp=drivesdk



*⚡3. DICTIONARY USAGE*

https://drive.google.com/file/d/1i2lzjfrWPEjBbz1meWE-a6QBGsHRWqr2/view?usp=drivesdk



*⚡4. SABL NEW , GENERAL*

https://drive.google.com/file/d/1xisACc_V2HCDN3U6zaDEsTPoR1oTkCw_/view?usp=drivesdk



*⚡5. SABL NEW, ENGLISH*

https://drive.google.com/file/d/1DXLT5P6IvTTIzfYMZaTP0G_JejuE1o9W/view?usp=drivesdk



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Tuesday, 19 March 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_19.html


*_பேரன்புக்குரிய பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*

*வணக்கம்*



*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் (17.03.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் _மாநில தலைவர் தோழர். மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*


*⚡மாநில செயற்குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:*




*_தீர்மானம் : 1_*


*🌟புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள், புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வட்டாரச் செயற்குழு உறுப்பினர் தோழர். சிவா, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டார துணைத்தலைவர் தோழர்.முருகன், நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டார செயற்குழு உறுப்பினர் தோழர்.தமிழரசன்இ தஞ்சை மாவட்டம் தஞ்சாவூர் ஊரகம் பொருளாளர் திருமதி.சி.ஆர்.உஷாராணி ஆகியோர் மறைவுக்கு மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.*




*_தீர்மானம் : 2_*


*🌟2018 அக்டோபர் முதல் 2019 பிப்ரவரி வரை உள்ள இயக்க வரவு - செலவு எழுத்து மூலமான அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்பு செய்யப்பட்டது.*




*_தீர்மானம் : 3_*


*🌟ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் தமிழக அரசு நல்லெண்ண அடிப்படையிலும்இ ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்ப நலன் கருதியும் திரும்பப் பெற வேண்டும் என இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது*




*_தீர்மானம் : 4_*


*🌟தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறுதிவரை  உறுதியாக நின்று 30.01.2019 வரை வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டு வரலாறு படைத்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் கட்டாயமாக வழங்கப்பட்டுள்ள பணியிட மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்வதோடு, அவர்களை 21.01.2019 அன்று பணியில் இருந்த இடத்தில் மீண்டும் பணியில் அமர்த்திட வேண்டும் என தமிழக அரசை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*




*_தீர்மானம்: 5_*


*🌟தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்தவும், சுயநிதிப்பள்ளிகளுக்கு இணையாக வளர்ச்சி பெறவும் ஏதுவாக, 2019-2020 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பள்ளிகளுடன் இணைந்த முன்பருவ வகுப்புகளைத் துவக்கிடவும், அவற்றில் முன்பருவக்கல்விக்கான ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள இம்மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*




*_தீர்மானம்: 6_*


*🌟அகில இந்திய அளவிலான கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் 19.02.2019 அன்று புதுதில்லியில் நடைபெற்ற கல்விப் பாதுகாப்புப் பேரணியில் பங்கேற்ற 217 இயக்க உறுப்பினர்களுக்கும் இம்மாநிலச்செயற்குழு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.*




*_தீர்மானம்: 7_*


*🌟5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது உளவியல் ரீதியாக மாணவர்களைப் பாதிக்கக்கூடியது என்பதாலும், இடைநிற்றலை அதிகப்படுத்தும் செயல் என்பதாலும் தமிழக அரசு அவ்வாறு தேர்வு நடத்தும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் எனவும்இ 1 முதல் 8ம் வகுப்பு வரை “அனைவரும் தேர்ச்சி ” என்ற நிலை தொடரவேண்டும் எனவும் தமிழக அரசை இம்மாநிச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*




*_தீர்மானம்: 8_*


*🌟தமிழகமே வெட்கிக் தலைகுனியும் வகையில் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொடுங்குற்றவாளிகள் மீது சட்டரீதியாக மிகக்கடுமையான உச்சபட்ச நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்வதோடுஇ இதுபோன்ற இழிசெயல்கள் இனிமேலும் நடைபெறாவண்ணம் தடுத்து நிறுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*




*_தீர்மானம்: 9_*


*🌟நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தலில் பெண் ஆசிரியர்களுக்கு தொகுதி விட்டு தொகுதி தேர்தல் பணி அளிக்கக்கூடாது எனவும், தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களும் தங்கள் வாக்கைச் செலுத்துவதற்கு உரிய வாய்ப்புத் தரப்பட வேண்டுமெனவும்இ தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் உரிய பாதுகாப்பும், அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டுமெனவும்இ மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டுமெனவும்  தமிழ்நாடு மாநில தேர்தல் அதிகாரி அவர்களை மாநிலச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது*





*_தீர்மானம்: 10_*


*🌟சமக்ர சிக்ச அபியான் திட்டத்தின் மூலம் நடுநிலைப்பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் வாங்கிடவும், மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்காகவும் வழங்கப்பட்ட ரூ 10000 மற்றும் ரூ 8000 ஆகியவற்றை விதிகளின்படி பள்ளி மேலாண்மைக்குழு தீர்மானத்தின்படி செலவழித்து புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வாங்க அனுமதிக்காமல்இ நேரடியாக கல்வித்துறையே ஒரு நிறுவனத்தின் மூலமாக பள்ளிகளுக்கு புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கி தொகைக்கான காசோலையை தலைமை ஆசிரியர்களைக் கொடுக்க கட்டாயப்படுத்தியது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்நிகழ்வு பள்ளி மேலாண்மைக்குழுவின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும், திட்டத்தின் நோக்கத்தைச் சிதைப்பதாகவும், ஊழல் முறைகேட்டுக்கு காரணமாகவும் அமைந்துள்ளதால் இது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்திட மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*




*_தீர்மானம்: 11_*


*🌟ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் அதிகாரம் கடந்த காலங்களில் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரிடம் இருந்ததால் பதவி உயர்வும், பணிமாறுதலும் பெறமுடிந்தது.  ஆனால், விதிகளுக்கு முரணாக கடந்த சில ஆண்டுகளாக ஆதிதிராவிட நலத்துறை  இயக்குநரே பொதுமாறுதல் ஆணைகள் வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளதால்இ கடந்த சில ஆண்டுகளாக மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்படாமல் உள்ளது.  மேலும், விடுதிகளில் ஒரே காப்பாளரே 2 அல்லது 3 விடுதிகளில் கூடுதல் பொறுப்பாக பணி செய்யக்கூடிய நிலை உள்ளது. விடுதிக் காப்பாளர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக மாறுதல் கலந்தாய்வே நடத்தப்படாமல் உள்ளது. எனவே, கடந்த காலங்களைப் போலவே நியமன அலுவலரான மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருக்கே மாறுதல் ஆணைகள் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*


*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





Monday, 18 March 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி உடனான சந்திப்பு நிகழ்வு குறித்து பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_18.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்,*


*⚡மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்களும்,*


*⚡மாநில பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்_ அவர்களும்,*


*⚡மாநில பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ அவர்களும்,*


*⚡துணைப் பொதுச்செயலாளர் _தோழர். கணேசன்_ அவர்களும்,*


*இன்று (18.03.2019) திங்கட்கிழமை முற்பகலில் DPI வளாகத்தில்,*


*⚡தொடக்கக்கல்வி இயக்குநர் _திரு.கருப்பசாமி_ அவர்களை சந்தித்து பல்வேறு மாவட்ட ஆசிரியர்கள் பிரச்சினைகள் தொடர்பாக மணு அளிக்கப்பட்டடது.*


*🌟தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பின் போது பல்வேறு மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தார்கள்*


*🌟இன்று (18.03.2019) பிற்பகலில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாநில நிர்வாகிகள்,*


*⚡தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் _திரு.சத்யபிரதாசாஹு_ அவர்களை சந்தித்து,*


*🌟2019 பாராளுமன்ற தேர்தல் பணியில் வாக்குசாவடி அலுவலர்களாக ஆசிரியர்களை பணியமர்த்துதல் மற்றும் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் எங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை பரிசீலனை செய்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிடக் கோரி கோரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது.*



*_தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள்_*


*🌟தமிழ்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களின் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் பெண்ணாசிரியர்களாகப் பணிபுரியும் சூழ்நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக பணி செய்திட உள்ள நிலையிலும், அவர்களின் பாதுகாப்பு கருதியும், பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணியில் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள எங்களது மாநில அமைப்பில் சார்பில் கீழ்க்கண்ட கோரிக்கைiளை கனிவான பரிசீலனைக்கு தங்கள் முன் வைக்கிறோம்.*


*🌟1.கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பணிபுரியும் பாராளுமன்றத் தொகுதி விடுத்து, அடுத்த பாராளுமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு அலுவலர் பணி வழங்கியதால் பல்வேறு இன்னல்களை குறிப்பாக பெண்ணாசிரியர்கள் அடைந்தனர்.  நூறு சதவீதம் நேர்மையாகவும், எங்களுடைய நடத்தை விதிகளும், தேர்தல் ஆணைய நடைமுறைகளும் தெரிந்துள்ள நிலையில் வேறு ஏதேனும் தவறு செய்திட வாய்ப்பு இல்லாத சூழலில் தாங்கள் பணிபுரியும் சட்டமன்றத் தொகுதிக்கு அருகில் உள்ள சட்டமன்றத் தொகுதியில் பணியாணை வழங்கி உதவிடக் கேட்டுக் கொள்கிறோம்.*


*🌟2.நாட்டின் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பெரும்பாலோருக்கு மாவட்ட அளவில் உள்ள தேர்தல் அலுவலர்களால் உரிய நேரத்தில் தபால் வாக்கு வழங்காத நிலையில் தேர்தல் பணிக்குச் சென்ற பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கடந்தத் தேர்தலில் மறுக்கப்பட்டது.  அத்தகைய நிலை ஏற்படாமல் தபால் வாக்கை விரைந்து செலுத்திடவும், மேலும் வாக்களிக்க எளிமையான நடைமுறைகளை உருவாக்கிடவும் வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.*


*🌟3.வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் கடந்த காலங்களில் அவர்களின் பணியிடத்தின் அடிப்படையிலும் தர ஊதியத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியது.  ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அவர்களுடைய மொத்தப் பணிக்காலம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு வாக்குசாவடி அலுவலர் நியமனம் செய்திட உரிய வழிகாட்டுதலை வழங்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.*


*🌟4. போக்குவரத்து வசதியில்லாத இடங்களில் பணிபுரியச் செல்லும் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்வதற்கும், பணிமுடித்து வீடு திரும்புவதற்கும் அந்தந்த ZONAL TEAM உடன் ஒரு வாகனத்தையும் ஏற்பாடு செய்து உதவிடுமாறும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்திடவும் வேண்டுமென மாநில அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.*



*🌟5.வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு குடிநீர், கழிப்பறை, உணவு போன்றவற்றிற்கு அந்தந்த கிராமநிர்வாக அலுவலர்கள் மூலம் உரிய ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்திடுவதை உறுதிப்படுத்திட வேண்டுகிறோம்.*


*🌟6. வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உதவிடவும் மாநில அமைப்பின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.*


*🌟7.வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறோம்.*

*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




Friday, 15 March 2019

*தேர்தல் பணி புரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முக்கிய குறிப்புகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_15.html


*🌟ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி*


*🌟தமிழகத்தில், லோக்சபா தேர்தல், ஏப்., 18ல் நடக்கிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடக்கின்றன.*



*🌟தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு, வரும், 24ம் தேதி முதல், இரண்டு கட்ட பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்கள், தயாராக இருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.*


*🌟தேர்தல் பணி புரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான குறிப்புகள்*

*🆑ICK HERE TO DOWNLOAD PDF*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/1saLHnlkrnXUW9MZOzO9tyRW--pnYNn2K/view?usp=drivesdk



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Thursday, 14 March 2019

*"ஆசிரியர் தொழிலென்றால் அவ்வளவு கேவலமா?" - கவிதை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_71.html


*கவிஞர்.நா.டில்லிபாபு, இடைநிலை ஆசிரியர் அவர்கள் இயற்றிய "ஆசிரியர் தொழிலென்றால் அவ்வளவு கேவலமா?*


*கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே!*

*👇👇👇👇👇👇👇*


https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_71.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*இ.நி.ஆ ஊதியமீட்பு அரசாணை எரிப்புப் போராட்டம் : திருச்சி & புதுக்கோட்டை TNPTF தோழர்கள் மீதான FIR இரத்து*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/tnptf-fir.html


*🌟இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்பு நடவடிக்கையாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் இணைந்து திருச்சியில் நடத்தப்பட்ட அரசாணை எரிப்புப் போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை(FIR) பதியப்பட்டது.*



*🌟இதனை எதிர்த்து TNPTF சார்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று (14.03.19) _சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்_ விசாரணைக்கு வந்தது.*



*🌟வழக்கை விசாரித்த  மதிப்புமிகு நீதிபதி அவர்கள் _காவல் துறையால் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிகக்கையை ரத்து செய்து உத்தரவு_ பிறப்பித்தார்.*




*🌟இந்நிகழ்வுக்கு பெரிதும் முயற்சி எடுத்த நமது பேரியக்கத்தின் _மாநில மையத்திற்கும்,_ நமது _வழக்கறிஞர்_ மரியாதைக்குரிய _திரு.லஜபதிராய்_ அவர்களுக்கும், உறுதுணையாகச் செயல்பட்ட _மதுரை மாவட்டச் செயலாளர் தோழர்.ஒச்சுக்காளை_ அவர்களுக்கும்,மதுரை மாவட்ட _மாநிலச்செயற்குழு உறுப்பினர் தோழர்.சீனிவாசன்_ அவர்களுக்கும் _நெஞ்சார்ந்த நன்றியினை புதுக்கோட்டை மாவட்டக்கிளை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்._*



*_மாவட்டச்செயலாளர்,_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - புதுக்கோட்டை*



*செய்தி பகிர்வு:*

*_TNPTF விழுதுகள்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*பொள்ளாச்சி வன்கொடுமைச் சம்பவம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_14.html


*_பொதுச்செயலாளரின் செய்தி அறிக்கை எண்: 6/2019  நாள் : 14.03.2019_*


*🌟பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தமிழகம் முழுவதும் மக்களிடையே பேரதிர்ச்சியையும், பெருங்கோபத்தையும், பெருங்கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வந்து கொண்டிருக்கும் பல்வேறு செய்திகள் மற்றும் வீடியோ பதிவுகள் மனிதாபிமானமுள்ள எவரையும் பதைபதைப்புக்கு உள்ளாக்குகிறது.*


*🌟தங்களின் குற்றச்செயல்கள் மூலம் சமூகப் பதட்டத்தையும், கலாச்சாரச் சீரழிவையும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைமையும், தமிழகம் முழுவதும் அசாதாரணச் சூழ்நிலையையும் ஏற்படுத்தியுள்ள கொடுங்குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.* 


*🌟கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளோடு தொடர்புடையவர்கள் முறையான விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டு அனைத்துக் குற்றவாளிகளூம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.* 


*🌟குற்றவாளிகளுக்கு சட்டப்படி உச்சபட்சத் தண்டனை வழங்கப்படவேண்டும்.  நடந்து விட்ட இக்கொடுமையை சமூக அக்கறையுள்ள, மனிதாபிமானமுள்ள எவராலும் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.*


*🌟தொழில்நுட்ப வளர்ச்சியைத் தவறாகக் கையாளுவதால் நடைபெறும் இதுபோன்ற கொடுங்குற்றங்ககளை இளம்பெண்கள், மாணவிகள் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.*


*_“மாதர் தம்மை இழிவுசெய்யும்_*

   *_மடமையைக் கொளுத்துவாம்”_*


என்றான் *_மகாகவி._* 


*🌟காலங்காலமாகப் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற ஈவு இரக்கமற்ற இழிசெயல்கள் நாம் நாகரீக சமூகத்தில்தான் வாழ்கிறோமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்திற்கே மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.* 


🌟மேலும், *சமூகத்தில் இதுபோன்ற இழிச்செயல்கள் இனிமேலும் நடைபெறாவண்ணம் தடுத்திட மத்திய, மாநில அரசுகள் உச்சபட்ச சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*


*🤝தோழமையுடன்;*


*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Friday, 8 March 2019

*மார்ச் 8 - இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/8.html


💐🧚‍♀💐🤱💐💁💐🙋

*அதீத மன உறுதியும், அளவில்லா அன்பும், போற்றுதலுக்குரிய சகிப்புத்தன்மையும் தன்னகத்தே கொண்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அச்சாணியாகவும், ஆண்களின் வெற்றிக்கு உந்து  சக்தியாகவும் விளங்கும் பெருமைக்குரிய பெண்களுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்*


*_இவண்_*

*அயன் சரவணன்*

💐🧚‍♀💐🤱💐💁💐🙋


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday, 3 March 2019

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட கிளை சார்பாக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற இயக்க மறவர்களுக்கு பாராட்டு விழா - செய்தி துளிகள் மற்றும் புகைப்படத் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட கிளை சார்பாக ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற இயக்க மறவர்களுக்கு பாராட்டு விழா, ஜாக்டோ ஜியோ நீதிமன்ற வழக்கு விளக்க கூட்டம் (03/03/2019) ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் CITU அலுவலகத்தில்,*


*⚡மாவட்ட தலைவர் தோழர். கு.குணசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,*



*🌟மாவட்ட செயலாளர் தோழர். சண்முகசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.*


*🌟STFI பொதுக்குழு உறுப்பினர் தோழர். ச.மோசஸ் அவர்கள் பரிசளித்து சிறப்புரை ஆற்றினார்.*


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் தோழர்.அ.ரஹும் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.*


*🌟CITU முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்.மூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.*


*🌟அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழர். மகாலிங்கம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.*


*🌟விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டார செயலாளர்கள் போராட்டம் குறித்து எழுச்சி உரை ஆற்றினார்கள்.*


*🌟மாவட்ட பொருளாளர் தோழர்.தண்டபாணி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.*


*🌟பாராட்டு விழா கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளரும், இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு பொதுக்குழு உறுப்பினருமான தோழர் ச.மோசஸ் அவர்கள் ஊடக நண்பர்களுக்கு பேட்டி அளித்தார்.*


*⚡பேட்டியினை கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே*

👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/jqakiRT314M



*⚡சிறை சென்ற இயக்க மறவர்களுக்கு பாராட்டு விழா புகைப்பட தொகுப்பினை காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே.*

👇👇👇👇👇👇👇👇


https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм