Sunday, 9 December 2018
Friday, 7 December 2018
*ஆரம்பக்கல்வியை அலங்கோலப்படுத்துகிறது அரசும், கல்விஅமைச்சகமும் - மேனாள் பொதுச்செயலாளர் தோழர்.செ.நடேசன் குற்றச்சாட்டு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_97.html
*⭐ஆரம்பக்கல்வியை முன்னேற்ற தனி இயக்ககம் என போராடிப்பெற்ற நல்ல நிர்வாக அமைப்புமுறையை சிதைத்து ப.து.ஆய்வர் பணியிடத்தை உ. தொ. க.அலுவலர் என மாற்றியதை வட்டாரக்கல்வி அலுவலர் என உருக்கலைத்து, மீண்டும் முதன்மைககல்வி அலுவலரை ஆரம்பக்கல்வி நிர்வாகத்துக்குள் திணித்து ஆரம்பக்கல்வியை அலங்கோலப்படுத்துகிறது அரசும், கல்விஅமைச்சகமும்.*
*_செ.நடேசன்,_*
*மேனாள் பொதுச்செயலாளர்,*
*TNPTF.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் மாநில அமைப்பிடம் கஜா புயல் நிவாரண நிதி வழங்கப்பட்து தொடர்பான செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_73.html
*"கஜா" புயல் TNPTFன் நிவாரண நிதி விழுப்புரம் மாவட்டம் வட்டாரம் வாரியாக வழங்கப்பட்ட விவரம்*
*🙏வல்லம் - ரூ. 29000*
*🙏 ஒலக்கூர் - ரூ.12 000*
*🙏சின்னசேலம் - ரூ.10000*
*🙏விக்கிரவாண்டி ரூ.6000*
*🙏கள்ளக்குறிச்சி - ரூ.5000*
*🙏சங்கராபுரம் - ரூ.5000*
*🙏ரிஷிவந்தியம் - ரூ.3500*
*🙏வானூர் - ரூ.500*
______________________________
*மொத்தம் ரூ.71000*
______________________________
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌟கருணை உள்ளத்துடன் நிதி வழங்கிய அனைத்து தோழர்களுக்கும் மாவட்ட மையத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*⭐இன்று மாநில மையத்தின் வங்கிக் கணக்கில் ரூ.71000 செலுத்தப்பட்டுள்ளது. தோழர்களே*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*தோழமையுடன்;*
*_குணசேகரன்,_ மாவட்ட தலைவர்,*
*_சண்முகசாமி,_ மாவட்ட செயலாளர்,*
*_தண்டபாணி,_ மாவட்ட பொருளாளர்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்ட அழைப்பிதழ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_96.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் (16.12.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, மாநில தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில், மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*
*_கூட்டப்பொருள்:_*
*⚡வேலை அறிக்கை,*
*⚡26.11.2018 அரசாணை எரிப்புப் போராட்டம் 17(ஆ) நடவடிக்கைகள் ஆய்வு,*
*⚡ஜாக்டோ - ஜியோ போராட்ட நடவடிக்கைகள்,*
*⚡கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் நிவாரண நிதி அளித்தல்,*
*⚡ஆசிரியர் பிரச்சினைகள் (எழுத்துப்பூர்வமாக),*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன,*
*⚡இதர விஷயங்கள்.*
*மாநில செயற்குழுவில் உள்ள தோழர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
*_மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம்:_*
*16.12.2018 ஞாயிறு காலை 9.00 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஆசிரியர்களின் உயர் கல்விக்கு அனுமதி பிரச்சனை - வட்டார கல்வி அலுவலருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் -சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_7.html
*🌟ஆசிரியர்கள் ஒரே பதவியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் நிறைவு செய்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகிறது. அது போல் ஆசிரியர்கள் அஞ்சல் வழியில் உயர் கல்வி பயின்றால் துறை அனுமதி பெற வேண்டும்.*
*🌟ஏற்கனவே உயர் கல்வி பயில முன் அனுமதி வழங்கும் அதிகாரம் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் இருந்தது. இதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் ஆசிரியர்கள் தாங்கள் பயின்ற உயர் கல்விக்கு பின்னேற்பு பெற முடியாமல் இன்றளவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வுகள் நிறுத்தப்பட்டுள்ளன.*
*🌟இந்த குழப்பத்தைத் தவிர்க்க சில ஆண்டுகளுக்கு முன் வட்டாரக் கல்வி அலுவலர்களே உயர் கல்வி பயில அனுமதி வழங்கலாம் என கல்வித்துறை உத்தரவிட்டது.*
*🌟ஆனால் 2018 மே 18 ல் வெளியிடப்பட்ட அரசாணை 101 ன் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைத்து பணப்பலன்களை அளிப்பது தவிர்த்து மற்ற அனைத்து அதிகாரங்களும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.*இதனால் ஆசிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.*
*🌟ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலகமும் தேர்வு நிலை, சிறப்பு நிலை, உயர்கல்வி அனுமதிக்கு தேவையற்ற காரணங்களைக் கூறி ஆசிரியர்கள் விண்ணப்பங்களைத் திருப்பிவிடுகின்றன.*
*🌟இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு தேவையற்ற கால தாமதமும் ஏற்படுகிறது. உயர் கல்வியை தொடரலாமா? வேண்டாமா? என்ற குழப்பமும் ஏற்படுகிறது.*
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் தோழர்.முத்துப்பாண்டியன் கூறுகையில்,_*
*🌟ஏற்கனவே ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கோரும் கோப்புகள் மாதக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிளது. இந்நிலையில் மேற்கண்ட கோப்புகளும் தாமதப்படுவதால் அலுவலகங்களில் தேவையற்ற நிர்வாகக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.*
*🌟எனவே முன்பு இருந்தது போல் தேர்வு நிலை, சிறப்பு நிலை, உயர்கல்வி முன் அனுமதி வழங்கும் அதிகாரங்களை மீண்டும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கே வழங்க வேண்டும்.*
*🌟கல்வித்துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அரசாணை 100, 101 ஆகியவற்றை ரத்துசெய்ய வேண்டும். முன்பு போல் தொடக்கக்கல்வி துறை மாவட்ட அளவிலும் தனித்துறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.*
*🤝தோழமையுடன்;*
*_முத்துப்பாண்டியன்,_*
*மாவட்டச் செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*சிவகங்கை.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Wednesday, 5 December 2018
*EMIS வலைதளத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் விபரத்தினை சரிபார்த்தல் மற்றும் கூடுதல் விபரங்களை பதிவேற்றம் செய்வதற்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/emis-10.html
*🌟அரசுத் தேர்வுகள் இயக்குநரின் 15.11.2018 நாளிட்ட செயல்முறைகளின் படி, நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் விபரங்களை சரிபார்த்து கூடுதல் விபரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு 19.11.2018 முதல் 30.11.2018 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.*
*🌟தற்போது 14.12.2018 வரை கால நீட்டிப்பு செய்து வழங்கப்பட்டுள்ளது. மேற்படி நாட்களுக்குள், மேற்காண் பணியினை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*TNPTF - அரசாணை எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு 17(B) பெற்ற இயக்கப் போராளிகள் 30 நாட்கள் கால அவகாசம் வேண்டி விண்ணப்பிக்குமாறு பொதுச்செயலாளர் தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/tnptf-17b-30.html
*🔥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய, 26/11/2018 அரசு ஆணை நகல்🔥 234 🔥303 🔥 எரிப்பு, போராட்டத்தில் கலந்து கொண்ட, ஆசிரியர் பெருமக்களுக்கு*
*⭐CEOவின் செயல்முறைக்கேற்ப வட்டார கல்வி அலுவலர்கள் 17(B) என்ற மணிமகுடம் சூட்ட வேண்டி அதில் தங்களின் சரியான பெயர் பதித்துக் கொடுப்பதற்கான நடவடிக்கையாக அவர்களுக்கு வந்துள்ள பட்டியலை சரிபார்க்க தங்களை தகவல் கேட்டால் முறையான தகவல் வழங்கவும்.*
*⭐இந்த 17(B) ஆணையை உரிய முறையில் அலுவலகத்தின் மூலமாக நேரிலோ! அல்லது தபால் வழியாகவோ! வழங்கப்பட்டால் மட்டும் பெற்றுக்கொள்ளவும்,*
*⭐த.ஆ. மூலமோ அல்லது அலுவலகம் சென்றோ பெற வேண்டாம்.*
*_ 🤺அஞ்ச வேண்டாம்.🏌 _*
*⭐17(B) வழங்கியதும், அதற்கு உடனேயே பதில் கொடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.*
*⭐முதலில் 30நாட்களுக்கு கால அவகாசம் கேட்டு விண்ணப்பம் வழங்குவோம்.*
*⭐அதற்கும் வட்டாரம் உங்களுக்கான விண்ணப்பம் தயார் செய்து வழங்கும்.*
*⭐உரிய காலத்தில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான பதில் வழங்க மாநில மையம் தகுந்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.*
*எனவே,*
*_நமது உறுப்பினர்கள் அனைவரும் மாநில அமைப்பின் வழிகாட்டுதலின்படி செயல்படுவோம்._*
*⭐30 நாட்கள் அவகாசம் வேண்டி விண்ணப்பிக்கும் மாதிரி கடிதம் கீழே உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.*
https://drive.google.com/folderview?id=1FL3my9SwybID1TE-a13e4qQ9FRnJEdRy
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Monday, 3 December 2018
*ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிக ஒத்திவைப்பு குறித்த தகவல்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/blog-post_3.html
*⭐நீதிமன்றத்தில் நீதியரசர் கேட்டுக் கொண்டதன் பேரில் வேலைநிறுத்த போராட்டம் (10.12.2018) திங்கட்கிழமை வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது,*
*⭐உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர்கள் சுவாமிநாதன் சசிதரன் முன்பாக மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.*
*⭐போராட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள் ஏற்கனவே நிலுவையில் இருந்த அவமதிப்பு வழக்கை மீண்டும் தொடர்ந்து விசாரிக்க முடிவு செய்தனர்,*
*⭐தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை ஜாக்டோ ஜியோ நடத்துகிறபோது அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது தான் போராட்டத்திற்கு காரணம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்*
*⭐அரசிடம் எழுத்துப்பூர்வமான கோரிக்கைகளுக்கான பதில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்*
*⭐21 மாத நிலுவைத்தொகை மற்றும் ஊதிய முரண்பாடு களைதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற அறிக்கையினையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.*
*⭐நீதிபதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்கவும் நமது சார்பாக அவர்களே கருத்து தெரிவித்த அடிப்படையிலும் போராட்டம் 10ம்தேதி (திங்கட்கிழமை) வரை ஒத்தி வைக்கப்படுகிறது,*
☀️மீண்டும் இவ்வழக்கு விசாரணை திங்கட்கிழமை (10.12.2018) நடைபெறும் என நீதி அரசர்கள் கூறியுள்ளார்கள்.*
*⭐ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு நாளை அல்லது நாளை மறுநாள் திருச்சியில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் தனித்தனியாக BEO விடம் தபால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை - TNPTF பொதுச்செயலாளர் அறிவிப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/12/beo-tnptf.html
*⭐நாளை 04.12.2018 முதல் ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்துகிறது.*
*⭐இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து நிலை ஆசிரியர் சங்கங்களும் ஓரணியில் அணிதிரண்டு உள்ளன.*
*⭐இதனால் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் _தமிழக அரசிடமும் கல்வித்துறை செயலரிடமும் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான வேலைநிறுத்த தபால் எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது._*
*⭐எனவே ஒவ்வொரு அசிரியரும் தனித்தனியாக BEO விடம் தபால் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.*
*⭐தேவைப்பட்டால் மூடும் பள்ளிகளை மட்டும் BEO களுக்கு தகவல் அலைபேசி வழியாக தெரிவியுங்கள்.*
*⭐எழுத்து பூர்வமாக தபால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)











