Monday, 29 March 2021

*🛡️தபால் வாக்கு முகநூலில் வெளியான விவகாரம்! ஆசிரியையின் தபால் வாக்கை வேறுநபர் முறைகேடாகப் பெற்று வாக்களித்த உண்மையை வெளிக்கொணர்ந்த TNPTF தென்காசி மாவட்டக்கிளை!*

*🛡️தபால் வாக்கு முகநூலில் வெளியான விவகாரம்! ஆசிரியையின் தபால் வாக்கை வேறுநபர் முறைகேடாகப் பெற்று வாக்களித்த உண்மையை வெளிக்கொணர்ந்த  TNPTF தென்காசி மாவட்டக்கிளை!*


*⚔️*
*🛡 தனது தபால் வாக்கில் குறிப்பிட்ட வேட்பாளரைத் தேர்வு செய்தபின் அதைப் புகைப்படமெடுத்து முகநூலில் வெளியிட்டதாகத் தென்காசி மாவட்டம், சுரண்டை R.C நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவரை பணியிடை நீக்கம் செய்து வெளியான தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தான் இன்று அனைத்து சமூக & செய்தி ஊடகங்களிலும் தீயென பரவி வருகிறது.*

*⚔️*
*🛡 தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, வாக்குப் பதிவு மையத்தில் யாருக்கு வாக்களித்தேன் என்று கூறுவதோ, தபால் வாக்கின் வாக்குச்சீட்டில் யாருக்கு வாக்களித்தேனென புகைப்படம் எடுத்து வெளியிடுவதோ தண்டனைக்குரிய குற்றங்களே.*

*⚔️*
*🛡 இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உதவியை நாட, ஆசிரியை தபால் வாக்கைப் பெறவே இல்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது.*

*⚔️*
*🛡 சங்கரன்கோயிலில் நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் தனது உடல்நிலை காரணமாக தனது தபால் வாக்குக் கவரை வாங்காமலே சென்றுவிட்டார். பெறப்படாத தபால் வாக்குகளை அஞ்சல் வழியே அனுப்பி வைப்பதுதான் தேர்தல் நடை முறை.*

*⚔️*
*🛡 ஆனால், ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் அவர்களின் கையொப்பமுமின்றி யாரே வேறு நபர் ஆசிரியையின் தபால் வாக்கினைப் பெற்று அதிலுள்ள வாக்குச் சீட்டில் தனக்குப் பிடித்த வேட்பாளரைத் தேர்வு செய்து புகைப்படம் எடுத்துள்ளார்.*

*⚔️*
*🛡 மேற்படி புகைப்படத்தைத் தேங்காய் வியாபாரி ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் வைரலாகப் பரவ அதைப் பார்த்த தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க, வாக்குச் சீட்டில் இருந்த வரிசை எண்ணை வைத்து முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தார் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர்.*

*⚔️*
*🛡 தற்போது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்டக்கிளை சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு உதவியாகக் களத்தில் இறங்கிய நிலையில் தான் மேற்கண்டவாறு ஆசிரியை தபால் வாக்கே பெறவில்லை என்பதும், வேறு யாரோ ஒருவர் முறைகேடாக ஆசிரியையின் தபால் வாக்கைப் பெற்ற உண்மையும் அதிகாரிகளுக்கும் வெளி உலகிற்கும் தெரிய வந்துள்ளது.*

*⚔️*
*🛡 இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சியின் போது பொறுப்பில் இருந்த வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.*

*⚔️*
*🛡 மேலும், தபால் வாக்கினைப் பெற்றவர், புகைப்படம் எடுத்தவர் & முகநூலில் வெளியிட்ட நபர் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.*

*⚔️*
*🛡 இப்பிரச்சினையில் உரிய காலத்தில் துரித முறையில் செயல்பட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்டக்கிளையின் செயல்பாடுகளால் தேவையற்ற மன உளைச்சலுக்கு உள்ளான ஆசிரியைக்கு நீதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡 தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தி உரிய காலத்தில் புகாரளித்த தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரது செயலால் தபால் வாக்குகளைக் கொண்ட திட்டமிடப்பட்டிருந்த அநீதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.*

*⚔️*
*🛡 தொடர் விசாரணையின் இறுதியில் தான் இது போன்று எத்தனை தபால் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்பது தெரியவரும்.*

Wednesday, 10 March 2021

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 21.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது*

*🌟மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

_கூட்டப்பொருள்:_

*⚡அஞ்சலி*
*⚡ வேலை அறிக்கை*
*⚡வரவு-செலவு*
*⚡15 அம்ச கோரிக்கைகள் - 20.02.2021 ல் சென்னையில் நடைபெற்ற தொடர்பு பக்கம் போராட்டம் - ஆய்வு*
*⚡இயக்கத்தின் 13 வது அமைப்புத் தேர்தல்கள் - வட்டார, நகர, மாநகர, மாவட்டக் கிளை தேர்தல்கள் - ஆய்வு*
*⚡அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் - 17(ஆ) நடவடிக்கைகள் - ஆய்வு*
*⚡இயக்கத்தின் மாநில தேர்தல் - தேர்தல் தேதி முடிவு செய்தல்.*
*⚡இயக்கத்தின் மாநில தேர்தல் - தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்*
*⚡இயக்கத்தின் மாநில வரவு-செலவு தணிக்கை - தணிக்கைக் குழு நியமனம்*
*⚡இயக்கத்தின் 13 வந்து அமைப்பு தேர்தல்கள் - தேர்தல் தீர்ப்பாயம் அமைத்தல்*
*⚡ஆசிரியர்கள் பிரச்சினை (எழுத்துப்பூர்வமாக)*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன.*

*🌟அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கூட்டத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*🌟21.03.2021 அன்று காலை 9.00 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.*

🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
மாநில பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*

_தூத்துக்குடி மாவட்டக்கிளை 13 வது அமைப்புத்  தேர்தல் முடிவுகள்..._

*⚡மாவட்டத் தலைவர்*
திரு மா. கலை உடையார்

*⚡மாவட்டச் செயலாளர்*
திரு சு. செல்வராஜ்

*⚡மாவட்ட பொருளாளர்*
திருமதி கோ.ஜெயசீலி

*⚡மாநில செயற்குழு உறுப்பினர்*
திரு தே. அந்தோணி சார்லஸ்

*⚡மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்:*
1.திரு ஜீ. மகேந்திரன்
2.திரு அ. சகாயராஜன்
3. திரு ப.மு. பாப் ஹையஸ்
4. திரு ஆ.ராபர்ட்கிங்

*⚡மாவட்ட துணைத்தலைவர்கள்*
1. திரு ம.புனித அந்தோணி

2. திருமதி பெ.ரோஸ்லின் அன்னலீலா

3. திருமதி D.  அன்னலட்சுமி

*⚡மாவட்ட துணைச் செயலாளர்கள்:*
1. திரு R.பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ்

2. திருமதி வே.செல்வி

*⚡STFI பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழு*
திருமதி S.வசந்தி

*⚡தூத்துக்குடி கல்வி மாவட்டத்தலைவர்*
திரு K. குணசேகரன்

*⚡தூத்துக்குடி கல்வி மாவட்டச் செயலாளர்*
திரு மி.எபனேசர்

*⚡கோவில்பட்டி கல்வி மாவட்டத் தலைவர்*
திரு L.ஸ்ரீதரன்

*⚡கோவில்பட்டி கல்வி மாவட்டச் செயலாளர்*
திரு M. ரவீந்திர ராஜன்

*⚡திருச்செந்தூர் கல்வி மாவட்டத் தலைவர்* திருமதி இ.ஜேஸ்மின் விண்ணரசி

*⚡திருச்செந்தூர் கல்வி மாவட்டச் செயலாளர்*
திரு A. ராஜசேகர்

*⚡தேர்தல் ஆணையாளர்:*
திரு செ.பால்ராஜ்
மாவட்ட செயலாளர்
திருநெல்வேலி.

*⚡துணை ஆணையாளர்*
திரு மு. பிரம்மநாயகம்
மாநிலச் செயற்குழு உறுப்பினர்.

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
*புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.*
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

Tuesday, 9 March 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற உள்ளது.*

⚡நாள்:
*10.03.2021 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு* 

*📲ZOOM வழியில் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற உள்ளது.*

⚡கருத்தாளர்:
*_தோழர்.மூ.மணிமேகலை_*
*மாநிலத் தலைவர்* *TNPTF*

⚡தலைப்பு :
*'பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்'*

⚡தலைமை :
*_தோழர்.கு.குணசேகரன்_*
*மாவட்டத் தலைவர்* *TNPTF*

⚡தொடக்கவுரை :
*_தோழர் அ.ரஹீம்_ மாநில துணைத் தலைவர் TNPTF*

*_தோழர் சா.சித்ரா_*
*மாநிலச் செயலாளர் TNPTF*

⚡நன்றியுரை:
*_திரு சு.தண்டபாணி_ மாவட்டப் பொருளாளர்.*

*📲தோழர்கள் அனைவரும் இணைய வழியில்  திரளாக  கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட மையத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!*

*📲கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி நேராக கருத்தரங்கில் கலந்துகொள்ளலாம்!*
👇👇👇👇👇👇👇👇👇👇👇

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/7249280585

🤝தோழமையுடன்

*_இரா.சண்முகசாமி_*
*மாவட்ட செயலாளர்*
*TNPTF விழுப்புரம் மாவட்டம்.*


Sunday, 7 March 2021

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சேலம் மாவட்டத் தேர்தல் முடிவுகள்*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,  சேலம் மாவட்டத் தேர்தல் முடிவுகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,  சேலம் மாவட்டத் தேர்தல் இன்று (07.03.2021) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது  அனைத்து பொறுப்பாளர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்*

*⚡தேர்தல் ஆணையாளர்*

இரா.சண்முகசாமி விழுப்புரம் மாவட்டம்

*⚡தேர்தல் துணை ஆணையாளர்*

R.மலர்விழி   
 மாநில செயற்குழு உறுப்பினர் நாமக்கல்
 மாவட்டம்

*⚡மாவட்டத் தலைவர்*
செ.கணேசன்

*⚡மாவட்டச் செயலாளர்*
ந.பெரியசாமி

*⚡மாவட்டப் பொருளாளர்*
ச.தவமணி

*⚡மாவட்டத் துணைத் தலைவர்கள்*

1.கு.மாது
2.ந.கலையரசன்
3.(பெண்)காலியாக உள்ளது

*⚡மாவட்டத் துணைச் செயலாளர்கள்*
1.தி.குமார்
2.R.சரவணன்
3.(பெண்)காலியாக உள்ளது

*_கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்_*

*⚡ஆத்தூர்கல்வி மாவட்டம்*
*தலைவர்* 
 KGS மனோகரன்

*செயலாளர்* 
தே.கணேசன்

*⚡சேலம்கல்வி மாவட்டம்*
*தலைவர்* 
காலியாக உள்ளது

*செயலாளர்*  
சி.அந்தோணி

*⚡சங்ககிரி கல்வி மாவட்டம்*
*தலைவர்*  
குணசேகரன்

*செயலாளர்* 
சி.சந்தோஷ்குமார்

*⚡எடப்பாடி கல்வி மாவட்டம்*
*தலைவர்* 
ந.இரவிச்சந்திரன்

*செயலாளர்* 
மு.கண்ணன்

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
*புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*

*🚩*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நேற்று (06.03.2021) சனிக்கிழமை (புதிய மாவட்டமாக பிரிந்த நிலையில்) மிகச்சிறந்த முறையில் முதலாவது  தேர்தல் நடைபெற்றது.*

 *🚩*
*🛡️சேலம் மாவட்ட செயலாளர் _தோழர்.ந.பெரியசாமி_ மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாநில செயலாளர் _தோழர்.ச.டேவிட்ராஜன்_ அவர்களும் தேர்தல் ஆணையாளர்களாக வருகைபுரிந்து தேர்தலை ஜனநாயக முறையில் சிறப்பாக நடத்தினார்கள்.*

*🚩*
*🛡️தேர்தலில் அனைத்து பொறுப்பாளர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்*

_தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பட்டியல்:_

*⚡மாவட்ட தலைவர்:*
*_தோழர்.மதலைமுத்து_*

*⚡மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.கலாநிதி_*

*⚡மாவட்ட பொருளாளர்:*
*_தோழர்.சுதா_*

*⚡மாவட்ட துணைத் தலைவர்:*
*_தோழர்.பழனிவேல்_*
*_தோழர்.இராஜ்மோகன்_*
*_தோழர்.பாத்திமா_*

*⚡மாவட்ட துணைச் செயலாளர்:*
*_தோழர்.அயன் சரவணன்_*
*_தோழர்.வை.கருணாகரன்_*
*_தோழர்.தேன்மொழி_*

*⚡கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட தலைவர்:*
*_தோழர்.அ.சரவணன்_*

*⚡கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.சாந்தகுமார்_*

 *⚡ உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட தலைவர்:*
*_தோழர்.அ.வில்லியம்_*

 *⚡ உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.அ.பாக்கியராஜ்_*

*⚡திருக்கோவிலூர் கல்வி மாவட்ட தலைவர்:*
*_தோழர்.ம.அலெக்ஸாண்டர்_*

*⚡ திருக்கோவிலூர் கல்வி மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.பி.ஷேக் ஜாகிர் உசேன்_*

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
*🚩புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்._*
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

Tuesday, 2 February 2021

*🛡️ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு! போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்!*

*🛡️ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு! / போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்!*

*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 02/2021  நாள்: 02.02.2021_*

                                         

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை._

*⚔️*                                        
*🛡️போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ள தமிழக அரசின் அறிவிப்பு மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்றாலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அதை வரவேற்கிறது. அதேநரத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக எதுவும் அறிவிக்காதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.*

*⚔️*                                        
*🛡️ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 22 முதல் 30 முடிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.*

*⚔️*                                         
*🛡️ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு பல்வேறு அடக்குமுறைகளைக் கையாண்டது. காவல்துறை மூலம் பொய் வழக்குகளைப் புணைந்தது, துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொலைதூரப் பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டக் களத்திலும் சிறைச்சாலைகளிலும் வரலாறு காணாத அளவிற்கு அவமானப் படுத்தப்பட்டனர். இந்நிகழ்ச்சிகள் இன்றளவும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நெஞ்சில் ஆறாத காயங்களாய் இருந்து கொண்டிருக்கின்றன. இவைகள் மறக்கவும், மன்னிக்கவும் முடியாத நிகழ்வுகளாகும்.*

*⚔️*                                         
*🛡️இந்நிலையில் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கும் உள்ளான பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் வயது முதிர்வின் காரணமாகப் பணி ஓய்வு பெற அனுமதிக்கப்படாமலும், பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமலும், தேர்வு நிலை/சிறப்பு நிலை, ஊதிய உயர்வுகள் கூட அனுமதிக்கப்படாமலும் கடந்த 2 ஆண்டு காலமாக கொடுந்துயரத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள் மட்டும் 1973 பேர் பாதிக்கப்பட்டனர்.*

*⚔️*                                          
*🛡️இதனால் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய ஆசிரியர்களும், அரசுஊழியர்களும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்யக்கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடத்த வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளியது.*

*⚔️*                                         
*🛡️இதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனியாகவும், ஜாக்டோ-ஜியோ அமைப்போடு இணைந்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. 20.02.2021 அன்று சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான தொடர் முழக்கப் போராட்டத்தையும் நடத்தவுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இன்று (02.02.2021) முதல் மாவட்டத் தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டத்தை நடத்தவுள்ளது.*

*⚔️*                                           
*🛡️31.01.2021 அன்று திருச்சியில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலத் தலைவர் ச.மோசஸ், செல்வம், ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் 08.02.2021 முதல் 10.02.2021 முடிய 72 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பதெனவும், அந்நாட்களில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.*

                                           
*🛡️இதன் பின்னணியிலும், தேர்தல்கால களச் சூழலை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பற்றி முதலமைச்சரின் அறிவிப்பில் ஒரு வார்த்தை கூட இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும், நடைபெற்ற போராட்டத்திற்கு சம்பந்தமே இல்லாத இரண்டு சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கையின் பேரில் ஒழுங்கு நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் ரத்து செய்துள்ளதாக தமிழக முதலமைச்சரின் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது போராட்டக் களத்தில் நின்ற சங்கங்களை மீண்டும் காயப்படுத்துவதாக உள்ளது.*

*⚔️*                                           
*🛡️எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும், வேலை நிறுத்தக் காலத்தில் பணி மாறுதல் செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை மீண்டும் வேலை நிறுத்தத்திற்கு முன்பு அவர்கள் பணியாற்றிய இடத்தில் பணியமர்த்திட வேண்டும். கடந்த காலங்களை போல் வேலைநிறுத்தக் காலத்தை முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.*

இப்படிக்கு,

*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*               

Saturday, 30 January 2021

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - புதிய வட்டாரக் கிளை துவக்க விழா - மாநில மையம் வாழ்த்துச் செய்தி*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - புதிய வட்டாரக் கிளை துவக்க விழா - மாநில மையம் வாழ்த்துச் செய்தி*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம், தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று(30.01.2021)புனித தோமையார் மலை வட்டாரக் கிளை தொடக்க விழா மற்றும் கிளை நிர்வாகிகள் தேர்வு ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது.*

*🚩நம் பேரியக்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் பெ.அலோசியஸ் துரைராஜ் உள்ளிட்ட மாவட்டக் கிளை நிர்வாகிகள் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர்.*

*🚩சென்னை மாநகரை ஒட்டி அமைந்துள்ள புனித தோமையார் மலை வட்டாரக் கிளை மாநிலத்தின் முன்னணிக் கிளைகளில் ஒன்றாய் உயர்ந்தோங்கிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் புரட்சிகரமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.*

*🚩புதிய கிளை தொடங்கிட அயராது உழைத்திட்ட தோழர்.சுரேஷ்குமார் அவர்களுக்கும், மாநில, மாவட்டக்கிளை நிர்வாகிகளுக்கும் மாநில மையம் பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.*

*🚩புதிய கிளையின் புதிய நிர்வாகிகள் இயக்கப் பணியில் இலக்கணமாய்த் திகழ்ந்திட மாநில மையம் வாழ்த்துகிறது.*

🤝வாழ்த்துக்களுடன்

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Thursday, 28 January 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- 28.01.2021 மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை-கூட்ட முடிவுகள்- செய்தியறிக்கை*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி- 28.01.2021 மாநில செயற்குழுக் கூட்டம், மதுரை-கூட்ட முடிவுகள்- செய்தியறிக்கை*

*🛡️மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 01/2021  நாள்: 28.01.2021*

*🛡️15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் போராட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு!*

*⚔️*                                          
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் 28.01.2021 அன்று மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*

*⚔️*
*🛡️கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்.*

*⚔️*
*🛡️மதுரை மாவட்டச் செயலாளர் க.ஒச்சுக்காளை வரவேற்புரை ஆற்றினார்.*

*⚔️*
*🛡️மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு வரவு-செலவு அறிக்கையைச் சமர்ப்பித்தார்.*
                                      
*⚔️*
*🛡️கூட்டத்தில் இயக்கத்தின் கடந்த கால செயல்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கல்விச்சூழல், இயக்கத்தின் 13-வது அமைப்புத் தேர்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரை ஆற்றினார்.*

                                             *⚡கூட்டத்தில் தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,*

*⚡இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும்,*

*⚡2019 ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாகக் கைவிட வேண்டும்,*

*⚡தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும்,*

*⚡மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியாக 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்,*

*⚡ஆசிரியர் நியமன வயது வரம்பைத் தமிழக அரசு 40 ஆகக் குறைத்து ஆணையிட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும்,*

*⚡"கற்போம் எழுதுவோம்" திட்டத்தில் பணியில் உள்ள ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்,*

*⚡2020-21 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்தி பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆணைகளை உடனடியாக வழங்கிட வேண்டும்,*

*⚡பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு ரத்து ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.*

*🛡️உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் 20.02.2021 அன்று சென்னையில் பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் "தொடர் முழக்க போராட்டம்" நடத்திட முடிவு செய்யப்பட்டது.*                                           

*⚔️*                                           
*🛡️மாநில துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் நன்றி கூறினார்.*

*⚔️*
*🛡️கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து மாநில துணை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*                                                                        

_🤝இப்படிக்கு;_                                                          

 *_ச.மயில்_*                                                _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*