Wednesday, 9 January 2019
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_9.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 12.01.2019 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் _மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
*_கூட்டப்பொருள்:_*
*⚡வேலை அறிக்கை,*
*⚡26.11.2018 அரசாணை எரிப்புப் போராட்டம் - 17(ஆ) நடவடிக்கைகள் - தொடர் நிகழ்வுகள்,*
*⚡19.02.2019 டெல்லி பேரணி - இறுதிப்படுத்துதல்,*
*⚡தொடக்கக்கல்வி துறையை அழிக்கும் தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள்,*
*1.பள்ளிகள் இணைப்பு,*
*2.LKG, UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்கள்.*
*⚡ஆசிரியர் பிரச்சினைகள் (எழுத்துப்பூர்வமாக),*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன,*
*⚡இதர விஷயங்கள்.*
*🌟மாநில செயற்குழுவில் உள்ள தோழர்கள் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
*_மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்:_*
*⚡12.01.2019 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும்.*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அவசர மாநில செயற்குழுக்கூட்ட அழைப்பிதழ். ஒவ்வொரு மாநில செயற்குழு உறுப்பினருக்கும் அஞ்சலில் கடிதம் அனுப்ப கால அவகாசம் இல்லாததால் இதையே அழைப்பாக ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.முக்கியக்கூட்டம் என்பதால் தவறாது கலந்து கொள்ளவும்*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 5 January 2019
*தொடக்கக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகள் துவங்க பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் அவ்வகுப்புகளில் பணிபுரிய பெண் ஆசிரியர்கள் விவரம் கோருவது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/lkg-ukg.html
*🌟அரசாணை (நிலை) எண்.89, சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத் (SW-7(1) துறை, நாள் - 11.12.2018 ன் படி தமிழகத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை 2381 என கண்டறியப்பட்டு, அம்மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகள் ஆரம்பிப்பதற்காக, அரசாணையில் குறிப்பிட்டுள்ள மையங்களின் பட்டியல் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் 17.12.2018 அன்று கோரப்பட்டது.*
*🌟ஒவ்வொரு மையத்திலும் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு பாடம் போதிப்பதற்காக ஒரு பெண் ஆசிரியை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை படிஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் ஆசிரியர்களின் உபரி பணியிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பணியிடத்துடன் உபரியாக உள்ள ஆசிரியர்களில் பெண் ஆசிரியர்களை ஒவ்வொரு மையத்திற்கும் ஒருவர் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அவ்வாறு அந்த ஒன்றியத்தில் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும்போது அருகிலுள்ள ஒன்றியத்திலிருந்து அவருடைய முதுநிலை (Seniority) மாறாதவாறு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Friday, 4 January 2019
*பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளின் கடனிற்கு செலுத்தும் பங்குத்தொகை 5% - ஆக குறைத்தல் தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களின் சுற்றறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/5.html
*☀️பணியார் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும்போது செலுத்தப்படும் பங்குத்தொகை மற்றும் பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களின் உறுப்பினர்கள் அச்சங்கத்திலிருந்து பெறும் கடன் தொகைக்கு செலுத்தப்படும் பங்குத்தொகை விகிதத்தை குறைப்பது தொடர்பாக பெறப்பட்ட கோரிக்கைகள் குறித்து கடந்த 06.12.2018 அன்று நடைபெற்ற மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் மண்டல இணைப் பதிவாபணிமயளர்களின் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.*
*☀️அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணியாளர் கூட்டுறவு கடன் தொகைக்கு 5% பங்குத்தொகை வசூலிக்கவும் அதே போல் பணியாளர் கூட்டுறவு மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களின் உறுப்பினர்கள் அச்சங்கங்களின் மூலம் பெறப்படும் கடன் தொகைக்கு 5% பங்குத்தொகை வசூலிக்கவும் அறிவுறுத்தப்படுகிது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கடலூர் மாவட்ட கிளை விரிவடைந்த மாவட்ட பொதுக்குழுக்கூட்டம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_4.html
*⭐இடம் : வடலூர் பேருந்து நிலையம் & பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபம்.*
*⭐நாள் :05.01.2019. சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி*
*_தலைமை:_*
*⭐ _தோழர். இரா.அறிவழகன்_ அவர்கள் மாவட்ட தலைவர்.*
*_சிறப்புரை:_*
*⭐ _தோழர்.அ.ரஹீம்_ அவர்கள் மாநில துணைத்தலைவர்.*
*_கூட்டப்பொருள்:_*
*⚡1)16.12.2018 மதுரை -மாநில செயற்குழு முடிவுகள்.*
*⚡2)26.11.2018 வடலூர் - அரசாணை எரிப்பு போராட்டமும், 17-ஆ நடவடிக்கையும் தொடர் நடவடிக்கையும். போராளிகளுக்கு பாராட்டும்*
*⚡3)ஜாக்டோ -ஜியோ போராட்ட நடவடிக்கை.*
*⚡4)2019-ஜனவரி 8 & 9 இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தப்போராட்டம் பங்கேற்பு.*
*⚡5)19.02.2019 புது டில்லி பேரணி பங்கேற்பு.*
*⚡6)நிதி நிலுவைகள் & 2018-19 இயக்க உறுப்பினர் பட்டியல் ஒப்படைப்பு.*
*⚡7)ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக )*
*_விழைவு :_*
*⭐அரசாணை எரிப்பு போராளிகளும், பொறுப்பாளர்களும் & உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்றிட அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.*
*⚡இவண்*
*_ஜோ.கிறிஸ்டோபர்_*
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, கடலூர் மாவட்டம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Wednesday, 2 January 2019
*அனுமதியின்றி உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி - பள்ளிக்கல்வித் துறை விரைவில் அரசாணை வெளியீடு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post.html
*⭐ஆசிரியர்களின் உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது*
*⭐தமிழகத்தில் 38 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் 1.5 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிக்கல்வி பணியாளர் இயக்குநரகத்தில் முன்அனுமதி பெற்று வந்தனர்.*
*⭐இந்த முறையை மாற்றி, ஆசிரியர்களின் பணியிட மாறுதல் மற்றும் உயர்கல்விக்கான முன்அனுமதியை வழங்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.*
*⭐அதேநேரம், தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக உயர்கல்விக்கு அனுமதி கோரி விண்ணப்பித்த 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் ஒப்புதல் தரப்படவில்லை.*
*⭐2018 ஜூன்மாதத்துக்கு முந்தைய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்க முதன்மை கல்வி அதிகாரிகள் மறுக்கின்றனர். இனிமேல், முன்அனுமதிக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பணியாளர்இயக்குநரகமும் கைவிரிப்பதால், உயர்கல்வியை முடித்துவிட்ட பல ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.*
*⭐ஆசிரியர்களின் உயர்கல்விக்கு தமிழக அரசு பின்னேற்பு அனுமதி வழங்க வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன.*
*_இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் சந்திரன் கூறியதாவது:_*
*⭐ஆசிரியர்கள் ஒரே பதவியில் 10 ஆண்டுகள் நிறைவு செய்தால் தேர்வு நிலை, 20 ஆண்டுகள் முடித்தால் சிறப்பு நிலை வழங்கப்படுகிறது. அஞ்சல் வழியில் உயர்கல்வி படிக்க துறை அனுமதி பெற வேண்டும். உயர்கல்வி பயில முன்அனுமதி பெறும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பிறகு, பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.*
*⭐இதனால் சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் உயர்கல்விக்கான முன்அனுமதி பெறும் ஆசிரியர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு மாவட்ட கல்விஅலுவலகமும் பல நடைமுறைகளை பின்பற்றுகின்றன. தேவையற்ற காரணங்களை கூறி விண்ணப்பங்களை திருப்பி அனுப்புகின்றன. இதனால் ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பலன்கள் தடைபட்டுள்ளன. எனவே, உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்க அரசு முன்வர வேண்டும். இதை ஜாக்டோ ஜியோவின் 7 அம்ச கோரிக்கைகளிலும் இணைத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.*
*⭐இந்நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்திஜாக்டோ ஜியோ விரைவில் போராட்டம் நடத்த உள்ளது.*
*⭐இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 7-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் நல்ல முடிவு கிடைக்காவிட்டால், போராட்ட அறிவிப்பை வெளியிட ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.இந்த நிலையில், ஆசிரியர்களை சமாதானப்படுத்தும் விதமாக உயர்கல்விக்கு பின்னேற்பு அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.*
*_இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:_*
*⭐மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உயர்கல்விக்கு முன்அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். அதில் 70 சதவீதம் பேர் அரசின் அனுமதி பெறாமலேயே தங்கள் உயர்கல்வியை முடித்துவிட்டனர். இதனால், அவர்களுக்கான பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.*
*_இதுகுறித்து பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:_*
*⭐மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் உயர்கல்விக்கு முன்அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். அதில் 70 சதவீதம் பேர் அரசின் அனுமதி பெறாமலேயே தங்கள் உயர்கல்வியை முடித்துவிட்டனர். இதனால், அவர்களுக்கான பலன்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.*
*⭐இதுகுறித்து அரசுக்கு வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்தவர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பலன் பெறுவார்கள். இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 1 January 2019
*NHIS - மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழு பணப் பலன்களை பெற்றுத்தந்து சாதனை படைத்து வரும் "தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி"*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/nhis.html
*NHIS- திட்டத்தில் நடக்கும் மோசடிகளில் இருந்து ஆசிரியர்கள்& அரசு ஊழியர்களை காக்கும் கேடையம் TNPTF*
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
*TNPTF - வெற்றி தொடர்கையில் அடுத்த அதிரடி வெற்றி*
*⭐ஈரோடு கலைமகள் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை திருமதி. தீபப்பிரியா அவர்களின் கணவர் வயிற்றில் ஏற்பட்ட கட்டி காரணமாக சென்னையில் உள்ள குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..*
*⭐அவரது மருத்துவச் சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் NHIS திட்டத்தின் கீழ் 23,000/- மட்டுமே தகுதியுடைய தொகை என்று தெரிவித்துள்ளது..*
*⭐ஆனால், மருத்துவச் செலவாக ரூ.1,33,000/- ஐ கட்டுமாறு கூறியுள்ளது..*
*⭐இந்நிகழ்வு ஈரோடு TNPTF நகரப் பொருளாளர் தோழர்.மணிவேல் மூலமாக, மாநில பொதுக்குழு உறுப்பினர் தோழர்.இரா.மணி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது..*
*⭐இதனிடையே சம்பந்தப்பட்ட ஆசிரியை மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக பணத்தைக் கட்டுமாறு கூறியதால், ரூ.1,00,000/- ஐ மருத்துவமனையில் கட்டி விட்டார்..*
*⭐இருப்பினும் தோழர்.மணி TNPTF ன் NHIS மாநில ஒருங்கிணைப்பாளர் _தோழர்.செல்வகணேஷ்_ அவர்களைத் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறவே,*
*⭐உடனடியாக விரைந்து செயல்பட்ட தோழர்.செல்வகணேஷ் சென்னை குமரன் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு NHIS திட்டத்தின் கீழ் ரூ.23,000/-ஒதுக்கியது போதாது, முழுத்தொகையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதோடு மருத்துவச் செலவாகக் கூறப்பட்ட ரூ.1,33,000/- ல் மருத்துவர் கட்டணம் அதிகமாக உள்ளதாகக் கூறி அதில் 10,000/- ஐ குறைக்கச் செய்தார்..*
*⭐இதை ஏற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் மருத்துவச் செலவை 1,23,000/- ஆகக் குறைத்தது..*
*⭐இந்நிலையில் NHIS இன்ஸ்யூரன்ஸ் நிறுவனமும் மருத்துவச் செலவாக ஏற்கனவே கூறிய 23,000/- க்கு பதிலாக 1,10,000/- தர ஒப்புக் கொண்டது..*
*⭐இதன் காரணமாக ஆசிரியை ரூ.13,000/- ஐ மட்டுமே கட்டினால் போதுமானது..*
*⭐ஏற்கனவே கட்டியிருந்த 1,00,000/- ஐ காசோலையாக மருத்துவமனை நிர்வாகம் இரண்டு நாட்களில் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளது.. இத்தகவலை ஆசிரியை நம்மிடம் தெரிவித்தார்..*
*⭐உரிய நேரத்தில் உரிய வகையில் விரைந்து செயல்பட்ட _தோழர்.செல்வகணேஷ்_ அவர்களுக்கு ஈரோடு வட்டாரக்கிளை சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*⚡ஆசிரியர் நலன்!*
*⚡மாணவர் நலன்!!*
*⚡கல்வி நலன்!!!*
*_இவை மூன்றும் TNPTF ன் தாரகமந்திரம்._*
*ஜிந்தாபாத்*
*ஜிந்தாபாத்*
*TNPTF ஜிந்தாபாத்*
*📧தகவல் பகிர்வு;*
*_கொளத்தூர் TNPTF_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*🥰TNPTF மாநில அமைப்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்💐*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/01/tnptf.html
*⭐தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்ககங்களில் தனிப்பெரும் இயக்கமாய்,தன்னிகரில்லா போராட்டக் களங்களை அமைத்த இயக்கமாய்,பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்காக பல்லாயிரக்கணக்கான இயக்கத் தோழர்கள் 17(ஆ) பெற்ற தியாகம் தோய்ந்த வரலாற்றைப் படைத்த இயக்கமாய்,எப்போதும் இயங்கிக் கொண்டேயிருக்கும் எழுச்சிமிகு இயக்கமாய் 2018 ஆம் ஆண்டு முழுவதும் இலட்சியத் தாகத்துடன் பயணித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற மகத்தான நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் மாநில மையம் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது*
*💪தொடரும் நம் இலட்சியப் பயணத்தில் 2019 ஆம் ஆண்டில் புதிய உத்வேகத்தோடும்,உருக்குப் போன்ற உறுதியோடும் பயணிப்போம்.ஆசிரியர் நலன்,மாணவர் நலன்,கல்வி நலன்,தேச நலன் காப்போம்*
💐🎆💐🎇💐🎆💐🎇💐🎆💐🎇💐🎆💐🎇
*அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்*
💐🎇💐🎆💐🎇💐🎆💐🎇💐🎆💐🎇💐🎆
*💐வாழ்த்துக்களுடன்*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)













