Saturday, 29 September 2018

*ஜாக்டோ ஜியோ சார்பாக 04.10.2018 அன்று தற்செயல் விடுப்பு போராட்டம் குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/04102018.html



*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 16 நாள் : 29.09.2018.*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*


*⭐பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநாட்டை பேரெழுச்சியோடும்,  பெரும் உற்சாகத்தோடும் நடத்தி முடித்துள்ள நமக்கு, அடுத்ததாக நம் முன் உள்ள மிக முக்கியக் களப்பணி ‘ஜேக்டோ ஜியோ” என்னும் மகத்தான கூட்டமைப்பு அறிவித்துள்ள 04.10.2018 தற்செயல் விடுப்புப் போராட்டம்.*


*⭐தனிச்சங்கப் போராட்டமாக இருந்தாலும் சரி, கூட்டுப்போராட்டமாக இருந்தாலும் சரி வேங்கையின் வேகத்தோடு களப்பணியாற்றக் கூடிய நம் பேரியக்கத் தோழர்கள், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அங்கம் வகிக்கும் ஜேக்டோ ஜியோவின் 04.10.2018 ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தை 100மூ வெற்றிகரமாக்கிட கண்துஞ்சாது களப்பணி ஆற்றவேண்டும் என்று மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*


*⭐இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் CPS ரத்து, தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் 04.10.2018 தற்செயல் விடுப்புப் போராட்டம் தமிழ்;நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான போராட்டம். பணி ஓய்விற்குப் பின்பு தமிழ்நாட்டின் ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் பிச்சைக்காரர்களாக மாற்றுகிற திட்டத்தை எதிர்த்து நடைபெறுகிற உரிமை மீட்புப் போராட்டம்.*


*⭐‘04.10.2018 தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியத்தைப் பிடிப்போம். ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம்” என்ற அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு நம் பேரியக்க உறுப்பினர்கள் அனைவரும் 04.10.2018 தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் தீரத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.*


*⭐இன்றைக்கு நாம் எதிர்கொள்கிற ஒரு நாள் ஊதிய இழப்பு, ஒரு மாத ஊதிய இழப்பு போன்றவைகளெல்லாம் பணிநிறைவுக்குப் பிந்தைய நம் எதிர்கால வாழ்வாதாரத்திற்கான முதலீடுகள் என்பதை நம் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.*


*⭐‘கிளையில் அமரும் பறவை கிளை முறிந்து விடும் என்று அஞ்சுவதில்லை - ஏனெனில் பறவையின் நம்பிக்கை கிளையில் இல்லை அதன் சிறகுகில் தான் இருக்கிறது.*


*"ஜேக்டோ ஜியோ என்ற அக்கினிக்குஞ்சு தன் சிறகை விரித்து விட்டது”*


*ஒன்றுபட்ட போராட்டம்!* *வென்று காட்டும் நிச்சயம்!*


*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




Friday, 28 September 2018

*TNPTF இயக்கப் பாடல்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/tnptf_28.html



*தோழர் ராய சேவியர் அவர்களின் நினைவாக சங்கரன்கோவில் TNPTF தோழர்களால் உருவாக்கப்பட்ட TNPTF இயக்க பாடல்கள் இதோ உங்களுக்காக....*


*கீழே உள்ள link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் தோழர்களே*

https://drive.google.com/folderview?id=1n4VKfx5mohd9UTRLaBfXpb_PREbjYpB8


*இயக்கப் பாடல்களை உருவாக்கிய சங்கரன் கோவில் வட்டார தோழர்களுக்கும் உறுதுணையாக இருந்த அனைத்து தோழர்களுக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்ற பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டில் கலந்துகொண்ட, களப்பணியாற்றிய தோழர்களுக்கு மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள் நன்றி மற்றும் வாழ்த்து தெரிவித்தல் தொடர்பான சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_28.html


*சுற்றறிக்கை -15, நாள்:27.09.2018.*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*

         

*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நேற்று (26.09.2018) சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நடத்திய  “பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநாடு மிகுந்த எழுச்சியோடும், நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான ஆசிரியர்களின் பங்கேற்போடும் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.*            



*⭐சென்னை மாநகரில் ஒரு ஆசிரியர் இயக்கத்தின் மாநில மாநாடு இவ்வளவு ஆசிரியர்களின் பங்கேற்போடு இதுவரை நடைபெற்ற வரலாறு இல்லை என்று பத்திரிக்கையாளர்களே வியந்து பாராட்டக் கூடிய அளவிற்கு மாநாட்டு நிகழ்வுகள் அமைந்திருந்தன.*            



*⭐திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கிய தமிழ்நாட்டின் முன்னாள் கல்வியமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான மதிப்புமிகு.தங்கம் தென்னரசு அவர்கள் இப்படி ஒரு ஆசிரியர்கள் கூட்டத்தை இதுவரை நான் கண்டதில்லை என்று வியந்து கூறியதும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் மதிப்புமிகு.மல்லை சத்யா அவர்கள் “நான் மாமல்லபுரத்திலிருந்து மாநாட்டு அரங்கிற்கு வருவதற்கு காலதாமதமானதற்கு நீங்கள் தான் காரணம், மாநாட்டுக்கு வந்த உங்கள் வாகனங்கள் மாமல்லபுரத்திலிருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதில் என் வாகனமும் சிக்கிக்கொண்டது என்று மாநாட்டிலேயே கூறிய வார்த்தைகள் மாநாட்டின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.*            


*⭐தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் மாநாட்டிற்கு வருகை தந்த ஆசிரியர்களின் பங்கேற்பு தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி விட்டது.*


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சாதனைச் சரித்திரத்தில் இம்மாநாடு ஒரு தனியிடத்தைப் பெற்றுவிட்டது.*

            

*⭐இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்திட்ட நம் பேரியக்கத்தின் வட்டார, நகர, மாவட்ட, மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில மையம் தனது வீரஞ்செறிந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது.*



*⭐கடந்த 08.09.2018 மற்றும் 09.09.2018 ஆகிய இரு தினங்கள் கன்னியாகுமரியில் நடைபெற்ற அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் மாநாட்டுப் பேரணியில் ஆசிரியர்களைப் பங்கேற்க வைத்த நிகழ்வு நடைபெற்று 15 நாட்களே ஆன நிலையிலும் மாநில மையம் வெளியிட்ட மாநாட்டுக்கான அழைப்பிதல், வால்போஸ்டர் மற்றும் துண்டுப்பிரசுரம் ஆகியவை மாநாட்டுக்கு நான்கு நாட்கள் முன்புதான் கிடைத்தது என்ற நிலையிலும், பள்ளிகளுக்கு முதல் பருவ விடுமுறை விடப்பட்டதால் பள்ளி பள்ளியாகச் சென்று ஆசிரியர்களைச் சந்திக்க இயலாத நிலையிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை மாநாட்டுக்கு அழைத்து வந்த நம் ஸ்தாபன பலம், இயக்க நிர்வாகிகள் உழைப்பு பிரம்மிக்க வைப்பதாகவே உள்ளது.*            


*⭐மாநாட்டில் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்ற அனைத்து ஆசிரிய சகோதரிகளுக்கும், ஆசிரிய நண்பர்களுக்கும் மாநில மையம் தனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் உரித்தாக்கி மகிழ்கிறது.*


*👍தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





Tuesday, 25 September 2018

*பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநாடு குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_25.html



*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 14 நாள் : 24.09.2018;*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*


*⭐தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக உருவெடுத்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநில மாநாட்டுப் பணிகள் மாநிலம் முழுவதும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் ஆசிரியத் தோழர்களும், சகோதரிகளும்; சென்னை நோக்கிய பயணத்திற்குத் தயாராகிவிட்டார்கள்.*

             

*⭐சில மாவட்டங்களிலிருந்து இன்று (24.09.2018) இரவே நம் இயக்கப் பதாகைகளுடன் வாகனங்கள் புறப்பட்டுவிட்டன. பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களின்; சென்னை நோக்கிய அணிவகுப்பு தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மத்தியில் புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மாநாடு இதுவரையில் கண்டிராத உணர்வலைகளைஆசிரியர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.*


*⭐களத்தில் அடித்த கதிர் தானியமாய் களஞ்சியத்தில் சேர்ந்தால்தான் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி. களத்தில் ஆற்றிய பணி மாநாட்டு அரங்கில் எதிரொலித்தால்தான் களப்போராளிகளுக்கு நெகிழ்ச்சி.*


*⭐தமிழகம் முழுவதும் காவல்துறை உளவுப்பிரிவினரின் நுணுக்கமான கண்காணிப்பு நம்மைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிகழ்வு என்றால் அடி முதல் உச்சிவரை அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இம்மாநாடும் விதிவிலக்கல்ல. மாநாடு தொடர்பாக வட்டார நிர்வாகிகள் முதல் மாநில நிர்வாகிகள் வரை உளவுப்பிரிவு நண்பர்களின் விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.*

                

*⭐மாநாடு தொடர்பாக சென்னை மாநகரக் காவல்துறையின் உச்சபட்ச, உயர்அலுவலர்கள் வரை மாநில நிர்வாகிகள் பலமுறை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அத்தனை நிகழ்வுகளையும் தாண்டி காவல்துறையின் அனுமதியுடன் மாநாட்டுக்களம் உங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.*


*⭐மாநாட்டிற்கு வரும் நம் பேரியக்கத் தோழர்கள் கவனிக்க வேண்டிய, கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்:*


*⭐மாநாடு மிகச்சரியாக காலை 9 மணிக்கு துவங்கிவிடும். எனவே, மாநாட்டிற்கு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் காலை 9 மணிக்குள் அரங்கத்திற்குள் இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு பயணத்திட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும்.*


*⭐மாநாடு ஒரே அமர்வாக நடைபெறுகிறது. மாநாட்டு அரங்கினுள் குடிநீர் வசதி உண்டு. உணவு ஏற்பாடு இல்லை. அன்று ஒருநாள் மட்டும் பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் உணவு எடுத்துக்கொள்ளத் தோழர்கள் தயாராகிக் கொள்ளவும். உணவு உட்கொள்வதைக் தவிர்க்க இயலாத நிலையில் உள்ளவர்கள் அதை ஈடுகட்டும் வகையில் தேவையான உணவுப் பொருட்களைக் கையில் வைத்துக் கொள்ளவும். மாநாடு நடைபெறும் போது உணவுக்காக யாரும் அரங்கைவிட்டு வெளியேறக்கூடாது.*


*⭐மாநாடு நடைபெறும் அண்ணா கலையரங்கம் சென்னை மாநகரின் பிரதானப் பகுதியில் மெரினா கடற்கரையில் அண்ணா எம்.ஜி.ஆர் சமாதிகளுக்கு எதிர்புறம் நடந்து செல்லும் தூரத்திலே உள்ளது.வாகனங்களில் வருபவர்கள் மாநாட்டு அரங்கிற்கு அருகில் இறங்கி வாகனங்களை மெரினா கடற்கரையில் பார்க்கிங் செய்ய அனுப்பவும்.*


*⭐இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படக்கூடிய இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.இராணுவ மிடுக்குடனும்¸ கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நம் பேரியக்கத் தோழர்கள் மாநாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.நம் பேரியக்கத்தின் இயல்பிற்கும், இலக்கணத்திற்கும்  வலிமை சேர்க்கும் வகையில் மாநாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டும்.*


*⭐மாநாட்டில் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியத்தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவதால் மாநாடு முடியும்வரை நம் தோழர்களும், சகோதரிகளும் மாநாட்டில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தனித்தன்மையும், தன்னிகரற்ற இயல்பும் வெளிப்பட  வேண்டும்.*


*⭐தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான மிகப்பெரிய போராட்டக்களத்தை உருவாக்குகிற மிகப்பெரிய மாநாடு இது.*


*⭐மாநாட்டின் வெற்றியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒவ்வொரு உறுப்பினர்க்கும்  பங்கு உள்ளது.*


*⭐இதுபோன்றதொரு எழுச்சிமிகு, உணர்வுபூர்வமான, ஒப்பற்ற மாநாட்டை நம்மால் மட்டுமே நடத்த முடியும்.*


*⭐வஞ்சிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்கான இம்மாநாடு அரசின் கேளாச்செவிகளை எட்டட்டும். நம் கோரிக்கை வெல்லட்டும்.*


*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்,*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Friday, 21 September 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் அவர்களின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_21.html



*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 13 நாள் : 21.09.2018;*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*


*⭐இயக்க வரலாற்றில் இடம்பெறப்போகும் செப்டம்பர் 26 ‘பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநில மாநாட்டிற்கு இன்னும் 4 தினங்களே உள்ளன.*


*⭐மாநாடு தொடர்பான அடிப்படைப் பணிகளை மேற்கொள்ளவும், மாநாட்டின் மகத்தான வெற்றிக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திடவும் கடந்த இரண்டு தினங்களாக (20.09.2018 to 21.09.2018) சென்னையில் மாநில அலுவலகத்தில் முகாமிட்டு* 

*_பொதுச்செயலாளர் தோழர். ச.மயில்,_* 

*_மாநிலப்பொருளாளர் தோழர்.க.ஜோதிபாபு,_*

*_துணைப்பொதுச்செயலாளர்  தோழர்.கணேசன்,_*

_மாநிலத்துணைத்தலைவர்கள்;_*

*_தோழர்.பெ.அலோசியஸ் துரைராஜ்,_*

*_தோழர்.அ.ரஹீம்_*

*ஆகியோர் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.*



*⭐மேலும், அனைத்து மாநில நிர்வாகிகளும் 24.09.2018 முதல் மாநாடு முடியும்வரை சென்னையிலேயே தங்கி மாநாட்டுப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.*


*⭐சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர் அவர்களிடம் முறையாக மாநாட்டிற்கான அனுமதி விண்ணப்பம் வழங்கப்பட்டு ஏற்பு செய்யப்பட்டுள்ளது.*


*⭐மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தோழமைச்சங்கங்களின் தலைவர்களுக்கும் மாநாட்டு அழைப்பிதழ் முறையாக வழங்கப்பட்டுள்ளது.*


*⭐மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் மாநாட்டிற்கான களப்பணிகள் பெரும் உற்சாகத்தைத் தருவதாக உள்ளது. நம் பேரியக்கத் தோழர்கள் மிகுந்த ஆர்வத்துடன் மாநாட்டில் பங்கேற்க ஆசிரியர்களைத் அணிதிரட்டி வருகின்றனர்.*


*⭐சகோதர சங்கங்களின் நிர்வாகிகள் வியக்கும் வகையில் நம் தோழர்களின்; களப்பணிகளில் கடுமை தெரிகிறது.*


*⭐காவல்துறை உளவுப்பிரிவினரின் கண்காணிப்பும், நம் மாநாட்டைப் பற்றிய தகவல் சேகரிப்பும் தீவிரமடைந்துள்ளது. இது ஏதோ போராட்ட நடவடிக்கை என்ற தவறான புரிதலும் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.*


*⭐தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போராட்ட நடவடிக்கைகள் பற்றிய கடந்த கால அனுபவங்களும் தமிழகம் முழுவதிலிருந்து மாநாட்டிற்கு வருபவர்களின் எண்ணிக்கையும் காவல்துறைக்கே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.*


*⭐எனவே இது போராட்டமல்ல என்ற தெளிவையும் நாம் காவல்துறைக்கு ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.*


*⭐நமது மாநில செயற்குழு முடிவின்படி முக்கிய இடங்களில் மாநாட்டு விளம்பரப் பதாகைகள் வைத்திட வேண்டும்.*


*⭐இதுவரை விளம்பரப் பதாகைகள் வைத்திடாத கிளைகள் உடனடியாக அப்பணியைச் செய்திட வேண்டும்.*


*⭐மாநில மையத்திலிருந்து அனுப்பப்பட்ட சுவரொட்டிகளை முக்கிய இடங்களில் ஒட்டும் பணியையும் கவனமுடன் செய்திட வேண்டும்.*


*⭐துண்டுப்பிரசுரங்களை ஆசிரியர்களிடம் தவறாது சென்று சேர்த்திட வேண்டும்.*


*⭐இடைநிலை ஆசிரியர்களின் பறிக்கப்பட்ட ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான இம்மாநாட்டுச்செய்தி தமிழ்நாட்டின் அனைத்து ஆசிரியர்களிடமும் சென்று சேர்வதை இயக்கத் தோழர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.*


*⭐செப்டம்பர் 26 வரை இமைப்பொழுதும் சோராது களப்பணியாற்றுங்கள்.*


*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Wednesday, 19 September 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளரின் முக்கியத் தகவல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_19.html

     

*⭐செப்டம்பர் 26 பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநில மாநாட்டிற்கான வால்போஸ்டர்,துண்டுப்பிரசுரம் மற்றும் அழைப்பிதழ் ஆகியவை அனைத்து மாவட்டச்செயலாளர்களுக்கும் KPN பார்சல் சர்வீஸ் மூலம் நேற்று (18.09.2018) அனுப்பப்பட்டுள்ளது*      


*⭐அதற்குரிய ரசீது எண் மாவட்ட வாரியாக பட்டியலிட்டு இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.*


*⭐மாவட்டச் செயலாளர்கள் இன்று (19.09.2018) வெகு விரைவாக அவற்றைப் பெற்று அனைத்து வட்டார,நகரக் கிளைகளுக்கும் உடன் வழங்கிட அன்புடன் வேண்டுகிறேன்.*


*⭐தயவுசெய்து எக்காரணம் கொண்டும் இதில் தாமதம் செய்துவிட வேண்டாம்*    

         
         

*⚡தோழமையுடன்*             

*_ச.மயில்,_*   

                        *பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Monday, 17 September 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற உள்ள பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு குறித்து மாநில பொதுச்செயலாளர் அவர்களின் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_75.html



*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 12 நாள் : 17.09.2018*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*



*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்னும் மகத்தான நம் பேரியக்கத் தோழர்கள் மிகக் கடுமையான களப்பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரமிது. அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் மாநாட்டை முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் முன்னின்று நடத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புக்கே பெருமை சேர்த்துள்ளோம்.*



*⭐அடுத்து நம் முன் நிற்கக்கூடிய மிகப்பெரிய களப்பணி என்பது 26.09.2018 அன்று சென்னை, சேப்பாக்கம், சுவாமி சிவானந்தா சாலையில் அண்ணா கலையரங்கில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனிச்சங்க நடவடிக்கையாக நடத்தும் _‘பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநில மாநாடு”_.*


*⭐கடந்த சில தினங்களாக பெண் ஆசிரியர்கள் மாநாடு, பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாவட்ட ஆயத்த மாநாடுகள், ஜேக்டோ - ஜியோவின் போராட்ட தயாரிப்புக்கள் என்று பந்தயக் குதிரையின் பாய்ச்சல் வேகத்தைத் தோற்கடிக்கும் வகையில் களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் நம் பேரியக்கத் தோழர்கள்.*


*⭐எத்தனை களப்பணிகள் அணிவகுத்து நின்றாலும், அத்தனை பணிகளையும் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் ஆற்றல் நமது பேரிய்கத் தோழர்களுக்கேயுரிய தனிச்சிறப்பு.*


*⭐செப்டம்பர் 26-ல் சென்னையில் வங்கக் கடலோரம் நாம் நடத்தும் _‘பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட மாநாடு”_ வங்கக் கடலைத் தோற்கடிப்பதாக அமையும் என்பது உறுதி.*


*⭐அம்மாநாட்டில் தமிழ்நாட்டின்; பெரும்பாலான, பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பிக்கின்றார்கள். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பெயரைப் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் மிகக் கடுமையான பணிப்பளுக்கள் காரணமாக மாநாட்டு அழைப்பிதழ், வால்போஸ்டர், துண்டுப்பிரசுரங்கள் ஆகியவற்றை மாவட்டக் கிளைகளுக்கு அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. தற்போது அவற்றை மாவட்டக்கிளைகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியிருக்கிறது. அவற்றைப் பெற்று உடனடியாக மாவட்டம் முழுவதும் ஆசிரியர்களிடம் சென்று சேர்த்திட மாவட்டப்பொறுப்பாளர்கள்; மிகுந்த பொறுப்புணர்வோடு  இமைப்பொழுதும் சோராது செயல்பட மாநிலமையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*


*⭐மாநில மையத்திலிருந்து அழைப்பிதழ், வால்போஸ்டர், துண்டுப்பிரசும் ஆகியவை வருவதற்கு முன்பே தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் செப்டம்பர் 26 மாநில மாநாட்டை சமூக வலைதளங்கள் வழியே கொண்டு சேர்த்த தோழர்களுக்கு மாநில மையம் நன்றியையும், பாராட்டுகளையும்தெரிவித்துக்கொள்கிறது மாநாட்டின் மூலமாக தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதியப்பிரச்சனை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இம்மாநாட்டின் மூலமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதி வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் எதிரெலிக்கும் என்பது உறுதி. செப்டம்பர் 26 மாநில மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு மிகச்சிறப்பாக நடத்துவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் மாநில மையம் செய்துகொண்டிருக்கிறது.* 


*⭐மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் 08.09.2018 கன்னியாகுமரி மாநிலச் செயற்குழு முடிவின்படி இதுவரையில் மாவட்ட, வட்டார, நகரச் செயற்குழு அல்லது பொதுக்குழுகளைக்; கூட்டவில்லை என்றால் உடனடியாகக் கூட்டி மிகப் பெரும்பாலான நம் இயக்க உறுப்பினர்களையும், சங்கம் பாராது பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் மாநாட்டில் பங்கேற்கச் செய்திட முனைப்புடன் களப்பணியாற்றிட மாநில மையம் அன்புடன் வேண்டுகிறது.*


*⭐எத்தகைய சிரமம் இருப்பினும் அத்தனை இடர்பாடுகளையும் எதிர்கொண்டு மாநாட்டை வெற்றிகரமாக்கிட நம் பேரியக்கத் தோழர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விடுமுறை தினங்களிலும் வீடு வீடாகச் சென்று ஆசிரியர்களைச் சந்தித்து களப்பணியாற்றி மாநாட்டை வெற்றிகரமாக்கிட மாநில மையம் தோழமையுடன் வேண்டுகிறது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் அழைப்பிதழ், சுவரொட்டி, துண்டுப்பிரசுரம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_16.html


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநாடு*


*செப்டம்பர் - 26* 

*அண்ணா ஆடிட்டோரியம்*

*சேப்பாக்கம் - சென்னை.*



*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின்,*

*அழைப்பிதழ்,*

*சுவரொட்டி,*

*துண்டுப்பிரசுரம்.*

PDF வடிவில் கீழே உள்ள link ல் கொடுக்கப்பட்டுள்ளது👇👇👇👇

https://drive.google.com/folderview?id=1RYT5lXK6sGCqAVBQBcuCaXiOmESECu7N


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்டக் கிளை ஆயத்த மாநாடு - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_39.html


*⭐பறிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட அறிவிப்பு மாநாடு  26.09.2018 ல் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தம் செய்யும் வகையில் மாவட்டந்தோறும் மாவட்ட ஆயத்த மாநாடுகள் நடைபெற்று வருகிறது.*


*⭐சேலம் மாவட்ட ஆயத்த மாநாடு சேலத்தில் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு சேலம் சி.எஸ்.ஐ பள்ளி அருகிலுள்ள சூஸன் மஹாலில் மாவட்ட அமைப்பாளர் _தோழர்.ந.பெரியசாமி_ அவர்கள் தலைமையில் நடைபெற்ளது.*


*⭐மாவட்டத் துணை அமைப்பாளர் _தோழர்.மா.செல்வராஜ்_ வரவேற்புரை ஆற்றினார்.*



*⭐முன்னாள் மாவட்டச் செயலாளர் _தோழர்.மா.செல்வம்_ முன்னிலை வகித்தார்.*


*🔶மாநிலத் தலைவர் _திருமதி மு.மணிமேகலை_ அவர்கள் மாநாட்டு பேருரை ஆற்றினார்.*


*🔶மாநில துணைத்தலைவர் _தோழர்.அ.ரஹும்_ அவர்கள் மாநாட்டு எழுச்சியுரை ஆற்றினார்.*



*⭐வரும் 26 ம் தேதி சென்னையில் 20000 ஆசிரியர்கள் பங்கேற்கும் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு என்னும் ஒற்றைக்கோரிக்கை மாநாட்டை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்துகிறது. இந்த மாநாட்டிற்கு ஆயத்தம் செய்யும் விதமாக சேலம் மாவட்டத்தில் மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது இந்த ஆயத்த மாநாட்டில் ஆசிரியர்கள் அதிகளவில் கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.*


*⭐மாவட்டத் துணை அமைப்பாளர் _தோழர்.ஐ.சரவணன்_ நன்றி உரையாற்றினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм








*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட தேர்தல் செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_17.html



*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்_*



*🌟TNPTF சேலம் மாவட்ட தேர்தல் 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு  சேலம்,  கோட்டை CSI ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது.*


🌟


*⭐தேர்தல் ஆணையாளர்:*

 

*_⚡தோழர். UK.சண்முகம்,_ ஈரோடு மாவட்ட செயலாளர்*



*⭐துணை* *ஆணையளார்:*

*_⚡தோழர். ஜெயராஜா,_ கரூர் மாவட்ட செயலாளர்.*


*⭐தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள்:*


*⚡மாவட்டத் தலைவர்:*

*_தோழர்.கணேசன்,_*



*⚡மாவட்ட செயலாளர்:*

*_தோழர். ந.பெ.ரியசாமி_*


*⚡மாவடட் பொருளாளர்:*

*_தோழர்.R.ரமேஷ்_*


*⚡மாவட்ட துணைத் தலைவர்கள்:*

*_தோழர். நல்லம்மாள்_*

*_தோழர்.குமார்_*

*_தோழர். சிவக்குமார்_*


*⚡மாவட்ட துணைச் செயலாளர்கள்:*

*_தோழர். தவமணி_*

*_தோழர்.* *சாமுவேல்_*

*_தோழர்.* *கலையரசன்_*

*ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்*.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




Wednesday, 12 September 2018

*EMIS FLASH NEWS:PHOTO UPDATION WORK*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/09/emis-flash-newsphoto-updation-work.html


*⭐EMIS வலைதளத்தில் மாணவர்கள் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய தற்பொழுது வழிவகை செய்யப்பட்டுள்ளது.*


*_வழிமுறைகள்:_*


*🔶EMIS வலைதளத்தில் Username and Password கொடுத்து open செய்துகொள்ள வேண்டும்.*


*🔶Student option ல் Student list ஐ கிளிக் செய்ய வேண்டும்.*


*🔶வகுப்பு வாரியாக Student strength காண்பிக்கும், முதலில் ஒன்றாம் வகுப்பினை கிளிக் செய்யவும், பின் Section ஐ கிளிக் செய்து உள்ளே செல்லவும்.*


*🔶மாணவர்கள் பெயர் வரிசையாக காண்பிக்கும், அவற்றில் Unique I'd number ஐ கிளிக் செய்யவும்.*


*🔶UPDATE STUDENT PHOTO என்று நீல நிறக் கட்டத்தில் காணப்படும் அதற்கு கீழே Choose File என்று இருக்கும் அதனை கிளிக் செய்து Photo இருக்கும் Folder ஐ கிளிக் செய்து Photo வை Select செய்து open என்ற option ஐ கிளிக் செய்தால் photo Update ஆகிவிடும்.*


*(முக்கிய குறிப்பு):*


*⚡இந்த வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன் மாணவர்களுடைய புகைப்படத்தினை 25KB க்கு மிகாமல் 150×175 என்ற அளவில் தனித்தனியாக எடுத்து கணினியில் ஒரு Folder ல் தயாராக வைத்திருக்க வேண்டும்.*


*⭐கடைசி நேரத்தில் செய்யாமல் முன்னதாக செய்தால் Server Problem போன்ற இடர்பாடுகளில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளலாம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм







Tuesday, 11 September 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற உள்ள பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்டப் பிரகடன மாநாட்டிற்கு ஆதரவு கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை மாநில அமைப்பு சந்தித்தல் நிகழ்வு - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_15.html


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற இருக்கும் பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடுக்கு ஆதரவு கோரி மாநில பொறுப்பாளர்கள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை இன்று (11.09.2018) சந்தித்து ஆதரவு கோரினார்கள்*


*🔶இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் _தோழர். பாலகிருஷ்ணன்_ அவர்களையும்,* 


*🔶விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் _டாக்டர் திருமாவளவன்_ அவர்களையும்,*


*🔶தேமுதிக தலைவர் _விஜயகாந்த்_ அவர்களையும்,*


*🔶தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் _ஜி.கே.வாசன்_ அவர்களையும்,*



*🔶இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் _திருநாவுக்கரசர்_ அவர்களையும் இன்று சந்தித்து ஆதரவு கோரினார்கள்.*



*⭐மாநில அமைப்பின் சார்பில்  பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு ஆதரவு கோரி,*

*⚡மாநில துணைத்தலைவர் _தோழர். அலோசியஸ்_* 

*⚡காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் _தோழர்.சார்லஸ்_*

*மற்றும்*

*⚡_மாவட்ட பொருளாளர்_*

*ஆகியோர் திமுக தலைவர் _திரு.மு.க.ஸ்டாலின்_ அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தித்தார்கள்.*



*⭐மாநில அமைப்பின் சார்பில்  பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாடு அரங்கத்தை,*

*⚡மாநில தலைவர் _தோழர் மு.மணிமேகலை,_*

*⚡பொதுச்செயலாளர் _தோழர் ச.மயில்,_*

*⚡மாநில பொருளாளர் _தோழர் க.ஜோதிபாபு,_*

*⚡துணைப் பொதுச்செயலாளர் _தோழர் தா.கணேசன்,_*

*⚡அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் _தோழர் ச.மோசஸ்,_*

*⚡மாநில துணைத்தலைவர்கள் _தோழர்.அ.ரஹீம்_*

*மற்றும்*

*_தோழர் அலோசியஸ்_ ஆகியோர் இன்று  பார்வையிட்டார்கள்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
















Monday, 10 September 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்டக் கிளை சார்பாக நடைபெற்ற மாவட்ட ஆயத்த மாநாடு - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_10.html


*⭐பறிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட அறிவிப்பு மாநாடு  26.09.2018 ல் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கு ஆயத்தம் செய்யும் வகையில் மாவட்டந்தோறும் மாவட்ட ஆயத்த மாநாடுகள் நடைபெற்று வருகிறது.*


*⭐சேலம் மாவட்ட ஆயத்த மாநாடு  16.09.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று  நடைபெற உள்ளது.*

*⚡மாநிலத் தலைவர் _தோழர். மூ.மணிமேகலை,_*

*⚡மாநில துணைத்தலைவர் தோழர். ரஹும்,_*

*⚡மாநிலச் செயலாளர் _தோழர்.தோ.ஜான் கிறிஸ்துராஜா,_*

*ஆகியோர் மாவட்ட ஆயத்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு இயக்க பேருரை ஆற்ற உள்ளார்கள்.*



*மாவட்ட ஆயத்தமாநாடு மாவட்ட அமைப்பாளர் _தோழர்.ந.பெரியசாமி_ அவர்கள்  தலைமையில் நடைபெற உள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*TNPTF-பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டிற்கான மாவட்ட ஆயத்தமாநாடு நடத்துவது குறித்து சேலம் மாவட்ட செயற்குழுக் கூட்ட அழைப்பு;*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/09/tnptf.html


*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம்_*


*⭐இடம்:*

*CSI -ஆரம்பப்பள்ளி, சேலம்-1*



*⭐நாள்:*

*11.9.18 செவ்வாய் மாலை 5 .30 மணி*



*⭐தலைமை:* 

*_தோழர். ஐ .சரவணன்,_ மா.து. அமைப்பாளர்.*


*_கூட்டப்பொருள்:_*

*⚡1) 16.9.18 மாவட்ட தேர்தல் ஆயத்த மாநாடு அழைப்பிதழ் வழங்குதல்*

*⚡2) மாவட்ட ஆயத்த மாநாட்டு சிறப்பாக நடத்த குழு அமைத்தல்.*


*⭐ஆகவே அனைத்து வட்டார தலைவர், செயலர், பொருளர், ஆகியோர் செயற்குழு கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கப்படுகிறது.*


*_இவண்_-*

*மாவட்ட அமைப்பு,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*சேலம் மாவட்டம்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм