Tuesday, 15 October 2019

*Mobile App to Read English for Slow Learning Students*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/mobile-app-to-read-english-for-slow.html


*📱Samagra Shiksha, School Education Department Tamil Nadu  is providing an opportunity for teachers who teach students who are dyslexic / having reading disorders/ slow learners by giving access to a paid mobile app. MDA is offering this paid app free of cost for  _1000 licenses_ in phase* *1.(Government and Aided Schools only )  across Tamil Nadu.*  

_Details of the mobile app is as given below :_

*📱 _MDA Avaz Reader_ provides research-based support and hints enabling children with dyslexia to read independently. This app uses the OCR technology to translate English text captured as a picture into a readable format and can be used to read any printed material – storybooks, textbooks, and newspapers. A clean, distraction-free interface packed with rich features makes the app an essential tool that can be used in tandem with other strategies for dyslexia.*
 
https://play.google.com/store/apps/details?id=com.avaz.readerapp&hl=en is the link to access the app for trial version.
https://youtu.be/Xh_glY7x7iw

*📱 _Teachers who are willing to utilize_ this application for the benefits of their students can give their information in the form below. You can register your application on or before 20th October 2019 12.00pm. Kindly provide the correct information (email id and phone number) to ensure that the app access can be given seamlessly.*

*⚡If you are interested click the following link and give your details:*
https://forms.gle/2EgxZJskpkTTASFa7

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday, 12 October 2019

*அக்டோபர் 12 தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுலுக்கு வந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு கட்டுரை இன்றைய தினகரனில்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/12.html


*_இந்தியாவின் இரண்டாவது சுதந்திர தினம் - அக். 12_*

*மக்களுக்கான தகவல்களை பெற்று நாட்டு நலனை மேம்படுத்துவோம்*

*_இன்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமலான தினம்_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*வட்டாரக் கல்வி அலுவலர்களின் (BEO)-ஊதிய நிர்ணயம் செய்ய தெளிவுரை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/beo.html


*⚡DEE - வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடம் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியரின் பதவி உயர்வு பணியிடமாகக் கருதி விபரங்கள் கோருவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் மற்றும் பரிசுக்கான செலவீனம் மேற்கொள்ளுதல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/3-4-5.html


*🎙2018-19 ம் கல்வி ஆண்டு பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கையில்மாண்புமிகு பள்ளிக்கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களால் கீழக்கண்டுள்ளவாறு அறிவிப்புகள்வெளியிடப்பட்டுள்ளன.*

*_"மாணவ மாணவியரின் உடல்திறனை வளர்க்கும் பொருட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டுத் திறனைக் கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்."_*

*🎙மாணவ மாணவியருக்கு விளையாட்டு  போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் செலவினத்தை சமக்ர சிக்க்ஷா மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்திலிருந்து (Composite School Grant) மாநில திட்ட இயக்குநர் அவர்களின் அனுமதியுடன் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.*

*🎙எனவே, அரசு தொடக்க மற்றும் நிடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டு திறனைக் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காக விளையாட்டு போட்டிகள் நடத்தி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்குவதால் எற்படும் செலவீனத்தை சமக்ர சிக்ஷா மூலம் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்திலிருந்து செலவீனம் மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*அரசு பள்ளிகளின் தரமின்மைக்கு யார் காரணம்?????*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_89.html



*🎙ஆசிரியர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில் சேர்வது குறித்து அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரவலாக வரவேற்பு பெற்றிருப்பது வியப்பல்ல.*

*_அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் குறைவு என்பது எந்த அடிப்படையில் சொல்லப்படுகிறது?_*

*🎙அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது; தனியார் பள்ளிகள் போல யாருக்கும் இடமளிக்க மறுக்க முடியாது. அனைவரும் கற்கத் தகுந்தவர் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.*

*🎙மாணவர் ஏற்புத் தன்மையைக் கருதாது கடந்த 70 ஆண்டுகளில் தொடக்கப்பள்ளி பாடத்திட்டங்கள் வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளன.*

*🎙ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கும் ஆசிரியர் கிடையாது.*

*🎙பல்வகுப்பு கற்பித்தலுக்கு இணங்கப் பாடத்திட்டங்கள் இல்லை. ஒவ்வொரு வகுப்புக்கு ஆசிரியர் இருந்தும் தனியார் பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் தனிப் படிப்புக்குச் செல்வது பள்ளி நேரத்தில் கற்க இயலாமையைச் சுட்டுகிறது.*

*🎙இவற்றைக் கணக்கிடாது ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் தரம் உயரும் என்பது அடிப்படைகளை புரிந்துகொள்ளாததால் சொல்லப்படுவது,*

*🎙ஆசிரியர்களும் அரசு அலுவலர்கள் அவர்கள் ஆற்றுகிற பணிக்கு ஊதியம் பெறுகின்றனர்; தம் உரிமைகளை அரசுக்கு அடகுவைக்கவில்லை. ஒவ்வொரு குடிநபருக்கும் உள்ள உரிமைகள் அவர்களுக்கு உண்டு.*

*🎙கற்பித்தல், கற்றல் முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க உதவிக் கல்வி அலுவலர் முதல் இயக்குநர் வரை ஒரு பெரும் பட்டாளம் கல்வித் துறையில் இருக்கிறது.*

*🎙அதன் செயலின்மையே அரசுப் பள்ளிகளின் நிலைக்குக் காரணம் என்று அறிதல் வேண்டும்.*

🤝தோழமையுடன்;

*_ச.சீ.இராஜகோபாலன்,_*
*மூத்த கல்வியாளர்,* 
*சென்னை*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*அரசாணைகளுக்கு எதிராக மாற்றுத்திறனாளி ஆசிரியர்க்கு கட்டாய பணியிட மாறுதல் - சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_1.html


**
*🛡தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். அப்பொழுது நிர்வாக காரணங்களை கூறி சில ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் அளிப்பது வழக்கம். தற்பொழுது மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் ஒழிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அளவற்ற அதிகாரங்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்களை நிர்வாக காரணங்கள் எனக் கூறி பணியிட மாறுதல் என்பது தொடர்கதையாகி வருவதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.*

**
*🛡அதே நேரத்தில் மாற்றுத்திறனாளி ஆசிரியரை எந்த சூழலிலும் தொந்தரவு செய்யக்கூடாது என அரசாணைகள் இருந்தும் அதை புறந்தள்ளி திருப்புவனம் ஒன்றியத்தில் பணியாற்றும் மாற்றத்திறனாளி ஆசிரியருக்கு கட்டாய பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.*

_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ கூறியதாவது:

**
*🛡திருப்புவனம் அல்லி நகரம் ஆரம்பபப்ள்ளி தலைமையாசிரியர் பணியிடம் தனக்கு சாதகமான ஆசிரியருக்கு வழங்குவதற்காக கடந்த ஏப்ரல் மாதமே பல லட்ச ரூபாய் விலை பேசப்பட்டுள்ளது. எனவே அப்பணியிடத்தை காலிப்பணியிடமாக அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் வந்த சூழலில் அங்கு பணியாற்றும் தலைமையாசிரியர் மீது பொய் புகார் பெற்று சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் கட்டாய பணியிட மாறுதல் வழங்கினார்.*

**
*🛡ஆசிரியர் சங்கங்கள் தலையிட்டவுடன் அரசியல் அழுத்தம் என கூறி தனது முறைகேடான மாறுதலை நியாயப்படுத்து முனைந்தார். இந்த விசயத்தை அமைச்சர் அலுவலகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் நாங்கள் அப்படி கூறவில்லை என முதன்மைக்கல்வி அலுவலர் உள்ளிட்ட இருவரும் மாறி மாறி கூறினார்கள். எனவே பிரச்சனையை திசை திருப்பும் விதமாக அல்லி நகரத்தில் பணியாற்றும் மூன்று ஆசிரியர்களை கட்டாய பணியிட மாறுதல் செய்தனர்.*

**
*🛡இதற்காக எந்தவித புகாருக்கும் உட்படாத மேலராங்கியம் நடுநிலைப்பள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியர் செந்தில்குமாரை தொந்தரவு செய்து இடமாறுதல் உத்தரவை வழங்கியுள்ளனர்.*

**
*🛡ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவர் பணியாற்றும் இடத்தில் இருந்து எவ்வித காரணத்தையும் முன்னிட்டு இடமாறுதல் செய்யக் கூடாது என அரசாணைகள் 217, 218, 270ல் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.*

**
*🛡ஆனால் அரசு வெளியிட்டுள்ள அரசாணைகளை புறந்தள்ளி மாற்றுத்திறனாளி ஆசிரியர்க்கு கட்டாய இட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. தனது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நியாயம் கேட்க சென்ற ஆசிரியரை மாவட்டக்கல்வி அலுவலர் உதாசீனப்படுத்தியுள்ளார். இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்யப்படவில்லையென்றால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மறுவாழ்வு அலுவலரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதுடன், எங்கள் அமைப்பின் சார்பில் கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என அவர் தெரிவித்தார்.*

🤝தோழமையுடன்;

*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*சிவகங்கை மாவட்டம்*
*12.10.2019*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_12.html


*🎙விதி மீறிய மாறுதல் சம்பந்தமாக மதிப்புமிக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களை தோழமை இயக்கமான தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நேற்று 11/10/2019 அன்று சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


Friday, 11 October 2019

*புதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்! அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_14.html


*🎙தமிழகப் பள்ளிகளில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாக இருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பான குரல்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே கற்பித்தலையும் தாண்டி பல்வேறு பணிகளின் சுமையை எதிர்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், புதிய பாடங்கள் அடிப்படையில் பாடம் நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.*

*🎙வெறும் தகவல் களஞ்சியங்கள் மட்டுமே புதிய பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள், தங்களது பாடப் பொருள் அறிவையெல்லாம் காட்டி போட்டி போட்டுக்கொண்டு அவற்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அவற்றைக் குழந்தைகள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் அவர்கள் அதிக அக்கறைகாட்டவில்லை என்பதுதான் துரதிருஷ்டம்.*

*_அழுத்தம் தரும் பாடங்கள்:_*

*🎙கிட்டத்தட்ட அனைத்து வகுப்புகளுக்குமான பாடநூல்களிலும் சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள், உதாரணமாக, பத்தாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் அளவு கடந்த எண்ணிக்கையில் கணக்குகள் உள்ளன, அவற்றை முழுமையாகக் கற்பிக்க போதிய அவகாசம் இல்லை. புதிய கணிதப் பாடநூல்களில் விகிதமுறு எண்கள், பின்ன எண்கள், தலைகீழி போன்றவை குழப்பமூட்டும் வகையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான பயிற்சிகளும் குறித்த காலத்தில் தரப்படுவதில்லை அப்படி நடக்கும் பயிற்சிகளும் போதிய பலன் தருவதில்லை என்கிறார்கள்,*

*🎙6,7 வகுப்புகளின் பாடநூல்களில் ஆங்கிலப் பாடங்களின் கட்டமைப்பு நன்றாக இருந்தாலும், குழந்தைகளின் வயதிற்கேற்ற சொற்களின் பயன்பாடு இல்லை என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். துணைப் பாடப் பகுதியாகத் தரப்பட்டுள்ள பாடங்களில் ஆசிரியர்களை குழப்பும் வகையில் கடிணமான நடையில் எழுதப்பட்ட ஆங்கில படைப்புகளிலிருந்து உரைநடைபகுதிகளும், செய்யுள் பகுதிகளும் தரப் பட்டிருக்கின்றன என்கிறார்கள்.*

*🎙6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கான சமூக அறிவியலைப் பொறுத்தவரை, சில பாடங்கள் சிறப்பாக இருந்தாலும் பல வகுப்புகளுக்குப் பாடப் பொருள் மிக அதிக அளவில் தரப்பட்டுள்ளது. "தமிழ் வழியில் பயிலும் குழந்தைகளுக்கே கற்றுக்கொடுத்து தேர்வுக்கு தயாரிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும் சூழலில், ஆங்கில வழிக் குழந்தைகளுக்கு புரியவைப்பதிலும் பயிற்சி தருவதிலும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம்" என்கிறார்கள் ஆசிரியர்கள்.*

*🎙அறிவியல் ஆசிரியர்களோ, "ஒரு காலத்தில் கல்லூரி அளவில் படித்த பாடங்கள் இன்றைக்கு 9, 10 ம் வகுப்புகளில் வைக்க பட்டிருக்கின்றன. வேதியியல், இயற்பியல், உயிரியல் என அனைத்திலும் வெறும் பெயர்களைப் படித்து மனப்பாடம் செய்வது மாணவர்களை சலிப்படையச் செய்கிறது. 6 ம் வகுப்பிலிருந்து ஆய்வகப் பயன்பாட்டை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க அரசு உதவிசெய்தால் அறிவியலில் திறன் பெற்ற மாணவர்களை உருவாக்கலாம்" என்கிறார்கள்*

*_மேலும் சில பிரச்சனைகள்:_*

*🎙இந்தப் பாடநூல்கள் போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்புகளாகவே இருக்கின்றன எனும் கருத்து பரவலாக எழுந்திருக்கிறது. மேலும், செவித்திறன் குறைபாடு, கண் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு மிகுந்த சவால் அளிக்கும் வகையில் பாடங்கள் அமைந்திருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.*

*🎙ஒவ்வொரு நூலிலும், கணினிப் பயன்பாட்டை இணைத்துள்ளனர். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு QR CODE செயலியுடன் இணைக்கும் வகையில் நம் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பான விஷயம். அதேசமயம், கணினி வசதியே இல்லாத பள்ளிகளில் இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்வியும் எழுத்திருக்கிறது. ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் அந்த செயலியை பயன்படுத்தினாலும் 45 நிமிடங்களுக்குள்  அத்தனைமாணவர்களுக்கும் அதைக் காட்டுவது சாத்தியமில்லை.*

*_கூடுதல் சுமை:_*

*🎙கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் அதிகமாக உருவாக, போதமான எண்ணிக்கையில் ஆசிரியர் இல்லாத சூழல் முக்கியக் காரணம் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக இருப்பதால் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தேவையான திறன்களுடன் வெளியே வர முடிவதில்லை. ஏழ்மையான பின்னணி கொண்ட, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் புதிது புதிதாக எழும் அழுத்தங்களால் அப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களிடம் சிறப்பு அக்கறை காட்டும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு இல்லாமல் போகிறது. "எங்களுடைய பெரும்பாலான நேரம் நிர்வாகத்தால் மடைமாற்றப்படும் போது, கற்பித்தலில் அதிகக் கவனம் செலுத்த முடிவதில்லை, என்று ஆதங்கப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.*

*_"ஒரு காலத்தில் கல்லூரி அளவில் படித்த பாடங்கள் இன்றைக்கு 9, 10-ம் வகுப்புகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. வேதியியல், இயற்பியல், உயிரியல் என அனைத்திலும் வெறும் பெயர்களைப் படித்து மனப்பாடம் செய்வது மாணவர்களைச் சலிப்படையச் செய்கிறது."_*

_✍படைப்பு_
*_திருமதி.உமாமகேஸ்வரி_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*ஆசிரியர்கள் இடமாறுதல் - கல்வி துறை நிபந்தனை - ஆசிரியர்கள் மனவேதனை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_31.html


*🎙அரசு பள்ளி ஆசிரியர்கள், மூன்று ஆண்டுகளுக்கு பிறகே, பணி மாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும்' என தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும், மே மாதம் பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம். ஓரிடத்தில், ஓராண்டு பணி முடித்தாலே, இடமாறுதல் கேட்கலாம் என விதி இருந்தது. இதனால், பள்ளிகளில் பாதிப்பு ஏற்பட்டதால், குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் ஓர் இடத்தில் பணிபுரிவோர் மட்டுமே இடமாறுதல் கேட்க முடியும் என பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது.*

*🎙இதை எதிர்த்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்ததால், நடப்பு கல்வியாண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.*

*🎙தற்போது வழக்கு முடிவுக்கு வந்ததால், கலந்தாய்வு நடத்துவதற்கான புதிய அரசாணையை பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார்.*

_அதில் கூறியிருப்பதாவது:_

*🎙அனைத்து ஆசிரியர்களும், தற்போது பணியாற்றும் பள்ளிகளில், குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் பணி முடித்திருந்தால் மட்டுமே இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.*

*🎙வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் மட்டும், 2017 - 18 மற்றும், 2018 - 19ம் ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்காமல் இருந்தால், இந்த ஆண்டு கலந்தாய்வில் பங்கேற்கலாம். இந்த சலுகை, இந்த ஆண்டுக்கு மட்டுமே உண்டு. மற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும், மூன்றாண்டு பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை கட்டாயம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*

_வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு நிபந்தனை:_

*🎙வழக்கு தொடர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் நிபந்தனை என்ற பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு ஆசிரியர்களை மனவேதனை அடையச் செய்துள்ளது.*

*🎙இத்தகைய அறிவிப்பானது ஆசிரியர்களை  வழக்கு தொடர தூண்டும் வண்ணம் உள்ளது.*

*🎙ஏற்கனவே கல்வித்துறையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இம்மாதிரியான நிபந்தனை அறிவிப்பானது பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவரையும், நாமும் வழக்கு தொடர வேண்டும் என்று நினைக்க வைக்கிறது.*

*🎙அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான நிபந்தனையின் அடிப்படையில் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*விதிகளுக்கு முரணாக ஆசிரியர் சங்க நிர்வாகிக்கு நிர்வாக பணியிட மாறுதல் - மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த ஆசிரியர்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_11.html


**
*🛡தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவது வழக்கம். அப்பொழுது நிர்வாக காரணங்களை கூறி சில ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் அளிப்பது வழக்கம்.*

**
*🛡தற்பொழுது மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகம் ஒழிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அளவற்ற அதிகாரங்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு பிடிக்காத ஆசிரியர்களை நிர்வாக காரணங்கள் கூறி பணியிட மாறுதல் என்பது தொடர்கதையாகி வருவதாக ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.*

**
*🛡திருப்புவனம் அல்லி நகரம் ஆரம்பபப்ள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் சத்தியேந்திரன். இவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருப்புவனம் வட்டாரச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது புகார் வந்ததன் அடிப்படையில்  சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் தெரிவித்த புகார்கள் அனைத்தும் பொய் என தெரிய வந்ததின் அடிப்படையில் அப்புகார் கடிதம் மீது நடவடிக்கை எடுப்பதை நிறுத்தி வைத்தார்.*

**
*🛡இந்நிலையில் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அக்குழுவின் விசாரணையிலும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என தெரிய வந்துள்ளது. இருந்தாலும் பிரச்சனைகள் அடிப்படையில் மூன்று பேரை பணியிட மாற்றம் செய்யலாம் என அக்குழு அறிக்கை அளித்தது.*

**
*🛡இந்நிலையில் அரசியல் அழுத்தம் காரணமாக தலைமையாசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து சிவகங்கை மாவட்டக்கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.*

**
*🛡தகவல் அறிந்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் குவிந்தனர். மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்*
🤝தோழமையுடன்

*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*சிவகங்கை மாவட்டம்*
*10.10.2019*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Thursday, 10 October 2019

*ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_87.html


*🎙விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு பின்பு ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும்.*

*🎙ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறும்.*

*🎙மூன்று ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்தி கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*NHIS - மறுப்பு தெரிவித்த நிர்வாகம் - மாற்றிக்காட்டிய TNPTF*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/10/nhis-tnptf.html


*_TNPTF தொடரும் அசாத்திய சாதனைகள்_*

*🚗சிவகங்கை மாவட்டம், _சிங்கம்புணரி வட்டாரக்கல்வி அலுவலர் திரு.ஜேம்ஸ்_  அவர்கள் தனது குடும்பத்துடன் கடந்த 6.10.2019 அன்று தனது சொந்த மகிழுந்தில் வேளாங்கண்ணி சென்று கொண்டிருக்கையில் காளையார்கோயில் அருகே வானகம் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.*

*_திரு.ஜேம்ஸ் அவர்களுக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது._*

*🚑உடனடியாக சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி செய்யபப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.*

*💪சிகிச்சை செலவாக _ரூபாய் 71 ஆயிரத்தை_ மருத்துவமனை கோரியது. _இன்சூரன்ஸ் நிறுவனம் 20 ஆயிரம்_ மட்டுமே தர முன் வந்தது.*

*💪இதில் தலையிட கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிவகங்கை மாவட்ட மையம் மூலம் மாநில அமைப்பிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.*

*💪 _மாநில அமைப்பு உடனடியாக தலையிட்டு பல்வேறு முயற்சிகளுக்கு இடையில் மொத்த சிகிச்சை செலவான ரூபாய் 71 ஆயிரத்தை பெற்றுக்கொடுத்து ஒரு பைசா செலவில்லாமல்_ வட்டாரக்கல்வி அலுவலர் அவர்கள் இல்லம் திரும்ப வழிவகை செய்தது.*

*🙏மாவட்ட அமைப்பின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட மாநில அமைப்பிற்கும், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் _தோழர்.செல்வகணேஷ்_ அவர்களுக்கும் சிவகங்கை மாவட்ட மையத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.*

🤝தொடர்ந்து இயக்க பணியில்...

*_ஆ.முத்துப்பாண்டியன்_*
*மாவட்டச்செயலாளர்*
*💪TNPTF💪*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலரின் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து இயக்க நடவடிக்கை TNPTF சிவகங்கை மாவட்ட அறைகூவல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/tnptf.html


**
*🛡திருப்புவனம் வட்டார செயலாளர் திரு.சத்தியேந்திரன் அவர்களுக்கு அரசியல் அழுத்தம் என்ற பெயரில் விதிகளுக்கு முரணாக பணியிட மாறுதல் வழங்குவதில் முனைப்பு காட்டும் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கு எதிராக இயக்க நடவடிக்கைகயை உறுதியாக மேற்கொள்ள மாநில மையம் வழிகாட்டியுள்ளது. மாநில அமைப்பின் வழிகாட்டுதல் படி இன்று (10.10.2019) மாலை 5.00 மணிக்கு சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகத்தில் அனைவரும் ஒன்று கூட கேட்டுக்கொள்கிறோம்.*

**
*🛡இதில் _அனைத்து வட்டார பொறுப்பாளர்களும் தவிர்ப்பின்றி பங்கேற்க வேண்டும். மேலும் திருப்புவனம், சிவகங்கை, காளையார்கோயில்_ ஒன்றிய ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டுகிறோம்.*

**
*🛡அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனக்கு சாதகமானவர்களை காப்பாற்ற துடிப்பதோடு அனைத்து விதி மீறல்களிலும் அரசியல் தலையீடு என்று காரணம் கூறி தன்னுடை பதவிக்கு களங்கம் விளைவிக்கும் மாவட்ட கல்வி அலுவலரை ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் எதிர்கொள்ள ஒன்று கூடுவோம்.*

*_அநீதி களைய அனைவரும் ஒன்று கூடுவோம்._*

🤝தோழமையுடன்;

*_மாவட்ட மையம்_*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*சிவகங்கை மாவட்டம்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் கூட்ட அழைப்புக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_10.html


*🎙தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் கூட்டம் 13.10.2019 ஞாயிறு மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*

*🎙கூட்டமானது மாநில தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை,_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

*_கூட்டப்பொருள்:_*

*⚡1. 25.09.2019 முதல் 29.09.2019 முடிய நடைபெற்ற கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார இயக்கம் - ஆய்வு*

*⚡2. மாநில பொதுக்குழுக் கூட்டம் நடத்துதல்,*

*⚡3. இதர விஷயங்கள்*

*🎙அனைத்து மாநில நிர்வாகிகளும் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.*

*🎙மண்டல அளவில் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்திற்கு தலைமையேற்று வழி நடத்தியவர்கள் பிரச்சார நிகழ்வுகளை எழுத்து மூலமான அறிக்கையாக அளித்திட அன்புடன் வேண்டுகிறேன்.*

🤝தோழமையுடன்;

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday, 7 October 2019

*அடிக்கடி வாட்ஸ் ஆப் உத்தரவுகள்; அலறி ஓடும் ஆசிரியர்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_7.html


*📲ஆசிரியர்களுக்கு தினம் ஒரு 'வாட்ஸ் ஆப்' உத்தரவுகளை பிறப்பித்து, அவர்களை அவதிக்குள்ளாக்குவதால், கற்பிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.*

*📲தமிழக அரசின் கல்வித்துறை கல்வியில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரும் நோக்கத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை ஆன்-லைன் மூலம் பதிவேற்றம், சத்துணவு உட்கொள்ளும் மாணவர்களின் பதிவேற்றம் மற்றும் பல விபரங்களை தினமும் 'எமிஸ்'சில் அப்டேட் செய்ய வேண்டும்.*

*📲இது தவிர, 54 வகையான ஆவணங்களை பராமரிப்பு செய்ய வேண்டும். தற்போது ஆசிரியர்களிடம் தினமும் 'வாட்ஸ் ஆப்' மூலம் பல தகவல்கள் கேட்கப்படுகிறது.*

*📲ஒரு நாளைக்கு ஏகப்பட்ட தகவல்கள் கேட்டு, டி.இ.ஓ., ஏ.இ.ஓ., அலுவலகம் மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் என வருவதால் ஆசிரியர்கள் யாருக்கு எந்த தகவல்களை அனுப்புவது, அவற்றை எப்படி தயாரிப்பது என குழப்ப நிலையில் உள்ளனர்.*

*📲இயக்குநர் அலுவலகத்தில் வரும் கடிதங்கள் முன்பு, டி.இ.ஓ., அலுவலகத்திற்கு வரும். பின்பு, அவை ஏ.இ.ஓ., அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் ஆசிரியர்களிடம் தகவல்கள் பெறப்படும்.*

*📲ஆனால், தற்போது, இயக்குநர் அலுவலகத்தில் வரும் கடிதங்களை 'வாட்ஸ் அப்' மூலம் அந்தந்த தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி விடுகின்றனர். டி.இ.ஓ., மற்றும் ஏ.இ.ஓ., அலுவலகம் தற்போது 'மெசஞ்சர்' பணியை தான் செய்கின்றது.*

*📲ஆசிரியர்களுக்கு தேவையான தகவல்கள் பற்றி விரிவாக எடுத்து கூறுவது இல்லை. இதனால், ஆசிரியர்கள் எந்த நேரமும் அலைபேசியை பார்த்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது. இதனால், மாணவர்களின் கற்பித்தல் பணி பாதிப்பு அடைகிறது. தெளிவான சிந்தனையோடு பாடம் நடத்த அவர்களால் முடியவில்லை.*

*📲எந்தநேரமும் அதிகாரிகள் வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ள உத்தரவுகளுக்கு தகவல் சேகரிப்பது, எப்படி தயார் செய்வது என்ற சிந்தனையில் தான் இருக்க வேண்டியுள்ளது. தற்போது கல்விதுறை 'வாட்ஸ் ஆப்' மூலம் தான் நடந்து வருகிறது. அனைத்திலும், நவீன வசதிகள், புதிய கல்வி கொள்கை என இருந்தாலும், மாணவர்களுக்கு கற்பிக்க நேரம் கிடைக்காத நிலையில் உள்ளோம் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.*

*_தினமலரில் வெளியான செய்தி:_*
👇👇👇👇👇👇👇👇 https://m.dinamalar.com/detail.php?id=2383802&device=whatsapp (Sent via Dinamalar.com)
(பதிவு செய்த நாள்: அக் 07,2019 05:41)

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 6 October 2019

*😪⚫😪⚫😪⚫கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி - இரங்கல் செய்தி😪⚫😪⚫😪⚫*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_77.html


*⚫கள்ளர் பள்ளி  செக்காணூரணி  வட்டாரத்தில் உள்ள சித்தாலை  அரசு கள்ளர்  ஆரம்பப் பள்ளியில்  பணிபுரியும்  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்க உறுப்பினர் _திருமதி.மா.அமுதா_ அவர்கள் இரு சக்கர வாகன விபத்தில் நேற்று (05/10/2019) இறைவனடி சேர்ந்துவிட்டார்.*

*⚫இன்று (06/10/2019) உடற்கூர் ஆய்வு நடத்தப்பட்டு மாலை சொந்த ஊரான சாத்தங்குடியில் தகனம்  செய்யப்பட்டார்.*

😪😪😪😪😪😪😪😪

*_(2015 TET மூலம் தேர்வு செய்யப்பட்ட (CPS) ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது_*

*_(ஆசிரியைக்கு  இரு பெண் குழந்தை  உள்ளது)_*

😪😪😪😪😪😪😪😪

*⚫மாவட்டத் தலைவர், மாவட்ட பொருளாளர், வட்டாரச் செயலாளர்  மற்றும் வட்டார பொருளாளர் நேரில் சென்று அவருடைய கணவருக்கு (Ex Army) ஆறுதல்  கூறினார்கள்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


🚋❌🚋❌🚋❌🚋❌ *இந்தியாவில் முதல் தனியார் ரயில் சேவை ஆரம்பம் மற்றும் எதிர்ப்பு - செய்தி துளிகள், புகைப்படத் தொகுப்புகள் மற்றும் வீடியோ காட்சிகள்* 🚋❌🚋❌🚋❌🚋❌


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_82.html


*🚋இந்தியாவின் முதல் தனியார் ரயில் லக்னோ - டெல்லி இடையே 04.10.2019 முதல் இயக்கப்படுகிறது.*

*🚋இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை தனியார் மயமாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.*

*🚋அந்த வகையில் முதல் தனியார் ரயிலாக டெல்லி- லக்னோ இடையே _தேஜஸ் எக்ஸ்பிரஸ்_ ரயில் 04.10.2019 முதல் இயக்கப்படுகிறது.*

🚋❌🚋❌🚋❌🚋❌

*🚋ரயில்வேயை தனியாருக்கு தருவதை எதிர்த்து _"லக்னோ டில்லி பாதையில்"_ தனியார் ரயில் இயக்கப்பட்ட தினத்தன்று _"காசியாபாத்"_ ரயில்வே நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் தேஜாஸ் ரயிலை மறித்து மறியல் செய்த காட்சி.*
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=745414505881572&id=100012390871430&sfnsn=scwspmo&d=n&vh=i

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм











*எத்தனை பேர் சத்துணவு உண்கின்றனர்? தினமும் குறுஞ்செய்தி அனுப்ப சத்துணவு ஊழியர்களுக்கு உத்தரவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/blog-post_6.html


*🎙எத்தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற விவரத்தை தினமும் குறுஞ்செய்தியாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்குஅனுப்ப சத்துணவு ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*

*🎙மாணவர்களுக்கு முறையாக சத்துணவு சென்று சேர்வதை உறுதி செய்யும் விதமாக, சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கையை தினமும் குறுஞ்செய்தியாக (எஸ் எம் எஸ்) வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.*

*_இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் கூறியது:_*

*🎙சத்துணவு பணியாளர்கள் மூலம் மாணவ, மாணவியருக்கு சத்தான, சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ, மாணவியருக்கு சத்துணவு முழுமையாக சென்று சேர்வதை உறுதி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.*

*🎙சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தினமும் குறுஞ்செய்தியாக அனுப்பி வருகின்றனர். தற்போது _சத்துணவு ஊழியர்களிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது._*

*🎙எத்தனை மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர் என்ற தகவலை தினமும் _சத்துணவு பணியாளர்களே நேரடியாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்._ இவ்வாறு அவர்கள் கூறினர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday, 5 October 2019

*NISHTHA பயிற்சி ஒரு பார்வை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/nishtha.html


*⚡ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கட்டாயப் பயிற்சி 5 நாட்கள்*

*_14.10.2019 முதல் 20.11.2019_ வரை 5 கட்டங்களாக பயிற்சி வழங்கப்படும்*

*⚡அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக _பயிற்சிக்கு வரும் போது Android Mobile கொண்டு வர வேண்டும்_*

*⚡கைபேசி மூலமாக NISHTHA Web portal ல் தான் பதிவு செய்தல் மற்றும் தேர்வுகள் நடத்தப்படும்*

*_பயிற்சி முன் தேர்வு, கட்டகங்களுக்கான பின்னூட்டங்கள் தேர்வு, பயிற்சி பின் தேர்வு_ என பல தேர்வுகள் மொபைல் மூலமாக நடத்தப்படும்*

*⚡பயிற்சி கட்டகங்கள் TNTP மற்றும் SCERT Portal ல் உள்ளது*
       
*********

*🎙1 முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப் பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.*
*🎙இப்பயிற்சி  5 நாள்கள் வழங்கப்படவுள்ளது. இதற்கான Proceedings, Time Scheduled மாநில திட்ட இயக்குனர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது*
👇👇👇👇👇👇👇👇
https://drive.google.com/folderview?id=1ImXB60oXxGP-bcjHO40KKH_731qsgUTF
     
**********

*📲NISHTHA பணியிடைப் பயிற்சியின் போது பயன்படும் Android App ஐ Play store ல் download செய்ய கீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும்*
👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=ncert.ciet.nishtha

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*ஆசிரியர்களின் குழந்தைகள் எங்கு பயில்கிறார்கள் என்று Emis-ல் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் _தோழர்.தங்கபாசு_ அவர்களின் கருத்து . - தினமலர் நாளிதழ் செய்தி.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/10/emis.html



**
*🛡அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் எங்கு படிக்கின்றனர் என்ற விபரத்தை, EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.*

**
*🛡பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழக பள்ளிகளின் நிலை குறித்த விபரங்கள் திரட்ட, பள்ளிக்கல்வி தகவல் முறைமை (EMIS) உருவாக்கப்பட்டது. இதில், அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இத்தகவல்களை அடிப்படையாக கொண்டு, ஆசிரியர் நியமனம், நலத்திட்ட பொருட்கள் வினியோகம், பொதுத்தேர்வுக்கு ஹால்டிக்கெட், அடையாள அட்டை உருவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கோள்ளப்படுகின்றன.*

**
*🛡EMIS இணையதளத்தில், தற்போது ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் கல்வி விபரத்தை பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த திடீர் அறிவிப்பு, ஆசிரியர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.*

**
*🛡அரசு பள்ளிகளில்தான் இனி குழந்தைகளை சேர்க்க வேண்டும் என, அரசு அறிவிக்கப்போவதன் அறிகுறியோ இது என அலறுகின்றனர் பலர்.*

**
*🛡அறிவிப்பை வரவேற்கும் வேறு சிலர், மற்ற அரசு துறை ஊழியர்களிடமும் இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டும்; அரசுப்பள்ளிளை மேம்படுத்த ஆரோக்கியமான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என, கோரிக்கைவிடுத்துள்ளனர்.*

**
*🛡அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என்பது தார்மீக ரீதியாக சரியானது தான். இதை அறிவிப்பு வெளியிட்டு, ஊக்குவிக்கலாம்.*

*********************

*🎙இணையதளத்தில் தகவல் சேகரிப்பது, கட்டாயப்படுத்துவது போன்றது. சேர்க்கை குறைந்ததற்கு ஆசிரியர்களை மட்டுமே குறை கூறுவது சரியல்ல.*

*_தோழர்.தங்கபாசு_ 
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*********************

*🎙ஆசிரியர்களின் குழந்தைகள் எங்கு படிக்கின்றனர் என்ற விபரத்தை அளிப்பதன் மூலம் வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுவிடும். என் குழந்தையை எங்கு சேர்பது என்பது, தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததல்ல குடும்ப உறுப்பினர்களின் முடிவும் உள்ளது. ஆசிரியர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி படித்தால் நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. எனவே, இந்த அறிவிப்பை எதிர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.*

*_தோழர்.அருளானந்தம்_*
*மாவட்ட தலைவர்*
*பட்டதாரி ஆசிரியர் கழகம்*

*********************

*🎙'தனியார் பள்ளிகள் இனி செயல்படாது' என்ற ஒரு அரசாணை வெளியிட்டால் போதும், அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துவிடும். ஆசிரியர்கள் போல, அனைத்து அரசு ஊழியர்கள், அமைச்சர்களின் குழந்தைகள் எங்கு படிக்கின்றனர் என்ற புள்ளி விபரமும் திரட்ட வேண்டும். மாணவர் சேர்க்கை குறைந்தால் அதிகரிக்கும் வழிமுறைகளை கண்டறிவதை விடுத்து ஆசிரியர்களின் குழந்தைகளின் விபரத்தை சேகரிப்பது சரியான நடைமுறையாக தெரியவில்லை.*

*🎙_தோழர்சுரேஷ்_*
*மாநில தலைவர்*
*முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்*
*********************

*_🙏தினமலர் நாளிதழுக்கு நன்றி🙏_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм