Tuesday, 31 March 2020

*தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த உள்ள புதிய நல்வாழ்வு காப்பீடு திட்டம் IV - பிற மாநிலங்கள் போல் அரசே ஏற்று நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை கடிதம்.*

*தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த உள்ள புதிய நல்வாழ்வு காப்பீடு திட்டம் IV - பிற மாநிலங்கள் போல் அரசே ஏற்று நடத்துவது  தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை கடிதம்.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡தமிழக அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த உள்ள புதிய நல்வாழ்வு காப்பீடு திட்டம் IV - பிற மாநிலங்கள் போல் அரசே ஏற்று நடத்துவது  தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக,*

*_மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும்,_*

*_மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கும்,_*

*_மதிப்புமிகு.தலைமை செயலாளர் அவர்களுக்கும்,_*

*_மதிப்புமிகு.முதன்மை செயலாளர் அவர்களுக்கும், (நிதித்துறை)_*

*_மதிப்புமிகு.முதன்மை செயலாளர் அவர்களுக்கும், (பள்ளிக்கல்வித்துறை)_*
*_மதிப்புமிகு.ஆணையாளர் அவர்களுக்கும், (கருவூலம் மற்றும் கணக்குத்துறை),_*

*கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.*

**
*🛡அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 1இ 2 மற்றும் 3ல் கட்டணமில்லா சிகிச்சை (Cashless Treatment) வழங்கப்படும் என்ற தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் நோக்கத்திற்கு மாறாக காப்பீட்டு நிறுவனம் Package அடிப்படையில் வழங்குவதால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் முழு சிகிச்சைக்கான செலவை பெறமுடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.*

**
*🛡காப்பீட்டு நிறுவனத்தின் இச்செயலால் தமிழக அரசு மீது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடம் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.*

**
*🛡இந்நிலையில் பார்வையில் கண்ட அரசு ஊழியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் III வருகின்ற 30.06.2020 உடன் நிறைவு பெறவுள்ளது. NHIS-4 பணிகள் துவங்கும் பொழுது கீழ்க்கண்ட கோரிக்கைகளை அரசின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*

*🚨*
*🚑தென் மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநில அரசுகள் ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு காப்பீட்டு நிறுவனத்திடமோ, தனியார் காப்பீட்டு நிறுவனத்திடமோ ஒப்படைக்கவில்லை. மாநில அரசே ஏற்று நடத்தி வருகிறது.*

*🚨*
*🚑Dr.YSR ஆரோக்கியா ஸ்ரீ Health Care Trust என்ற மாநில அரசின் நிறுவனத்தின் மூலமே ஆந்திராவில் அமுல்படுத்தப்படுகிறது.*

*🚨*
*🚑கர்நாடகாவில் மாநில அரசின் நிறுவனம் மூலமே அமுல்படுத்தப்படுகிறது.*

*🚨*
*🚑மருத்துவமனை நிர்வாகம் மாநில அரசுடன் நேரிடையாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறது.*

*🚨*
*🚑திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள அரசுகள் தனியாக இணைய தளம் துவங்கியுள்ளது.*

*🚨*
*🚑குடும்பம் என்பதில் (1) கணவன் (2) மனைவி (3) குழந்தைகள் (4) பெற்றோர்கள்       (5) வளர்ப்பு மற்றும் தத்து குழந்தைகள் (6) திருமணமாகாத விதவை, விவாகரத்து ஆண்/ பெண் அடக்கம்.*

*🚨*
*🚑வெளி நோயாளி சேவை, உள்நோயாளி சேவை கண்காணிப்பு சேவைகள் (ஓராண்டு வரை) வழங்கப்பட்டு வருகிறது.*

*🚨*
*🚑திட்டத்தை கண்காணிக்க ஆந்திராவில் தலைமைச் செயலாளர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் 60 சதவீதம் அரசு அலுவலர்கள் 40 சதவீதம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.*

*🚨*
*🚑தென் மாநிலங்கள் போன்று மேற்கு வங்காள மாநிலத்தில் மாநில அரசே ஊழியர் காப்பீட்டு திட்டத்தை ஏற்று நடத்துகிறார்கள்.*

*🚨*
*🏥1. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்காளம் மற்றும் மத்திய அரசை பின்பற்றி தமிழகத்தில் NHIS-IV அமைக்க வேண்டும்.*

*🚨*
*🏥2. NHIS-I துவங்கும்பொழுது அரசு ஊழியர்களிடம் விருப்பக் கடிதம் கேட்கப்பட்டது. நான்காண்டுக்கு ஒருமுறை திட்டத்தில் மாறுதல் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் ஊழியர்கள் பங்களிப்புடன் உள்ளதால்  NHIS-IV-ல் இணைவதற்கு அரசு ஊழியர்களிடம் விருப்பக் கடிதம் கோர வேண்டும்.*

*🚨*
*🏥3. கணவன், மனைவி, குழந்தைகளுடன் பிற மாநிலங்கள் போல் பெற்றோர், வளர்ப்பு அல்லது தத்து குழந்தைகள், திருமணமாகாத விதவை, விவாகரத்து ஆன பெண் குழந்தைகள் திட்டத்தில் இணைக்க வேண்டும்.*

*🚨*
*🏥4. மேலும் ஊனமுற்ற மற்றும் மனவளர்ச்சி அடைந்த குழந்தைகளுக்கு வயது நிர்ணயத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.*

*🚨*
*🏥5. NHIS திட்டத்தை காப்பீட்டு நிறுவனம் மூலம் அமுல்படுத்துவதற்கு பதில் தெலுங்கானா போன்று தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் NHIS-IV-யை அமுல்படுத்த வேண்டும். இதனால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை குறையும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.*

*🚨*
*🏥6. மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்பொழுது காப்பீட்டு நிறுவனம் வழங்கும் Package போக மீதித் தொகையை செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தம் செய்கின்றன.*

*🚨*
*🏥இது தொடர்பாக உடனடி தீர்வு காண அரசு மட்டத்தில் எவ்வித நிர்வாக ஏற்பாடும் இல்லை. இதனால் அரசு ஊழியர்கள் மருத்துவமனை கோரும் பணத்தை செலுத்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இச்சிக்கலுக்கு தீர்வு காண அரசு ரீதியாக 24 × 7 நேரம் செயல்படக்கூடிய அரசு அலுவலர்கள் கொண்ட செயலாக்கக் குழு (Action cell) அமைக்கப்பட வேண்டும்.

*🚨*
*🏥7. தற்போது NHIS-ல்  உள்நோயாளி   சிகிச்சை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. வெளிநோயாளி சிகிச்சை மற்றும் ஓராண்டு வரை கண்காணிப்பு சிகிச்சை NHIS-IV-ல் அனுமதிக்கப்பட வேண்டும்.*

*🚨*
*🏥8. N-I, II, III-ல் அரசின் பங்களிப்புத் தொகை படிப்படியாக குறைக்கப்படுகிறது. இதனால் ஊழியர்கள் செலுத்தும் சந்தா தொகை உயர்ந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல.*

*🚨*
*🏥அரசு தனது பங்களிப்புத் தொகையை 60 சதவீதத்திற்கு குறையாமல் வழங்க வேண்டும். எனவே, அரசு ஊழியர்களின் சந்தா தொகையை உயர்த்தாமல் NHIS-IV-ஐ அமுல் படுத்த வேண்டும்.*

*🚨*
*🏥9. NHIS-IV-ல் பல்வேறு சிகிச்சைகள் கூடுதலாக இணைக்கப்பட வேண்டும்.*

⚡Oral Chemotherapy,

⚡குடல் ஒட்டு அறுவை சிகிச்சை மற்றும் அனைத்து நவீன சிகிச்சை முறைகளுக்கு அனுமதி தர வேண்டும்.

⚡காரணமில்லா இரத்தப்போக்கு (Idiopathic Thrombocytopenia Purpura ITP) இணைக்கப்படவேண்டும்.

⚡சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ், மூளைக் காய்ச்சல் மற்றும் பருவகால தொற்று நோய்க்கான சிகச்சை போன்றவை இணைக்கப்பட வேண்டும். 

*🚨*
*🏥10. மாவட்ட மற்றம் மாநில அமுலாக்கக் குழுக் கூட்டம் நடத்துவதற்கான காலவரையறை NHIS-I, II, III-ல் குறிப்பிடப்படவில்லை.  இரண்டு மாதத்திற்கொரு முறை மாவட்ட அமுலாக்கக் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அக்கூட்டம் நடத்தப்படுவது தொடர்பாக பத்திரிகை வாயிலாக அரசு ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.*

⚡மாவட்ட மற்றும் மாநில அமுலாக்கக் குழுக் கூட்டத்திற்கு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அழைக்கப்படவேண்டும்.

⚡மாவட்ட மற்றும் மாநில அமுலாக்கக் குழுக் கூட்ட முடிவுகளை காப்பீட்டு நிறுவனம் ஒரு மாதத்தில் அமுல்படுத்த வேண்டும் என்று காலவரையறை நிர்ணயம் செய்யவேண்டும்.

*🚨*
*🏥11. NHIS-III-ல் கண்புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000/- மற்றும் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு ரூ.45,000/- Package நிர்ணயம் செய்யப்பட்டது.  இந்நிர்ணயம் கட்டணமில்லா சிகிச்சை என்ற அரசின் நோக்கத்திற்கு எதிரானது.  எனவே NHIS-IV-ல் கண்புரை அறுவை சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை உட்பட எந்த சிகிச்சைக்கும் Package நிர்ணயம் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.*

*🚨*
*🏥12. விபத்துக்கான சிகிச்சை அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்படுவது போன்று மாரடைப்பு (Heart Attack) போன்ற அவசர கால சிகிச்சையும் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்.*

⚡சிகிச்சைக்கான தொகை சிகிச்சையின்போது அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை நிர்வாகத்திற்கு வழங்கபட வேண்டும்.

*🚨*
*🏥13. NHIS-IV-ல் சந்தா தொகையை உயர்த்தாமல் புற்றுநோய் சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிறப்பு சிகிச்சைக்கான காப்பீட்டுத்தொகையை ரூ.25 இலட்சம் என உயர்த்தி வழங்க வேண்டும்.*

*🚨*
*🏥14. ஒரு அறுவை சிகிச்சை, சார்ந்து நடத்தப்படும் முன் சோதனைகளுக்கு (Scan, Blood Test) உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்க வேண்டும்.*

*🚨*
*🏥15. NHIS-IV தொடர்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் சங்கங்களை அழைத்து கருத்தை கேட்டு NHIS-IV யை அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.*

**
*🛡எனவே 'NHIS-IV-ல்  கட்டணமில்லா சிகிச்சை" என்ற அரசின்  நோக்கத்தை நிறைவேற்ற மேலே குறிப்பிட்டுள்ள உரிய மாற்றங்களை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Friday, 27 March 2020

*🚨🧫😷கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்கிட - கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆசிரியர்கள் முடிவு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*

*🚨🧫😷கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்கிட - கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆசிரியர்கள் முடிவு - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_பேரமைப்பின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*🚨*
*😷மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 03/2020  நாள்: 27.03.2020*

*🚨*
*😷கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் வழங்கிட கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளில் பங்கேற்க ஆசிரியர்கள் முடிவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு*

*🚨*     
*😷கொரோனா நோய்த் தடுப்பு நிவாரண நிதியாக ஒருநாள் ஊதியத்தை தமிழக அரசுக்கு வழங்கிடவும், நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பங்கேற்கவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.*
    
_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_
    
*🚨*
*😷கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று இன்று உலகையே மிகக் கடுமையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகின் பெரும்பான்மையான மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உலக வரலாற்றில் இதுபோன்றதொரு நிகழ்வை இத்தலைமுறையில் முதன் முறையாகச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.*
    
*🚨*
*😷உலகில் பொருளாதாரத்திலும், விஞ்ஞானத்திலும், மருத்துவத் துறையிலும் முன்னேறிய நாடுகள் கூட கொரோனாவின் கொடுந்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பாதிப்புக்கு உள்ளாகியும், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர்ப்பலியாகியும் உள்ளனர்.*
    
*🚨*
*😷நாள்தோறும் ஊடகங்களின் வழியே வெளியாகும் செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. இந்தியாவிலும் கொரோனாவின் கோரத் தாக்குதல் தொடங்கியிருக்கிறது. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் இந்திய தேசத்தில் கொரோனா நோயின் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.*

*🚨*
*😷அரசின் நடவடிக்கைகளுக்கு நூறு சதவீதம் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டியது இந்திய மக்கள் அனைவரின் கடமையாகும்.*
    
*🚨*
*😷கொரோனாவைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்கள், வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.*
     
*🚨*
*😷தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விலையில்லாப் பொருட்கள் வழங்கவும் குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும் இத்தொகை மிகவும் குறைவானது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.*
     
*🚨*
*😷ஒரு குடும்பத்திற்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும். விலையில்லா ரேஷன் பொருட்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப்பட வேண்டும். மேலும் பல்வேறு உதவிகள் செய்யப்பட வேண்டும்.*
     
*🚨*
*😷எனவே கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் தங்களது ஒருநாள் ஊதியத்தை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்திட மாநில அமைப்பு முடிவு செய்துள்ளது.*

*🚨*
*😷ஆசிரியர்களின் ஊதியத்திலிருந்து இத்தொகையைப் பிடித்தம் செய்திட தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.*
   
*🚨*
*😷மேலும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட தகுதியுள்ள, ஆர்வமுள்ள ஆசிரியர்களை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு பயன்படுத்த தமிழக அரசு முன்வந்தால் எங்களது அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அப்பணியில் ஈடுபட தயாராக உள்ளார்கள் என்பதையும் தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday, 19 March 2020

*_😢இரங்கல் செய்தி_🖤*

*_😢இரங்கல் செய்தி_🖤*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🖤*
*😢தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் _பொதுச்செயலாளரும்_ இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு - தமிழ்நாடு மாநில அமைப்பாளருமான  _தோழர் ச.மயில் அவர்களின் தாயார்,_*

*🖤*
*😢திருமதி.ச.லட்சுமியம்மாள் அவர்கள் இன்று (19.03.2020) இயற்கை எய்தினார்.*

*🖤*
*😢அன்னாரின் _இறுதிச்சடங்கு நாளை_ (20.03.2020 வெள்ளி) _பிற்பகல் 3.00_ மணியவில், தூத்துக்குடி மாவட்டம், _விளாத்திகுளம்_ வட்டம், _சூரன்குடியில்_ நடைபெறும் என ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday, 16 March 2020

*ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று (16.03.2020) அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய செய்தி துளிகள்*

*ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று (16.03.2020) அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🌟ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.*

_கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இன்று (16.03.2020) திங்கட்கிழமை_

*🌟ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கணைப்பாளர்கள் ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்களை சந்தித்து வழங்கினார்கள்.*

*🌟ஜாக்டோ ஜியோவின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்கள்.*

*🌟சந்திப்பிற்கு பின் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்கள்.*

*⚡இந்த சந்திப்பில் (TNPTF) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக  _மாநிலத் துணைத் தலைவர்கள் அ.ரஹீம் மற்றும் பெ.அலோசியஸ் துரைராஜ்_ ஆகியோர் கலந்துகொண்டார்கள்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*CORONA தற்காப்பு விடுமுறை - முதல்வர் & ஆணையரின் ஆணையை மீறிய கல்வி அலுவலர்களின் மேதாவித்தனமான புரிதலால் மாணவரின்றி ஆசிரியப்பணி! 1-8 வகுப்புகளுக்கு முழுமையான விடுமுறையளிக்க தொடக்கக் கல்வி இயக்குநரிடம் TNPTF வலியுறுத்தல்*

*CORONA தற்காப்பு விடுமுறை - முதல்வர் & ஆணையரின் ஆணையை மீறிய கல்வி அலுவலர்களின் மேதாவித்தனமான புரிதலால் மாணவரின்றி ஆசிரியப்பணி! 1-8 வகுப்புகளுக்கு முழுமையான விடுமுறையளிக்க தொடக்கக் கல்வி இயக்குநரிடம் TNPTF வலியுறுத்தல்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

_பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 07/2020_ நாள்: 16.03.2020_

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்!*

**
*🛡 கொரோனா நோய்த்தடுப்பு முயற்சியாக தமிழகம் முழுவதும் KG வகுப்புகள் முதல் ஐந்தாம் வகுப்பு வரை 16.03.2020 முதல் 31.03. 2020 முடிய தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது.*

**
*🛡 கொலை நோயான கொரோனோவின் பாதிப்பு உலகமெங்கும் மிகக்கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அறிவியலிலும், மருத்துவத்திலும் மிக முன்னேறிய நாடுகள் கூட கொரோனாவின் கொடிய தாக்குதலைச் சந்தித்துக் கொண்டிருப்பதை தற்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.*

**
*🛡 இந்திய அரசு கொரோனாவைத் தேசியப் பேரிடராக அறிவித்துள்ளதன் மூலம் அதன் தாக்கம் எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.*

**
*🛡 இக்கட்டான இச்சூழலில் நோய் தடுப்புத் தொடர்பாக நம் இயக்கத் தோழர்கள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் மருத்துவ வல்லுநர்கள் கூறும் சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும்.*

**
*🛡 தமிழகம் முழுவதும் 16. 03.2020 முதல் 31.03. 2020 முடிய தொடக்கக் கல்வித்துறையில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.*

**
*🛡 அதிலும் இந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டும் தான், ஆசிரியர்களுக்கு இல்லை என்று தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கல்வித்துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டு இன்று (16.03.2020) மாணவர்களே இல்லாமல் ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு சென்றுள்ளனர்.*

**
*🛡 கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகப் பள்ளிக் கல்வித் துறையில் சில வினோதமான நிகழ்வுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதில் உச்சகட்ட நிகழ்வுதான் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை என்பதும், ஆசிரியர்களுக்குப் பணி என்பதும்.*

**
*🛡 பள்ளிக்கல்வித்துறை ஆணையரின் உத்தரவில் ஆசிரியர்கள் பணிக்குச் செல்ல வேண்டும் என்று எவ்வித வார்த்தையும் இல்லாத நிலையில், மாவட்ட அளவிலான, வட்டார அளவிலான சில கல்வித் துறை அலுவலர்களின் மேதாவித்தனமான புரிதலின் காரணமாகவும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் சில ஆசிரியர்களின் படு வேகமான பரப்புதலின் காரணமாகவும் இந்த வினோத நிலை ஏற்பட்டதாகக் கருதவும் இடம் உள்ளது*

**
*🛡 இச்சூழலில் இன்று (16.03.2020) மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை த் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் அவர்கள் தொடக்கக்கல்வித்துறையில் ஒன்று முதல் எட்டு வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பதையும், மாணவர்கள் இன்றி ஆசிரியர்கள் மட்டும் பணிக்குச் செல்வது என்பது எவ்விதத்திலும் பொருத்தமானதல்ல என்பதையும்,எனவே ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி உள்ளார் என்பதை மாநில மையம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.*

**
*🛡 மேலும்,19.03.2020 புதுதில்லிப் பேரணி கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதுதில்லிப் பயணத்திற்கு வருவதற்கு முன் பணம் மற்றும் முழுப்பணம்  செலுத்தியிருந்த நம் இயக்கத் தோழர்களுக்கு ரயில் பயண முன்பதிவு மற்றும் விமானப் பயண முன்பதிவு கட்டணம் உள்ளிட்ட செலவினங்கள் போக மீதிப் பணம் விரைவில் நடைபெற உள்ள மாநிலச் செயற்குழுவில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் திருப்பி அளிக்கப்படும் என்பதையும் மாநில மையம் தோழமையுடன் தெரிவித்துக் கொள்கிறது.*

சென்னை.
16.03.2020

_🤝தோழமையுடன்,_

*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 15 March 2020

*ஜாக்டோ ஜியோ இன்று ( 15.03.2020 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!*

*ஜாக்டோ ஜியோ இன்று ( 15.03.2020 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🌟ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று (15.03.2020) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரு.க.மீனாட்சி சுந்தரம், திரு.அ.மாயவன், திரு.கு.வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றனர்.*

_இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன;_

*⚡1) கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற காலவரையற்றப் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது 5068 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின்மீது போராட்ட காலத்தில் போடப்பட்ட 17 (பி) குற்றக் குறிப்பாணைகள், 1500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டது ஆகியவை இன்னும் நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வும், பணி ஓய்வும், பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இந்த 17பி குற்றக் குறிப்பாணைகளை இரத்து செய்வது மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களிடம் 16.03.2020 அன்று மனு அளித்தல்*

*⚡2) 24.03.2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர்கள் (பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலம் , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை) ஆகியோரைச் சந்தித்தல்*

*⚡3) ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற விசாரணை குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் திரு.இரா.தாஸ், திரு.மு.அன்பரசு, திரு.அ.மாயவன், திரு.கு.வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.*

*⚡4) மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 11.04 .2020 அன்று சென்னையில் நடைபெறும்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*⚔🛡நாமக்கல்- கொல்லிமலை போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை*

*⚔🛡நாமக்கல்- கொல்லிமலை போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரின் சுற்றறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_சுற்றறிக்கை எண்:06/ 2020, நாள்:15.3.2020_*

*_பேரன்பு மிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்*

**
*🛡நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரக் கல்வி அலுவலரின் லஞ்சம்,ஊழல் மற்றும் ஆசிரியர் விரோத, மாணவர் விரோத, விதிகளுக்குப் புறம்பான தொடர் செயல்பாடுகளின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி கல்வித் துறையின் உயர் அலுவலர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கொல்லிமலை வட்டாரக் கிளையின் சார்பில் பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் 09. 03.2020 அன்று கொல்லிமலை வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது*

**
*🛡போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அது தொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லும் பொருட்டும், பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டும் நான் (பொதுச்செயலாளர்) நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, "இந்த பிரச்சனை எனது கவனத்திற்கு வரவில்லை.எனது கவனத்திற்குக் கொண்டு வந்து அதில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்தி இருக்கலாம். போராட்டத்தை முடித்துக் கொள்ளச் சொல்லுங்கள்.நாளை என்னிடம் வந்து நேரடியாகப் பேசச் சொல்லுங்கள்"என்று கூறினார்*

**
*🛡இச்செய்தியை நம் இயக்கத் தோழர்களிடம் எடுத்துக் கூறியதன் பேரில் அவர்கள் போராட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்*

**
*🛡மறுநாள் (10.03.2020) நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை மாவட்ட, வட்டார நிர்வாகிகள் சந்தித்தபோது அவர்களை அவமரியாதை செய்யும் வகையிலும், கோரிக்கைகள் எதைப்பற்றியும் பேசாமலும், அதிகாரத்தின் உச்சத்தில் நின்று பேசியுள்ளார். முதல்நாள் சங்க நிர்வாகிகளை வரச்சொல்லிவிட்டு மறுநாள் வந்த நிர்வாகிகளை அவமரியாதை செய்ததைத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கிறது*

**
*🛡விலையில்லாப் பொருட்களை நேரடியாகப் பள்ளிகளுக்கு கொண்டு சென்று வழங்குவதற்கு அரசு வழங்கிய நிதியைக் கையாடல் செய்துள்ள ஒரு வட்டாரக் கல்வி அலுவலர் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீது விசாரணை நடத்துவதற்குக் கூட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முன்வராதது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது*

**
*🛡தற்போதைய நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. அய்யணன் அவர்கள் தான் இதற்கு முன்பு பணியாற்றிய அனைத்து மாவட்டங்களிலுமே ஆசிரியர் விரோத நடவடிக்கைகளிலும், அதிகார துஷ்பிரயோகத்திலும், லஞ்ச ஊழல் நடவடிக்கைகளிலும், பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக பல்வேறு புகார்களுக்கு உள்ளானவர்*

**
*🛡எனவேதான் ஒரு வட்டார கல்வி அலுவலர் மீது புகார் எழும்போது அது பற்றி விசாரிப்பதற்கு கூட முன்வராமல் புகார் தெரிவித்தவர்களையே மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.எனவே, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் முறைகேடான, அத்துமீறிய நடவடிக்கைகளை எதிர்த்து மாநில அமைப்பே நேரடியாகக் களம் காண வேண்டிய சூழல் உருவாகி வருகிறது என்பதை நாம் கல்வித்துறைக்குத் தெரிவிக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது*

**
*🛡இந்நிலையில் கொல்லிமலையில் வட்டாரக் கல்வி அலுவலரின் லஞ்ச, ஊழல் நடவடிக்கைகளை கண்டித்தும், அதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் 17.03. 2020 முதல் நாமக்கல் மாவட்டக் கிளையின் சார்பில் மீண்டும் காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது*

**
*🛡அப்போராட்டத்தில் மாநில அமைப்பின் சார்பில் ஜாக்டோ-ஜியோ நிதிக் காப்பாளரும்,STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினருமாகிய தோழர்.ச.மோசஸ் கலந்து கொள்கிறார்*

**
*🛡அநீதிக்கு எதிரான இப்போராட்டத்தில் அண்டை மாவட்டங்களான கரூர், ஈரோடு,சேலம் மாவட்ட கிளை தோழர்களும், வாய்ப்புள்ள பிற மாவட்டத் தோழர்களும் பங்கேற்றுத் தோள் கொடுத்திட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது*

**
*🛡நாமக்கல் மாவட்ட நம் இயக்கத் தோழர்கள் தனித்தில்லை என்பதை சம்பந்தப்பட்ட  நாமக்கல் மாவட்டக் கல்வித்துறை அலுவலர்கள் புரிந்துகொண்டு கோரிக்கைகளின் மீது உரிய,நியாயமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு எதிர்பார்க்கிறது*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday, 10 March 2020

*''கொரானா" பீதி -புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி STFI பேரணி தள்ளி வைப்பு - தனியாக விமானம் மற்றும் ரயில் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்திருந்தவர்கள் உடனடியாக தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்ய கோரியும் - பொதுச்செயலாளர் சுற்றறிக்கை.*

*''கொரானா" பீதி -புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி STFI  பேரணி தள்ளி வைப்பு - தனியாக விமானம் மற்றும் ரயில் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்திருந்தவர்கள் உடனடியாக தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்ய கோரியும் - பொதுச்செயலாளர் சுற்றறிக்கை.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡ 

*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 05/2020 நாள்: 10.03.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

**
*🛡நாம் எதிர்பாராத வகையில் 19.03.2020 அன்று புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி STFI மற்றும் தோழமை அமைப்புக்கள் இணைந்து நடத்தவிருந்த பேரணி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.*

**
*🛡'கொரானா" பாதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை, டெல்லி காவல்துறை அனுமதி மறுப்பு உள்ளிட்ட மிக முக்கியக் காரணங்களுக்காக பேரணி ஒத்திவைக்கப்படுவதாக STFI ன் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் C.N.பார்தி நேற்று 09.03.2020 இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.*

**
*🛡எனவே, மேற்படி பேரணிக்குச் செல்வதற்காக நாம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த பயணத்திட்டத்தை தவிர்க்க இயலாத சூழலில் வேறு வழியின்றி மாநில மைய முடிவின்படி ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.*

**
*🛡கடந்த சில நாட்களாகவே இந்தியா முழுவதும் 'கொரானா" பாதிப்பு தொடர்பான அச்சமூட்டும் செய்திகள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. நம் பயணத்திட்டத்தில் இடம்பெற்ற கோவா, மும்பை உள்ளிட்ட இடங்களும் 'கொரானா" பீதியின் உச்சத்தில் உள்ளன. கோவா போன்ற வெளிநாட்டவர்கள் அதிகம் வரும் சுற்றுலாத் தளங்களும் வெறிச்சோடியுள்ளதாக செய்திகள் வருகின்றன.*

**
*🛡புதுதில்லியில் அரங்கக் கூட்டங்களுக்குக் கூட காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. நம்முடைய பயணத்திட்டத்தில் இணைந்த தோழர்களில் சிலரும் இத்தகைய நேரத்தில் இதுபோன்ற பயணத்திட்டம் சரியாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியதோடு, பயணத்திட்டத்தில் வருபவர்களின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கடந்த சில நாட்களாகக் கருத்து தெரிவித்தும் வந்தனர்.*

**
*🛡இத்தகைய சூழல்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டவாறு பயணத்திட்டத்தை மேற்கொள்வது என்ற முடிவில்தான் மாநில மையம் இருந்தது. காரணம் 182 பேருக்கு கடந்த 10 தினங்களுக்கு முன்பே பெங்களூர் - கோவா – மும்பை – புதுதில்லி செல்வதற்கு ரயில் பயணச் சீட்டுகளும், புதுதில்லி - சென்னை விமானப் பயணச் சீட்டுகளும், சுற்றுலா இடங்களைப் பார்ப்பதற்கு 6 குளிர்சாதன சொகுசுப் பேருந்துகளும், தங்குமிடம் உள்ளிட்ட உணவுகளுக்கான ஏற்பாடுகளும் மதுரை ஸ்ரீ முருகன் டிராவல்ஸ் ஏஜென்ஸியால் செய்யப்பட்டுவிட்டன.*

**
*🛡இந்நிலையில் பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. விமானப்பயண முன்பதிவுக் கட்டணம் உள்ளிட்ட சில முக்கிய முன்பதிவு கட்டணங்களை மீளப் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.*

**
*🛡நாம் எத்தனையோ முறை வடமாநிலங்களுக்கு இயக்க நிகழ்வுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருபோதும் இதுபோன்று பயணம் ரத்து செய்யப்பட்டதில்லை. முதன் முறையாக இது போன்ற சூழலைச் சந்தித்திருக்கிறோம் என்பதை நம் இயக்கத் தோழர்களின் கவனத்திற்கு மாநில மையம் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறது.*

**
*🛡இதுபோன்ற இக்கட்டான சூழலில் மாநில அமைப்பிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு சம்பந்தப்பட்ட தோழர்களை மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இது குறித்த விரிவான விவரங்கள் அடுத்த மாநிலச் செயற்குழுவில் தெரிவிக்கப்படும்.*

**
*🛡புதுதில்லி பயணத் திட்டத்தில் இணைந்திருந்த சில தோழர்கள் தனியாக விமானம் மற்றும் ரயில் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் உடனடியாக தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்திடவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*
       
_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday, 7 March 2020

*STFI டெல்லி பேரணி - பயண வழித்தடம் மாற்றம் : TNPTF பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*

*STFI டெல்லி பேரணி - பயண வழித்தடம் மாற்றம் : TNPTF பொதுச்செயலாளர் சுற்றறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 04/2020*
*நாள்: 06.03.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்!*

**
*🛡 இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள JFME (Joint Forum For Movement on Education) என்னும் அகில இந்திய அளவிலான கூட்டமைப்பின் சார்பில் 19.03.2020 அன்று புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி நடைபெறும் பேரணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இருநூறுக்கும் மேற்பட்ட இயக்க உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.*

**
*🛡 அதே போன்று தமிழ்நாட்டில் STFI-ல் இணைந்துள்ள தோழமைச் சங்கங்களும் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை இப்பேரணியில் பங்கேற்கச் செய்திட களப் பணிகளை ஆற்றி வருகின்றன.*

**
*🛡 தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், தேசியக் கல்விக் கொள்கை – 2019 ஐ திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தேசநலன், ஊழியர் நலன், பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் இப்பேரணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.*

**
*🛡 தமிழ்நாட்டில் 10,11,12 வகுப்புக்களின் பொதுத்தேர்வுக் காலமாக இருப்பதால் பேரணிக்கு வருகை தரவேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் நூற்றுக்கணக்கான நம் இயக்க உறுப்பினர்களால் பேரணிக்கு வர இயலாத நிலை ஏற்பட்டு விட்டது என்பதே உண்மை.*

**
*🛡 இருப்பினும் பல்வேறு சிரமங்களையும் தாண்டி இருநூறுக்கும் மேற்பட்ட நம் இயக்கத் தோழர்கள் பேரணியில் பங்கேற்பது பாராட்டுக்குரியது.*

**
*🛡 பேரணிக்கு வருகை தரும் இயக்கத் தோழர்களின் கவனத்திற்கு. முதலில் பேரணிக்குச் செல்லும் அனைவரும் சென்னை சென்று அங்கிருந்து பெங்களூரு வழியாக கோவா - மும்பை வழியாக ரயில் மார்க்கமாக புதுதில்லி செல்வது என்று திட்டமிடப்பட்டிருந்தது.*

**
*🛡 தற்போது அதில் ஒரு மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் தூரத்தில், நேரத்தில் பெங்களூரு செல்ல முடியும் என்பதால் நேரடியாக பெங்களூரு செல்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.*

**
*🛡 அதற்கான ரயில் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. அப்பயணச்சீட்டுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுக்கு WhatsApp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.*

**
*🛡 எனவே, பேரணிக்கு வருபவர்கள் தங்கள் ஊருக்கு அண்மையில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து 12.03.2020 வியாழக்கிழமை பெங்களூருவுக்கு ரயிலில் பயணம் செய்ய வேண்டும்.*

**
*🛡 எனவே, ஏற்கனவே சென்னை செல்வதற்கு ரயிலில் அல்லது பேருந்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தவர்கள் தயவு செய்து அதை உடனடியாக ரத்து செய்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிரமத்தைப் பொறுத்துக் கொள்ளவும்.*

**
*🛡 மேலும், 19.03.2020 அன்று பேரணி முடிந்து சென்னை திரும்புவதற்கு நாம் ஏற்கனவே திட்டமிட்டபடி விமானப் பயணச்சீட்டுக்கள் அனைவருக்கும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது.*

**
*🛡 புதுதில்லிப் பேரணிக்கு வருகை தருபவர்களுக்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.10,000/- வீதம் மாவட்டச்செயலாளர்கள் ஏற்கனவே முன்பனம் செலுத்தியுள்ளனர். தற்போது மீதிப்பணத்தை பெற்று சம்பந்தப்பட்ட மாவட்டச்செயலாளர்கள் 09.03.2020 அன்று மதுரையில் நேரடியாக மாநிலப்பெருளாளர் வசமோ அல்லது 08.03.2020க்குள் தங்களுக்கு அருகாமையில் உள்ள மாநில மையப் பொறுப்பாளர்கள் அல்லது மாநில துணைப்பொறுப்பாளர்கள் வசமோ தவறாது ஒப்படைத்திட வேண்டும்.*

**
*🛡 08.03.2020 அன்று நடைபெறும் மேற்கு மற்றும் வடமத்திய மண்டல ஆய்வுக்கூட்டங்களின் போது அந்தந்த மண்டலங்களில் உள்ள மாவட்டச்செயலாளர்கள் மேற்படி பணத்தை தவறாது செலுத்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

**
*🛡 பேரணி மற்றும் பயணத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. 'கொரானா" பீதி காரணமாக பயணத் திட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்குமா? என்று சில தோழர்கள் கேட்டு வருகின்றனர்.*

**
*🛡 'கொரானாவை விட கொடுமையானது CPS!
கொரானாவை விட மோசமானது தேசிய கல்வி கொள்கை – 2019!"
என்பதை நம் இயக்கத் தோழர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.*
 
**
*🛡 19.03.2020 புதுதில்லி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியில் நம் தமிழ் முழக்கம், உரிமை முழக்கமாய் ஒலித்திட புறப்படுவோம்... புதுதில்லி நோக்கி...*
                                                             
சென்னை.
06.03.2020

_🤝தோழமையுடன்,_

*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday, 5 March 2020

*தமிழகத்தில் வரும் ஏப். 2ம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதாக வெளியான அறிக்கையால் பரபரப்பு - "தனித்தேர்வு" என்பது "பொதுத்தேர்வு" என தவறுதலாக சுற்றறிக்கையில் பதிவாகியுள்ளது - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம்*

*தமிழகத்தில் வரும் ஏப். 2ம் தேதி முதல் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதாக வெளியான அறிக்கையால் பரபரப்பு - "தனித்தேர்வு" என்பது "பொதுத்தேர்வு" என தவறுதலாக சுற்றறிக்கையில் பதிவாகியுள்ளது - கல்வி அமைச்சர் விளக்கம்*

http://tnptfayan.blogspot.com/2020/03/2.html

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷா ராணி, மார்ச் 3ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2ம் தேதி துவங்கி 10ம் தேதி வரை நடக்க இருப்பதாகவும், அதற்கு தேர்வு மையங்களின் பட்டியலை தயார் செய்யும்படியும் ஒவ்வொரு மையத்திற்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டு காப்பாளர்களை நியமனம் செய்து அந்த பட்டியலை மார்ச் 13க்குள் சென்னைக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டுள்ளார். இந்த குளறுபடி குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று இரவு முகநூலில் பதிவிட்டிருந்தார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது._*

_இந்நிலையில் முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முகநூலில் கூறியது,_

*📲முகநூலில் “எட்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு” அறிவிப்பு குறித்து நான் பதிவிட்டிருந்தத்தகவலை அடுத்து, சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் என்னைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு,  எட்டாம் வகுப்பு “தனித்தேர்வு” என்பது சுற்றறிக்கையில் தவறுதலாக “பொதுத்தேர்வு” எனக் குறிப்பிடப்பட்டு விட்டதாகவும், அதுவே குழப்பத்திற்குக் காரணம் எனவும், தவறு சரிசெய்யப்பட்டு நாளை (05/03/20) புதிய சுற்றறிக்கை அனுப்பப்படும் எனத் தெரிவித்ததுடன், ஏற்கனவே அறிவித்தபடி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதில் மாற்றம் ஏதுமில்லை எனவும் தெரிவித்தார்.*

*_எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்ற வகையில் மகிழ்ச்சியே._*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Wednesday, 4 March 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொளத்தூர் வட்டாரத்தின் சார்பாக மாண்புமிகு. மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது - செய்தி துளிகள்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொளத்தூர் வட்டாரத்தின் சார்பாக மாண்புமிகு. மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*📩கொளத்தூர் ஒன்றிய, தங்கமாபுரிபட்டினம் தேக்காம்பட்டி ஆகிய இரு துவக்கப்பள்ளிகளும் 2004 முதல் தலைமை ஆசிரியர் இல்லாமல், பொறுப்பு தலைமை ஆசிரியர் கொண்டு நாளது தேதி வரை (16-ஆண்டுகளாக) இயங்கி வருகிறது.*

*📩எனவே, மேற்காண இரு துவக்கப்பள்ளிக்களுக்கும் மாணவர்கள் நலன் கருதி, முறையான தலைமை ஆசிரியர் பணி இடம் உருவாக்கித்தர வேண்டுமென கொளத்தூர் ஒன்றியம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாண்புமிகு. மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*தாளவாடி ஒன்றிய மலைப்படி தொடர்பான ஆணையை பெற்றுதர வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தாளவாடி கிளை சார்பாக சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஈஸ்வரன் அவர்களை சந்தித்து மனு அளித்த நிகழ்வு - செய்தி துளிகள்*

*தாளவாடி ஒன்றிய மலைப்படி தொடர்பான ஆணையை பெற்றுதர வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தாளவாடி கிளை சார்பாக சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஈஸ்வரன் அவர்களை சந்தித்து மனு அளித்த நிகழ்வு - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*📩சட்டசபை மானியக்கோரிக்கையின்போது நமது தாளவாடி ஒன்றிய நீண்டநாள் கோரிக்கையான மலைப்படி தொடர்பான ஆணையை பெற்றுத்தர நமது சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஈஸ்வரன் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி தாளவாடி கிளை சார்பாக சந்தித்து இன்று (04.03.2020) மனு அளிக்கப்பட்டது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI), தமிழ்நாடு மாநிலக்குழு கூட்ட அழைப்பிதழ்*

*இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI), தமிழ்நாடு மாநிலக்குழு கூட்ட அழைப்பிதழ்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡தமிழ்நாடு மாநிலக்குழக் கூட்டம் 07.03.2020 சனிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணியளவில், சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாநில அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

_கூடம்பொருள்_

*⚡1. வரவு-செலவு*

*⚡2. 19.08.2020-STFI மற்றும் தோழமை அமைப்புக்களின் சார்பில் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி*

*⚡3.STFI அகிலந்திய நிர்வாகிகள் கூட்ட முடிவுகள்*

*⚡4.ஜாக்டோ-ஜியோ*

*⚡5.ஆசிரியர்கள் மற்றும் அரசு ழியர்கள் மீதான 17(ஆ)நடவடிக்கைகள்- தொடரும் பாதிப்புக்கள்-எதிர்கால நடவடிக்கைகள்*

*⚡6.இதர விஷயங்கள்.*

**
*🛡STFI இணைப்புச்சங்கங்களின் மாநிலத்தலைவர், மாநிலப் பொதுச்செயலாளர், மாநிலப் பொருளாளர், STFI-ன் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர், CEC உறுப்பினர்கள், அகிலந்திய நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_அமைப்பாளர்,_
*இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI),*
_தமிழ்நாடு மாநிலக்குழு._

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday, 2 March 2020

*கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி*

*கிடப்பில் போடப்பட்ட ஓய்வூதியம் தொடர்பான வல்லுநர் குழு அறிக்கை தமிழகத்தில் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*😡பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழு அரசுக்கு அறிக்கை கொடுத்து ஓராண்டுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லாதததால் 5.5 லட்சம் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.*

*😡தமிழகத்தில் 2003 ஏப்.1 முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் 5.5 லட்சம் ஊழியர்கள் இணைந்துள்ளனர்.*

*😡இத்திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்த தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்த வேண்டும். ஆனால், ஆணையத்திடம் இதுவரை ஒரு ரூபாய்கூட செலுத்தவில்லை.*

*😡இதன்காரணமாக ஓய்வு பெற்றோருக்கும், பணியில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் முறையாகப் பணப்பலன்கள் கிடைக்கவில்லை.*

*😡இதனால் அதிருப்தி அடைந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.*

*😡இதையடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல் படுத்துவது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் 2016-ல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.*

*😡இக்குழு இறுதியாக ஐ ஏ எஸ் ஸ்ரீதர் தலைமையில் செயல்பட்டது.  2018-ல் இக்குழு அரசிடம் அறிக்கை அளித்தது.*

*😡ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை . இதனால், ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.*

_புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த திண்டுக்கல் ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியது:_

*😡புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களிடம் பிடித்த தொகை, அரசின் பங்குத்தொகை என ரூ.35 ஆயிரம் கோடி அரசிடமே உள்ளது.*

*😡புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்தவர்களில் ஓய்வு பெற்றோர், பணியில் இறந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். இதில் பாதிக்கும் குறைவானவர்களே ஓய்வூதியத் தொகையைப் பெற்றுள்ளார்.*

*😡புதிய ஓய்வூதியத் திட்டப்படி மத்திய அரசு, பிற மாநில அரசுகள் பணிக்கொடை அளிக்கின்றன. ஆனால், தமிழகத்தில் ஆய்வு பெறுவோருக்கு பணிக்கொடை கொடுப்பதில்லை.*

*😡மேலும் பிடித்த தொகையில் 60 சதவீத பணத்தை வழங்க வேண்டும். மீதியுள்ள 40 சதவீதத்தில் ரூ.1 லட்சத்துக்கு ஆண்டுக்கு ரூ.6,500 ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.*

*😡பணியின்போது இறந்தோரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆனால், அதை தரவில்லை. பிற மாநிலங்களில் ஊழியர்களிடம் பிடிக்கும் 10 சதவீத தொகையுடன், அரசு 14 சதவீத தொகையைச் செலுத்து கின்றன. ஆனால் தமிழக அரசு 10 சதவீதமே செலுத்துகிறது.*

*😡வல்லுநர் குழு அறிக்கை மீது நடவடிக்கை எடுத்து பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும், என்று கூறினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*CPS வல்லுநர் குழு 27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அதன் பரிந்துரைகள் அரசு பரிசீலனையில் உள்ளது - முதலமைச்சர் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட தகவல்.*

*CPS வல்லுநர் குழு 27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது. அதன் பரிந்துரைகள் அரசு பரிசீலனையில் உள்ளது - முதலமைச்சர் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட தகவல்.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎯"01.04.2003 அன்றோ அதன் பின்னரோ முறையான அரசு பணியில் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து ஓய்வூதியம் திட்டத்தினை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும் வகையில் 26.02.2016 நாளிட்ட அரசாணை மூலம் அமைக்கப்பட்ட "வல்லுநர் குழு" 27.11.2018 அன்று தனது அறிக்கையினை அரசிடம் அளித்துள்ளது.*

*🎯அதன் பரிந்துரைகள் அரசு பரிசீலனையில் உள்ளது இதன் மீது இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னரே உரிய அரசாணைகள் வெளியிடப்படும்."*

_🤝தோழமையுடன்;_

*_பி.பிரெடெரிக் ஏங்கெல்ஸ்,_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday, 1 March 2020

*அரசுப் பள்ளிக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பரப்புரையில் கோவை TNPTF*

*அரசுப் பள்ளிக்கான மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பரப்புரையில் கோவை TNPTF*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡மாநிலத்திலேயே முதல் முறையாக கோயமுத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பரப்புரை நடத்தப்பட உள்ளது.*

**
*🛡இப்பரப்புரையை 23.04.2020 அன்று மருதமலை அருகில் உள்ள புதிய பள்ளி ஐ.ஓ.பி காலனி துவக்கப்பள்ளியில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.*

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடைபெறவுள்ள மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பரப்புரையினைத் துவக்கி வைக்க, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை நேரில் சந்தித்து தொண்டாமுத்தூர் வட்டாரக் கிளை சார்பாக 28.02.2020 வெள்ளியன்று அழைப்பு விடுக்கப்பட்டது.*

**
*🛡அழைப்பை ஏற்ற முதன்மைக் கல்வி அலுவலர் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பரப்புரையினைத் துவக்கி வைக்க வருவதாக உறுதியளித்துள்ளார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு*

*நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டாரக்கல்வி அலுவலகத்தில் 09.03.2020 திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணி முதல் காத்திருப்பு போராட்டம் அறிவிப்பு*

**
*🛡தமிழக அரசு அறிவித்த இலவச நலத்திட்ட பொருட்களை 2019-20 ஆம் கல்வியாண்டில் பள்ளிகளுக்கு விநியோகிப்பதற்கான செலவு தொகையை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும், உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.*

**
*🛡இந்த காத்திருப்பு போராட்டம் நாமக்கல் மாவட்ட தலைவர் _தோழர்.ம.கலைச்செல்வன்_ தலைமையில் நடைபெற உள்ளது.*

_🤝தோழமையுடன்;_

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*நாமக்கல் மாவட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மற்றும் குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்கள் குறித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.*

*அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மற்றும் குறைதீர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தங்கள் குறித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎯குறைதீர் மனு பெறப்பட்ட நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.*

*🎯மனு பெறப்பட்ட  நாளிலிருந்து அதிகபட்சமாக ஒரு மாதத்திற்குள் குறை களையப்பட வேண்டும்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм