*அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து - கொரோனாவை விடக்கொடுமை - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*மாநில பொதுச் செயலாளரின் செய்தி அறிக்கை எண்: 05/2020 நாள்: 27.04.2020*
*⚔*
*🛡அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து கொரோனாவை விடக்கொடுமை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்*
_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:_
*⚔*
*🛡தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை தமிழக அரசு முடக்கி வைத்து உத்தரவிட்டுள்ளதற்கும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைக்கப்பட்டதற்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது.*
*⚔*
*🛡தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்: 232 நிதி (படிகள்) துறை நாள்: 27.04.2020 ன் படி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 30.06.2021 வரை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போன்று அரசாணை எண்: 48 (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை) நாள்: 27.04.2020 ன் படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்து ஊதியம் பெறும் உரிமையை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.*
*⚔*
*🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசி ஏற்றத்திற்கு தக்கவாறு மத்திய அரசு கணக்கிடும் விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும். இன்றைய நிலையில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடுத்த 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்வது என்பது எவ்விதத்திலும் நியாயமானதல்ல.*
*⚔*
*🛡மத்திய அரசைப் பின்பற்றி மாநில அரசு செய்துள்ள இச்செயலானது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 18 மாதங்களுக்கு விலைவாசிப் புள்ளியை 01.07.2019 நிலையிலேயே வைத்திருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்குமா? என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் எழுந்துள்ளது.*
*⚔*
*🛡கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 34 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஒரு மாத காலத்திலேயே மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு தனது ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக்கூடிய அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அதன் ஸ்திரத்தன்மையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது.*
*⚔*
*🛡மேலும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவி 2 மாத காலம் ஆகிவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அடுத்த 18 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை முன்கூட்டியே ரத்து செய்துள்ளது என்பது கொரோனாவைக் காரணம் காட்டி மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.*
*⚔*
*🛡மேலும், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாகக் களத்தில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது அகவிலைப்படி உயர்வையும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பையும் ரத்து செய்துள்ள செயல் என்பது கொரோனா கொடுமையை விட மிகப்பெரிய கொடுமையாகவே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களால் பார்க்கப்படுகிறது.*
*⚔*
*🛡கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. நாட்டின் பெருமுதலாளிகளுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிச்சலுகை, பல லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி, பல லட்சம் கோடி ரூபாய் செலவில் ஆடம்பரத் திட்டங்கள் ஆகியவற்றைச் செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி" என்பதைப் போல் தனது ஊழியர்களின் தலையில் கை வைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.*
*⚔*
*🛡எனவே, தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை நிறுத்திவைத்து வெளியிட்டுள்ள அரசாணைகளை மறு பரிசீலனை செய்து ரத்து செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σm