Tuesday, 13 November 2018
Monday, 12 November 2018
*தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது - தேர்தல் செய்தி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_12.html
*⭐2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் _தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது_ என்பதற்கான*
*⭐சென்னை தலைமைச் செயலக பொதுத் _தேர்தல் துறை (தேர்தல்) கடிதம் எண்:5650/2018-2019 நாள் :30.10.2018_*
*⭐இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.*
*⚡1.உடல் ஊனமுற்றோர்.*
*⚡2.முற்றிலும் கண்பார்வை அற்றோர்.*
*⚡3.கண்பார்வை குறைவுடையோர்*
*⚡4.தொழு நோயாளிகள்*
*⚡5.காது கேளாதோர்.*
*⚡6.மனவளர்ச்சி குன்றியோர்.*
*⭐அதற்குரிய சான்றிதழை இணைக்க வேண்டும்.*
*⚡தகவல் பகிர்வு;*
*_செ.பால்ராஜ்,_*
*மாவட்ட செயலாளர்*
*TNPTF - Nellai*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*10.11.2018 ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டமும், TNPTFன் நிலைப்பாடும்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/10112018-tnptf.html
*⭐நவம்பர் 9 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் இரு கூட்டமைப்புகளும் இணைவது என முடிவாற்றிய பின் நவம்பர் 10 அன்று சென்னை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. மிக நீண்ட விவாதம் நடைபெற்ற அந்த கூட்டத்தில் கருத்துக்களை முன் வைத்த உறுப்பு சங்கங்களின் மாநில நிர்வாகிகளில் 70 சதமான பேர் ஏற்கனவே திட்டமிட்ட நவம்பர் 27ம் தேதியை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது எனவும், ஒருங்கிணைப்பாளர்களில் சில மாற்றம் தேவை எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் பிரிந்த சங்கங்கள் இணையும்பொழுது இறுதி யுத்தம் வரை தொடர்வதை உறுதிபடுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.*
*⭐இதில் பங்கேற்ற *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலாளர் _தோழர் மயில்_ அவர்கள்* *நவம்பர 27ஐ நோக்கி அனைத்து பணிகளையும் முடுக்கி விட்ட நிலையில் தேதி மாற்றம் என்பது ஏற்புடையதல்ல என்பதையும், ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கான அனைத்து நிலையிலும் தயாரான நிலையில் மாற்றம் என்பது சோர்வை தரும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்கள்.*
*⭐ _களம் சூடாக உள்ள நிலையில் கீழ்மட்ட உறுப்பினர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு நவம்பர் 27 வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெற வேண்டும்_* *என்பதே நமது நிலைப்பாடு என்பதை பொதுச்செயலாளர் அவர்கள் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தார்கள்.*
*⭐பல்வேறு விவாதங்களுக்கு பின்னால் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர்கள் எடுத்த ஒருங்கிணைந்த முடிவினை அனைவரும் ஏற்க வேண்டும் எனவும், பிளவுபட்ட அமைப்புகள் போராட்ட களம் நோக்கி வருவதென முடிவெடுத்துள்ள நிலையில் சில சமரசங்கள் கூட்டமைப்பு கருதி ஏற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.*
*⭐ _தலைமைச்செயலகத்தில் உள்ள சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க_* *ஆயத்தமாகியுள்ள சூழலும் கருத்தில் கொள்ளப்பட்டது. எனவே தேதி மாற்றம் என்பதில் தவிர்க்க முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே நவம்பர் 27 என்பதை டிசம்பர் 4 என ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட முடிவை அனைவரும் ஏற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்களை பொறுத்தவரை ஏற்கனவே உள்ள 11 பேருடன் பிரிந்த சென்றவர்களுக்கு 9 பேர் என 20 ஒருங்கிணைப்பாளர்கள் என்பது முன்மொழியப்பட்டது.*
*⭐இந்த முடிவானது நவம்பர் 15 அன்று நடைபெற உள்ள ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும். அன்று நடைபெறும் கூட்டத்தில் மாவட்ட பங்கீடு குறித்து இறுதி செய்யப்படும். கூட்டுபேர வலிமையை கருத்தில் கொண்டு மேற்கண்ட முடிவிற்கு அனவைரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.*
⭐உயர்மட்டக்குழு கூட்டம் நிறைவு பெற்ற பின் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நமது இயக்கத்தின் ஆணை எரிப்பு போராட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதில் பங்கேற்ற *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத்தலைவரும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும், ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளருமான _தோழர் மோசஸ்_ அவர்கள் தமது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.*
*⭐இடைநிலை ஆசிரியர்களுக்காக எங்கள் இயக்கம் தனிச்சங்கமாகவும், கூட்டமைப்போடு இணைந்தும் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இடைநிலை ஆசிரியர்களை பிரதான உறுப்பினர்களாக கொண்டுள்ள எங்கள் அமைப்பு அவர்களது இழப்பிற்காக உச்சபட்ச போராட்டத்தில் இறங்குவது என எங்கள் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு முடிவாற்றியுள்ளது. பல்வேறு அமைப்புகள் உள்ள கூட்டமைப்பில் இடைநிலை ஆசிரியர் ஊதிய மாற்றம் மட்டும் ஒற்றைக்கோரிக்கையாக வைத்து போராடுவது என்பது இயலாத ஒன்றாகும்.*
*⭐இது சம்பந்தமாக அரசாணை நகல் எரிப்பு போராட்டத்தை ஆரம்பப்பள்ளிகளில் உள்ள சங்கங்கள் தனியாக நடத்தலாம் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சங்கங்களிடம் கோரிக்கை வைத்தோம். கால தாமதம் ஆன நிலையில்தான் எங்களது மாநிலப்பொதுக்குழு மற்றும் செயற்குழு வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தை அறிவித்துள்ளது.*
*⭐ _ஆணை எரிப்பு நடந்தால் ஜெயில் உறுதி_* *என்று தெரிந்தே நாங்கள் களத்தில் உள்ளோம். இதற்காக அனைத்து கட்சித்தலைவர்களையும் அழைத்து வந்து* *_சென்னையில் 12 ஆயிரம் பேர் கலந்து கொண்ட போராட்ட ஆயத்த மாநாடை நடத்தியுள்ளோம். கடந்த வாரம் மண்டல அளவிலான ஆயத்த கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம். நாளை மாவட்ட அளவிலான ஆயத்த கூட்டங்கள் நடக்க உள்ள சூழலில் எங்களது போராட்டத்தை கைவிட இயலாது என மிகவும் ஆணித்தரமாக தெரிவித்தார். ஒரு வேளை ஜாக்டோ ஜியோ அரசாணை எரிப்பு போன்ற உச்பட்ச போராட்டத்தை அறிவிக்குமானால் எங்கள் மாநில செயற்குழு இம்முடிவு குறித்து ஆலோசிக்கும் என தெரிவிக்கப்பட்டது._*
*⭐நமது நியாயமான போராட்ட குணத்தை அறிந்த ஒருங்கிணைப்பாளர்கள்* *_நமதமைப்பு வருகிற 26 நடத்த உள்ள அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்திற்கு தடையேதுமில்லை_* *என முடிவாற்றினார்கள். இதனால் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நவம்பர் 15 அன்று அரசாணை 56ஐ எரிக்க திட்டமிட்டடிருந்த போராட்டத்திற்கும் தடை விலக்கிக்கொள்ளப்பட்டு தீர்மானமாக்கப்பட்டுள்ளது. எனவே பிரதான உயிர்க்கோரிக்கைக்கு தனிச்சங்க நடவடிக்கைகளுக்கு தடையேதுமில்லை.*
*⭐மேலும் *_சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கீடு செய்தி முழுவதும் போலியானது._* *இது குறித்து நவம்பர் 15 அன்று தான் பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.*
*⭐எனவே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் போர்க்குணமிக்க தோழமைகளே நவம்பர் 26 என்பது நமது இயக்க வரலாற்றில் பொறிக்கப்படவுள்ள பொன்னான நாள். தமிழக சிறைகளில் சமரசமற்ற போராளிகள் குடிபுகும் நாள். கோரிக்கை வென்றெடுப்பது ஒன்றே நமது குறிக்கோள். இடைநிலை ஆசிரியர்களின் இன்னல்கள் தீர்க்க இயக்கம் விடுத்துள்ள அறை கூவலை ஏற்று இன்று முதல் களப்பணி தீவிரமாகட்டும். மாவட்ட, வட்டார, நகர கிளைகளில் ஆயத்த கூட்டங்களை நடத்தி 100 சதவீத உறுப்பினர்களை பங்கேற்க செய்து அரசாணையை தீயிட்டு கொளுத்தும் போர்க்களத்தில் களமிறக்குவோம்.* சிறை வளாகத்தில் சந்திப்போம்.
*⭐ஒன்றுபட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிக்கும் தீரமிக்க போராட்டத்திலும் எழுச்சியோடு பங்கேற்போம்.*
*இன்குலாப்,*
*இன்குலாப்,*
*இன்குலாப் ஜிந்தாபாத்.*
*🔅தகவல் பகிர்வு:*
*_ஆ.முத்துப்பாண்டியன்_*
மாவட்டச் செயலாளர்
*TNPTF*
சிவகங்கை மாவட்டம்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 10 November 2018
*நவம்பர் 26 அரசாணை எரிப்பு போராட்டத்திற்கான களப்பணியை தீவிரப்படுத்துக! நவம்பர் 17-ல் பெயர்ப் பட்டியல் ஒப்படைப்பு செய்க! - TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/26-17-tnptf.html
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⭐ நம் போரியக்கத்தின் நவம்பர் 26 பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டக் களப்பணிகளை முன்னைக்காட்டிலும் வேகத்தோடும், விவேகத்தோடும் தொடருங்கள்.*
*⭐11.11.2018 மாவட்ட ஆயத்தக் கூட்டங்களை பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் நடத்துங்கள்.*
*⭐போர்க்களத்தில் பயணிக்கும்போது பக்கவாட்டில் எழும் சிறுசிறு கூச்சல்களைக் கேட்டுப் பயண வேகத்தைக் குறைப்பது இலக்கை எட்ட உதவாது.*
*⭐எத்தகு இடர் வரினும் நவம்பர் 26 ல் சுடர்கொண்டு சுட்டெரிப்போம் அரசாணையை!*
*⭐நாளை (11.11.2018) நடைபெறும் மாவட்ட ஆயத்தக் கூட்டங்களில் வட்டார வாரியாக அரசாணை எரிப்புப் போரில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையைப் பெற்று அதை ஆயத்தக் கூட்டத்திற்கு வருகைதரும் மாநிலப் பொறுப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.*
*⭐மாவட்ட ஆயத்தக்கூட்டம் முடிந்த ஒன்றிரண்டு தினங்களுக்குள் வட்டார, நகரக் கிளைகளின் சிறப்புக் கூட்டத்தை நடத்தி அரசாணை எரிப்புப் போரில் பங்கேற்பவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.*
*⭐17.11.2018 தேனி மாநிலச் செயற்குழுவில் அப்பட்டியல் ஒப்படைக்கப்படவேண்டும்.*
*⭐இப்பணிகளை முடிக்க இமைப்பொழுதும் சோராது களப்பணியாற்றுங்கள்.*
*எழுமின்!*
*விழுமின்!*
*குறிசாரும் வரை*
*நில்லாது செல்மின்!*
*🔅தோழமையுடன்;*
*_ச.மயில்_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*இடைநிலை ஆசிரியர்கள்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியமே TNPTF ன் நிலைப்பாடு*.
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/tnptf.html
*⚡சில சங்கங்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்று அடிப்படை புரிதல் இல்லாமலே பேசிவருகின்றனர்.*
*_இடைநிலை ஆசிரியர்களின் இன்னல்களை தெரிந்து கொள்ள இறுதிவரை இப்பதிவை கவனமாக படியுங்கள்._*
⭐ஆவணப்படுத்தப்பட வேண்டிய கட்டுரைகளில் இதுவும் ஒன்று.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥மாநில அரசே அழைத்துப் பேசுங்கள் இல்லையேல் இ .நி .ஆசிரியருக்கு பாதிப்பை தந்த *அரசாணையை எரித்து எதிர்ப்பை காண்பிப்போம் என TNPTF ஏன் அறைக் கூவல் விடுக்கிறது தெரியுமா?*
*_பாதிப்பு - 1_*
*⭐2002ல் பணியேற்ற இ.நி.ஆசிரியர் ஊதியம் 2006 ஜூனில் 5125 + DA*
*⭐அதே 2004ல் ரூபாய் 4000 தொகுப்பூதியம் பெற்று 2006 ஜூனில் காலமுறை ஊதியம் பெற்ற பட்டதாரி ஆசிரியர் ஊதியம் 5500 + DA*
*⭐2006 ஜூனில் இவருக்கும் உள்ள ஊதிய வித்யாசம் சுமார் 400 ரூபாய்*
*⭐ஆனால் இன்று உயர் கல்விக்காக 2 ஊக்க ஊதியம், 10 ஆண்டுகள் பணிமுடித்து தேர்வுநிலை ஊக்க ஊதியம் பெற்ற பிறகு இ.நி .ஆ ஊதியம் மொத்தம் 62500*
*⭐அதே போல் பட்டதாரி ஆசிரியரும் 2 ஊக்க ஊதியம் + 10 வருட ஊக்க ஊதியம் பெற்று இன்று பெறும் மொத்த ஊதியம் 72500*
*⭐2006ல் ரூபாய் 400 மட்டுமே வேறுபாடாக இருந்த ஊதியம் இன்று 10000 வித்யாசம் பெற்றுள்ளது.*
*⭐இது 99 முதல் 2009 வரை பணியேற்ற அனைத்து இடைநிலை ஆசிரியருக்கும் பொருந்தும்.*
*⭐இதற்கு காரணம் மத்திய அரசுக்கு இணையான 9300+ 4200 பெறாததே காரணம் ஆகும்.*
*_பாதிப்பு - 2_*
*⭐5200 + 2800 அடிப்படை ஊதியமாக பெற்று பணியேற்ற 2009க்கு பிந்தைய ஆசிரியர்கள் 9300+ 4200 பெற்று இருந்தால் 2009ல் பணியேற்ற ஆசிரியர் இன்று பெற வேண்டிய ஊதியம் 46000.*
*⭐ஆனால் அவர்கள் இன்று பெறுவது 29000 மட்டுமே.*
*⭐இழப்பு கிட்டதட்ட 17000 .*
*_பாதிப்பு - 3_*
*⭐இன்று 99 க்கு பிறகு பணியேற்ற இடைநிலை ஆசிரியர் பெறும் தனி ஊதியத்திற்கு DA இல்லை EL சரண் இல்லை.*
*⭐கிட்டத்தட்ட வருடத்திற்கு 3000 இழப்பு.*
*_பாதிப்பு - 4_*
⭐99க்கு பிறகு பணியேற்ற இ.நி. ஆ பட்டதாரியாகவோ தலைமை ஆசிரியராகவோ இன்றைய சூழலில் *பதவி உயர்வு பெற்றால்* தான் பெற்று வரும் *ஊதியத்தில் 500 குறைவு* .
*⭐உலகிலேயே பதவி உயர்வு பெற்றால் ஊதியம் குறையும் என்பது 99க்கு பிறகு பணியேற்ற இடைநிலை ஆசிரியர்கள்தான்.*
*_பாதிப்பு - 5_*
*⭐இன்று புதிதாத பணியேற்கும் இ.நி.ஆ ஊதியம் 20,600 ஆனால் பட்டதாரி ஆசிரியருக்கு 35600 முதுகலை ஆசிரியருக்கு 35700.*
⭐எங்கே தவறு உள்ளது . *பட்டதாரிக்கும் - முதுகலை ஆசிரியருக்கு 100 வித்யாசம் இ.நி.ஆ சிரியருக்கு 16 ஆயிரம் வித்யாசம் .*
*_பாதிப்பு - 6_*
*⭐99க்கு முன் பணியேற்ற அத்தனை இடைநிலை ஆசிரியரும் இன்று Pay Matrix ல் 1,12,000 வரும் வரை வருடா வருடம் ஊக்க ஊதியம் உண்டு.*
*⭐ஆனால் 99 க்கு பிறகு பணியேற்ற அத்தனை இ .நி .ஆசிரியரும் Pay Matrix ல் 65,500 ஐ தொட்டு விட்டால் (பல பேர் 2019 ல் இதை எட்டுகின்றார்) 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வருடாந்திர ஊதிய உயர்வு.*
*⭐2009 க்கு பிறகு மாநில அரசில் பணிபுரியும் இ.நி.ஆசிரியர்களுக்குக்கு மூன்று விதமான ஊதியம் வழங்கப்படுகிறது.*
*⭐இக்குறைகளை களைந்து ஊதிய முரண்பாட்டை சரி செய்து மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை பெற*
*⭐பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களே TNPTF அழைப்பை ஏற்று*
*⭐நவம்பர் -26 ல் அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள புயலென புறப்படுவீர்.*
*🤝தோழமையுடன்;*
*_செ.பால்ராஜ்,_*
*TNPTF - நெல்லை மாவட்ட செயலாளர்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Wednesday, 7 November 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு அழைப்பிதழ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_7.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*✴️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 17.11.2018 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தேனியில், திருமலை நகரில் உள்ள (கம்மவார் பொறியியல் கல்லூரி வழி) தேனி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் _மாநில தலைவர் தோழர். மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*
*கூட்டப்பொருள்:*
*👍வேலை அறிக்கை,*
*👍26.11.2018 - அரசாணை எரிப்புப் போராட்டம்,*
*👍27.11.2018 - ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்,*
*👍அகில இந்திய பெண்ணாசிரியர் மாநாடு மற்றும் போராட்ட நிதி நிலுவை,*
*👍2018-19 இயக்க உறுப்பினர் சேர்க்கை - பட்டியல் ஒப்படைத்தல் - பங்கீடு செலுத்துதல்,*
*👍ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப்பூர்வமாக),*
*👍பொதுச்செயலாளர் கொணர்வன,*
*👍இதர விஷயங்கள்.*
*☀️மாநில செயற்குழுவில் உள்ள தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
*_மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம்:_*
*☀️17.11.2018 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவே மாநிலப் பொறுப்பாளர்கள் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 6 November 2018
*TNPTF - நவம்பர்-26 மாவட்டத் தலைநகர் அரசாணை எரிப்புப்போர்-அழைப்பிதழ் மாதிரி மற்றும் பங்கேற்பாளர்கள் பட்டியல் (வட்டார அளவிலான பட்டியல்) மாதிரி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/tnptf-26.html
*_பேரன்புமிக்க ஆசிரியப் பெருமக்களே! வணக்கம்._*
*_“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு - தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?”_ என்று பாடிய மகாகவியின் பாடல் வரிகளுக்கு வடிவமாக, தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதியை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அக்கினிக் குஞ்சாய் ஆர்த்தெழும் நாள்தான் 2018 நவம்பர் 26.*
*⭐அன்று இந்த அக்கினிக்குஞ்சு பற்றவைக்கும் “அரசாணை எரிப்பு” என்ற போராட்ட நெருப்பு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டெரிக்கும்.*
*⭐இழந்த உரிமையை மீட்டெடுப்பதற்கான இக்களப்போரில் நெஞ்சுரத்தோடும் நேர்மைத் திறத்தோடும் பங்கேற்று வரலாற்றுச் சாதனை படைக்க தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வாஞ்சையோடு அழைக்கிறது.*
*⭐44 ஆண்டுகால மிகக் கடுமையான களப் போராட்டங்களின் மூலம் நம் முன்னோர்கள் அடிபட்டு, மிதிபட்டு, உதைபட்டு, வதைபட்டு , கண்ணீரும் செந்நீரும் சிந்தி, பல இன்னுயிர்களை ஈந்து பெற்றுத் தந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை தமிழக அரசின் ஏழாவது ஊதியக்குழுவின் அரசாணை எண் : 234 நிதி(ஊதியப்பிரிவு) துறை நாள் : 01.06.2009 இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறித்துக்கொண்டது. மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர் ஊதியம் (PB-2) 9300 - 34800 + 4200 PB என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசோ இடைநிலை ஆசிரியர்களுக்கு (PB1) 5200 - 20200 + 2800 PB என நிர்ணயித்து 01.01.2006முதல் அடிப்படை ஊதியத்திலேயே ரூ 5500-ஐ பறித்துக் கொண்டது.*
*⭐அடுத்து வந்த தமிழக அரசின் எட்டாவது ஊதியக்குழுவின் அரசாணை எண் : 303 நிதி ( ஊதியப்பிரிவு) துறை நாள் : 11.10.2017, மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ 35400 என நிர்ணயித்திருக்க, தமிழக அரசிலோ இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.20600 - என நிர்ணயித்து அடிப்படை ஊதியத்திலேயே ரூ 14800 ஐ பறித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது.*
*⭐இந்த அநீதியை எதிர்த்து முதன்முதலில் போராட்டக்களம் கண்ட இயக்கமும், இன்றுவரை பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான களப் போரைச் சமரசமின்றித் தொடர்ந்து கொண்டிருக்கும் இயக்கமும், எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் இயக்கமும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிதான்.*
*⭐இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக இன்றுவரை தனிச்சங்க நடவடிக்கையாக மட்டும் 28 களப்போராட்டங்களை நடத்தியுள்ள ஒரே இயக்கம் _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி_ மட்டுமே.*
*⭐நம்முடைய போராட்டங்களின் விளைவாக ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக தமிழகஅரசு அமைந்த பல்வேறு குழுக்கள் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புப் கோரிக்கையைக் கொச்சைப்படுத்தின.*
*⭐தமிழக அரசின் 7 வது ஊதிய மாற்றக்குழுவின் தலைவரான _திருமதி.மாலதி, IAS_ அவர்கள் “இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ளதால் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தர முடியாது” என்று வேடிக்கையான விளக்கத்தைத் தந்தார்.*
*⭐ _திரு.கிருஷ்ணன், IAS_ அவர்கள் தலைமையிலான மூவர் குழுவோ “ இடைநிலை ஆசிரியர்கள் பத்தாம் வகுப்புக் கல்வித்தகுதி கொண்டவர்கள்.*
*⭐எனவே, அவர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது” என்று கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்து முற்றிலும் தவறான தகவலைக் கூறி இடைநிலை ஆசிரியர்களைக் கேலி செய்தது.*
*⭐ _திரு.ராஜீவ் ரஞ்சன், IAS_ அவர்கள் தலைமையிலான ஒரு நபர் குழுவோ “இடைநிலை ஆசிரியர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார்கள். கிராமங்களில் விலைவாசி மிகவும் குறைவு.*
*⭐எனவே, அவர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தேவையில்லை” என்று பொது அறிவுக்கு ஒவ்வாத கருத்தைத் தெரிவித்து நம் நெஞ்சில் கோபக்கனலை ஏற்றியது.*
*⭐தற்போது 8 வது ஊதியக்குழுவின் முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்டுள்ள திரு.சித்திக், IAS அவர்கள் தலைமையிலான ஒரு நபர் குழுவோ காலநீட்டிப்பில் காலந்தள்ளிக் கொண்டிருக்கிறது.*
*⭐இன்றைய நிலையில் ஊதியத்தில் தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் , கடைநிலை ஊழியர்கள் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது இந்தியாவிலேயே மிகக்குறைவான ஊதியம் பெறும் இழிநிலைக்கு தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்கள் கொண்டு செல்லப்பட்டு விட்டார்கள். ஒரே கல்வித்தகுதி, ஒரே பணிநிலை கொண்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று வகையான ஊதியம் வழங்கி தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது.*
*⭐இத்தகு இழிநிலை போக்கிட இதுவரை நாம் நடத்திய போராட்டங்கள் நமக்குத் தீர்வைத் தரவில்லை.*
*⭐எனவே, இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியைப் போக்கிட, பறிக்கப்பட்ட ஊதியத்தை மீட்டிட எத்தகு தியாகத்திற்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தயாராகிவிட்டது.*
*⭐மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெறுவதற்காக 1985 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசாணை எரிப்புப் போராட்டங்களுக்குப் பிறகு 30 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டு ஆசிரியர் இயக்க வரலாற்றில் முதன்முறையாக தனிச்சங்க நடவடிக்கையாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 2018 நவம்பர் 26 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தைப் பறித்த அரசாணை எண் : 234 நிதி(ஊதியப் பிரிவு) துறை நாள் : 01.06.2009 மற்றும் அரசாணை எண் : 303 நிதி (ஊதியப்பிரிவு) துறை நாள் : 11.10.2017 ஆகியவற்றைத் தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்தை நடத்தவுள்ளது.*
*“சாக்காடே நம்மைத் தொடர்ந்து வந்தாலும் சர்க்காரே நம்மைத் தூக்கி எறிந்தாலும் ஆக்கமெலாம் நாம் இழந்து தவித்தாலும் அடுக்கடுக்காய் துயர்கள் நம்மை வதைத்தாலும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்பதற்கான இக்களப்போரில் எத்தகு இடர்வரினும் எதிர்கொள்வோம்!*
*சிறைச்சாலைகளையும் தவச்சாலைகளாக எண்ணுவோம்!*
*நவம்பர் - 26 அரசாணை எரிப்புப்போரில் எழுச்சியுடன் பங்கேற்போம்!*
*இது சங்கம் வளர்ப்பதற்கான போராட்டமல்ல;*
*அங்கம் கொடுத்தேனும் உரிமையை மீட்பதற்கான போராட்டம்!*
*ஆசிரியப் பேரினமே ! அநீதி களைய ஆர்ப்பரித்து வாரீர்!*
*“ஒருவனின் காலடியில் மண்டியிட்டு உயிர்வாழ்வதை விட எழுந்து நின்று போராடி உயிரை விடுவது எவ்வளவோ மேல்”*
*- சேகுவேரா*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 4 November 2018
*அரசாணை எரிப்புப் போராட்டம்-11.11.2018 மாவட்ட ஆயத்தக் கூட்டங்கள்-மாவட்ட வாரியாகப் பங்கேற்கும் மாநிலப் பொறுப்பாளர்கள் பட்டியல் மற்றும் மாவட்ட ஆயத்தக்கூட்ட மாதிரி அழைப்பிதழ்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/11112018.html
*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்ட மாவட்ட ஆயத்தக்கூட்டம் 11.11.2018 அன்று மாவட்டங்களில் பங்கேற்கும் மாநில நிர்வாகிகள் பட்டியல்.*
*⚡கன்னியாகுமரி - _தோழர்.மூ.மணிமேகலை,_ மாநிலத் தலைவர்.*
*⚡திருநெல்வேலி - _தோழர்.டி.மல்லிகா,_ மாநிலச் செயலாளர்.*
*⚡தூத்துக்குடி - _தோழர்.மயில்,_ மாநில பொதுச்செயலாளர்,* *_தோழர்.மு.பிரம்மநாயகம்_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡விருதுநகர் - _தோழர். என்.நாகராஜன்,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡சிவகங்கை - _தோழர். பெ.சீனிவாசன்,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡இராமநாதபுரம் - _தோழர்.எம்.இரவிந்திரராஜன்,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡மதுரை - _தோழர். சோ.முருகேசன்,_ மாநிலச் செயலாளர்,* *_தோழர்.எ.ஜெகநாதன்,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡தேனி - _தோழர். தா.கணேசன்,_ துணைப் பொதுச்செயலாளர்.*
*⚡கள்ளர்பள்ளி - _தோழர். இரா.மலர்விழி,_ மாநில துணைத்தலைவர்.*
*⚡திண்டுக்கல் - _தோழர்.டி.முருகன்,_ மாநிலச் செயலாளர்.*
*⚡திருச்சி - _தோழர். கே.வளர்மதி,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡கரூர் - _தோழர்.மு.க.புரட்சித்தம்பி,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡புதுக்கோட்டை - _தோழர். தே.ஜோசப் ரோஸ்,_ மாநில துணைத்தலைவர்.*
*⚡தஞ்சாவூர் - _தோழர்.வி.ஹேமலதா,_ மாநிலச் செயலாளர்.*
*⚡திருவாரூர் - _தோழர்.ஜெ.சார்லி தேவபிரியம்,_ மாநில செயற்குழு உறுப்பினர்,* *_தோழர்.க.முத்துசாமி,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡நாகப்பட்டினம் - _தோழர்.இரா.தமிழ்ச்செல்வி,_ மாநில துணைத்தலைவர்.*
*⚡கடலூர் - _தோழர்.சா.சித்ரா,_ மாநிலச் செயலாளர்.*
*⚡விழுப்புரம் - _தோழர்.பெஅலோசியஸ் துரைராஜ்,_ மாநில துணைத்தலைவர்.*
*⚡சேலம் - _தோழர்.அ.ரஹும்,_ மாநில துணைத்தலைவர்.*
*⚡நாமக்கல் - _தோழர்.எ.பிரபு செபாஸ்டியன்,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡ஈரோடு - _தோழர்.ச.மோசஸ்,_ STFI பொதுக்குழு உறுப்பினர்.*
*⚡கோவை - _தோழர்.இ.வின்சென்ட்,_ மாநிலச் செயலாளர்.*
*⚡திருப்பூர் - _தோழர்.ஜெ.அருள் சுந்தரரூபன்,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡நீலகிரி - _தோழர்.தோ.ஜான்கிறிஸ்துராஜ்,_ மாநிலத் துணைத்தலைவர்.*
*⚡திருவண்ணாமலை - _தோழர்.சி.ஜி.பிரசன்னா,_ மாநிலச் செயலாளர்.*
*⚡வேலூர் - _தோழர்.க.ஜோதிபாபு,_ மாநில பொருளாளர்.*
*⚡காஞ்சிபுரம் - _தோழர்.என்.ஞானசேகரன்,_ மாநில செயற்குழு உறுப்பினர்,* *_தோழர்.சா.டேவிட் ராஜன்,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*⚡திருவள்ளூர் - _தோழர்.எஸ்.ரஞ்சன் தயாளதாஸ்,_ மாநில செயற்குழு உறுப்பினர்,* *_தோழர். மு.சீனுவாசன்,_ மாநில செயற்குழு உறுப்பினர்.*
*🤝தோழமையுடன்;*
*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 3 November 2018
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசாணை எரிப்புப் போராட்டம் - கிழக்கு மற்றும் வடக்கு மண்டல ஆயத்த கூட்டம் (விழுப்புரம்) - புகைப்படத் தொகுப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_3.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதியத்தை மீட்க, நவம்பர் 26 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அரசாணை எரிப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.*
*⚡தமிழ்நாடு இடைநிலை ஆசிரியரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை மீட்டிட,*
*⚡1988 முதல் இடைநிலை ஆசிரியர் பெற்றுவந்த மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பறித்திட்ட அரசாணை எண் 234 & 303 - ஐ தீயிட்டு கொளுத்துகின்ற,*
*⚡ _அரசாணை எரிப்புப் போராட்ட வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அளவிலான ஆயத்தக் கூட்டம்_ விழுப்புரத்தில் இன்று 03.11.2019 சனிக்கிழமை 9 மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்டத்திலுள்ள வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க தூண்களாக விளங்கும் உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர மறவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.*
*_இது சாதனைக்கான போராட்டமல்ல! வேதனையை தீர்க்கும் போராட்டம்!_*
*_இது சரித்திரம் படைக்கும் போராட்டமல்ல! தரித்திரம் உடைக்கும் போராட்டம்!_*
*_இழந்ததை மீட்டிட, உரிமையை நாட்டிட, எத்தகையை இடர்வரினும் எதிர்த்து நிற்போம்!_*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அளவிலான ஆயத்தக் கூட்டத்தில் STFI பொதுக்குழு உறுப்பினர் தோழர்.மோசஸ் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள்.*
https://youtu.be/2xeq_fsgXrI
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அளவிலான ஆயத்தக் கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் தோழர். ஜோதிபாபு அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள்.*
https://youtu.be/wQsB196dJb8
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வடக்கு மற்றும் கிழக்கு மண்டல அளவிலான ஆயத்தக் கூட்ட புகைப்படத் தொகுப்பு கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள்.*
https://tnptfayan.blogspot.com/2018/11/blog-post_3.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)





















































