Saturday, 30 June 2018
*பி.லிட் தகுதிபெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பி.லிட் உயர்கல்விக்கு பெற்ற ஊக்க ஊதியத்தைத் திரும்ப செலுத்தும் உத்தரவு மற்றும் 8 வது ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் இதுவரை செய்யப்படாமை குறித்து ஆசிரியர்களின் நலன் கருதி மீண்டும் ஊக்க ஊதியம் வழங்கி உத்தரவிட வேண்டுதல் மற்றும் ஊக்க ஊதியத்தை திரும்பச் செலுத்தும் உத்தரவை ரத்து செய்திட வேண்டி மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் அவர்களிடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது தொடர்பான செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/8_8.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*
*⚡மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை அவர்களும்,*
*⚡மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களும்,*
*⚡மாநில பொருளாளர் தோழர். ஜோதி பாபு அவர்களும்,*
*⚡STFI ன் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர். ச.மோசஸ் அவர்களும்,*
*⚡துணைப் பொதுச்செயலாளர் தோழர். கணேசன் அவர்களும்,*
*🌟மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச்செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள்*
*🌟மேலும் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களையும் நேரில் சந்தித்து மனு வழங்கப்பட்டது.*
*⚡மனு வழங்கிய போது கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்*
*_மனுவில் கூறப்பட்டுள்ள செய்திகள்_*
*🌟பி.லிட் தகுதியுடன் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பி.லிட் உயர்கல்விக்கு கடந்த 40 ஆண்டுகளாக ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. அதை நிறுத்தி வைத்து மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டார். அது தொடர்பாக அரசுக்கு முறையீடு செய்த நிலையில் ஊக்க ஊதியம் வழங்க விதிகளில் இடமில்லை என அரசுக் கடிதம் வெளியிடப்பட்டது. அதைப் பயன்படுத்தி கீழ்நிலை அலுவலர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தைத் திரும்பச் செலுத்த உத்தரவிட்டனர். அவ்வாறு திரும்பச் செலுத்தாதவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவின்படி ஊதிய நிர்ணயம் செய்ய இன்றுவரை மறுத்து வருகின்றனர்.*
*🌟தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறையில் இனி வரும் காலங்களில் பி.லிட் தகுதியுடன் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களின் பி.எட் ஊக்க ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை நிராகரித்து உத்தரவிட வழிகாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊக்க ஊதியம் பெற்று வருபவர்கள் தொடர்பாக எந்த உத்தரவும் பிரப்பிக்கப்படவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக பெற்றுவந்த ஊக்க ஊதியத்தை திரும்பச் செலுத்த கீழ்நிலை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். கீழ்நிலை அலுவலர்களின் இச்செயல்பாடு இயக்குநரின் செயல்முறைக்கு முரணாக உள்ளதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.*
*🌟பெற்ற ஊக்க ஊதியத்தை திரும்ப செலுத்தாத நிலையில் கீழ்நிலை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு 8 வது ஊதியக்குழுவின் படி ஊதிய நிர்ணயம் செய்ய மறுத்தும் வருகின்றனர். எனவே இது தொடர்பாக உரிய வழிகாட்டுதல் வழங்கி ஊதிய நிர்ணயம் செய்ய உத்தரவிடுமாறும், பெற்ற ஊக்க ஊதியத்தைத் திரும்ப செலுத்த வற்புறுத்தும் நிலையை மாற்றிடுமாறும் 40 ஆண்டுகாலமாய் பெற்று வந்த ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்கி ஆணையிடுமாறும் மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் கோருகிறோம்.*
*தோழமையுடன்;*
*_தோழர்.ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*8 மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதலில் பங்கேற்க தடை - இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தி மாவட்ட மாறுதல் வழங்கிட ஆவண செய்திட வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் மணு வழங்கப்பட்டது தொடர்பான செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/8_75.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*
*⚡மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை அவர்களும்,*
*⚡மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களும்,*
*⚡மாநில பொருளாளர் தோழர். ஜோதி பாபு அவர்களும்,*
*⚡STFI ன் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர். ச.மோசஸ் அவர்களும்,*
*⚡துணைப் பொதுச்செயலாளர் தோழர். கணேசன் அவர்களும்,*
*மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களிடம் மனு வழங்கினார்கள்*
*மனுவில் கூறப்பட்டுள்ள செய்திகள்*
*🌟21.06.2018 ல் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில்,*
1.கிருஷ்ணகிரி,
2.தர்மபுரி,
3.திருவண்ணாமலை,
4.விழுப்புரம்,
5.வேலூர்,
6.திருப்பூர்,
7.ஈரோடு,
8.சேலம்.
*ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.*
*🌟மேலும் பிற மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிபணியிடங்கள் அனைத்து மாவட்ட மாறுதலுக்கு உட்படுத்தப்படாத நிலையும் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் மாவட்ட மாறுதலை எதிர்நோக்கி இருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.*
*🌟இதனால் 10,15 ஆண்டுகளுக்கு மேலாக பிற மாவட்டங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தோடு இணைந்து வாழும் வாய்ப்பும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இம்முடிவால் தமிழகம் முழுவதும் 2018-19 ஆம் கல்வியாண்டில் மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த பணிநிலையில் மூத்த இடைநிலை ஆசிரியர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.*
*🌟காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை மாணவர் நலன் கருதி உடனடியாக நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்ட இடைநிலை ஆசிரியர்களும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் உடனடியாக ஆணை வெளியிட்டு தமிழ்நாடு ஆசிரியர்களின் நலன் காத்திட எங்களது மாநில அமைப்பின் சார்பில் கனிவுடன் கோருகிறோம்.*
*தோழமையுடன்;*
*_தோழர்.ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*8 மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதலில் பங்கேற்க தடை - இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தி மாவட்ட மாறுதல் வழங்கிட ஆவண செய்திட வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து மணு வழங்கப்பட்டது தொடர்பான செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/8_30.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,*
*⚡மாநில தலைவர் தோழர்.மூ.மணிமேகலை அவர்களும்,*
*⚡மாநில பொதுச்செயலாளர் தோழர். ச.மயில் அவர்களும்,*
*⚡மாநில பொருளாளர் தோழர். ஜோதி பாபு அவர்களும்,*
*⚡STFI ன் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் தோழர். ச.மோசஸ் அவர்களும்,*
*⚡துணைப் பொதுச்செயலாளர் தோழர். கணேசன் அவர்களும்,*
*மதிப்புமிகு பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு வழங்கினார்கள்*
*மனுவில் கூறப்பட்டுள்ள செய்திகள்*
*🌟21.06.2018 ல் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் கலந்தாய்வில்,
1.கிருஷ்ணகிரி,
2.தர்மபுரி,
3.திருவண்ணாமலை,
4.விழுப்புரம்,
5.வேலூர்,
6.திருப்பூர்,
7.ஈரோடு,
8.சேலம்.
*ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டது.*
*🌟மேலும் பிற மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிபணியிடங்கள் அனைத்து மாவட்ட மாறுதலுக்கு உட்படுத்தப்படாத நிலையும் ஏற்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் மாவட்ட மாறுதலை எதிர்நோக்கி இருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.*
*🌟இதனால் 10,15 ஆண்டுகளுக்கு மேலாக பிற மாவட்டங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தோடு இணைந்து வாழும் வாய்ப்பும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இம்முடிவால் தமிழகம் முழுவதும் 2018-19 ஆம் கல்வியாண்டில் மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த பணிநிலையில் மூத்த இடைநிலை ஆசிரியர்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.*
*🌟காலிப்பணியிடங்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை மாணவர் நலன் கருதி உடனடியாக நிரப்பிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்ட இடைநிலை ஆசிரியர்களும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் வகையில் உடனடியாக ஆணை வெளியிட்டு தமிழ்நாடு ஆசிரியர்களின் நலன் காத்திட எங்களது மாநில அமைப்பின் சார்பில் கனிவுடன் கோருகிறோம்.*
*தோழமையுடன்;*
*_தோழர்.ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*பள்ளிக்கல்வி இயக்குநர் திரு.இறளங்கோவன் வயது முதிர்வில் பணி ஓய்வுபெறுவதை அடுத்து பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு அலுவலர் நியமனம் செய்ய ஆணை வெளியீடு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_59.html
*🌟பள்ளிக்கல்வித்(ப.க1(1)துறை அரசாணை (வாலாயம்) எண்-119, நாள்:30.06.2018.*
*🌟பள்ளிக்கல்வி இயக்குநராக பணியாற்றி வந்த திரு.ரெ.இளங்கோவன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக 30.06.2018 பிற்பகல் பணியிலிருந்து ஓய்வுபெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது.*
*🌟இதனைத் தொடர்ந்து 01.07.2018 முதல் காலியேற்படும் பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு நிர்வாக நலன் கருதி அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் கூடுதல் திட்ட இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்களை பணியமர்த்தி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.*
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு புதியதாக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் வி.சி.இராமேஸ்வரமுருகன் அவர்கள் பணி சிறக்க _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.*
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Friday, 29 June 2018
*1,6,9 மற்றும் 11 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்கள் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி நடத்துதல் சார்ந்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/169-11.html
*🌟ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக1,6,9 மற்றும் 11 வகுப்புகளுக்கான புதிய பாடநூல் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.*
🌟அரசு மற்றும் அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் வகுப்பறைகளில் மேற்கொள்ளப் புதிய பாடநூல்கள் குறித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 6 ம் வகுப்பு கற்பிக்கும் நடுநிலை/ மேல்நிலை/ உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான பயிற்சியினையும், 9 மற்றும் 11 ஆம் வகுப்பு பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சியினையும் வழங்க திட்டமிடப்பட்டு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.*
https://drive.google.com/file/d/1-BdEx8wJvNgAzTqYn6R5YXHWbZOSKZEE/view?usp=drivesdk
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Tuesday, 26 June 2018
*புதிய பாடத்திட்டத்தில் Digital முறை - Digital Content & Digital Assessment - MHRD Secretary Visit*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/t-n-p-t-f-httpstnptfayan_26.html
*🌟ICT ஆசிரியர்கள், பிற ஆசிரியர்கள், கல்வித்துறை ஊழியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் 11 மாதகால இடைவிடாத உழைப்பினால் 1,6,9,11 வகுப்புகளுக்கான பாடபுத்தகங்களில் உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சி சாதனையின் காரணமாக பிறந்தது தான் மாநில அளவிலான ( Digital Content Cell & Assessment Cell )*
*🌟இது போன்ற ஒரு கட்டமைப்பு தேவை என்பது நெடுநாள் கோரிக்கை மட்டுமல்ல ICT -ல் முனைப்புடன் செயல்படும் ஒவ்வொரு ஆசிரியரின் கனவு...*
*🌟இந்த உட்கட்டமைப்பை உருவாக்க திட்டமிடும் பணியை கல்வித்துறையானது மாநில திட்ட இயக்குனர் தலைமையில் அமைக்கப்பட்டது.*
*🌟இது போன்ற கட்டமைப்பு மாநிலத்தில் மட்டுமல்ல மண்டல மாவட்ட அளவில் ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்ச்சி மற்றும் டிஜிட்டல் பாட தயாரிப்புகள் மேற்க்கொள்ள தேவை என்பதையும் தயாரித்ததை பயன்படுத்த பள்ளி வகுப்பறையில் தேவையான உட்கட்மைப்புகள் பற்றி தன்முனைபுடன் ICT சாதனங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஆசிரியர்களின் கருத்துக்களை பெற்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது...*
*🌟இந்த பரிந்துரைகளை பெற்ற மத்திய அரசின் MHRD, நமது மாநில செயல்பாடுகளை பார்வையிட கடந்த June 21 அன்று MHRD சிறப்பு செயலர் வருகை புரிந்து புதிய பாடபுத்தகங்களில் நாம் மேற்கொண்டுள்ள டிஜிட்டல் பணிகளை ஆய்வு செய்தார் உடன் பள்ளிக் கல்வி செயளலர், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரிய நண்பர்கள் உடன் இருந்தனர்...*
*🌟நமது மாநிலத்தின் செயல்பாடுகளையும் இவை அனைத்தையும் உருவாக்கியது ஆசிரியர்களின் பெருமுயற்சியில் தான் என கூறிய போது வியந்து பாராட்டினார் மனிதவள சிறப்பு செயலர் ...*
*🌟மேலும் இந்த செயல்பாடுகளை கொண்டு மாணவர்களின் திறன்களில் ஏற்படும் இடைவெளியை சரி செய்யும் திட்டமிடல் இருந்தால் தான் இந்த பணி முழுமை பெறும் என்று அறிவுரை வழங்கினார்.*
*🌟மேலும் இந்த பணிகளில் QR Code fixing, mapping, uploading பணிகளை நண்பர்கள் ஜகன்நாதன், ஜகன்,ராய்யும்...*
*🌟Digital content பொறுத்தமட்டில்... மெக்டலின் அக்கா ஒருங்கிணைப்பில்... 1 -ம் வகுப்பு நண்பர் தினேஷ் மற்றும் ஆசிரிய குழுவினர், 6-ம் வகுப்பு நண்பர் ஜான் மற்றும் ஆசிரிய குழுவினர், 9 -ம் வகுப்பு நண்பர் திலிப் மற்றும் ஆசிரிய குழுவினர், 11-ம் வகுப்பு மெக்டலின் மற்றும் ஆசிரிய குழுவினர் தயாரிப்பில் ஈடுபட்டனர்...*
*🌟Digital Assessment பொருத்தமட்டில், என்னுடைய ஒருங்கிணைப்பில் 1- ம் வகுப்பு திரு. பிரபுராஜா மற்றும் ஆசிரியர்கள், 6-ம் வகுப்பு திருமதி.செந்தில்குமாரி மற்றும் ஆசிரியர்கள், 9 - ம் வகுப்பு திரு. அசோக் மற்றும் ஆசிரியர்கள், 11-ம் வகுப்பு திருமதி.ஹமா மற்றும் ஆசிரியர்கள் தயாரித்தனர்...*
*🌟Video Lesson... மெக்டலின் அக்கா ஒருங்கிணைப்பில், அண்ணன் அமலன் ஜெரூம் மற்றும் குழுவினர் தயாரிப்பு பணியில் உள்ளனர்...*
*🌟இந்த அனைத்து வளங்களையும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தும் DIKSHA( TNTP ) தளத்தின் Admin என்ற வகையில் product development, bug rising, data analysis and validation பணிகளை CSF, TFI மற்றும் Ekstep போன்ற NGO நிறுவனங்கள் துணையுடன் செய்து வருகிறோம்.*
*🌟தயாரித்த வளங்களை வகுப்பறையில் பயன்படுத்துவதற்க்கான பயிற்சியினை... பயிற்ச்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அன்பழ்கன் மற்றும் ஆசிரிய குழுவினர் வழங்கிவருகின்றனர்.*
*🌟இப்பணியினை திறம்பட செய்து முடித்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம், மேலும் எங்களுக்கு வாய்ப்பளித்த மதிப்புமிகு.பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர், மதிப்புமிகு.பள்ளிக்கல்வி செயலர், மதிப்புமிகு.SPD sir, மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர், மதிப்புமிகு.இணை இயக்குநர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அத்துணை அலுவலர்களுக்கும் எங்கள் Digital Contant, Digital Assessment குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
*🌟ஊர் கூடி தேர் இழுத்தோம்... அதனால் புதுமைகள் பலவுடன் புதிய புத்தகம் உங்கள் கையில் ... பாருங்கள்... பகிருங்கள்... உங்கள் கருத்துக்களை... மெருகேற்றுவோம் அடுத்த பருவங்களில்...*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஆசிரியர்கள் கோரிக்கை பல மாதங்கள் இழுத்தடிப்பு. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரக் கல்வி அலுவலர் 2 அவர்களை கண்டித்து TNPTF தற்பொழுது உள் இருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/2-tnptf.html
*🌟ஆசிரியர்கள் கோரிக்கை பல மாதங்கள் இழுத்தடிப்பு.*
*🌟சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டாரக் கல்வி அலுவலர் 2 அவர்களை கண்டித்து TNPTF தற்பொழுது திருப்புவனம் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் உள் இருப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்புவனம் வட்டாரத் துணைத்தலைவர் வேதக்கண்ணு தலைமை. வட்டாரச் செயலாளர் சத்தியேந்திரன், பொருளாளர் சண்முகவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு. அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலர் 2 இல்லாததால் ஆசிரியர்கள் வாக்குவாதம்.*
*🌟ஆசிரியர்கள் மத்தியில் ஜாதி ரீதியான மோதல் போக்கை உருவாக்குவதுடன், ஆசிரியர், சமூக விலோத போக்குடன் அலுவலர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.*
*தகவல்பகிர்வு;*
*_தோழர்.முத்துப்பாண்டி_*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாவட்ட செயலாளர்*
*சிவகங்கை மாவட்டம்*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*மாறுதல் கலந்தாய்வு முறைகேடுகள் - தொடர் போராட்டத்தைத் திட்டமிட ஜுலை 8-ல் TNPTF மாநிலச் செயற்குழுக் கூட்டம்!,*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_26.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (08.07.2018) அன்று காலை 10.00 மணிக்கு சென்னை மாநில அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.*
*🌟கூட்டம் மாநில தலைவர் தோழர் மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நடக்க உள்ளது.*
*_கூட்டப்பொருள்_*
*⚡வேலை அறிக்கை,*
*⚡4 அம்ச கோரிக்கைகள் - 06.06.2018 மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டம் - ஆய்வு,*
*⚡11.06.2018-13.06.2018 ஜாக்டோ ஜியோ காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டம் - ஆய்வு - தொடர் நடவடிக்கைகள்,*
*⚡2018-19 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு - மாவட்ட மாறுதல் பிரச்சினைகள் - போராட்டங்கள் - தொடர் நடவடிக்கைகள்,*
*⚡பெண்ணாசிரியர் ஒருங்கிணைப்புக்குழு - அகில இந்திய மாநாட்டு நிதி,*
*⚡2017-18 உறுப்பினர் சந்தா அடிகட்டை - பங்கீடு ஒப்படைத்தல்,*
*⚡2018 டைரி, காலண்டர் கணக்கு முடித்தல்,*
*⚡2018-19 இயக்க உறுப்பினர் சேர்க்கை,*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன,*
*⚡இதர விஷயங்கள்.*
*🌟மாநில செயற்குழுவில் உள்ள பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்துகொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
*_மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்_*
*🌟08.07.2018 ஞாயிறு காலை 9.00 மணிக்கு மேற்படி அதே இடத்தில் மாநில பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும்.*
*தோழமையுடன்;*
*_தோழர்.ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*புதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் பயிற்சி!*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/3.html
*🌟நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களை நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*
*🌟மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்பயிற்சி சென்னையில் இன்று தொடங்கியது.*
*🌟ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு, 11-ம் வகுப்பு ஆகியவற்றுக்கு இந்த ஆண்டில் பாடப்புத்தகங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.*
*🌟இதுவரை இல்லாத அளவுக்கு பாடங்களின் அளவும் தன்மையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. வழக்கமான பாடப்புத்தக மாற்றத்தைப்போல அல்லாமல், இந்த முறை சற்று கனமாக உள்ளதால், புதிய உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்வதில் ஆசிரியர்களுக்கே சிரமமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.*
*🌟இதனால் புதிய பாடப்புத்தகங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.*
*🌟இதில், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடத்துக்கும் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.*
*🌟இப்பயிற்சியை முடித்தவர்கள் அவரவர் மாவட்டத்துக்குச் சென்று மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மற்ற ஆசிரியர்களுக்கு இதே பயிற்சியை வழங்குவார்கள்.*
*🌟அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பங்கேற்கும்வகையில் பின்னர் வட்டார அளவிலும் பயிற்சி விரிவாக்கப்படும்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Sunday, 24 June 2018
*TNPTF அயன் BLOOD DONARS*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/tnptf-blood-donars.html
*🚑TNPTF அயன் குழுவின் அடுத்தகட்ட முயற்சி இரத்த கொடையாளிகளை கண்டறிந்து இரத்ததானம் செய்ய வழிவகை செய்வது.*
*🚑இரத்த தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தினை பூர்த்தி செய்யவும்.*
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfD1_RUSZizdJnQt8m-wf3tVOVEVe6kxv7RmUURj0DiWZGOSw/viewform?usp=sf_link
*🚑இந்த படிவத்தினை பூர்த்தி செய்தால் தமிழகம் முழுவதும் நமது ஆசிரியர் சமுதாயத்தில் உள்ள இரத்த கொடையாளிகளை அடையாளம் காண முடியும்,*
*🚑நீங்கள் பூர்த்தி செய்த படிவத்தினை தொகுத்து பூர்த்தி செய்த அனைவருக்கும் அவரவர்கள் e-mail க்கு அனுப்பி வைக்கப்படும்.*
*🚑இதனால் உங்கள் பகுதியில் இரத்த கொடையாளர்கள் யார் என்பதை அறிந்து கொள்வதோடு உங்கள் பகுதியில் யாருக்கேனும் இரத்தம் தேவை ஏற்படின் உங்கள் பகுதியில் உள்ள கொடையாளியை தொடர்பு கொண்டு விரைவாக இரத்தம் கிடைக்க வழிவகை செய்யலாம்.*
*_"உதிரம் கொடுத்து உயிர் காப்போம்"_*
*🚑நல்லெண்ணத்துடன் இச்செயலினை ஆரம்பித்துள்ளோம் ஆதரவு தந்து உதவுமாறு தோழர்கள் அனைவரையும் _TNPTF அயன்_ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.*
*_"தானத்தில் சிறந்த தானம் இரத்ததானம்"_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_24.html
*🤙அடுத்தது என்ன கல்வித்துறையில்?*
*⚓⛓ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை*
*🚷ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை, வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.*
*🚶♂பள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.*
*👬ஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.👭*
*😇தலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.*
*🗞📱இவைபோன்று பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன் முடிவு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.*
*🖥📲EMIS தற்போது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா..!!*
*⏳ஏன் தெரியுமா ? EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது .இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.⌛*
*_ஏன் இந்த நடவடிக்கை????_*
*🖥📲☁🌬EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்தும் பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கப்பட உள்ளது. அதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன் பங்கிட்டுக் கொள்ளப்படும்.*
*💥📱அதற்கு உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும். நாம் அதைப்பயன்படுத்தியே மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா..??*
*📲📗🖋அதுபோலவே தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை நாம் மேற்கொள்ள வேண்டும். சரி இதனால் என்ன பயம். ஆம் பயமொன்றும் இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.அதாவது... பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்குமட்டும் தான் அவரவர் கைபேசி கொண்டு வருகை பதிவிட வேண்டும்.*
*📗🖋விடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளில்தான் அடுத்த ஆசிரியர் பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.*
*முன்னரே...*
*அதாவது...*
*📱👨💼🤳ஒவ்வோரு கைபேசி எண்ணும் அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.*
*📲🤳அதனைக்கொண்டு பள்ளிக்கு வராமலேயே.. அடுத்த ஆசிரியர் போன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.*
*🤳📱👨💼இதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.*
*🤳😇அதாவது அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்*
*📲QR கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும்.*
*📱ஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய QR கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள் போதித்தார் என.. தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல் மெயின் சர்வருடன் இணைத்து கண்காணிக்கப்படும்.*
*📲அவர் QR கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.*
*📱பாடம் சம்மந்தப்பட்ட QR கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.*
*👨💼🤳ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு ஏற்கனவே ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன. இதனை EMIS, DISE தரவுகளுடன் இணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.*
*📆📅🗓ஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.*
*👍📲இந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை காலை 9.00-9.15 க்குள்ளும் பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.*
*🌍🌏இதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த அட்ச , தீர்க்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் பதிவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.*
*📱🗞📲அத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்டிக்காக தினமும் காலை மாலை என விவரங்கள் (இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல்) தகவல்கள் பரிமாறப்படும்.*
*📆🗓📅🤳🗞ஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர் கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன? போன்ற விவரங்களும் கிடைத்துவிடும்.*
*🤳📲இனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு போன் தான் உண்மை விளம்பி மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஸ்பை.*
*🤳🚃🎥நம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டை கண்காணிக்க நமது போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது.*
*💪உண்மையாக உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை..💪*
*🤣ஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.*
*👦🏻👉இவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே..*
*🙏வரவேற்போம்.. மாற்றத்தை...🙏*
*💥இன்னும் பல புதிய தகவல்கள் வரவிருக்கிறது..*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*புதிய பாட திட்டம் - ஜூலை முதல் வாரத்தில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/9.html
*🌟புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில் பயிற்சி தொடங்க உள்ளது.*
*🌟கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.*
*🌟அந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகளையும் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.*
*🌟இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் இந்த பயிற்சி தொடங்க உள்ளது.*
*🌟1, 6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு பாடம் நடத்த உள்ள சுமார் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும். பகுதி வாரியாகவும், மாவட்டங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய 10 அரசாணைகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/10.html
*⚡1. பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தாலொழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக்கூடாது*
*(RG. 1984.P.278)*
*⚡2. கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.*
*(அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)*
*⚡3. அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அரசு ஊழியரின் வருமானம் இன்றி) சொத்து வாங்க அனுமதி தேவையில்லை. பணிப்பதிவேட்டில் குறிக்கப்பட்ட வேண்டியதுமில்லை.*
*(அரசாணை எண். 3158/பொதுப்பணியாளர்கள் /துறை. நாள்-27.9.1974)*
*⚡4. அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள்படி அரசு ஊழியர்கள் அசையாச் சொத்து, அசையும் சொத்து ஆகியவற்றை கடனாக மற்றும் பரிசுப் பொருட்களாக வாங்கும்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆணைகள்*
*(பதுத ஆணை எண். 45679/A2/1996, நாள்-17.4.1996)*
*⚡5. மகப்பேறு விடுப்பிலிருந்து திரும்பும் பணியாளரை முடிந்தவரை அதே இடத்தில் பணி அமர்வு செய்ய வேண்டும்.*
*(அரசு கடித எண்.2290/93-1, நிர்வாகத்துறை, நாள் - 18.6.1993)*
*⚡6. அரசு ஊழியர் ஒருவர் Private Study பயில்வதற்கு துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும்.*
*(G. O. Ms - 362,P&A. R, DT - 4.11.1992)*
*⚡7. தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்பும் அரசு ஊழியர் மாவட்ட அளவிலான உயர் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும்.*
*(அரசாணை எண். 362, நிர்வாகத்துறை, நாள். 4.11.1992, மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/93,நாள் - 22.6.1993)*
*⚡8. மாலை நேரக் கல்வி பயில துறைத்தலைவரின் அனுமதி தேவை. (அரசாணை எண் 1341,பொது,*
*நாள் - 27.8.1993 மற்றும் அரசு கடித எண். 98189/84-8, நிர்வாகத்துறை, நாள் - 13.8.1983)*
*⚡9. அரசு ஊழியர் ஒருவர் மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondence Course) பயில அனுமதி கோரி விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம்.*
*(அரசாணை எண். 200,நிர்வாக சீர்திருத்ததுறை, நாள் - 19.4.1996)*
*⚡10. பரம்பரை சொத்துகளிலிருந்து பாகம் கிடைத்தாலோ அல்லது சொத்து ஒன்று பரம்பரையாக அரசு ஊழியருக்கு கிடைக்க நேர்ந்தாலோ அதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. சொத்து அறிக்கையில் மட்டும் காண்பிக்க வேண்டும்.*
*(அரசாணை எண். 7143/பணி/ஏ/85-6,நிர்வாகத்துறை, நாள் - 14.5.1985)*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Saturday, 23 June 2018
*சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_65.html
*🌟டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.*
*🌟சமூக வலைத்தளங்கள் மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. இதனால், இதனை கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.*
*🌟அதன் படி, வருடத்தின் 365 நாட்களும், தினமும் 24 மணி நேரமும் இயங்கும் 'சமூக ஊடக கண்காணிப்பு கேந்திரத்தை' உருவாக்க, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் வெளியிட்டுள்ளது,*
*🌟இதன் படி, டெல்லியில் 20 பேரை கொண்ட, தலைமையகம் அமைக்கப்பட உள்ளது.*
*🌟இந்தியாவில் உள்ள 716 மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒரு ஆப்ரேட்டர் என்ற விதத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.*
*🌟இந்த உறுப்பினர்கள், ஒரு பகுதியில் மிக அதிகம் பேசப்படும் விவகாரம் குறித்த , தகவல்களையும் அதன் தாக்கங்களையும் சேகரித்து, அறிக்கைகளாக்க திட்டமிட்டுள்ளது.*
*🌟சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வெளியானால், அவற்றையும் உடனடியாக கண்டுபிடித்து அரசுக்கு இந்த ஆப்ரேட்டர்கள், தெரிவிப்பார்கள்.*
*🌟பொய் செய்திகள், வதந்திகளை பரப்பவர்கள் மீது ஐ.பி.சி 153 மற்றும் 295ஆம் பிரிவிகளின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.*
*🌟இதன் படி, வாட்ஸப் மூலம் கலவரங்களை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஆசிரியர்களின் கவனத்திற்கு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_84.html
🌟இன்று நாம் அனைவரும் 1,6,9,11 வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக *Smartphones* பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவ்வாறு பயன்படுத்தும் போது *cam scanner, Diksa, Mx videoplayer, Es file manager* போன்ற *Android* அப்ளிகேஷன்களையும் *You tube* யும் பயன்படுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில விளம்பரங்கள் தோன்றும். இந்த விளம்பரங்கள் தேவையில்லாததும் , முகம் சுளிக்கும் வகையிலும் வரலாம். எனவே
*முன்னச்செரிக்கையாக*
*phone* ல் செய்ய வேண்டியது
⚡1) *play store* சென்று *settings ல் parent control option* ஐ *on* செய்யவும்.
⚡2) அதன் கீழே உள்ள *Apps and Games* ஐ கிளிக் செய்து *12+* ல் டிக் செய்யவும்.
⚡3) அடுத்ததாக *Films* ஐ கிளிக் செய்து *U* என்பதை டிக் செய்யவும்.
இப்போது உங்கள் Smartphone *தேவையற்ற விளம்பரங்கள், Video* க்கள் குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்கு *பாதுகாப்பானதாக* இருக்கும். *
⚡4)அதேபோல் *YOU TUBE* settings ல் *Restriction mode* ஐ *on* செய்யவும்,
*🌟இவையனைத்தையும் செய்த பின் வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு உங்கள் Smart Phone ஐ பயன்படுத்துங்கள்*.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
*ஆதார் கார்ட் address (முகவரி) எப்படி மாற்றுவது? இங்கே உங்கள் முகவரியை மாற்ற எளிய வழிமுறைகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/address.html
*_ஸ்டேப் 1:_*
*UIDAIயின் வெப்சைட் லோக் இன் (Log in) செய்யுங்கள், இதில் உங்கள் முகவரி அப்டேட் செய்ய உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் தேவை படும், ஏன் என்றால் அதில் உங்களுக்கு OTP நம்பரை அனுப்ப படும், உங்களிடம் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்கள் அட்ரஸ் (address) அப்டேட் செய்ய முடியாது, அப்படி உங்களிடம் ரெஜிஸ்டர் நம்பர் இல்லை என்றால் நீங்கள் உங்களின் அருகில் இருக்கும் ஆதார் அப்டேட் செண்டர் போக வேண்டும்*
*_ஸ்டேப் 2:_*
*உங்கள் ஆதார் நம்பரை என்டர் செய்யவும்.*
*_ஸ்டெப் 3:_*
*🌟அதில் உங்கள் முகவரியை ரெக்வஸ்ட் போடவும், நீங்கள் கவனத்தில் செலுத்த வேண்டியது என்ன வென்றால் address முகவரி அப்டேட் செய்ய வெறும் address போர்டல் மட்டுமே அப்டேட் செய்ய வேண்டும், உங்களுக்கு வேறு எதாவது மற்ற அப்டேட் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஆதார் என்ரோல்மென்ட் (Enrollment) அப்டேட் சென்டர் போக வேண்டும், நீங்கள் அப்டேட் செய்யும்போது எதாவது கஷ்டம் வந்தால் அதாவது பின்கோடு(pincode) டேட்டா ஸ்டேட் /டிஸ்ட்ரிக்ட் /கிராமம்/டவுன்/சிட்டி/போஸ்ட் ஒபிஸ்), இது போன்ற எதவது ஒரு இஸ்யூ வந்தால் நீங்கள்; UIDAI contact centre (help@uidai.gov.in). செண்டரி தொடர்பு கொள்ளலாம்.*
*_ஸ்டெப் 4:_*
*🌟உங்கள் address முகவரி அப்டேட் ரெக்வச்ட் உடன் உங்களின் அனைத்து தேவையான டோக்யுமேன்ட்களை அப்லோட் செய்ய வேண்டும், நீங்கள் உங்கள் சரியான முகவரியை அப்டேட் மற்றும் அப்லோட் சப்போர்டிங் PoA proof of address) நீங்கள் அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும்/ வெறும் சரியான C/o (care/of) தெளிவான ஒரிஜினல் கலர் காப்பி உடன் அப்லோட் செய்ய வேண்டும் வேப்சைட்டில் கொடுத்திருக்கும் லிஸ்டின் படி டாக்யுமென்ட் அப்டேட் செய்ய வேண்டும், குறைந்த பட்சம் வெப்சைட்டில் 30 டாக்யுமென்ட் லிஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கும் நீங்கள் உங்கள் முகரிவரியை ப்ரூப் (proof) உடன் ஷேர் செய்ய வேண்டும்.*
*_ஸ்டெப் 5:_*
*🌟BPO சேவை வழங்குநர் செலக்ட் செய்யவும் மற்றும் உங்கள் ரெக்வஸ்ட் சப்மிட் செய்யவும். இங்கே மற்றொரு பாயிண்ட் (point) நினைவில் வைத்து கொள்ள வேண்டும் அப்டேடின் தகவல்களை சமர்ப்பித்தல் ஆதார் டேட்டாவின் அப்டேட் உத்தரவாதம் இல்லை, ஆன்லைனில் சப்மிட் செய்த தகவல் சப்ஜக்ட் (subject) வேரிபிகேசன் மற்றும் வெளிடேசன் செய்ய படும்.*
*🌟சட்டப்பூர்வ அங்கீகாரம் UIDAI ஆதார் பதிவு மற்றும் அங்கீகாரத்திற்கு பொறுப்பு ஒபரேசன் உள்பட மற்றும் அனைத்து மேனேஜ்மென்ட் ஸ்டேஜின் ஆதார் லைப் சைக்கிள் பாலிசி டெவலப் செய்யும் ப்ரோசிஜர் மற்றும் ஆதார் நம்பர் தனி தனியாக இச்ச்யு ஆகிறது மற்றும் அங்கீகாரத்தை நிறைவேற்றும் பொறுப்பு மற்றும் செக்யுரிட்டி ஐடண்டிபிகேசன் தகவல் மற்றும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்ட் வைத்து இருப்பது அவசியம் ஆகும்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
Subscribe to:
Posts (Atom)