Tuesday, 31 July 2018

*Income tax E-Filling செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/t-n-p-t-f-httpstnptfayan_31.html


*இன்கம்டாக்ஸ் ரிட்டன் சமர்ப்பித்து விட்டீர்களா.*

*_உஷார்! உஷார்!!_*


*⭐நீங்கள் அதிகப்படியான வரி செலுத்தி விட்டதாகவும் அதனை திரும்ப கொடுக்கப் போகிறோம் என்று இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டில் இருந்து தகவல் வருவது மாதிரி (கவனிக்கவும்"மாதிரி") வரும்.*


*⭐லிங்கை க்ளிக் செய்து உள்ளே சென்றீர்கள் என்றால் உங்கள் பேங்க் அக்கவுண்ட் டீடெயில் கேட்பார்கள். கொடுத்தால் பேங்க் பேலன்ஸ் அவுட் donotreply@incometaxindiafilling.gov.in என்ற மெயில் முகவரியில் இருந்து மெஸேஜ் வரும்.*


*⭐இது இணையதள மோசடியாளர்களின் கைவரிசை.*


*⚡சரியான இன்கம்டாக்ஸ் ஆபீஸ் மெயில் முகவரி*

donotreply@incometaxindiaefiling.gov.in


(Note the *e* is missing from *efiling* & *filing* is spelt as *filling*. )

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_31.html


*⭐பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில், தினமும் ஏதாவது ஒரு கலவை சாதம், முட்டை, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் தரம் குறித்து, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.*


*⭐இந்நிலையில், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில், கண்காணிப்பு குழுக்களை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட குழுவுக்கு, கலெக்டர் தலைவராக இருப்பார்.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மருத்துவத் துறை இணை இயக்குனர், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர், சமூகநல அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட, 12 பேர், உறுப்பினர் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.*



*⭐ஒன்றிய அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், குழந்தை நல வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உட்பட, ஏழு பேர் குழுவில் இடம் பெறுவர்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday, 30 July 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் அறிவிப்பு:*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_70.html


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!வணக்கம்._*


*⭐தற்போதைய தமிழக சூழ்நிலையை  கருத்தில் கொண்டு, அராஜகத்தின் உச்சத்தில் நின்று கொண்டிருக்கும் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு எதிராக 01.08.2018 அன்று ஜாக்டோ-ஜியோ சார்பாக மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம்,  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாநில ஜேக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.*

*⭐இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, 04.08.2018 அன்று, சென்னையில் நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.*


*⚡தோழமையுடன்...*

*_ச.மயில்,_*

*பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு ஒரு நபர் குழவின் அழைப்புக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_74.html



*🌟தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய மதிப்புமிகு.M.A.SIDDIQUE, IAS அவர்கள் தலைமையில் குழு ஒன்று தமிழக அரசால் உருவாக்கப்பட்டது.*


*🌟இக்குழு ஆசிரியர்களிடம் ஊதிய முரண்பாடு குறித்து கருத்துகளை அனுப்புமாறு கூறியது அதனடிப்படையில் பல்வேறு ஆசிரிய சங்கங்கள் தங்களது கருத்தினை நேரிலும் இ-மெயில் வாயிலாகவும் இக்குழுவிற்கு அனுப்பினார்கள்.*


*🌟சங்கங்கள் கொடுத்த கடிதத்தின் வரிசை முறைப்படி இக்குழுவானது  சங்கங்களுக்கு நேரில் வர அழைப்பு கொடுத்து கருத்துகளை கேட்டு விபரங்களை சேகரித்து அரசிடம் அறிக்கையினை கொடுக்க முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.*


*🌟அதனடிப்படையில் 01.08.2018 அன்று தற்பொழுது ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட திரு.சித்திக் IAS அவர்கள் தலைமையிலாாான குழுவினரை சந்திக்க வருமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தேசிய அளவிலான பெண் ஆசிரியர்கள் மாநாடு செப்டம்பரில் TNPTF மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள் தலைமையில் நடைபெறும் என STFI தெரிவித்துள்ளது.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/tnptf-stfi.html


*_கன்னியாகுமரியில் செப்டம்பர் மாதம் தேசிய அளவிலான பெண் ஆசிரியர்கள் மாநாடு நடத்தப்படும் என அகில இந்தியப்பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது._*


*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தேசிய செயற்குழுக் கூட்டம் புதுதில்லியில் உள்ள பாரத சாரண, சாரணிய தேசிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (29.07.2018) நடைபெற்றது.* 


*கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் _தோழர்.அபித் முகர்ஜி_ தலைமை தாங்கினார்.*

*பொதுச்செயலாளர் _தோழர்.சந்திர நவ்தீப் பாரதி_ மற்றும் துணைத்தலைவர் _தோழர். இராஜேந்திரன்_ ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.*


*🌟இதில் தமிழகத்தில் இருந்து அமைப்பாளர் தோழர். ச.மயில் அவர்கள் தலைமையில் தேசிய செயற்குழு உறுப்பினர் தோழர்.ஜனார்த்தனன், நிர்வாகிகள் தோழர்.மாயவன், தோழர்.சுரேஷ், தோழர்.சங்கர், தோழர்.ரைமண்ட், தோழர்.உதயசூரியன், தோழர்.ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். மற்ற பிற மாநிலங்களிலிருந்தும் பலர் பங்கேற்றனர்.*



*🌟பெண் ஆசிரியர்கள் தேசிய மாநாட்டை கன்னியாகுமரியில் வருகின்ற செப்டம்பர் மாதம் 8 ம் தேதி மற்றும் 9 ம் தேதிகளில் நடத்துவது என்றும், அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 12 ம் தேதி கன்னியாகுமரியில் மாநாடு தயாரிப்புக் கூட்டம் நடத்துவது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.*


*_கூட்டத் தீர்மானங்கள்:_*


*பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு உரிமை கோருவதற்காக, தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றம் சார்பில் தேசிய அளவிலான மகளிர் மாநாட்டை கன்னியாகுமரியில் நடந்த வேண்டும் என்றும்,*


*இந்திய மொத்த வருவாயில் 6 சதவீதமும், மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவீதமும் பள்ளிக்கல்விக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.*


*தனிநபர் வருமான வரி வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.*


*சம வேலை, சம ஊதியம் என்ற தீர்ப்பின் படி ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.* 


*8 ம் வகுப்பு வரை தேர்ச்சி திட்டத்தை திரும்பப் பெறக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.*


*🌟29/07/2018 ல் தில்லியில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பாக அகில இந்திய செயற்குழுவில்  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள் உரை ஆற்றினார்.*


*🌟தோழர் ச.மயில் ஆற்றிய உரை நமது ஃTNPTF அயன் YouTube channel ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவைக் காண கீழே உள்ள link ஐ கிளிக் செய்க தோழர்களே.*

https://youtu.be/8j9QayM2M14


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм









இரா.கோம்பை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் த.மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாரத் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (நோட்டிஸ்)*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_30.html


*_தமிழக அரசே! கல்வித்துறையே!! குஜிலியம்பாறை ஒன்றியத்தின் கல்விச் சூழலைக் காப்பாற்று._*



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி நலன், ஆசிரியர் நலன், மாணவர் நலன் என்ற உயரிய நோக்கோடு செயல்படும் பேரியக்கம். தவறு செய்கின்றவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக்கேட்க தயங்காத அதே வேளையில் ஆசிரியர்களின் உரிமைகளைப் பெற்றுத்தரும் ஈட்டிமுனையாகவும் செயல்படும் பேரியக்கம். குறிப்பாக குஜிலியம்பாறை ஒன்றியம் மாவட்ட, மாநில வழிகாட்டுதல்படி மாநிலத்திற்கே முன் உதாரணமாக போராட்டகளம் கண்ட பேரியக்கம். பிற சங்க ஆசிரியர்களையும் தோழமை உணர்வோடு அணுகும் அதே வேளையில் சில ஆசிரியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக செய்து வரும் அடாவடித்தனத்தையும், ஆசிரியர் விரோதப் போக்கையும் சுட்டிக்காட்டுவதோடு களத்தில் நின்று போராடியும் வந்திருக்கிறது.* 


*⚡புரோக்கர் தொழிலுக்காக போலியாக சங்கம் வைத்து செயல்படுவது,*

*⚡நேர்மையாக செயல்படும் கல்வி அலுவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது,*

*⚡பெண் அலுவலர்களை கொச்சைப்படுத்தும் வகையில் போட்டோ மார்பிங் செய்வது,திருட்டு பட்டம் சூட்டுவது,*

*⚡சாதி மற்றும் பெண்கள் வன்கொடுமைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துவது,*

*⚡சங்கம் என்ற பெயரால் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் ஒட்டுமொத்த கல்விச் சூழலைக் கெடுத்து வருவது,*

*🌟போன்ற இழி செயல்களால் கல்வித் துறைக்கும், தமிழக அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கேங் லீடர் போல் செயல்படும் _இரா.கோம்பை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் த.மோகன்தாஸ்_ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டார தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தமிழக அரசிற்கும், கல்வித்துறைக்கும், காவல்துறைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.*


*⚡தகவல் பகிர்வு;*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி_*

*குஜிலியம்பாறை வட்டாரம்,*

*திண்டுக்கல் மாவட்டம்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





Friday, 27 July 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்டம் பேரூர் வட்டாரத்தில் புதிய கிளை துவக்க விழா அழைப்பிதழ்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_65.html


*தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,*


*🌟தமிழ்நாட்டில் ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன் ஆகியவற்றை தாரகமந்திரமாக கொண்டு செயல்பட்டு வரும் _தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி_ என்னும் பேரியக்கம் தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகளுக்காக தொடர்ந்து போராடி வருவதை நீங்கள் அறிவீர்கள்.*


*🌟பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து ஜாக்டோ-ஜியோ என்ற கூட்டமைப்பின் முதுகெலும்பாக இருந்து ஆசிரியர் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, கொண்ட கொள்கையில் உறுதியாக இயங்கி வருகிறது.*

*🌟கோவை மாவட்டத்தில் இப்பேரியக்கத்தின் புதிய வட்டார கிளை பேரூர் வட்டாரத்தில் 28.07.2018 சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.*

விழா நடைபெறும் இடம் - ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி, குளத்துப்பாளையம்.*


*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச.மோசஸ்,_ அவர்கள்,*

*புதிய கிளையை துவக்கி வைத்து இயக்கப் உரை ஆற்ற உள்ளார்.*


*_⚡தோழர்.G.மேரி சாந்தி,_ குளத்துப்பாளையம் ஊ.ஒ.ஆ.பள்ளி தலைமை ஆசிரியர் அவர்கள்,*

*விழாவிற்கு தலைமை ஏற்று நடத்த உள்ளார்.*


*மாவட்ட துணைச் செயலாளர்கள்*

*_⚡தோழர்.ரமேஷ்குமார்,_*

*_⚡தோழர்.மரிய ஆரோக்கியநாதன்,_*

*_⚡தோழர்.ராமதிலகம்,_*

*_⚡தோழர்.சிவராமன்,_*

*_⚡தோழர்.தமிழ்ச்செல்வி,_*

*_⚡தோழர்.ஜெயந்தி மாலா,_*

*_⚡தோழர்.கருப்பசாமி,_*

*_⚡தோழர்.சுப்பரமணியம்,_*

*_⚡தோழர்.சரோஜா,_*

*_⚡தோழர்.ஜெமீமா._*

*ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகிக்கிறார்கள்.*


*⚡இராமசெட்டிபாளையம் ஊ.ஒ.ஆ.பள்ளி இடைநிலை ஆசிரியர் _தோழர்.M.நாகராஜ்,_ MA, B.Ed அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்.* 



*குத்துவிளக்கு ஏற்றுபவர்கள்:*

*_⚡தோழர்.K.இராமசாமி, TNRTA,_*

*_⚡தோழர்.E.K.கணேசன், TNPTF,_*

*_⚡தோழர்.A.R.சுப்பையன், TNRTA,_*

*_⚡தோழர்.A.மாணிக்கம், TNPTF,_*

*_⚡தோழர்.P.நடராஜன், TNSF,_*

*_⚡தோழர்.A.தங்கபாசு, TNPTF,_*

*_⚡தோழர்.V.மணிகண்டன், TNPTF,_*

*_⚡தோழர்.M.பாபு, TNPTF._*



*வாழ்த்துரை வழங்குபவர்கள்:*

*_⚡தோழர்.கிருஷ்ணராஜா,_*

*_⚡தோழர்.செந்தூரன்,_*

*_⚡தோழர்.அருளானந்தன்,_*

*_⚡தோழர்.மணிகண்டன்,_*

*_⚡தோழர்.ஶ்ரீதர்,_*

*_⚡தோழர்.வேல்முருகன்,_*

*_⚡தோழர்.கனகராஜ்,_*

*_⚡தோழர்.வீராசாமி,_*

*_⚡தோழர்.செந்தில்குமார்,_*

*_⚡தோழர்.இக்னேசியஸ்,_*

*_⚡தோழர்.திருநாவுக்கரசு,_*

*_⚡தோழர்.கனகராஜ்,_*

*_⚡தோழர்.சந்திரகுமார்,_*

*_⚡தோழர்.மலர்வேந்தன்,_*

*_⚡தோழர்.சௌந்தரராஜன்,_*

*_⚡தோழர்.சுனில்லால்,_*

*_⚡தோழர்.தண்டபாணி,_*

*_⚡தோழர்.நாகராஜ்._*



*⚡சுகுநாபுரம் ஊ.ஒ.ஆ.பள்ளி, இடைநிலை ஆசிரியர் _தோழர்.முத்துலட்சுமி,_ அவர்கள் நன்றியுரை ஆற்ற உள்ளார்.*


*🌟இவ்விழாவில் அனைத்து தோழர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*



*⚡தோழமையுடன்;*

*_ஒருங்கிணைப்புக்குழு,_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*பேரூர் வட்டாரம் (கிளை),*

*கோவை மாவட்டம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Thursday, 26 July 2018

*கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக வடலூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_85.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்டக்கிளையின் சார்பில் வடலூர் கல்வி மாவட்டம், புவனகிரி ஒன்றியம் மேல்அனுவம்பட்டு தலைமை ஆசிரியர் C.பத்மாவதி அவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்ய கோரி காத்திருப்புப் போராட்டம் நேற்று (25.07.2018) மாலை துவங்கியது*


*⭐இரவு 10.00 மணிக்கு மேல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில் இரவு முழுவதும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.*


*⭐இன்று 26.07.2018 பிற்பகல் வரை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் 03.08.2018 அன்று வரை அவகாசம் கேட்டுக்கொண்டு அதற்குள் உங்கள் கோரிக்கைக்கு உண்டான தீர்விற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக கொடுத்து கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்திட வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்திப்பு செய்தி துளிகள்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_26.html


*பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.*


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக,*

*⚡மாநில பொதுச்செயலாளர் _தோழர். ச.மயில்_ அவர்களும்,*

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர். ச.மோசஸ்_ அவர்களும்,*

*⚡மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ அவர்களும்,*

*மாநில துணைச் செயலாளர் _தோழர். சித்ரா_ அவர்களும்,*


*_மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர்_ அவர்களை இன்று 26.07.2018 வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்து  தீர்வுகான வலியுறுத்தப்பட்டது.*


*⭐2018-19 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்ற 8 மாவட்டங்களில் மட்டும் இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது, இதனால் அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். எனவே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்திட உத்தரவிடுமாறு வலியுத்தப்பட்டது.*


*⭐2018-19 ஆம் கல்வியாண்டில் மாறுதல் கலந்தாய்வில் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டும் தற்பொழுது காலியாக உள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்திற்கு 1.1.2018 ன் படி  தகுதிவாய்ந்தோர் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்ளப்பட்டது.*


*⭐முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு பின் அனுமதி உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.*


*2018-19 ம் ஆண்டின் பள்ளி வேலை நாள் அட்டவணை தொடக்கக்கல்வி துறைக்கென தனியாக வெளியிட வலியுறுத்தப்பட்டது, அதற்கு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் பள்ளிக்கல்வி வெளியிட்ட பள்ளி வேலை நாள் நாட்காட்டி நமக்கும் பொருந்தும் எனவே அதனையே பயன்படுத்திக்கொள்ளுமாறும் தனியாக வெளியிட தேவையில்லை என்று கூறினார்.*



*⭐பி.லிட், பி.எட், பயின்று நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களிடம் பதவி உயர்வு செல்லாது எனவும் அதற்காக பெறப்பட்ட ஊக்க ஊதியம் திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவினை திரும்பப்பெற வேண்டும் என்று நமது அமைப்பின் சார்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது பதவி உயர்வுக்காக பெறப்பட்ட ஊக்க ஊதியத் தொகையினை திரும்ப செலுத்த தேவையில்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் கூறினார் மேலும் இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.*


*⭐கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிவகங்கை, திண்டுக்கல், கண்ணியாகுமரி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் பிரச்சனைகள் மற்றும் குறைகள் தொடர்பாகவும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களிடம்  பேசப்பட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது*


*மேலும் தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பில் காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் உடனிருந்தனர்.*



*📧தோழமையுடன்;*

*_ச.மயில்_*

*மாநில பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*அதிக கல்வி கட்டணம் வசூலித்தால் 7 ஆண்டு சிறை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/7.html


*⭐கல்வி கட்டணம் அதிகம் வசூலித்தால், பள்ளி நிர்வாகிகளுக்கு, ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு எச்சரித்துள்ளது*


*⭐சென்னை, பெருங்களத்துார் மற்றும் குரோம்பேட்டையில் உள்ள, ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவு, சி.பி.எஸ்.இ., பள்ளியில், ஒவ்வொரு மாணவரிடமும், இரண்டு லட்சம் ரூபாய் காப்பு தொகை கேட்ட விவகாரம், மாணவர்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது*


*⭐அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்தும், பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.இது குறித்து விசாரணை நடத்த, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார்*


*⭐இதன்படி, பள்ளிக் கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், மெட்ரிக் இயக்குனர், கண்ணப்பன், இணை இயக்குனர், நரேஷ் ஆகியோர், பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்*


*_⚡பள்ளிகளுக்கு கண்டிப்பு_*


*⭐அதன் அடிப்படையில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி இயக்குனர், கண்ணப்பன், சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்*


*⭐அதன் விபரம்:சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகள் சில, அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகள், அறக்கட்டளை மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் பதிவுடன், சேவை அடிப்படையில் நடத்துவதை நினைவில் கொள்ள வேண்டும்*


*⭐தமிழக தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 1973ன் படி, சமூக பொறுப்புணர்வுடன், பள்ளிகள் இயங்க வேண்டும்.பள்ளிகளை வணிக மயமாக்குவது, அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பள்ளிகளின், விதிமீறும் செயலாகும். கட்டண ஒழுங்குமுறை கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே, பள்ளிகள் வசூலிக்க வேண்டும்*



*_⚡அங்கீகாரம் ரத்தாகும்_*


*⭐சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், விதியை பின்பற்ற வேண்டும். பள்ளிகள் வழங்கும் வசதிகள் குறித்து, கட்டண கமிட்டியிடம், ஆவணங்கள் தாக்கல் செய்யும் நிலையில், அதற்கு தேவையான கட்டணத்தை, கமிட்டி நிர்ணயிக்கிறது*


*⭐இந்த கட்டணத்தை விட அதிகம் வசூலிப்பது, விதியை மீறிய செயல். அது நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கான, இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு, சி.பி.எஸ்.இ.,க்கு, தமிழக அரசு பரிந்துரை செய்யும்*


*⭐மேலும், 2016 ஜன., 28ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், தங்கள் கல்வி கட்டணத்தை, கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும். அவற்றை கமிட்டி ஆய்வு செய்து, விதிமீறலை கண்டுபிடித்தால், பள்ளியின், சி.பி.எஸ்.இ., இணைப்பை ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கும்*



*_⚡ஏழாண்டு சிறை_*


*⭐அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகிகள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுத்து, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கலாம்*


*⭐மேலும், 5,000 ரூபாய் அபராதமும் விதிக்க முடியும்.எந்த பள்ளியும், கல்வி கட்டணம் தவிர, நன்கொடை, பங்களிப்பு தொகை உட்பட, எந்த கட்டணமும் வசூலிக்க முடியாது*


*⭐தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் படியும், அதிக கல்வி கட்டணம் வசூலிப்பது குற்றமாகும். சி.பி.எஸ்.இ., வாரியத்தின் விதிகளிலும், பள்ளிகள் அளிக்கும் வசதிக்கு ஏற்ப மட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டும்*


*⭐எனவே, சி.பி.எஸ்.இ., தவிர, அனைத்து தனியார் பள்ளிகளும், கல்வி கட்டண கமிட்டியிடம், ஆவணங்கள் சமர்ப்பிக்காவிட்டால், ஆக., 15க்கு முன் தாக்கல் செய்து, கட்டணம் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்*


*⭐சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், தங்களின் கல்வி கட்டண விபரத்தை, ஆக., 15க்குள், கல்வி கட்டண கமிட்டியிடம் தெரிவிக்க வேண்டும்.அதை, சி.பி.எஸ்.இ., விதிகளின் படி, கமிட்டி ஆய்வு செய்யும்*


*⭐இதில் விதிமீறல் தெரிந்தால், அவற்றின் இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்ய, சி.பி.எஸ்.இ., நிர்வாகத்துக்கு, தமிழக அரசு பரிந்துரைக்கும்*



*⭐இது குறித்து, பெற்றோரிடம் இருந்து புகார் வந்தால், முதன்மை கல்வி அதிகாரிகள், உரிய நடவடிக்கை மேற்கொள்வர்.இவ்வாறு அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Wednesday, 25 July 2018

*கடலூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக வடலூர் மாவட்ட கல்வி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_25.html


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்டக்கிளையின் சார்பில் வடலூர் கல்வி மாவட்டம், புவனகிரி ஒன்றியம் மேல்அனுவம்பட்டு தலைமை ஆசிரியர் C.பத்மாவதி அவர்களுக்கு முறைகேடாக வழங்கப்பட்ட மாறுதல் ஆணையை ரத்து செய்ய கோரி காத்திருப்புப் போராட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм










Tuesday, 24 July 2018

*NHIS - மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் முழு பணப்பலன்களை பெற்றுத்தந்து சாதனை படைத்து வரும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/nhis.html


*TNPTF - வெற்றி தொடர்கையில்  அடுத்த வெற்றி*


*🌟சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திரு. விசுவாசம்  அவர்களுக்கு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ.4,94,000/- கோரியது இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.130000/- மட்டுமே அனுமதித்தது.*


*🌟முழுத்தொகையைப் பெற்றுத் தரக் கோரி மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மாநில மையம் உடனடி நடவடிக்கையின் அடிப்படையில்  ( 24.7.2018) NHIS - மூலம் தொகை ரூ.4,00,000/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.*


*இது TNPTFன் மகத்தான சாதனை*


*⚡ஆசிரியர் நலன்!*

*⚡மாணவர் நலன்!!*

*⚡கல்வி நலன்!!!*


*_இவை மூன்றும் TNPTF ன் தாரகமந்திரம்._*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday, 23 July 2018

*கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_23.html


*🌟கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதற்கான கால அட்ட்வணையினை இணை இயக்குநர் (மதுரை) வெளியிட்டார்.*


*⚡24.07.2018 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (மாறுதல் மற்றும் பதவி உயர்வு) - காலை 10.30 மணி,*


*⚡24.07.2018 - உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (மாறுதல் மற்றும் பதவி உயர்வு) - காலை 11.00 மணி,*


*⚡24.07.2018 - முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (மாறுதல் மற்றும் பதவி உயர்வு) - காலை 11.30 மணி,*


*⚡24.07.2018 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் (மாறுதல் மற்றும் பதவி உயர்வு) - நண்பகல் 12.30 மணி,*


*⚡24.07.2018 - தமிழாசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி நிலையில் காப்பாளர்/ காப்பாளினி (மாறுதல்) - பிற்பகல் 2.00 மணி,*


*⚡24.07.2018 - சிறப்பாசிரியர்கள் (மாறுதல்) - பிற்பகல் 4.00 மணி,*


*⚡25.07.2018 - தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் (மாறுதல் மற்றும் பதவி உயர்வு) - காலை 10.30 மணி,*


*⚡25.07.2018 - இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் காப்பாளர்/ காப்பாளினி (மாறுதல்) - பிற்பகல் 2.00 மணி,*


💪Tnptfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டம் திருபுவனம் வட்டாரக் கல்வி அலுவலர் 2 க்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/2_23.html


*🌟சிவகங்கை மாவட்டம் திருபுவனம் ஒன்றியத்தில் ஆசிரியர், மாணவர், சமூக விரோதப்போக்கில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் வட்டாரக் கல்வி அலுவலர் 2 திரு.பிரான்சிஸ் ஜஸ்டின் அவர்கள் மீது உரிய நடவடிக்கை கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.*


*⚡நாள்: 26.07.2018 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில்*


*⚡இடம்: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு*


*⚡தலைமை:*

*_தோழர். ஆ.தாமஸ் அமலநாதன், மாநிலத் தலைவர்._*


*⚡முன்னிலை:*

*_தோழர். மு.க.புரட்சித்தம்பி, மாநில செயற்குழு உறுப்பினர்._*

*_தோழர். ச.ஞான அற்புதராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்._*

*_தோழர். வே.சிங்கராயர், மாநில பொதுக்குழு உறுப்பினர்._*

*_தோழர். மா.ஆரோக்கியராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்._*


*🌟கண்டன ஆர்பாட்ட பேருரை:*

*_தோழர். ச.மோசஸ்,_ அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்.* 


*⚡கண்டன ஆர்பாட்ட விளக்கவுரை:*

*_தோழர். ஆ.முத்துப்பாண்டியன், மாவட்டச் செயலாளர்.*


*⚡கண்டன உரை:*

*_தோழர்.சி.மாலா, மாவட்ட துணைத்தலைவர்._*

*_தோழர்.இ.ஜஸ்டின் திரவியம், மாவட்ட துணைத்தலைவர்._*

*_தோழர்.பி.அமலசேவியர், மாவட்ட துணைத்தலைவர்._*

*_தோழர்.அ.ஜீவா ஆனந்தி, மாவட்ட துணைச்செயலாளர்._*

*_தோழர்.வீ.ரவி, மாவட்ட துணைச்செயலாளர்._*

*_தோழர்.ம.ஜெயக்குமார், மாவட்ட துணைச்செயலாளர்._*


*⚡ஆர்பாட்ட வாழ்த்துரை:*

*_தோழர்.சி.சிவக்குமார், மாவட்ட செயலாளர், TNPGTA._*

*_தோழர்.நீ.இளங்கோ, மாவட்ட செயலாளர், TNHHSSGTA._*

*_தோழர்.ஏ.தவமணிச்செல்வம், மாவட்ட செயலாளர், TIAS._*

*_தோழர்.ஆ.தமிழரசன், மாவட்ட செயலாளர், TNGEA._*

*_தோழர்.எஸ்.பீட்டர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், TNGTF._*

*_தோழர்.எஸ்.உமாநாத், மண்டல செயலாளர், COTEE-TNEB._*


*⚡நன்றியுரை:*

*_தோழர். மு.குமரேசன், மாவட்ட பொருளாளர்._*



*🌟திருப்புவனம் வட்டாரக் கல்வி அலுவலர் 2க்கு எதிரான ஆர்ப்பாட்டம் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடத்த காவல்துறை அனுமதி இன்று பெறப்பட்டது.*


*_நடப்பதோ கொடுமை_*

*_அதனைத் தடுப்பதோ நமது கடமை_*

*ஆசிரியர் இயக்கங்களிலே என்றும் கொடுமையினைக் கண்டு போராட்டக்களம் காணும் ஒரே இயக்கம் (TNPTF) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மட்டுமே* 


*ஆசிரியப் பேரினமே! அநீதிக்கு எதிராய் அணிதிரள்வீர்!! ஆர்ப்பரிப்பீர்!!!*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழ்நாடு முழுவதும் சொத்துவரி 100 சதவீதம் வரை உயர்வு- வீடுகளுக்கு 50 சதவீதம் அதிகரிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/100-50.html


*🌟தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டில் இருந்து சொத்துவரி உயர்த்தப்படாமல் இருக்கிறது.*


*🌟இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 17-ந்தேதி அன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.*


*🌟அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் “சொத்து வரியை மாற்றி அமைப்பது குறித்து தமிழக அரசு 2 வாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கான அறிக்கையை 2 வார காலத்துக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது.*


*🌟ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் சொத்து வரியை மாற்றி அமைப்பது தொடர்பாக உள்ளாட்சி துறை முதன்மை செயலாளர் ஹர்மிந்தர்சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.*


*🌟இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சொத்து வரியை 100 சதவீதம் வரை உயர்த்தி இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது.*


*🌟குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகை குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதம் மிகாமலும், சொத்துவரி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.*


*🌟தமிழக அரசின் இந்த அரசாணைப்படி சொத்து வரியானது 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்கிறது.*


*🌟தமிழக அரசின் இந்த உத்தரவு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.*


*🌟சொத்துவரி உயர்வு மூலம் வாடகை வீடுகளுக்கு 2 மடங்கு வரி உயர்கிறது.*


*🌟வீட்டு வரியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தினால் ஊக்கத் தொகை வழங்கும் மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தாமதமாக வரி கட்டினால் அபராத தொகை விதிக்கவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*NHIS 2016 CARD எப்படி DOWNLOAD செய்வது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


*YouTube Link:* 

https://youtu.be/d5OlbGHfscU


https://tnptfayan.blogspot.com/2018/07/nhis-2016-card-download.html


*⚡NHIS 2012 CARD NUMBER ஐ வைத்து NHIS 2016 CARD ஐ எப்படிபதிவிறக்கம் செய்வது,*

*⚡NHIS CARD க்கு விண்ணப்பித்து இதுவரை Card கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் NHIS CARD NUMBER தெரியாதவர்கள் எப்படி Card number  ஐ search செய்து  எடுத்து NHIS 2016 Card ஐ பதிவிறக்கம் செய்வது,*

*⚡Search செய்தும் Card Number கிடைக்கப்பெறாதவர்கள் என்ன செய்வது என்பன குறித்த விபரங்கள் அடங்கிய வீடியோ மேலே உள்ள YouTube Link ல் கொடுக்கப்பட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*TNNHIS - புதிய காப்பீட்டு அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/t-n-p-t-f-httpstnptfayan.html


*🌟புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.!!!*


*🌟புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும்…*

http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx


*🌟புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ளஇணைப்பில் புதிய   அடையாள அட்டையைத் தரவிறக்கம்செய்து கொள்ளலாம்.*



*⚡பயனர்எண் :*

*பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் &எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)*

*⚡கடவுச்சொல் :*

*பிறந்த தேதி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday, 22 July 2018

*தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 'கியூஆர்' கோடுடன் அடையாள அட்டை வழங்கல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_72.html



*🌟மாணவர்கள் கல்வி, தனித்திறன் நடவடிக்கை குறித்து, பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில், 'கியூஆர்' கோடு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது*


*🌟கரூர் அருகே, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்*


*🌟இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மனோகரன், வெங்கடேஷ் ஆகியோர், பள்ளிக் கல்வித்துறை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து வழங்கிய ஐ.சி.டி., இன்பர்மேஷன் கான்டாக்ட் டெக்னாலஜி என்னும் பயிற்சியில் பங்கேற்றனர். இதையடுத்து, விரைவாக தகவல் பெற பயன்படும் 'கியூஆர்' கோடு தயாரித்து, பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் இணைத்துள்ளனர்*


*🌟மாணவர்களின் கல்வி, அறிவியல், கணிதம், விளையாட்டு, தனித்திறன் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து, 'கியூஆர்' கோடு அட்டை மூலம் தெரிந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது*


*🌟இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டையை, முதல் கட்டமாக, 26 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் வழங்கினார்*


*🌟இதன் மூலம் மாணவர்களின் பெற்றோர், மாணவர்களின் தகவல்களை மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதி பெற்றோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*ஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம் பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் அதிகாரத்தை, இணை இயக்குனர்களுக்கு வழங்கி, நிர்வாக சீர்திருத்தத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_94.html


*🌟பள்ளிக் கல்வித் துறையில் அதிகாரிகளின் பொறுப்புகளை மாற்றி, மே மாதம் முதல், நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, உதவி தொடக்க கல்வி அதிகாரி ஆகிய பதவிகள், ரத்து செய்யப்பட்டன.*


*🌟பள்ளி நிர்வாகம் ஒரே குடையின் கீழ் இருக்கும் வகையில், அனைத்து வகை, தொடக்க, மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகங்கள், பள்ளிக் கல்வியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.இ.ஓ., என்ற, முதன்மை கல்வி அதிகாரி - வருவாய் மாவட்ட நிர்வாக அதிகாரியாகவும், அவருக்கு கீழ், டி.இ.ஓ., என்ற மாவட்ட கல்வி அதிகாரி, அவருக்கு கீழ், பி.இ.ஓ., என்ற வட்டார கல்வி அதிகாரி என, பொறுப்புகள் வழங்கப்பட்டன.இந்த அதிகாரிகள், தங்கள் எல்லைக்கு உட்பட்ட, அனைத்து பள்ளிகளையும் நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.*


*🌟இந்த உத்தரவின்படி, ஆசிரியர்கள் நியமனம், இடமாறுதல் வழங்குவது போன்ற அதிகாரங்களும், சி.இ.ஓ.,க்களுக்கு வழங்கப்பட்டன. இணை இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு பணி வழங்கப்பட்டது.சி.இ.ஓ.,க்களிடம் அதிகாரங்களை குவித்திருப்பது, சில நேரங்களில் முறைகேடுகளுக்கு வாய்ப்பாகி விடும் என, புகார்கள் எழுந்தன.*


*🌟இதை தொடர்ந்து, நிர்வாக சீர்திருத்தத்தில், தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துஉள்ளார்.இதன்படி, பி.இ.ஓ.,க் களை நியமனம் செய்வது, இடமாறுதல் செய்வது போன்ற அதிகாரம், சி.இ.ஓ.,வுக்கு தரப்பட்டு உள்ளது. கல்வி மாவட்டத்திற்குள், ஆசிரியர்களை நியமித்தல், இடமாறுதல் செய்வது போன்ற அதிகாரம், டி.இ.ஓ.,க்களுக்கு தரப்பட்டுள்ளது.*


*🌟ஒரே வருவாய் மாவட்டத்திற்குள் இருக்கும், ஒரு கல்வி மாவட்டத்தில் இருந்து, இன்னொரு கல்வி மாவட்டத்திற்கு ஆசிரியர்களை இடமாறுதல் செய்வது, சி.இ.ஓ.,வின் அதிகாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.*


*🌟வருவாய் மாவட்டம் விட்டு, இன்னொரு வருவாய் மாவட்டத்துக்கு, ஆசிரியர்களை இடமாறுதல் செய்வது, ஆசிரியர்களை நியமிப்பது, இணை இயக்குனர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டது என, உத்தரவிடப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொன்று அமையாது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_22.html




*🌟நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு லட்சக்கணக்கில் தயாராகும் கேள்விகள்*


*🌟நீட், ஜெ.இ.இ தேர்வுகளுக்கு ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று இனி மற்றொரு மாணவரின் கேள்வித்தாள் அமையாது. கணினி சாப்ட்வேர் உதவியுடன் புதிய வடிவிலான கேள்வித்தாள் வரும் டிசம்பரில் நடக்கும் ‘நெட்’ தேர்வில் அறிமுகம் செய்யப்படும்*


*🌟மாணவர்கள் உயர் கல்வி பயிலுவதற்கான தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அண்மையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டது*


*🌟இதில் நீட், ஜெஇஇ மெயின், யுஜிசி மெயின், ஜிமாட், ஜிபாட், ஜிமெயின், நெட் உள்ளிட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தும். நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும், நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே என ஆண்டுக்கு இரண்டுமுறை நடத்தப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது*


*🌟இந்தநிலையில் இனி ஒரு மாணவரின் கேள்வித்தாளை போன்று மற்றொரு மாணவரின் கேள்வித்தாள் அமையாது*


*🌟பயிற்சி மையங்கள், பழைய கேள்வித்தாள்களை கொண்டும், கேள்வி-பதில்களை மட்டும் மனப்பாடம் செய்தும் படிக்கின்றவர்களுக்கு புதிய தேர்வு முறை பயன்தராது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன*


*🌟வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற நெட் தேர்வில் புதிய முறை அமலுக்கு வருகிறது.*


*_அதன் சிறப்புகள் தொடர்பாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது_*


*🌟மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு (நீட்), பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வு (ஜெஇஇ), கல்லூரி பேராசிரியர்களுக்கான தேர்வு (நெட்) ஆகியவற்றை எழுதுகின்ற மாணவ மாணவியருக்கு இனி தனித்தனி கேள்வித்தாள் இடம்பெறும். ஒன்று போல் மற்றொன்று அமையாது*


*🌟தேசிய தேர்வு முகமை வரும் டிசம்பரில் நடத்துகின்ற ‘நெட்’ தேர்வில் இந்த புதிய முறையை கொண்டுவர உள்ளது. இந்த தேர்வு எழுதுவோருக்கு தனித்தனி கேள்வித்தாள் கிடைக்க செய்யும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன*


*🌟பொதுவாக ஒன்று முதல் நான்கு வரையான கேள்வித்தாள் தயார் செய்து மாற்றி மாற்றி வழங்குவதை விட்டுவிட்டு லட்சக்கணக்கில் கேள்விகள் தயார் செய்யப்பட்டு இதில் இருந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உதவியுடன் ஒவ்வொரு தேர்வருக்கும் தனித்தனி கேள்வித்தாள் தயார் செய்து வழங்கப்படும்*


*🌟கேள்வித்தாள் தயார் செய்யப்படுவதற்காக ஓராண்டுகாலம் வரை செலவிடப்படும். பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சாப்ட்வேர், வினாத்தாளில் ரகசிய குறியீடுகள் போன்றவையும் வினாத்தாள் வெளியாவதை தடுக்கும் வகையில் இருக்கும்*


*🌟கேள்விகள், பதில்கள் தயார் செய்ய சாப்ட்வேர் உதவி நாடப்படும். சிலபஸ் முழுவதும் படிக்காமல் கேள்வி பதில்களை மட்டும் படிக்கின்ற மாணவர்கள், தேர்வு மையங்களின் தீவிர பயிற்சியை மட்டும் நம்பியுள்ள மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை பெரும் சவாலாக அமையும்*



*🌟தேர்வர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு கேள்விக்கு ஒன்றுபோல் உள்ள பல விடைகள் வழங்கப்படும்*


*🌟அவற்றின் இருந்து சரியானதை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் முழுமையான சிலபஸ் படித்த மாணவர்கள் மட்டுமே தேர்வுகளில் ஜொலிக்க இயலும்*


*🌟இவ்வாறு உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday, 21 July 2018

*அரசு பாட புத்தகங்களை பின்பற்றும் தனியார் பள்ளிகள்: உதயச்சந்திரன்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_14.html


*🌟சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்*


*🌟சேலம் மாவட்டம், ஓமலுாரில், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் தலைமையில் நேற்று, புதிய பாடத் திட்டம் குறித்து, ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அவர் பேசியதாவது*


*🌟வழக்கமாக பாட புத்தகங்கள் எழுதும் பணியை, ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்றுனரும் சேர்ந்து செய்வர். இந்த முறை, இது மாற்றப்பட்டு, பாடப் புத்தகம் எழுதுவது, மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது*


*🌟துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகளை எளிதாக கையாளும் வகையில், தெரிந்த சொற்களை கொண்டு, அகர வரிசையில் பாடம் நடத்தும் வகையில், அமைக்கப்பட்டுள்ளது*


*🌟ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள், எதில், பலவீனமாக உள்ளனர் என்பதை ஆராய்ந்து, புதிய பாடத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில், பிளஸ் 1 பாடத்திலிருந்து, 50 சதவீதம் கேள்விகள் கேட்கப்படுகின்றன*


*🌟இதில், 99 சதவீத கேள்விகள், நமது புத்தகத்திலிருந்து கேட்கப்பட்டுள்ளது*


*🌟இதனால், சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும், அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன*


*🌟பிளஸ் 1 பாட புத்தகத்தில், அனைத்து பாட பிரிவினருக்குமான மேற்படிப்புகள் குறித்தும், அதை எங்கு படிக்கலாம் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது*


*🌟புதிய பாடத் திட்டத்தின் மூலம், அடுத்த நான்கு ஆண்டுகளில், தமிழக மாணவர்கள், அகில இந்திய போட்டி தேர்வுகளில், அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர். மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றுவது, ஆசிரியர்கள் கையில் உள்ளது என்றார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*ஆதார்' கார்டு தொலைந்ததா மறுபடியும் பெறுவது எளிது*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/07/blog-post_38.html



*🌟காணாமல் போன, 'ஆதார்' கார்டை, '1947' என்ற தொலைபேசி எண் வாயிலாக, மறுபடியும் பெற்று கொள்ள முடியும்*


*🌟மத்திய அரசு, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், புகைப்படம், விழி, விரல் ரேகை உள்ளிட்ட விபரங்களுடன் கூடிய, 'ஆதார்' அட்டையை வழங்கி வருகிறது. புதிதாக வங்கி கணக்கு துவக்குவது, ரேஷன் கார்டு பெறுவது என, அரசின் அனை த்து சேவைகளையும் பெறுவதற்கு, ஆதார் கார்டு அவசியம்*


*🌟சிலர், அந்த கார்டை தொலைத்து விடுவதுடன், ஆதார் எண்ணும் தெரியாததால், மாற்று கார்டு வாங்க சிரமப்படுகின்றனர். இதற்காக, இடைத்தரகர்களை நாடி, பணமும் செலவு செய்கின்றனர்*


*🌟காணாமல் போன, ஆதார் கார்டை, '1947' என்ற, நுகர்வோர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைப்பதன் வாயிலாக, மறுபடியும் பெற்று கொள்ளலாம்.ஆதார் எண் தெரியாவிட்டாலும் பரவாயில்லை*



*🌟அதன்படி, 1947 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து, தமிழில் பேசுவதற்கு, அவர்கள் சொல்லும் எண்ணை, போனில் அழுத்த வேண்டும்*


*🌟பின், உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி சொன்னால், ஆதார் எண்ணை கண்டுபிடித்து, உங்களுக்கு அனுப்புவர்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм